Share on facebook
Share on telegram
Share on whatsapp

முரண்பாடே உடன்பாடு – வேறு கோணம் – 3

முதல் தேவையாக அவர் கூறுவது professional இல் இருந்து professionalism திற்கு மாறு என்கிறார். அதற்கான தமிழ் வார்த்தைகள் சரியாக தெரியாததால் அப்படியே தருகிறேன். Professionals only lives . Professionalism achieves என்கிறார். அதாவது professionals வாழ்கிறார்கள். professionalism சாதிக்க வைக்கும் என்கிறார். professional என்றால் என்ன? Engineering , medical , auditor , business management போன்றவற்றை படித்தவர்களை professionals என்று புரிந்துக் கொள்கிறோம். அதை definition ஆக சொல்ல வேண்டும் என்றால் – மற்றவர்கள் அனுபவத்தில் பெற்ற உயர்ந்த அறிவை அந்த நிலைக்கு உரிய படிப்பால் பெற்றவர்கள் என்று கூறலாம் – அப்படியானால் professionalism என்றால் என்ன? organised , systematic படிப்பாலும் , அதன் மூலம் பெற்ற சாரமான அறிவாலும் – essence of that knowledge – அதை வெளிப்படுத்தும் போது எங்கு, எப்போது, எந்த அளவு, எப்படி சூழலுக்கு , நோக்கத்திற்கு பொருத்தமாக வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரிந்து, அதற்குரிய பண்புகளோடு வெளிப்படுத்துபவர். உதாரணமாக, சில மாதங்களுக்கு முன் கோவையில் corporation துப்புரவு தொழிலாளர்களுக்கான ஆட்கள் தேர்வின் போது PG படித்த BE படித்த Diploma படித்த, பலரும் அதற்கு விண்ணப்பித்திருந்ததை பற்றி பலரும் படித்திருப்பீர்கள். அதன் பொருள் ,படித்தால் மட்டுமே professionals ஆக முடியாது என்பது தான். என் அனுபவத்தில் நான் செல்லும் இடம் எல்லாம் நல்ல வேலைக்காரர்களே கிடைக்கவில்லை என்பதே என் காதில் விழுகிறது. அதாவது professionalism இல்லை.

உதாரணமாக B.Ed. படித்து பத்தாம் வகுப்பு எடுப்பவர் ஆசிரியர் என்று அறியப்படுகிறார். அது அவரது profession . அதனால் அவர் professional . அது சாதாரண நிலை. அவரே பத்தாம் வகுப்பு என்பது ஒரு மாணவர் வாழ்வில் எவ்வளவு முக்கியமானது என்பது புரிந்து – அதை ஒட்டி தன் திறமைகளை, நோக்கங்களை, வெளிப்படுத்த முடிந்தால் – பத்தாம் வகுப்பின் தேர்வு முறை, கேள்விகள், சட்டங்கள், அதிக மதிப்பெண் பெரும் முறை போன்றவை தெரிந்து வெளிப்படுத்தினால் அவர் நல்லாசிரியர் ஆகிறார். அது professionalism.

லாபத்திற்காக வருமானத்திற்காக தொழில் செய்வது professionals . அதனால் அவர் professional . அவரே அனைத்து தரப்பினர், அதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் நலனையும் நினைத்து, முன் முடிவுகள், அபிப்ராயங்கள், பாரபட்சம், விருப்பம், சுயநலம், சுக சார்புகள், comfort zones க்குள் இல்லாமல் தொழிலை நடத்தினால், முன்னேற்றம் மட்டுமே குறிக்கோள் என்று நடத்தினால், அது professionalism.

அதாவது சுயநலத்தோடு ஒரு பொது நலத்தை, பர நலத்தை இணைத்துக் கொள்வது , கடமைக்கான அனைத்தும் செய்து, அதில் உயர் மனநிலை, உயர் பண்புகள், உயர் நோக்கம் வெளிப்படும் அளவிற்கு நடப்பது professionalism.

அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்துக் கொண்டே செல்ல வேண்டும் என்றால் இந்த அடிப்படை சட்டம், புரிய வேண்டும். அதன் மேல் நம்பிக்கை வர வேண்டும். பின் அதை பின்பற்ற வேண்டும். உதாரணமாக ஒரு விளையாட்டு வீரர் professional . அவர் எந்த அளவுக்கு இது புரிந்து professionalism கொண்டு வருகிறாரோ, அந்த அளவிற்கு அவர், captain , coach , commentator, board member என்று உயருகிறார். அவர் மேலே செல்ல செல்ல சூழல் , மனிதர்கள் அவருக்கு கட்டுப்படுவர்கள். முரண்பாடு என்பதே இருக்காது.

சாதாரண நிலையில் இருப்பவர் ஒருவரை தலைவனாக மாற்றுவது அவர் காட்டும் professionalism ஐ பொறுத்ததே. professionalism எப்போதும் ஒரு பண்போடு தொடர்பு கொண்டு இருப்பதால், நாம் அதை கொண்டு வரும் இடங்களில் எல்லாம் நாம் நம் ஆன்மாவுடன், அல்லது அன்னையுடன், அவர் விரும்பும் பண்புகளுடன் தொடர்பு கொள்கிறோம். அதனால் அவர் செயலில் உச்ச கட்டம் அடைவது மட்டுமல்லாது, சாதனையாளர் என்னும் அளவிற்கு மாறுகிறார்.

சாதித்தவர்களை இந்த பார்வையுடன் பார்த்தால் அவர்கள் அனைவரது நடத்தையிலும் ஒரு professionalism இருப்பதைக் காணலாம். இதை ஆரம்பிக்க நமக்குப் புரிய வேண்டியது –

சாதனை பூர்த்தியாவது ஒரு வேலையால்.

வேலை பூர்த்தியாவது உழைப்பால்.

உழைப்பு பூர்த்திவாவது பண்புகளால்.

எந்த வேலையைச் செய்தாலும் அதற்கு தேவையான பண்புகளுடன் உழைக்க நம்மை நாம் வற்புறுத்த வேண்டும். செயலை செம்மைப்படுத்த, மனப்பான்மையை உயர்த்த தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும். தினமும் நாம் நம் சிறந்த திறமை, அறிவு, பண்பு என்று நினைப்பவற்றுடன் நாமே போட்டி போட்டு ஒரு இழையாவது ஜெயிக்க வேண்டும். தொழில், கடமை, அறிவு, பண்பு ஆகியவற்றை அதிகப்படுத்துவதில் இடைவிடாத முயற்சி முன்னேற்றம் தந்து பரிணாமத்திற்கு கொண்டு செல்லும். இது முதல் தேவை.

இரண்டாவது தேவை – இதற்கான ஆர்வம் – aspiration . நாம் பெரும்பாலும் நம் ஆசைகள் அனைத்தையும் ஆர்வம் என்றே நினைத்துக் கொள்கிறோம். ஆனால் ஆர்வம் என்பது ஒரு முழுமை. அது சாதனையை உள்ளடக்கியது என்று கூறுகிறார். நம் தேவை என்ன என்பதில் நமக்கு ஒரு தெளிவு முதலில் வேண்டும். அதன் பிறகு அது முடிவாக வேண்டும். அதன் பிறகு அது தீர்மானமாக வேண்டும். தீர்மானம் அதற்குரிய பண்புகளோடு வெளிப்பட்டு சாதிக்க வேண்டும். அறிவு, உணர்வு, உடல் அனைத்திற்கும் தேவையான பண்புகள் அனைத்தும் இதில் அடக்கம். இது அனைத்தும் சேர்ந்தது தான் ஆர்வம். நம் மனம் இரண்டு பகுதிகளால் ஆனது. ஒன்று அறிவு, knowledge – மற்றது will – விருப்புறுதி. இந்த இரண்டும் சேரவில்லை என்றால் நம்மால் சாதிக்க முடியாது. மனம் மட்டுமே ஏற்றால் அது ஆசையாக, பேராசையாக, அர்த்தமற்ற எதிர்பார்ப்பாக, அல்லது குறைந்தபட்சம் அபிப்ராயமாக அல்லது உணர்வின் அடிப்படையிலான முன் முடிவாக prejudice ஆக இருக்கும். மனம் புரிந்துக் கொண்டதை, அதன் அறிவை நம்பி உறுதி ஏற்றால், உடல் ஒத்துழைக்க தயரானால் அது முடிவாக மாறும். இது மேல் மனம். பின் அதற்கான உயர்மனப்பான்மை, திறமை, திறன், ஞானம், அனுபவம் ஆகியவற்றை நன்றாக ஆராய்ந்து திட்டமிட்டு, ஒரு செயலில் வெளிப்பட்டு – organised ஆக செய்யும் போது, அது திட தீர்மானம் – determination ஆகிறது. determination இல்லாமல் நம்மால் எதையும் சாதிக்க முடியாது என்பது நாம் அறிந்தது தான். இவை அனைத்தும் சேர்ந்தது தான் aspiration . அது ஆழ்மனதை சேரும். அதனால் தான் ஆர்வம் தன்னை தானே பூர்த்தி செய்துக் கொள்ளும் என்று எழுதுகிறார். இத்தகைய ஆர்வம் அதற்கான சூழல், மனிதர்கள் பொருட்கள், ஆகியவற்றை கொண்டு வரும் என்கிறார். இதை புரிந்துக் கொண்டு செயல்படுத்துவது இரண்டாவது தேவை.

இதற்கான குறுக்கு வழியை நூறு கோடி என்னும் புத்தகத்தில் கர்மயோகி சொல்லிய மூன்று பண்புகளில் அடக்க முடியும். அதை நினைவில் வைத்துக் கொள்ள, சில கட்டுரைகளில் சொன்ன 3G , 3P , SHECAR போல, இதற்கு 3C என்னும் acronym ஐ ஏற்படுத்திக் கொண்டேன். அது – Courage, Commitment, Commonsense .

முன்னேற்றத்திற்க்கான, முரண்பாடு இல்லாத வாழ்க்கைக்கான பண்புகளை பின்பற்ற, அதற்கான உயர்சித்தத்தை , மனப்பான்மைகளை பெற – வழக்கம், பழக்கம், சமுதாயம், சூழல் என்று எதையும் மாற்ற, மீற தைரியம் தேவை. Courage இல்லாத Aspiration – சாதிக்காது. குறிப்பாக அன்னை விரும்பும் முறைகளை பின்பற்ற வேண்டுமென்றால் அதீத தைரியம் தேவை. அந்த Courage இல்லையென்றால் நம்மால் எதையும் ஆரம்பிக்க முடியாது. தைரியலக்ஷ்மி இருக்கும் இடத்தில் அனைத்து லக்ஷ்மிகளும் வந்தார்கள் என்று கர்மயோகி பல கட்டுரைகளில் எழுதியிருக்கிறார்.

அந்த தைரியத்தை பெற்ற பிறகு நமக்கு தேவை நம் நோக்கம், தீர்மானம் ஆகியவற்றை ஒட்டிய Commitment . இதற்கு அவர் தரும் உதாரணம், ஒரு doctor ரிடம் நம் வியாதிக்கான தீர்வு கிடைக்கும் என்று தான் நம்பி செல்கிறோம். ஆனால் அவர் பத்து நாள் மாத்திரை கொடுத்தால், நான்கு நாட்களில் சரியானால், அப்படியே மாத்திரை சாப்பிடுவதை விடுவதையும், ஆறு நாட்களில் சரியாகவில்லை என்றால் வேறு doctor ரிடம் செல்வதே பெரும்பாலும் நடக்கும். நம்பி செல்லும் டாக்டர் சொன்னபடி பத்து நாட்கள் என்று, ஏதோ ஒரு காரணத்திற்காக சொல்லியிருக்கிறார். பின்பற்றுவோம் என்று இருப்பதில்லை. அது போலஅது போல பாதி திவழியில் மாறிவிடாமல் என்ன நடந்தாலும் இறுதி வரை பண்புகளை பின்பற்றுவேன் என்னும் Commitment வேண்டும். அப்போது தான் ஆர்வம் சாதனையாகும்.

அடுத்தது Commonsense . எதை எப்போது, எந்த அளவு, எப்படி செய்ய வேண்டும் என்னும் தெளிவு வேண்டும். அதுவே பொதுப்புத்தி. தன் நிலை புரியாமல், வேறொருவர் செய்து இருந்தாலும், அவர் அறிவு, சூழல், மனப்பான்மை, நடத்தை வேறு என்பது போன்றவை புரியாமல், அர்த்தமற்ற செயல்கள் செய்து இந்த பழம் புளிக்கும் என்னும் நிலையே அதிகமாக பார்க்கிறோம். அதன் காரணம் நம் செயலுக்கான முழுமையான பொதுப்புத்தி இல்லாதது.

இங்கு பொதுபுத்தி என்று சொல்வதை நாம் பொதுவாக நம் அனுபவத்தின் அடிப்படையில் அல்லது சமூக அடிப்படையில் சொல்லப்படுகின்ற அனுபவத்தின் அடிப்படையில் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் கர்மயோகி பல விளக்கங்களை அதற்கு கொடுக்கிறார். அவற்றில் ஒன்று KNOWLEDGE THAT IS ACCEPTED BY ALL SENSES – COMMON TO ALL SENSES IS COMMENSENSE என்கிறார்.

முரண்பாடு என்பதே நம் விருப்பப்படி ஒரு முடிவு எடுக்க முடியாத நிலை. நம் விருப்பத்திற்கு சில நிகழ்வுகள் நடக்காத நிலை என்பதே பெரும்பாலும் இருக்கும். அது உறவுகளால் இருக்கலாம், இருக்கும் சூழலை மீற வேறு வழி தெரியாததால் இருக்கலாம். அதற்கான திறமை, திறன், மனபான்மை இல்லாததால் இருக்கலாம் (அதன் பின்னால் உள்ள குழப்பம், சந்தேகம் எப்படி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்பது பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். அதன் LINK கீழே கொடுத்துள்ளேன்). ஆனால் நம் உணர்வு, அறிவு, உடல் ஆகியவை ஏற்றுக் கொள்ளும் ஒரு பொதுவான விஷயத்தைச் செய்யும் போது நம்மளவில் முரண்பாடு என்பது பெருமளவில் விலகி விடுகிறது.

முன்பு சொன்ன PROFESSIONALISM -இல் உள்ளது போல தவறு, தோல்வி என்று வந்தாலும் PROFESSIONALISM காட்டப்படும் போது நம் மீது பெரும்பாலும் குற்றம் சொல்ல முடிவதில்லை. அதுவே சூழலின் முரண்பாடைக் குறைக்கும். அது போல அனைத்து இடங்களிலும் செய்ய கர்மயோகி கூறும் வழி என்னவென்றால் நமக்கு எந்த சூழ்நிலையிலும் நடத்தையிலும், நிகழ்விலும் உயர்ந்தது எது என்று தெரிந்து இருக்கும். உண்மை எது, சத்தியம் எது என்று தெரிந்து இருக்கும். அல்லது ஒரு அன்பராக அன்னை வழி எது என்று ஓரளவு தெரிந்து இருக்கும். அதை சித்தப்பூர்வமாக CONSCIOUS ஆக செய்வது நம் அறிவுக்கும் உணர்வுக்குமான முரண்பாட்டை குறைக்கும். அது உயர்ந்தது என்பதால் சூழலில், மனிதர்களில் உள்ள முரண்பாட்டையும் குறைக்கும். காரணம் உயர்ந்ததை அனைவரும் ஏற்றுக் கொள்வர். இவரை என்ன செய்ய வேண்டும், இந்த வேலையை விடலாமா, சொந்த தொழில் தொடங்கலாமா, இந்த COMMITMENT -ஐ எடுத்துக் கொள்ளலாமா என்ற குழப்பங்கள் வரும் போது, வாழ்வு முரண்படும் போது இந்த பார்வையில் பார்த்து அல்லது நம் முன்னேற்றம் எங்கு என்று பார்த்து அதை மட்டுமே பார்த்து எடுத்துக் கொள்வதே COURAGE என்கிறார்.

ஒவ்வொன்றிலும் ஒரு ETHICS , INTEGRITY , என்று ஒன்று இருக்கும். குறைந்த பட்சம் அதையாவது பின்பற்ற வேண்டும். அதுவே நம்முள் உள்ள உணர்வு, அறிவு, ஆன்மா இவற்றுக்கான முரண்பாட்டை சுமுகமாக்கும். உள்ளே சுமுகமாகும் போது வாழ்வு அதை வெளிப்படுத்தும்.

இந்த மூன்று C தான் ஆர்வத்திற்கு, சாதனைக்கு அடிப்படை தேவை. கர்ணன் கொடையாளி. அதை உயர்ந்த குணம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உயிரை பறிக்கும் கருவியாக அதை பயன்படுத்தும் போது, அது தெரிந்தும், உயர்ந்த குணம் என்ற பெயரில் விவேகம், பாகுபாடு, பொது புத்தி, இல்லாமல் நடந்தது, அதனால் அவனுடைய லட்சியமான துரியோதனனை காப்பாற்ற வேண்டும் என்பதும் கூட முடியாமல் போனது. வீரனாக இருந்தும், நிறைய நற்பண்புகள் இருந்தும் அவன் வாழ்வு, தோல்வி, அவமானம், முரண்பாடு நிறைந்ததாக மாறி விட்டது. இது போன்றவைகளை நாம் எங்கே செய்கிறோம் என்று பார்ப்பது நல்லது. தனக்கு தெரிந்ததே, உயர்ந்ததே நல்லது என்று இருப்பது அதை commensense என்று நினைப்பது முட்டாள்தனம். Common sense என்பதைக் கூட எல்லோரும் செய்தால், நாமும் செய்யலாம் என்று எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அதன் உண்மையான பொருள் என்ன, சத்தியம், TRUTH என்றால் என்ன என்று புரிந்து செய்வது நல்லது. மனப்பான்மை வளம் பெற செய்வது அனைத்தும் நல்லது. அதற்கு எதிரானது எல்லாம் கெட்டது. நாம் அறிந்த உயர்ந்த விஷயங்களை, நல்லதை, எப்போதும் கடைபிடிப்பது நல்லது. சிங்கப்பூர் flight ஏறும் போதே வரும் சுத்தம், ஒழுங்கின் ஞானம், – திரும்ப இந்தியா வந்து இறங்கும் போது flight -டிலேயே மறந்து விடுகிறது. அப்படி இல்லாமல் எப்போதும் நமக்கு தெரிந்த உயர்ந்த சிறந்த நிலையிலேயே அனைத்தையும் செய்வது நல்லது. அதுதான் நம்மை பொறுத்தவை commonsense. அப்போதுதான் முரண்பாடு இல்லாத வாழ்வை வாழ முடியும்.

இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்க்கலாம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »