பிரம்மம் – சிருஷ்டியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதுதான் பரிணாமம் – அதுவே வாழ்வில் முன்னேற்றமாக மாறும் , அதற்கு மனம் தான் கருவி என்பது புரிய பிரம்மம் எப்படி முதலில் உள்ளே மூழ்கியது என்று தெரிய வேண்டும்.
எல்லாமுமாக எங்கும் நிறைந்த பிரம்மம் என்னும் போது அது தன்னை எங்கே மறைத்துக் கொள்ள முடியும். அது தனக்குள், தன்னைத் தானே மறைத்துக் கொள்கிறது. என்றாலும், அதாவது தன்னை மறைத்தாலும் தன்னை பற்றிய நினைவு, ஞானம் அதற்கு இருப்பதால் – ever present – ஆக இருப்பதால், அது தன்னை மறக்க வேண்டி இருக்கிறது. அது காலம் என்ற ஒன்றை உருவாக்குகிறது. அதனுள் நுழைந்து, கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் வாழ்ந்து, நிகழ்காலத்தைத் துறக்கிறது. கடந்த காலத்தில் வாழ, அதன் அனுபவங்களை அசை போட , அதை வைத்து எதிர்காலத்தின் எதிர்பார்ப்பை திட்டமிடட, அப்படி நடப்பதே ஆனந்தம் என்று நினைக்க, அதற்கு ஒரு கருவி தேவைப் படுகிறது-அது அகந்தை. அதற்கு நிகழ் காலம் என்பதே – எதிர்காலம் பற்றியோ , இறந்த காலம் பற்றியோ நினைத்து கொள்வதுதான். எதிர்பார்ப்பு என்பதே ஒரு எதிர்காலம் பற்றிய நினைப்பு தான். அது எப்போது எதை பார்த்தாலும் நடப்பதை கவனிக்காமல் , அடுத்து என்னவாகும் என்றே இருக்கும். வர போகும் பலன் மீதே இருக்கும். எப்போதும் ஒரு ஒப்பீட்டிலேயே இருக்கும். அதுவே அகந்தையின் நிலைப்பாடு.
நாம் நிகழ்காலத்தை நினைக்காமல், ஒவ்வொன்றையும் கடந்த காலத்தை வைத்தே எதிர்காலத்தை முடிவு செய்ய, அதன் அபிப்ராயங்கள், முன் முடிவுகள், சுகத் தேர்வுகள், விருப்பு, வெறுப்புகள் என்று இருப்பதைப் பார்த்தால் இது புரியும். அதற்கு பிரித்துப் பார்க்க, ஒரே நேரத்தில் ஒன்றை மட்டுமே பார்க்க ஒரு தளம் தேவைப்படுகிறது. அதுவே மனம் – அகந்தையின் வெளிப்பாடு.
அதனால்தான் ஒட்டுமொத்த அறியாமை வெளிப்படும் இடமாக மேல் மனம் இருக்கிறது. நாம் துன்பம் என்று நினைக்கும் அனைத்திற்கும் அதுவே காரணமாக இருக்கிறது. அந்த மனம் – தான் பிரம்மம் அல்லது அதன் பகுதி என்று உணர வேண்டுமென்றால், நான் ஒளி மிக்கவன், அதை இருளை உருவாக்க உபயோகப்படுத்தி கொண்டு இருக்கிறேன் என்பது புரிய வேண்டும் . அப்படி புரிந்தால் மீண்டும் வந்த வழியே மேல் மனதிலிருந்து ஆழ் மனத்திற்குச் சென்று, பிரித்து பார்த்த பிரிவினையில் ஒருமையைப் பார்த்து காலத்திற்குள்ளும் , எந்த விதமான பிரிவினைக்குள்ளும் செல்லாமல் இருக்க முடியும். அப்போது தான் மனம் இறைவனின் கருவியாக மாற முடியும். நாம் இறை வாழ்வை வாழ முடியும். பிரம்மத்திற்கும் பிரபஞ்சத்திற்கு தனி மனிதன் இடம் கொடுக்க முடியும். நடை முறையில் அன்னை விரும்பும் வாழ்வை வாழ முடியும் , அன்னையின் அருளுக்கு பாத்திரமாக , கருவியாக ஆக முடியும்.
இந்த கோட்பாட்டை நான் முன்பு சொன்ன என் company உதாரணத்தில் பொருத்திப் பார்க்கலாம். வாழ்வில் வளம் வந்து மனம் வளர்ந்த பிறகு , அது அகந்தையின் பண்புகளை வெளிப்பட அனுமதித்து, அனைத்தையும் பிரித்து பிரித்து பார்த்து, கடந்த கால அனுபவங்களை வைத்து, சமுதாய அனுபவங்களை வைத்து, பண்புகளால் அது வரை அபரிமிதமான முன்னேற்றம் பெற்று இருந்தாலும், அதை தொடர விரும்பாமல், என் முடிவுகளே சரி என்னும் இருளில் மூழ்குவது என் மனதிற்கு ஆனந்தமாக இருந்தது. இருளும், ஒளியும் சந்திக்கும் அளவிற்கு,பாதாளமும், பரமனும் சந்திக்கும் அளவிற்கு, ஒரு முழு சுற்று வந்த போது , ஒளி – இருளின் கதவை வெள்ளத்தின் வடிவில் உடைத்தது.
இந்த இடத்தை symbol dawn என்று சாவித்ரி பெற்ற அனுபவத்திற்கு இணையாக கூறுகிறார். தோற்றேன் என்ற போதே வென்றாய் என்னும் இடம் அது. பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை நேரம் கும்மிருட்டு என்றாலும், சற்று உற்று பார்த்தால் அடர்ந்த காட்டிலும் கண் தெரியும் ஒளியை உள்ளடக்கியது என்கிறார். நான்கு அல்லது நாலரை மணிக்கு அடர்ந்த பகுதியில், மலை பிரதேசத்தில் பார்த்தால் இது புரியும். ஒளி தன்னை வெளிப்படுத்தும் நேரம் அது. அதை வாழ்வில் சொல்வதானால் ,வேறு வழி இல்லாமல் பண்புகளை, conscious -ஆக எடுக்கும் போது நாம் முன்னேறுவதாக நினைக்கிறோம். Ascent என்று நினைக்கிறோம். உண்மையில் அது Decent – இறைவன், அவன் பண்புகள், நம்முள் இறங்கும் நேரம் அது. அந்த நிலை பண்புகளுக்கு மனிதன் இடம் கொடுக்கும் நிலை என்பதால், பிரம்ம நோக்கத்திற்கு இடம் கொடுத்தவராகிறோம். வளரும் ஆன்மா வெளி வரும் இடம் என்பதால் அகந்தை உள்ளே செல்லும் , கஞ்சம் கொஞ்சமாக மறையும் இடம் அது.
மனிதனுக்கு பிரபஞ்சம் என்பது அவன் வாழ்வு. அவன் வாழ்வுதான் அவன் உலகம். அதாவது பிரபஞ்சம் வாழ்வாக அவனை நாடுகிறது. அப்படி நாடும் போது அகந்தைக்கு புரியாத விஷயங்கள் பயங்கர நிகழ்ச்சிகளாக, துன்பங்களாக, ஒன்றுக்கொன்று எதிரான சம்மந்தமில்லா செயல்களாக, எண்ணங்கள், மனப்பான்மை, மனிதர்கள் – அது வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம், அதற்கு வாழ்வு தரும் மறுமொழி எல்லாவற்றையும் பார்த்தால் பிரபஞ்சம் ஒரு குழப்பம், ஒரு மாயை என்று தோன்றும். ஆனால் அவற்றை எல்லாம் ஆன்மாவின் பார்வையில் பார்த்தால் அதன் பின் பிரம்மத்தின் ஒரு வித்து, பரிணாமத்தில் முன்னேற தேவையான ஒரு ஒழுங்கு இருப்பதைக் காணலாம். காரணம் மனித முன்னேற்றம் என்பதன் பொருள் அதுவே. இவை அனைத்துகும் பின்னால் மனம் கருவியாக இருப்பதை கவனித்துப் பார்த்தால் புரியும்
புரியவில்லை- “Unknowable ” என்று நாம் நினைக்கும் அவை , அந்த ஒழுங்கு – தனி மனிதன், பிரபஞ்சம் – individual , universe இரண்டையும் நிரப்பும் ஞானமாக இறங்குகிறது. unknowable என்று நினைப்பது நாம் அறிந்த உயர்ந்த செயலை செய்யாமல் இருப்பது, நாம் அறிந்த உயர்ந்த மனப்பான்மையை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது – it is denial of Sachithanadha என்கிறார். ஆனால் அது தவறு அல்ல. சச்சிதானத்திற்கு- கொல்லைப்புறம் வழியாக வரும், வரையறுக்கப்பட்ட, பூரணமில்லாத பிரித்தறிந்து அனுபவிக்கும் ஒரு நிலை என்கிறார். அது எதார்த்தத்தை (Reality ) வெளிப்பாடுகளை பார்த்து நாமே ஞானத்தை பெறுவது. அந்த ஞானத்தை higher reality நிதர்சனம் என்று எடுத்து கொள்ளலாம். நாம் இதுவே யதார்த்தம், இதுவே நடைமுறை,, இதுவே மனித சுபாவம் , இதுவே எல்லை என்று நினைக்கும் எல்லாவற்றிக்கும் பின்னாலும் ஒரு நிதர்சனம் இருக்கிறது. அதாவது ஒவ்வொரு lower reality கு பின்னாலும் ஒரு higher reality இருக்கிறது.
உலகில் தீமையும், குறையும், துன்பமும், ஏன் வந்தது, எப்படி வந்தது என்பதை மனிதன் அறியும் முறை அது. அவை என்ன செய்தது என்பதையும் அறிய முடிந்தால், அதை வாழ்வில் பொருத்திப் பார்க்க முடிந்தால், அதனால் வாழ்வு எப்படி மாறியது என்று பார்க்க முடிந்தால், அதன் பின் உள்ள சத்தியத்தை, அதன் நோக்கத்தைப் புரிந்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு துன்பம், பிரச்சினை , குறைகளிலிருந்து வெளியே வந்த போதும் வாழ்வு, மனநிலை ஒரு படி முன்னேறி இருப்பதைக் காண முடியும். வலி, சோகம், குறை, தவறு, தீமை எல்லாம் முன்னேற்றத்தின் நிபந்தனைகள். பரிணாம நோக்கத்திற்கு எதிரான நம் முரண்பாடுகளிலிருந்து வெளியே வர வைக்கும் சட்டங்கள் என்பது நமக்குப் புரிய வேண்டும். இதை every lower reality can be transmuted in terms of higher reality என்கிறார்.
அது மனம் இறைவனின் கருவியாகி – பிரம்மத்திற்கு, பிரம்ம நோக்கத்திற்கு – அல்லது அன்னையின் அவதார நோக்கத்திற்கு இடமளிப்பது. வாழ்வின் உண்மைகளை , நிதர்சனங்கள் என்று சொல்லப்படுபவற்றை ஏற்றுக்கொள்ளாமல் – நம் மனம் இருளில் தான் இருக்கும் என்பதற்கு கர்மயோகி தரும் சில உதாரணங்கள்:
ஜனாதிபதி விருதை ஒரு போலீஸ்காரர் நமக்கு கொண்டு வந்தால், அவரை பார்த்தவுடன் செய்யாத குற்றத்திற்கு விசாரிக்க வந்திருப்பதாகத் தான் நினைப்போம். நல்லவற்றை நினைத்து நமக்கு பழக்கமில்லை என்கிறார்.
சேமித்தால் பணம் பெருகும் என்பது யதார்த்தம். அந்த அபிப்பிராயத்தை விட்டு செலவு செய்தால் பணம் பெருகும் என்று ஏற்றுக் கொண்டால், வருட வருமானம், மாத வருமானமாகும் என்பது நிதர்சனத்தை -ஐ ஏற்றுக் கொள்வது.
குடும்ப Doctor-ரின் திறமையை பாராட்டி வருடக் கணக்கில் அவர் மீது நம்பிக்கை வைத்து உடலை கவனிப்பது யதார்த்தம். டாக்டர் வியாதியை உற்பத்தி செய்து பிறகு குணப்படுத்துகிறார் என்று அன்னை பகவான் கூறுவதை நம்பி ஏற்று, அவர் செயல்பட்டால், உடல் நலம் பெறும் வழிகளை பின்பற்றி உடலை வெண்கலம் போல் வைத்திருப்பது நிதர்சனத்தை -ஐ ஏற்றுக் கொள்வது.
பிள்ளை டாக்டர் ஆக வேண்டும். Engineer ஆக வேண்டும் என்று பாடுபட்டு வளர்ப்பது யதார்த்தம்.. பிள்ளைகள் நன்றாக படித்து, அறிவு, பண்பு, பெற வேண்டும் என்று மாறினால், வீட்டில், பெர்னாட்ஷாவும், தாகூரும், ராமானுஜமும் உருவாகுவார்கள் என்பது நிதர்சனத்தை -ஐ ஏற்றுக் கொள்வது.
ஜாதகத்தை நம்பி பரிகாரம் செய்து 50,000 சம்பளம் பெறுபவர் யதார்த்தம். ஜாதகத்தை நம்ப மறுத்து, அன்னை பண்புகளே வாழ்வை நிர்ணயிக்கிறது என்று ஏற்பது பல லட்சம் வருமானத்தை கொடுக்கும் என்று நம்பினால் நிதர்சனத்தை -ஐ ஏற்றுக் கொள்வது .
இந்த வயதிற்கு மேல் ஆங்கிலம், படிப்பு வராது என்று இருப்பது யதார்த்தம். வயது தடையல்ல, ஆர்வமும், sincerity -யும் , உழைப்புமே தேவை என்று எடுத்துக் கொண்டு அதன் மூலம் அவற்றை பெற முடியும் என்று நம்புவது நிதர்சனத்தை -ஐ ஏற்றுக் கொள்வது.
பிரபஞ்சம் மனிதனுக்கு இறைத்தன்மை தர, ஆன்மீக மனிதன் என்னும் தகுதியைத் தர, அதற்கான அந்தஸ்தை, ஆற்றலைத் தர காத்திருக்கிறது. அதை ஏற்றால் வாழ்வை, உலகை கடக்கும் சக்தியைப் பெற்று இறைவனின் பிரதிநிதியாகலாம் என்னும் நோக்கத்தை ஏற்க முடியாமல், கடனை தீர்க்க முடியவில்லை, படிப்பு வரவில்லை, வரன் அமையவில்லை, வேலை கிடைக்கவில்லை , குடும்பத்தின் எதிர்காலம், பல எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்று நினைத்து வருந்தும் மனிதனை அதன் பின்னால் உள்ள நிதர்சனத்தை -ஐ புரிந்துக் கொள்ளாத மனிதனின் நிலை பரிதாபத்திற்கு உரியது என்கிறார்.
பார்வை சத்தியமானால், மனம் தெய்வீகமாகும். இறை பண்பு வரும். இந்த நிதர்சனத்தை -ஐ புரிந்துக் கொண்டால் – அனைவரின் தயவையும் எதிர்பார்த்த மனிதன்,மன மாற்றத்தால் அனைவருக்கும் உதவி செய்யும் நிலைக்கு உயர முடியும் – என்பதே கர்மயோகி அன்பர்களுக்கு அடிக்காது கூறும் அறிவுரை. அவரை பொறுத்தவரை திரு உரு மற்றம் என்பது அதுவே.