Share on facebook
Share on telegram
Share on whatsapp

முரண்பாடே உடன்பாடு – வேறு கோணம் -1

முரண்பாடே உடன்பாடு என்பது நமக்கு அன்னை அன்பர்களுக்கு ஒரு அடிப்படையான வாழ்க்கைத்   தத்துவம். பரிணாம வளர்ச்சி, வாழ்வில் வளம் ஆகியவற்றுக்கான , அவை வரப்போகும் அறிகுறிக்கான அடையாளம் ( FRONTAL FACE தான் நமக்கு வரும் முரண்பாடுகள்.

அதனால் முரண்பாடு சுமுகக்குறைவு, போராட்டம், தோல்வி , துன்பம் எல்லாமே நாம் வளர்வதற்கு தான் வருகிறது என்னும் போது, அதற்கான விளக்கமாக கர்மயோகி ஏராளமான கோணங்களை கொடுத்து இருக்கிறார். உண்மையில் அவரின் பெரும்பாலான புத்தகங்கள் இதையே வேறு வேறு விதமாக கூறுபவையே.  அவை அனைத்தின் சாரம் என்னவென்றால் எந்த பிரச்சினையும், எந்த முரண்பாட்டையும் அது ஏற்பட்ட, அதே தளத்தில், அதே நிலையில் தீர்க்க முடியாது என்பதால், நம்மை அறியாமலேயே நாம் அடுத்த உயர்ந்த தளத்தில் நின்று அல்லது சென்று தான் தீர்ப்போம். அல்லது அடுத்த உயர்ந்த நிலைக்கு சென்றால் தான் நம்மால் அந்த பிரச்சினையில் இருந்து வெளி வர முடியும். அதற்கான சூழல்கள் தான் நமக்கு முரண்பாடாக தெரிகிறது.

உதாரணமாக உடலைக்  கெடுத்துக் கொள்ளும் செயலை செய்து விட்டு திருந்த வேண்டி வரும் போது, அதற்கு அடுத்த vital அல்லது emotional நிலையில் தான் நாம் செய்தது தவறு என்று உணர்ந்து தான் திருந்துகிறோம். அப்படி இல்லையென்றால் அது நோயாக வந்து  வலியை உருவாக்கி பாகங்களை முரண்பட வைத்து உணர்வுக்கு வலியை தந்து அதை புரிய வைக்கிறது. ஆனந்தம் எது என்னும் ஞானத்தை பெறுகிறோம். அதே போல emotional level இல் செய்யும் தவறுகள், impulsiveness, கோபம், எரிச்சலால் செய்யும் தவறுகளை – அவை தவறு என்று அதற்கு அடுத்த  உயர்ந்த நிலையான அறிவால் உணரும் போதே, நாம் திருந்துகிறோம். உதாரணமாக உறவுகளில் பிரச்சினைகள் முரண்பாடுகள் வரும்போது புத்திகொள்முதல் என்னும் நிலையில் தான் திருந்த்துகிறோம். அதே போல, அறிவால்  அல்லது அறியாமையால் செய்யும் தவறுகளை அதற்கு அடுத்த நிலையில் ஆன்மாவின் பண்புகளான பிரார்த்தனை, கடந்த கால சமர்ப்பணம், சமர்ப்பணம்,  மற்றும் உயர்சித்தம் , உயர் மனப்பான்மைக்கு உரிய பண்புகளை  எடுத்துக் கொண்டு சரி செய்கிறோம்.

அது தான் வாழ்வின் சட்டம். வாழ்வில் அப்படிதான் நாம் , மனப்பான்மையில், அறிவில், அனுபவத்தில் முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அதை நம்மை அறியாமல் செய்து கொண்டு இருக்கிறோம். அப்படியில்லாமல்  நம்மை அறியாமல் செய்வதை சித்ததுடன் conscious உடன் செய்தால் அபரிமிதமான முன்னேற்றம் வரும் என்பது, முரண்பாடே உடன்பாடு என்பதற்கான ஒரு விளக்கம், ஒரு பார்வை.

நம் முரண்பாடுகள் எல்லாமே நம் present personality யால் கையாள முடியாத விஷயங்கள் மட்டுமே. அதற்கு அடுத்த நிலைக்கான personality யிலிருந்து அதை செய்ய முடியும் என்பதே அதன் பொருள். நாம் நம் personality யில் உயர வேண்டும் , vital development , mental  development பெற்று அடுத்த நிலை personality ஆகா மாறவேண்டும் என்பதே பரிணாமம். நாம் பிறரிடம் ஒரு முரண்பாடு, பிரச்சினைக்கு, ஆலோசனை கேட்கச் செல்வது கூட நம்மை விட உயர்ந்த personality ஐ தேடுகிறோம் , நம்மை விட உணர்வில் உயர்ந்த, அறிவில் உயர்ந்த, அனுபவம் மிக்க, ஞானம் மிக்க  ஒரு personality ஐ த் தேடுகிறோம் என்பதே பொருள். ஆனால், நம்மிடமே அது உள்ளது என்பது நம் நினைவிற்கு வருவதில்லை.  நமக்கு எல்லாவற்றிலும் உயர்ந்தது எது என்று தெரியும். ஆனால்  நாம் அறிந்த அந்த உயர்ந்த நிலையில் இருந்து, நாம் பெற்ற  உயர்ந்த அறிவு, அனுபவம் ஆகியவற்றை பயன்படுத்தி நாம் எதையும் செய்வதில்லை.  ஒவ்வொரு கணமும் நமக்கு உயந்த முறை ஒன்று தெரியும் . நாம் அதை செய்வதில்லை. காரணம் அதில் உள்ள முன்னேற்றம் பற்றிய தெளிவு நமக்கு இல்லாதது.

இதை தினசரி செய்திகளில் – எந்த பிரச்சினையும், முரண்பாடும், சுமுககுறைவும் அடுத்த உயர்ந்த நிலைக்கான அழைப்பு என்கிறார் கர்மயோகி.குரங்கில் இருந்து மனிதன் உருவானது போல மனிதனில் இருந்து சத்திய ஜீவன் உருவாவது காலத்தின்  கட்டாயம். அது பிரம்ம விருப்பம். அதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது என்பதால்,அதனுடன் இணைந்து பயணித்தால் வாழ்வு சுமுகமாக, ஆனந்தமயமாக இருக்கும். அதுவே ultimate definition , ultimate realisation , ultimate truth என்கிறார்.

அதை வாழ்வில் பொருத்தி பார்க்கும் போது நம் வாழ்வை, பிழைப்பு, வளர்ச்சி, முன்னேற்றம், பரிணாமம் என்று நான்கு நிலைகளில் பிரிக்கலாம்.  இப்படி நம் வாழ்வில் பொருத்தி பார்க்கும் போது தான் அல்லது சமுதாயத்தில் நடப்பவற்றில் பொருத்தி பார்த்து புரிந்து கொள்வதுதான் இந்த யோகத்தை ஆரம்பிப்பதற்கு நல்ல முறை என்கிறார். குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பது பரிணாம வளர்ச்சி என்றால் குரங்கிற்கும், மனிதனுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றும்.  ஆனால் வசதியற்ற, யாருமற்ற அனாதை தொழிலதிபர் ஆனார் என்றால், அனாதைக்கும் தொழிலுக்கும் சம்பந்தமில்லை  என்று மேல் மனதில் தோன்றினாலும், அதன் சாத்திய கூறு எங்கோ மனதில் தோன்றும்.  அதன் பொருள் சமூகத்தின் நிலைகள் நமக்கு ஆழ்மனதில் எங்கோ புரிந்திருக்கிறது, அதற்கான ஞானம் நமக்கு உள்ளே எங்கோ இருக்கிறது என்பது பொருள்.

இதை பொதுவாக பிழைக்கவே சிரமப்படுபவர், பிழைக்க முடிவது முதல் நிலை. அதே நிலையில் அடுத்த அடுத்த வசதிகள் பெறுவது வளர்ச்சி . அந்த நிலை மற்றும் மனம் உயர்வது அடுத்த கட்ட முன்னேற்றம். முற்றிலுமாக மாறி அவன் நினைத்து பார்க்காத தளத்திற்கு வருவது பரிணாமம் .

நம்மை அறியாமல் நம்மில் பலரும் இந்த நிலைகளுக்கு வந்து இருப்போம். அது நம்மையறியாமல் அன்னையை செயல்படவிட்டு பெற்ற பலன்கள். இதை நாம் முயன்று பெற விரும்பினால் – conscious effort நிச்சயம் அவரவர் நிலைகளில் இருந்து வாழ்வின் உச்ச கட்டம் என்னும் நிலைக்குச் செல்ல முடியும். அதை தாண்டி செல்வது மனித முயற்சிக்கு உரியது அல்ல. அன்னை சக்தியால் மட்டுமே முடியும் என்கிறார்.

உதாரணமாக வேலையே கிடைக்கவில்லை என்பவனுக்கு வேலை கிடைப்பது பிழைப்பு என்னும் நிலை. அதிலேயே promotion போன்றவை வருவது, ஊதியம் உயர்வது வளர்ச்சி. அது கூட இல்லாமல் பல  தடைகள்  இருப்பவர்கள் பலர்  உண்டு.  புதிய திறமை, திறன், உயர் படிப்பு, சிறப்பு அறிவு, அடுத்த கட்ட தேர்வுகள்  என்று முயன்று பெற்று உயர்பதவிகளுக்கு இரண்டு அடுக்கு தாண்டி செல்பவர் உண்டு.  அல்லது  பல மடங்கு உயர்ந்த ஊதிய பதவிக்கு செல்பவர் உண்டு. அது முன்னேற்றம். தன் ஸ்தாபனத்தில் அல்லது வேறு ஸ்தாபனத்தில் தலைமை பொறுப்புக்கு வருபவர் அடைவது பரிணாமம்.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஊதியத்திற்கு வேலை செய்வது பிழைப்பு. அடுத்த  கட்டமாக liaisoning தன் தொடர்புகளை பயன்படுத்தி உயர்வது வளர்ச்சி. தன் வேலை, தொடர்புகளின் தேவைகளை அல்லது தன்னை சுற்றியுள்ள சமூகத்தின் தேவைகளை அறிந்து அதற்கு தேவைப்படும்  பொருட்களின் விநியோகஸ்தராக மாறுவது முன்னேற்றம். அடுத்த கட்டத்தில் , தான் விற்கும் பொருள்களை தயாரிக்கும் தயாரிப்பாளராக மாறுவது தொழிலதிபர் ஆவது, அது பரிணாமம். ஒவொரு நிலை உயர்வுக்கும் பின்னால் , உடலை வென்றது ,  உணர்வை  வென்றது, அறிவை வென்று ஞானத்தை பெற்றது , அதை தாண்டி ஆன்மாவின் பண்புகளை பின்பற்றியது இருக்கும்.

உதாரணமாக  ஊதியத்திற்கு வேலை செய்பவர் ஆயிரம் பேர் என்றால், அடுத்த நிலைக்கு செல்பவர் ஒரு 100 பேர் தான் இருப்பார்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு திறமை, திறன் இருந்து அதன் மூலம், promotion ஊதிய உயர்வு என்று வந்து இருக்கும். அடுத்த கட்டத்தில் அவரே ஏதாவது ஒரு department exam , training போன்றவற்றை எடுத்துக் கொண்டு ஒரு சில நிலைகளை தாண்டிய பதவி உயர்வை பெற்று இருப்பார். அது முன்னேற்றம்.

Clerk ஆக இருந்து IAS ஆனவர்கள் போன்றவர்களை இதில் எடுத்துக் கொள்ளலாம். இது போன்றவற்றில் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் பல நிலைகளை தாண்டும் ஆர்வம் பிரதானமாக இருக்கும். அதற்கான தகுதியை, திறமையை, அறிவை பெறத் தடுக்கும் எதையும் செய்யாமல் இருப்பதில் கவனமாக இருப்பார்கள். நோக்கம், அதற்கான சட்டங்கள், அது செயல்படும் முறைகள், ஆகியவற்றை பற்றிய தெளிவு பெற்று அதனை கவனமாக பின்பற்றுவார்கள். அது தான் அந்த முன்னேற்றத்தைத் தருகிறது. அதற்கு அடுத்த நிலையில், அவர்கள் ஒரு ஸ்தாபனத்தின் தலைமை பொறுப்பை ஏற்க அழைப்பட்டால், அல்லது முக்கிய பொறுப்புக்கு அழைக்கப்பட்டால், அது பரிணாமம். அதன் பின் அவர்களது சாதூர்யம், சமயோசிதம், தைரியம், பண்புகள், நிதானம், பொதுப்புத்தி என்று ஏராளமான திறமைகள் இருக்கும். TN Seshan election commission தலைவர் ஆனது, ஒரு IAS officer – Chief Secretary யாக தேர்ந்து எடுக்கும் முறை, தொழிலாளி தான் வேலை செய்த நிறுவனத்திற்கு நிர்வாக இயக்குனர் ஆவது, ஆயிரக்கணக்கான தொண்டர்களில் ஒருவன், மந்திரி ஆவது, தலைவன் ஆவது என்று நடப்பவைகளை கவனித்தால் ஒவ்வொருவரும் அடுத்த கட்டத்திற்கு செல்லும் விதம் புரியும். குறிப்பாக ஒரு தலைவன் எப்படி உருவாகிறான் என்பது கவனித்து பார்த்தாலும் இது புரியும். உயரதவர்களை கவனித்தால்  தகுதி இருந்தும் முயற்சி இல்லாதவர், முயற்சி இருந்தும் சட்டங்கள், அது செயல்படும் விதங்கள் தெரியாதவர், அது தெரிந்தும் தலைமைக்கான தேவைகளை அறியாதவர், அதற்கான பண்புகள் இல்லாதவர்,  அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்வதில்லை என்பதை ப்புரிந்து கொள்ள முடியும்.  எல்லா துறைகளிலும் – குடும்பம், விவசாயம், வியாபாரம், ஸ்தாபனம், அன்னையை ஏற்றுக் கொள்வது, சமர்ப்பணம், சரணாகதி என்று அனைத்திற்கும் சட்டம் ஒன்றே. இந்த நான்கு நிலைகளுக்கு உரிய வித்தியாசத்தை நாம் அறிந்தால், தொழிலாளி தொழில் அதிபர் ஆக முடியும்.

இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்ப்போம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »