Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள் – 19

இது வரை சொன்ன வழிகள் ஓரளவு பிடிபட்டு இருந்தாலும், செயல்படுத்தி பார்த்துக் கொண்டு இருந்தாலும் அவை “முறை – METHOD” என்னும் அளவிலேயே இருக்கும். அது மேல் மனது. தான் புரிந்துக் கொண்ட விதத்தில் அதைச் செயல்படுத்தும்.  அப்படி இல்லாமல், மனம் முழுமையை நினைத்தால், ஆழ்மனம் அதை புரிந்துக் கொண்டால், அது அதன் எல்லா அடுக்குகளிலும் சென்றால் அவை சாதனைக்கு வழி வகுக்கும். அதைத்தான் நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாக மாற முடியும் என்று கூறுவார்கள். அந்த மனநிலை, மனப்பான்மை, INTEGRAL -ஆக முழுமையாக அடைய தேவையானதை செய்வதே அடுத்த பதினேழாவது வழி.

காரணம் முன்னேற்றத்திற்கான மனநிலை என்பது எப்போதும் முன்னேற்றம் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவில்லாமல், ஒரு ஆசையின் மேல் அல்லது ஒரு எதிர்பார்ப்பின் மேல் மட்டுமே பெரும்பாலும் கட்டப்படுகிறது. என் தங்கைக்கு திருமணம் நடக்க வேண்டும், ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது போன்ற சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் நோக்கத்திற்கு கூட அதற்கான FOCUS இல்லாமல் செய்பவரே அதிகம். என்றாலும் அத்தகையோரின் ஆசை பெரும்பாலான நேரங்களில் பலித்து விடுகிறது. காரணம் அது ஏன் தேவை என்பது பற்றிய தெளிவு அதன் பின் இருக்கும். இதுவே பெரிய நோக்கங்கள், தொழில் ENTREPRENEURIAL நோக்கங்கள், ஆன்மீக நோக்கங்கள் பெரும்பாலும் அந்த அளவு முழுமை அடைவதில்லை. காரணம், அதை நாம் ஏன் பெற வேண்டும் என்ற தெளிவின்மை. ஒரு நோக்கத்தை நான் சாதிப்பதால் நான் அடையப் போவது என்ன என்பதை விட அதன் மூலம் நான் யாராக ஆகப் போகிறேன், எந்த PERSONALITY ஆகப்போகிறேன் என்பது தெளிவாகப் புரிந்தால், அதை மனம் நம்பினால், அது தான் நோக்கத்தின் தெளிவு. 1000 கோடி சம்பாதிக்க வேண்டும் என்பது நோக்கம் என்றாலும் அதன் பின்னால் பல கேள்விகள், தெளிவின்மை இருக்கும்.  நான் அம்பானி, TATA ஆக வேண்டும் என்றால் ஒரு தெளிவு பிறக்கும். நான் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்பது தெளிவான நோக்கம் தான்.  ஆனால் கர்மயோகி ஆக வேண்டும் என்பது அந்த தெளிவின் சாரமாக இருக்கும்.  அந்த மனநிலை வளர வேண்டும். அது ஆழ்மன எண்ணமாக மாற வேண்டும். பின் நாம் செய்யும் செயல்கள் அதை ஒட்டியே , நம் நடத்தை அனைத்தும் அதை ஒட்டியே இருக்க வேண்டும். பின் அதுவே நம் சுபாவமாக மாற வேண்டும்.  கர்மயோகி என்பது ஒரு நடத்தை அல்ல. அது ஒரு attainment . Personality இந்த ஒரு நிலையை  அடைதல் . அது பற்றிய தெளிவு இருக்கும்போதுதான் நம் அறிவு , செயல், உணர்வு, மனப்பான்மை, நடத்தை அனைத்தும் அதை சுற்றியே இருக்கும்.

மனம் இயங்கும் முறையை சுருக்கமாகப் புரிந்துக் கொண்டால், இதை எளிதாக பயிற்சியாக செய்ய முடியும். மனம் இரண்டு பகுதிகளால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஒன்று அறிவு – KNOWLEDGE , இன்னொன்று விருப்புறுதி – WILL .  மனம் புரிந்துக் கொண்டதை நம் விருப்புறுதி ஏற்றுக் கொண்டால், அது முடிவு – DECISION  என்று அழைக்கப்படும் . இது உடல், உணர்வு, ஆகியவற்றை கட்டுப்படுத்தும். அதனால் நம் FOCUS அதிகமாக இருக்கும்.  அது நோக்கமாக, அதற்கான தெளிவாக மாறும் போது அது பெரும்பாலும் சாதிக்கிறது. அது சாதனைப் பற்றிய தெளிவு. அதுவே சாதித்தால் நான் ஆக வேண்டிய PERSONALITY பற்றிய தெளிவு நம் ஆழ் மனத்தெளிவு.  அது DETERMINATION எனப்படும். அது நம் சாதனையை முழுமைப்படுத்தும். அதுவாகவே மாறவைக்கும்.

மனம் மட்டுமே ஏற்றுக்கொண்டால், அது OPINION – கருத்தாக, அபிப்ராயமாக  மட்டுமே இருக்கும்.  அது நம் நோக்கத்தை நம்மை சுற்றியுள்ள மனிதர்கள், சூழல், ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். அவர்களின் கருத்துக்கள், முன்முடிவுகள், அபிப்ராயங்கள் நம் செயலுக்கு அடிப்படையாக இருக்கும். 

விருப்புறுதி மட்டுமே நம்பினால் அது வெறும் ஆசையாக மட்டுமே இருக்கும். அறிவு, உணர்வு, செயல் பற்றியா தெளிவு இருக்காது. எப்படியாவது நடந்து விடாதா என்ற ஆசையுடன் செய்ததையே செய்துக் கொண்டு இருப்போம். சூழலை, மனிதர்களை, சட்டத்தை, நேரத்தை , இறைவனை கூறிய சொல்லுவோம்.  எல்லாவற்றையும் செய்கிறேன் ஆனால் பலன் மட்டும் இல்லை என்று சொல்லும் நிலையில் தான் இருக்கும்.

இந்தத் தெளிவு தான் உடல், உணர்வு, மனம் ஆகியவற்றின் ஆற்றலை சம நிலையில் வைக்கும். நம் நோக்கம், கருத்து , அபிப்ராயம் அதற்கான செயல்பாடு அனைத்தும் ஒரே நிலையில் இருக்கும். Focussed ஆக வைக்கும்.  அந்த நிலையே DETERMINATION . எந்த இடத்திலும் முரண்பாடு என்பதே இருக்காது. அதுவே சாதிக்கும்.

ஆழ்மனம் (subconscient) உள்மனத்தில் (inner mind) உறைகிறது. மேல் மனம் முழுவதுமாகப் புரிந்த பின், ஆழ்மனம் அதை ஏற்கிறது. அத்துடன் புரிய வேண்டிய நிர்ப்பந்தம் மறைகிறது. மேற்சொன்னவற்றை வேறு வகையாக எழுதினால், புரிய ஆரம்பிக்கும்பொழுது திரும்பத் திரும்பப் அதைப் பற்றி நமக்கு நமே பேசுவோம் அல்லது பிறரிடம் பேசுவோம். அது பயனில்லை என்று உணரும்போது முதல் நிலையில் சிந்திக்கிறோம், பேச்சு குறையும். திட்டமிடுதல் அதிகமாகும். அடுத்த நிலை புரிவதால் எண்ணம், சிந்தனை  மறைகிறது. அந்நிலையை ஆழ்மனம் ஏற்கிறது. FOCUS வருகிறது. மேல் மனம் ஏற்றதை ஆழ்மனம் ஏற்றால் அறிவு, திறனாகி, சூழ்நிலையைக் கட்டுப்படுத்தி, எதிரான இடையூறுகளை (எதிரொலியாக எழுபவை) முறியடித்து நம்மைச் சாதிக்கத் தயார் செய்கிறது. அதுவே DETERMINATION உருவாகும் விதம். நம்மில் (BEING) எந்த முரண்படும் இருக்காது.

முரண்பாடு இல்லாத இடம் தூய்மை. முரண்பாடு இல்லாத இடம் சத்தியம் என்கிறார் கர்மயோகி.  TRUTH IS THAT – WHICH IS WITHOUT CONFLICT என்கிறார்.  அன்னை அன்பர்கள்  THY WILL என்பார்கள். பக்தி அல்லது நம்பிக்கை மேலிட்டு அதை ஏற்றுக் கொள்வதாக அறிவு சொல்லும்.  நாம் அன்னை அன்பர் என்று நம்புவோம். ஆனால் உணர்வு நமக்குப் பிடிக்காதது, எதிர்பாராதது நடந்து விடுமோ என்று கலங்கும்.  உடல் படபடக்கும். அதாவது சமநிலையில் செயல்படவேண்டிய ஆற்றல், ஏற இறங்க இருக்கிறது. ஆனால் தீயது என்று நாம் நினைப்பவற்றை செய்பவர்களை கவனியுங்கள். அவர்களின்  ஆற்றல் சமமாக செலவாகும். தான் செய்ய வேண்டியது பற்றிய தெளிவு இருக்கும். மனதில் தவறென்ற உணர்வு இருக்காது.  உடல் அதற்கான உடல் மொழியை வெளிப்படுத்தும். அதனால் நம் நோக்கத்தைப் பற்றிய GOAL -ஐ பற்றிய சந்தேகம், படபடப்பு, DEPRESSION வரும் இடங்களில் விழிப்பாக இருந்து அதை முழுமைப்படுத்த வேண்டும். உதாரணமாக அறிவில் நம் நோக்கத்தை பற்றிய இரண்டு நிலை எதிராக இருந்தால் அதற்கான சிந்தனைகளை நிறுத்துவது, உணர்வுகளில் சந்தேகம், பயம், அதிருப்தி இருந்தால், அதன் அதிர்வுகளை நிறுத்துவது. உடலின் படபடப்பாக இது நடக்குமா நடக்காதா என்ற கலக்கம் இருந்தால், அதை நிறுத்துவது நம் ஆற்றலை, நம் நோக்கத்திற்கு மட்டுமே செலவழிக்கும்.

இந்த நிலைக்கு காரணம் நமக்கு தொலைநோக்கு பார்வை இல்லாதது. அதன் அடிப்படையில் நம் முன்னேற்றத்தை முடிவு செய்யாதது. பொதுவாக நம் பார்வை, நம் நோக்கம் என்பது நாம் முடிவு செய்வது அல்ல.  நம் சூழல், மனிதர்கள், உறவுகள், முன்னேற்றம் என்று சொல்வதையே நாம் எடுத்துக் கொள்கிறோம்.  அந்தந்த கால கட்டத்தில் எதை முன்னேற்றம் என்று சமுதாயம் சொல்கிறதோ , நம்மை சுற்றி உள்ள மனிதர்கள் சொல்கிறார்களோ அதை நாம் எடுத்து கொள்கிறோம். காரணம் நாம் இந்த உலகத்தை அது தரும் வாழ்வை 90% நம்மை சுற்றியுள்ள 10% பேரின் பார்வையில் தான் பார்க்கிறோம்.  மீதி 10% – உம் நம் சுயநலம், கருத்து, அபிப்ராயம், COMFORT ZONE  ஒட்டியே அமையும். நம்மை சுற்றி ஒரு 30 பேர் இருப்பதானால், ஒரு மூன்று அல்லது ஐந்து பேரின் பார்வை தான் நம் பார்வையாக இருக்கும். அதுவே சரி என்று தோன்றும். வாழ்வைப் பற்றிய, சமுதாயத்தைப் பற்றிய, முன்னேற்றத்தை பற்றிய  அவர்களின் கருத்தே நம் கருத்தாக இருக்கும். அந்த சூழலில் உள்ள முன்னேற்றம் தான் நம் நோக்கமாக மாறும். உதாரணமாக சம்பளம் வாங்கும் வேலையில் இருப்பவர் அடுத்த நல்ல வேலை, PROMOTION என்று தான் நினைப்பார்.  அது தான் முன்னேற்றம் என்று இருக்கும்.  ஆனால் தான் வேலை செய்யும் கம்பெனி முதலாளி போன்று வர வேண்டும் என்பதை நோக்கமாக கொள்வதில்லை. நம்மில் ஒருவர் வீடு கட்டினால் நாமும் கட்ட வேண்டும் என்ற நோக்கம் வருகிறது. நம்மில் ஒருவர் ஒரு வெளிநாட்டு டூர் சென்றால் நாமும் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. ஏன் அதை செய்ய வேண்டும், அதனால் எனக்கு வருவது என்ன, நான் ஆவது என்ன என்பதற்கு தெளிவான பதில் இருக்காது. அதனால் தான் தவறான வழிகளை பின்பற்றுபவர்களுக்கு  பலவும் எளிதாக பலிக்கும் போது நமக்கு எதுவும் பலிப்பதில்லை. காரணம் அவர்கள் நோக்கத்தை – தவறான வழியில் எப்படி சரியாக செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கிறது. ஆனால் நமக்கு எதை பற்றிய தெளிவும் இல்லை. நான் நினைத்ததை சாதித்துக்  கொள்ளும்- முன்பொரு பாயிண்ட் இல் சொன்னது போல  சமயோஜிதம், சூட்சுமம் நமக்கு இருப்பதினால். நான் சொல்வதை ஒரு அரசியல்வாதியின் நடத்தையில், வாழ்க்கையில் பொருத்தி பார்த்தால் இது நன்றாக புரியும்.

நம் உலகத்தை நாம் நம் கண்ணால், நம் அறிவால், நம் INDIVIDUALITY  நம் ஆனந்தம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பார்க்க வேண்டும். அதற்கு முன் சொன்ன வழியில் உள்ளது போல குறைந்தபட்சம் அந்த சூழல், மனிதர்கள், நம்மை ஒத்த ஆர்வம், நோக்கம் உடையவர்கள் மத்தியில் நாமிருக்க வேண்டும். அப்போது தான் நம் மனம், உணர்வு, உடல் ஒரே நிலையில் ஆற்றலை செலவு செய்யும். செய்யும் ஒரு சிறு விஷயமும், கடைபிடிக்கும் ஒவ்வொரு சிறு பண்பும் அடுத்தடுத்த  நிலைகளை அழைத்து வரும்.

உதாரணமாக நம் முன்னேற்றத்திற்கு சுத்தம் ஒரு அடிப்படை என்று நினைப்போம். அந்த சுத்தம், பின் ஒழுங்கு, தேவையில்லாத பொருளை தூக்கி எறிதல், பின் தேவையில்லாததை வாங்காமல் இருத்தல், அந்த பொருளை முழுமையாக உபயோகப்படுத்துதல் என்று பல திறமைகளை கற்றுக் தருவதை பார்க்கலாம். அதே போல ஒரு விஷயத்தை பற்றிய ஒரே ஒரு தெளிவு கூட பலவற்றை நம்மை நோக்கிக் கொண்டு வரும்.

நான் ஏராளமான போலீஸ், ரவுடிகள், வக்கீல்கள் என்று பழகி இருக்கிறேன். அவர்கள் யாருக்கும் நல்லதின் மேல், நல்ல வழிகள் மேல், நல்லவர்கள் மேல் நம்பிக்கை என்பதே இருக்காது. மனிதர்கள் அனைவரும் கெட்டவர்கள், குறுக்கு வழியே சரி என்றே நினைப்பார்கள். அதுவே வாழும் முறை என்று நினைப்பார்கள்.

காரணம் அவர்கள் உலகை அவர்கள்  தொழில் ரீதியாக கையாளும் மனிதர்களை வைத்தே தீர்மானிக்கிறார்கள். அந்த அளவு தான், நாமும் இருக்கிறோம் என்று ஆராய்ந்து பார்த்தால் புரியும். அதற்கு முதலில் நாம் அறியாமையில் இருக்கிறோம், ஆசைகளை நோக்கமாக, ஆர்வமாக, (AMBITION AND ASPIRATION) என்று நினைத்துக் கொண்டு அர்த்தமில்லாத அதற்கு சம்பந்தமில்லாத காரியங்களை செய்துக் கொண்டு இருக்கிறோம்.  செய்வதையும் திறமை இல்லாமல், அறிவில்லாமல், அதற்கான உணர்வு மனப்பான்மை இல்லாமல் செய்துக் கொண்டு இருக்கிறோம் என்பது தெரிய வேண்டும்.

நாம் முன்னேற வேண்டுமானால் நாம் மாற வேண்டும், உயர் சித்தத்தை பெற வேண்டும், உயர் பண்புகளை பெற வேண்டும் என்ற தெளிவு வேண்டும். அந்த ஆர்வத்திற்கு உதவ ஒரு பரிணாம சக்தி இருக்கிறது என்பதை நம்ப வேண்டும். அந்த உயர்ந்த சக்தியை பயன்படுத்த மனம், உணர்வு, செயலில் உயர்ந்தது வேண்டும். அதற்கு சூழல், மனிதர்கள், உயர்ந்ததாக இருக்க வேண்டும். நமக்குத் தெரிந்த உயர்ந்த முறையில் நம் திறமைகளை பயன்படுத்துவது, அதற்கான மனநிலையை அடைவது வெற்றிக்கான வழி.

சரி, இதற்கான மனிதர்கள், சூழல் எனக்கு இல்லை அல்லது இருப்பவர்களை கொண்டு தான் இதை செய்ய  வேண்டி இருக்கிறது என்பவர்களுக்கு அடுத்த வழி DETACHMENT பற்றற்று செய்தல் – இது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »