Share on facebook
Share on telegram
Share on whatsapp

மனம் – இறைவனின் விளையாட்டு கருவியா ? – 5

நம் வாழ்வு நம் சித்தத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.  அதற்கு காரணம் மனம். அது மேல் மனத்தால் நடத்தப்படுகிறது.  அதற்கு நாம் முயன்று conscious -ஆக , வாழ்வை, அதிமனதால் , Supermind -ஆல் , நாம் அறிந்த அதிமன பண்புகளால், அன்னை விரும்பும் பண்புகளால்,  நடத்தப் படுமானால் அது பிரம்மத்திற்கு இடம் அளிப்பதாகும். வாழ்வில் அது நாம் அன்னைக்கு கருவியாவதாகும்.

உதாரணமாக  , சற்றே பொதுப்புத்தி (commen sense ) பெற்ற பிறகும் , பல பாடங்கள், பல அனுபவங்கள் பெற்ற   பிறகும் நம் எடுக்கும் முடிவுகளை பார்த்தாலே இது புரியும். வாழ்வு பாடங்களை மட்டுமல்ல , குறியீடுகளையும் தராமல் இல்லை.  நம் மனம் அகந்தையின் கருவியாக இருப்பதால் அவற்றை கவனிப்பதில்லை. அகந்தைக்கு, அதன் கருவியான மனதிற்கு, வாழ்வில் பிரச்சினைகளை  உற்பத்தி செய்து அதன் மூலம் தன்  முக்கியத்துவத்தை தானே அனுபவிக்க விரும்புகிறது. பிரார்த்தனை செய்யும் போது கூட அன்னை என்ன செய்ய வேண்டும் என்று நாம் தான் சொல்லுவோம். எனக்கு விருப்பமானதை செய் என்றே கூறுவோம். சாதாரண விஷயங்களில் கூட வாழ்வு தரும் அறிவை, குறியீடுகளை நாம் ஏற்பதில்லை. உதாரணமாக பெட்ரோல் reserve காட்டினால் அடுத்த பங்க்கில் போடாமல் இன்னும் நூறு கிலோ மீட்டர் போகும் போ என்று சொல்லிவிட்டு பின் பெட்ரோல் பங்க் இல்லாமல் அலைந்தது உண்டு. இன்வெர்டர் பேட்டரியில் தண்ணீர் இல்லாமல் பீப் சத்தம் வந்தால் முதல் வேலையாக  அதை செய்யாமல் அடுத்து கரண்ட் போகும்போதே செய்வது உண்டு. ஒரே மாதிரி முடிவுகளை எடுத்து மாட்டி கொண்டது உண்டு. பட்ட இடத்தில படும் என்பது போன்ற அனுபவங்கள் பல உண்டு. என்றாலும் மனம் மாறுவதில்லை.

சிறியதோ, பெரியதோ  நம் பிரச்சினைகள் அனைத்தையும் உருவாக்கியது மனமே என்பதை கவனித்து பார்த்தால் புரியும். நல்ல முடிவுகளை எடுத்து இருக்கலாம் என்று தோன்றும். அதை கவனித்து பார்த்தால் அன்னையோ வாழ்வோ அதற்கான  குறியீடுகளையோ , எச்சரிக்கைகளையோ தராமல் இல்லை என்பதையும் கவனிக்க முடியும். நாம் சிறு சிரமங்களை , சிறு அசௌரியங்களை , சிறு இழப்புகளை எப்படி தவிர்த்து , பெரிதாக வளர விடுகிறோம், அதற்காக நாம் சொல்லும் காரணங்களை  கவனித்து பார்த்தால் நம் மனம் எப்படி இயங்குகிறது என்பது புரியும்.  மனம் இறைவனின் கருவியாக மாறவே அனைத்தும் நடக்கிறது என்பது புரியும். துன்பத்தில் இறைவனிடம் ஓட  ஆரம்பிப்பதில்  இருந்து , வேறு வழி இல்லாமல் உயர் பண்புகளை ஏற்றுக்கொள்வதில் இருந்து , திருஉருமாறுவது வரை அனைத்தையும்  கவனித்து பார்த்தால் மனம் இறைவனது கருவியாக இருப்பது புரியும். அடிபட்டு மிதி பட்டு மாறுவதற்கு பதிலாக மனம் தானே இறைவன் விரும்பும் பண்புகளை எடுத்து கொண்டால் – மனம் ஆனந்தத்தின்  கருவியாகி விடும். அந்த மாற்றத்தை நாம் நேரடியாக எடுத்து கொள்வது இல்லை.

நாம் உடலை , மனதை, உணர்வை, நாமறிந்த நல்லவற்றால் தூய்மை படுத்துவதாக நினைக்கிறோம். நாம் அறிந்த நல்லதிற்கு மாற்ற நினைக்கிறோம். அது பெரும்பாலும், தீமையை, கெட்ட எண்ணங்களை, உணர்வுகளை, அடக்குவதாகவே இருக்கும்.  ஜட மனதிலிருந்து ஆன்மீக மனமாவது  மோக்ஷத்திற்கு வேண்டுமானால் எடுத்துச் செல்லும்.  ஆனால் தீமையை புரிந்து திருவுருமாறுவது – அதன் முழுமையை உணர்ந்து நம் இருப்பின் ஆனந்தத்தை அனுபவிப்பது.  We don’t need inert matter changing into spiritual matter.  We need delight of existence. அது மேல் மனதில் சந்தோஷமாகவும், வாழ்வில் வளமாகவும் , அபரிமிதமாகவும் எதிரொலிக்க வேண்டும். 

நாம் எதையும் இரண்டு இரண்டாக பிரித்து பார்த்து நல்லதிலிருந்து கெட்டதை , கெட்டதிலிருந்து நல்லதை பிரித்துப்  பார்த்து, நாம் அறிந்த நல்லதை ஏற்றுக் கொள்வது என்பது ஒரு வகையான இணக்கதீர்வு.  ஆனால்  உண்மையில் பரிணாமத்தில் முன்னேற வேண்டும் என்றால், அந்தந்த நிலைக்கான ஆனந்தத்தை நாம் முழுமையாக பெற வேண்டும் என்றால் நம் மனதிற்கு புரிய வேண்டியது  நல்லதும் கெட்டதும் ஒரே  விஷயத்தின் இரு முகங்கள் என்பது. இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை களைவது. We don’t want positive that cooperates with negative.  We need to eliminate the difference between positive and negative.

அகந்தை, நம் மனதை  கருவியாக கொண்டு –  நாம் தனி, உலகம் தனி, என்று பிரித்துப்  பார்க்கிறது.  நம் உள்ளே இருப்பதே நம் உலகமாக இருக்கிறது என்று நினைக்க முடிவது ப்ரம்மம் விரும்புவது. யோகி உள்ளே போவதை இதற்கு உதாரணமாக கூறலாம்.  அவர் வெளியே உள்ளதை துறக்கிறார்.  வெளியே  நடப்பதை உள்ளே பார்க்கிறார். அகம் புறத்தை நிர்ணயிப்பதே பிரம்ம நோக்கம் , THY WILL என்று அறிகிறார்.  Ego has inner and outer.  Inner that projects itself in the outer to create it, to control it is what we need. மனம் அகந்தையிடம் இருக்கும்போது தடையாகவும் , இறைவனிடம் இருக்கும் போது  முன்னேற்றமாகவும் இருப்பதை பார்க்க முடியும்.

நாம் அறியாமை என்று ஒன்றை நினைத்தாலே , அதில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால்   – அதை விட்டு அறிவு, ஞானம் என்று நாம் நினைப்பதை ஏற்றுக் கொள்ள முயல்கிறோம். அது தவறு.  நம் அறியாமையின் முழுமையை உணர்ந்து, அதிலிருந்து வெளி வரும் அறிவை ஏற்பதே ஞானம், பரிணாம முன்னேற்றம்.  It is not ignorance and knowledge.  It is knowledge that emerges out of ignorance is what we need.

அன்பர்கள் மெய்ஞ்ஞானத்தை பெற்றவர்கள் என்று நான் கேட்பதை விட மெய்ஞ்ஞானத்தை உணர்ந்தவர்கள் என்று கூறப்படுவதையே நான் விரும்புகிறேன் என்கிறார் கர்மயோகி.  அந்த வார்த்தைகளுக்குள் பொதிந்துள்ள பொருளைப் பற்றி சிந்தித்தாலே இந்த கட்டுரையின் இந்த பகுதிகளின் சாரம் முழுதும் புரியும்.

அப்படி நம்மால் உணர முடியாததற்கு காரணம்:

  • எந்த சூழ்நிலையிலும் நாம்  எப்போதுமே past experience, prejudice,  opinions, comforts ஒட்டியே செயல் படுகிறோம்.. 
  • திட்டமிட்டு ஏற்கனவே செய்த தவறுகளைத் திருத்தும் வழிகளை அல்லது  எதிர்காலத்திற்குத்  தேவையானதை செய்வதில்லை.
  • பரிணாமத்தையும் வளத்தையும் (Evolution & Prosperity) கொண்டுவரும் விஷயங்கள் எவை, அவை இரண்டுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றை அறிவதில்லை..
  • நம் personality , falsehood கு தரும் ஆதரவு, அதன் பின் உள்ள  இயலாமை – அதனால் நாம் மாற வேண்டிய இடங்கள் எது என்று சிந்திக்காமல்  இருப்பது.
  • நம் உள்ளே உள்ள மனநிலையே வெளியே நடக்கும்  விஷயங்கள் என்பதில் நம்பிக்கை வராதது.
  • நம் உடலை , உணர்வை அறிவை எப்படி organize செய்கிறோம் என்பதில் கவனம் இல்லாதது .
  • அன்னையை  நம்மை நோக்கி வரவைக்க  அந்த அளவிற்கு அன்னை விரும்பும் பண்புகளை பின்பற்றுவது முக்கியம் என்று புரியாதது.
  • நமக்கு முன் ஒவ்வொரு கணமும் உள்ள தேர்வு (choice)    சுமுகம், ஒருமை, உடன்பாடு குறித்த அறிவு இல்லாதது  
  • நம்முடைய மிகப்பெரிய பலம் நம் ஆன்மா மற்றும் அது வெளிப்பட உதவும் சூழல் என்னும் ஞானம் வராதது.

இவற்றை கவனமாக பார்த்து களைய முற்பட்டாலே நாம் பிரம்ம நோக்கத்திற்கு இடம் கொடுக்கலாம்.

நாம் வாழ்வில் செய்வதெல்லாம் – நம் செயல்கள் actions -ஐ எல்லாம் – நம் அறிவுக்கும் உணர்வுக்கும் ஏற்ற நிலையில் நாமறிந்த உயர்ந்த நிலையில் செய்வதாக நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அவை அனைத்தும் மனதின் reactions -ஏ, எதிர்வினைகளே . நன்றாக யோசித்துப் பார்த்தால் இது புரியும். ஒரு கொள்கையோ திட்டமோ, உறுதியோ இல்லாமல் நம் முன் வரும் விஷயங்களுக்கு ஏற்றார் போல அப்போது இருக்கும் மனநிலைக்கு ஏற்றாற்போல , சூழல் , மனிதர்களுக்கு ஏற்றாற்போல  நாம் செயல் படுகிறோம். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர் வரும் மனிதர்களோ, உறவுகளோ, நண்பர்களோ, market -ட்டோ, சமுதாயமோ, சூழலோ தான் முடிவு செய்கிறது. அறிவில் செயல்படுவதாக நினைத்தாலும் சூழலுக்கேற்ற உணர்வாலேயே செயல்படுகிறோம் அல்லது நம் அபிப்ராயங்கள் அனுபவங்களை ஒட்டிய எண்ணங்களாலேயே செயல் படுகிறோம்.

மனத்தில் இருந்து வெளியே வரும் ஒரு வழியான step back, silent will ஆகியவற்றை நாம் கடைபிடிப்பதே இல்லை.  முன்பு அன்னை முறைகளை செய்து அது தந்த மாற்றத்தை அனுபவித்திருந்தாலும் அதை நாம் கடைபிடிப்பதில்லை.. நம் முயற்சி இல்லாமல் முடிந்த காரியங்களை நினைத்துப் பார்த்தால் இது புரியும். காரணம் , நம் அறிவு surface mind. நமக்குத் தெரிந்த surface idea க்களை மட்டுமே நினைக்கும். நினைவில் இருக்கும் அனுபவங்களை மட்டுமே ஆராயும். ஆனால் step back, silent will , silence போன்றவை அந்த முன்னேற்றத்திற்கு, அந்த பிரச்சனைக்கு தேவையான ஞானத்தைத் தரும். அது உள்ளுறை ஞானம்.

நாம் பேச நினைத்து, சொல்ல நினைத்து, கேட்க நினைத்து அடக்கியதை எதிரில் உள்ளவர் பேசியதையும், செய்ததையும் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட பல அனுபவங்கள் இருந்தாலும் நமக்கு அவை நினைவுக்கு வருவதில்லை. நம் முறைகள், நம் வழிகளே நம் நினைவுக்கு வருகிறது. அங்கு நம் விருப்பு, வெறுப்பு தான் வெளிப்படுமே தவிர, காரியத்தை சாதிக்க தேவையான சிந்தனை வராது. மனம் அமைதியாக அறிவு மட்டுமே அவர் சொல்வதை ஏற்கும் போது (inward listening) உண்மையான ஞானத்தை வெளிக் கொண்டு வந்து அதற்கு தேவையான energy -யோடு வெளிப்பட்டு செயல்படும் சக்தியாக மாறும்.

நாமே சிந்திக்கும் போது வெற்றிப் பெற்றதாக நினைக்கிறோம். ஆனால் சூழலை ஜெயிக்க வேண்டுமென்றால் மனம்  விலக வேண்டும். அதாவது  மனம் விலகி surface level-லிலிருந்து உள்ளே போய் உயர் சித்ததால் பார்க்க வேண்டும். கேட்க வேண்டும்.  எண்ணமும் மனமும் அமைதியாகும் போது அது வெற்றிடம் ஆவதில்லை. அது ஞானத்தின் மறு பக்கம் என்பதால் realisation ஆக நிரம்புகிறது. இதை – சுபாவத்திலிருந்து வெளியே வருவதால் ஆன்மா அந்த இடத்தை நிரப்புகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்.

ஆரம்பத்தில் முழு அமைதி என்பது முடியாது என்றாலும் அறிவும் மனமும் – தங்கள் அனுபவம், முன் முடிவு, அபிப்ராயம் சொல்வதை கேட்பதிலிருந்து ஆன்மா என்ன சொல்கிறது, உயர்சித்தம் என்ன சொல்கிறது என்று கேட்பதை பழக்கப் படுத்தினால் அமைதி, மௌனம், சிறிது சிறிதாக வளரும். காரணம் அமைதியும் மௌனமும் உயர் சித்தத்தின் பகுதிகள். குறைந்த பட்சம் புறச் சூழல் நம் அகச் சூழலை பாதிக்காத நிலைக்காவது வருவோம். அது மனம் அகந்தையை இருந்து விலகி இறைவனின் கருவியாவதற்கு அடையாளம்.

வேறொரு தலைப்பில் மீண்டும்  சந்திப்போம். உங்கள் கருத்துகளை rameshposts@gmail.com / 80144 22222 ( WhatsApp ) – தெரிவித்தால் என்னை மேலும் பண்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »