Share on facebook
Share on telegram
Share on whatsapp

மனம் –  இறைவனின் விளையாட்டு கருவியா? – 3

சென்ற இரண்டு  வாரங்களில் நான் எழுதியதின்  சாரம் என்ன வென்றால்  கர்மயோகிக்காக,  அன்னைக்காக, என்ற பார்வையில் பார்த்து செய்தது எல்லாம் Truth -ன் பரிமாணமாக, ஆன்மீக பண்பாக இருந்தது. 

அந்த நிலையில் இருந்து –  எனக்கு அதிகம் வாழ்வு புரிந்து விட்டது. அதன் சட்டங்கள் எனக்கு புரிந்து விட்டது , அதனால் என்னால் என் வாழ்வை நடத்த முடியும். அதனால்  என் இஷ்டப்படி அது நடக்க வேண்டும், சந்தோஷமானாலும் அது நான் விரும்பியபடியே வர வேண்டும், முன்னேற்றமானாலும் அது நான் விரும்பும் விதத்திலேயே இருக்க வேண்டும். அவை அனைத்தும் நான்  விரும்பும் ஆட்கள், விரும்பும் சூழல், விரும்பும் செயல்கள் மூலம் வர வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக அகந்தையின் பார்வைக்கு  மாறிவிட்டதால் அது இருளின் falsehood-ன்  பரிமாணங்களாக,  அகந்தையின் பண்புகள் நிறைந்த வாழ்வாக மாறிவிட்டது. அதில் இருந்து என்னை மீட்க, நான்  ஒரு மெய்யறிவுக்கு வர ஒரு வெள்ளம் வந்து அனைத்தும் அடித்து செல்லும் ஒரு இழப்பு தேவைப்பட்டது.

அன்னையிலிருந்து அகந்தைக்கு நான் சென்ற விதத்தை பார்த்தால் Truth -திலிருந்து falsehood -க்கு போன விதம் புரியும்.  அது புரிந்தால் falsehood -லிருந்து எப்படி Truth -க்கு வருவது என்பது புரியும். 

அதை சுருக்கமாக கர்மயோகி,  அன்னைக்காக, அவரின் அவதார நோக்கத்திற்காக, அன்னை விரும்பும் பண்புகளுக்காக, அவர் விரும்பும் செயல்களை அவர் விரும்பும் வகையில் செய்து, மனப்பான்மையில்  , உணர்வில் , அதற்கு ஏற்றார்போல உயர்வது ,  சத்தியத்தின், உயர்சித்ததின்   வாழ்க்கை என்கிறார்.  அதை பின்பற்றினாலே  falsehood -க்கு போகாமல் இருக்க முடியும்.  ஆன்மாவிற்கு நம் வாழ்வில் இடம் தர முடியும்.

அப்படி எல்லாம் நாம் மாற முடியாததற்கு காரணம் – நமக்கு படைப்பு, இறைவன், வாழ்வு இவற்றை பற்றிய தவறான புரிதல்.  பிரபஞ்சத்தை சூழலாகவும், வாழ்வை பிரம்மாகவும், அவை இரண்டும் நமக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்று நினைத்து நாம் செய்வது பெரும்பாலும் நமக்கு தண்டனையாக, துன்பமாக தெரிகிறது. நாம் நம் வாழ்வை கட்டுப்படுத்தி கொண்டு இருப்பதாக நினைக்கிறோம். இதுவரை நாம் செய்தது  அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தால் , பெரும்பாலும் எதுவும் நம் இஷ்டத்திற்கு நடக்கவில்லை  என்பது புரியும். நாம் வாழ்வைக் கட்டுப்படுத்தவில்லை –  வாழ்வுதான்  தான் நம்மை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது என்று நமக்குத் தெரிவதே இல்லை.  அது தண்டனை அல்ல, முன்னேற்றத்திற்கு வழி செய்கிறது.  நம் செயல்கள் போராட்டமல்ல.  அந்த முன்னேற்றத்துக்கான வேலை.  நாம் நினைக்கும் முன்னேற்றம், கிரீடம், ஆனந்தத்திற்கு நாம் கொடுக்கும் விலை. 

மனம் தான் அதை செய்ய வேண்டும். நம்மிடம் தற்போது இருக்கும் ஒரே கருவி , கட்டுப்படுத்த கூடிய கருவி மனம் தான்.  அது  செய்ய வேண்டியது என்னவென்றால் , தனி மனிதன், வாழ்வு. பிரம்மம் ஆகியவற்றிக்கு நடுவே ஒரு சுமுகத்தை தேடுவது.  மூன்றுக்கும் இடையே ஒரு இணக்கத்தீர்வைத் தேடுவது.  இதை, அதாவது, மூன்றுக்கும் பொதுவானதை, மனம் அறிய முற்படும் போது, அதை உணர்வு ஏற்றுக்கொள்ளும் போது, உணர்வு ஏற்றுக்கொண்டதை உடல் செய்யும் போது, வெளிப்படுவது பிரம்ம நோக்கம். THYWILL . அதனால் ஆன்மா வெளியே வந்து ஆனந்தத்தை பெறுகிறது .  When Sat tries to objectify the expression, the Spirit comes out to experience that Ananda  என்பதன் விளக்கம் அது. லைப் டிவைன் கூறும் முக்கிய கருத்துகளில் இதுவும் ஒன்று.

பிரம்மம் பரிணாமத்தில் இறங்குமுகமாக, சிருஷ்டியாக, பிரபஞ்சம், மனிதன் என்று வருகிறது.  அப்படி என்றால் அதே போல முன்னேறும் போது மனிதன், பிரபஞ்சம், பிரம்மம் என்று முன்னேற முடியும்.  இரண்டுக்கும் பொதுவான இடமாக இருப்பது வளரும் ஆன்மா. அதன் பார்வையில் வாழ்வைப் பார்க்கும் போது வரையறைக்குள் உள்ள சித்தம் – limited consciousness  – அகந்தையை – பிரித்தறிய முடியும்.

அகந்தையை  அடிப்படியாக கொண்ட செயல்கள் , அதனால் வந்த பிரிவினைகள் – நல்லது, கெட்டது, உயர்ந்தது, தாழ்ந்தது, சரி, தவறு என்று பிரித்தறியும் பார்வையிலிருந்து வெளியே வந்து பரந்த மனதுடன் வாழ்வைப் பார்க்கும் போது பரந்த பிரபஞ்சத்தை அதில் உள்ள படைப்புகளைத் தொடுகிறோம்.  அதன் மூலம் பிரபஞ்ச மனதின் நிலைக்கு உயர்கிறோம்.  அதை work of works  – நம் வேலைகளில் தலையாய வேலை என்கிறார்.  அல்லது அதுவே நம் வேலை என்று எடுத்துக் கொள்ளலாம்.  வளரும் ஆன்மாவை வெளிக் கொணர்ந்து மனிதன் இறைத்தன்மை பெறுவது அதன் வெளிப்பாடு.  ஒவ்வொரு படைப்பின் உள்ளேயும் இறைவன் இருப்பதாக உணரும் போது தான் அது சாத்தியமாகும்.  ஒவ்வொன்றிலும் ஒரு சத் (existence, சத்தியம் இருக்கிறது) அடுத்து சித் . அதன் ஆற்றலாக இருக்கிறது- consciousness force and power ஆக இருக்கிறது.  அது ஒவ்வொரு படைப்பையும் ஆனந்தமாக பார்ப்பதில் இருக்கிறது.  படைப்புகள் அனைத்தும், நடப்பது அனைத்தும், அதை வெளிப்படுத்தவே என்று புரிந்துக் கொண்டால், நாம் – வாழ்வின் பகுதியாக இல்லாமல், பிரபஞ்சத்தின்  பகுதியாக மாறுகிறோம்.

நான் இப்போது ஒரு புது technology -ஐ நம்பி கிட்டத்தட்ட 1 கோடி முதலீடு செய்து இருக்கிறேன்.  பெரிய Returns எதுவும் இல்லை.  அதற்கான  ஒரு நபர் மீது எனக்கு அதிகக் கோபம் உண்டு.  அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் வெறி என்னிடம் உண்டு.  ஆனால் அப்படி செய்தால் அவர் குடும்பம், மனைவி, இரு சிறு குழந்தைகள் தத்தளிப்பார்கள்.  சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று நினைக்கும் போதெல்லாம் என் மனைவி – வேண்டாம் அவர்களை நடுத் தெருவுக்கு கொண்டு வரும் பாவம் நமக்கு வேண்டாம் என்பார்.  கர்மயோகியும் இது போல பழி வாங்குவது பற்றி பேசும்போது அது அன்னை முறை அல்ல என்று கூறியிருக்கிறார்.  அதனால் கோபம் வரும் போதெல்லாம் அதை அடக்கி கொள்வேன்.  இந்த விஷயத்தில் ஏதாவது CORRESPONDENCE பார்க்க முடியுமா என்று பார்த்தேன்.  எதுவும் பார்க்க முடியவில்லை என்றாலும், அவரை என்ன குறை சொல்வது, நம் புத்தி எங்கே போனது   என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.  அவ்வளவு தான்.  வேறு ஒன்றும்  செய்யவில்லை.  மறு நாள் வேறு ஒரு விஷயத்திற்காக auditor- ரிடம் சென்ற போது, அவர் நேற்று உங்கள் partner வந்து இருந்தார்.  கண் கலங்கி உருக்கமாக பேசினார்.  உங்கள் investment -ஐ எப்படியாவது ஈடுகட்ட வேண்டும், திரும்ப தர வேண்டும் என்றார்.  அவர் பேசியது genuine ஆகத்தான் இருந்தது என்று கூறினார்.  ஆடிட்டர் சொல்லவில்லை என்றால் எந்த விதத்திலும் அது எனக்குத் தெரிய போவதில்லை.  நான் புரிந்து கொண்டது என்னவென்றால், சிறு மனமாற்றமும், சுமுகமும், உயர்சித்தமும், பிரம்ம  நோக்கம் விரும்புவது. அதுவே அன்னை  விரும்பும் பரிணாமம். அதை செய்யும்போது , அது ஏதோ ஒரு இடத்தில, சூட்சமத்தில்  அதற்கான விளைவை விதைக்கிறது என்பதே உண்மை .  அதன் பலன் வருமா, அல்லது வராமலே போகுமா அல்லது இந்த சுமுகம், அது தரும் நிம்மதி போன்றவை தான் அதன் பலனா என்பது புரியவில்லை. அர்த்தமற்ற எண்ணங்களாக இருந்தாலும், நாம் அகந்தையிலிருந்து வெளியே வரும் ஒவ்வொரு நொடியும்  நமக்கு முக்கியம் என்று தோன்றுகிறது .  எதிரியிடம் கூட ஒரு unity -ஐ, நம் identity ஐ   பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. அப்படி பார்க்கும்போது அன்னை சிம்பலில் இருக்கும் எந்த ஒரு பண்பையும் எடுத்துக்கொள்வது ப்ரம்ம நோக்கத்திற்கு இடம் தருவது என்று எடுத்துக்கொள்ளலாம்.

இங்கு அகந்தை அகந்தை என்று சொல்வதற்கு ஒரு விளக்கம் தேவைப்படுகிறது.  அது புரிவது தொடர்ந்து பேசுவதற்கு உதவியாக இருக்கும்.  நாம் பொதுவாக அகந்தை என்றாலே, மனப்பான்மையை வைத்து, தற்பெருமை, தலைக்கனம், ஆடம்பரம், மதியாமை, அந்தஸ்து வெளிப்படுவது. செல்வாக்கு வெளிப்படுவது, திமிர், பாராமுகம் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட அகங்கார மனப்பான்மையை வைத்து, அவை வெளிப்படும் விதங்களை வைத்து, அகந்தையை முடிவு செய்கிறோம். 

ஆனால் அகந்தை என்பதின் விளக்கமாக நான் புரிந்துக் கொண்டதை பற்றி  அடுத்த வாரம் எழுதுகிறேன்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »