Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-6

ஆனால் இவை எல்லாவற்றிற்குமான விதை நாம் தான் இட வேண்டும்.  முப்பது வருடங்களாக கர்மயோகி இதை பல விதமாக எழுதியும் , இது ரகசியம், புரியவில்லை என்று சொல்பவர்  தான்  பெரும்பாலோர். நாம்  விளக்கம் கேட்க சென்றால் கூட எளிதாக சமர்ப்பணம் செய்  என்று சொல்லி தப்பிப்பவரே அதிகம். ஆனால்  உண்மையில்  ரகசியம், புரியவில்லை என்று சொல்வது எல்லாம் நமக்கு தெரிந்ததையாவது குறைந்த பட்சமாவது வாழ்வில்  கடைபிடித்து பார்க்காததுதான். அன்னை பற்றி தெரிந்து கொள்ள ஏராளமான resources இருக்கிறது. அல்லது higher consciousness பற்றி தெரிந்து கொள்ள ஏராளமான resources இருக்கிறது. இந்த வலைத்தளத்திலேயே ஆங்கிலம் மற்றும் தமிழில் ஏராளமான முறைகளை  எழுதி இருக்கிறேன். எத்தனை பேர் படிக்கிறார்கள் தெரியாது. எத்தனை பேர் பின்பற்றுவார்கள் என்பதும் தெரியாது. ஆனால் ஒன்றையாவது செய்து பார்க்கும்போதுதான் , நமக்கு ப்ரம்மம் பரிணாமத்தில் வெளிப்படுவது தெரியும். அது அன்னை அருளாக வாழ்வில் எதிரொலிப்பது , வளமாக, ஆனந்தமாக , முன்னேற்றமாக வெளிப்படுவது புரியும். வாழ்வு செல்லும்  விதம் புரியும் . அதன் சட்டங்கள் புரியும்.

-ஒன்றை செய்து பார்க்காமல் அதன் பலனை நாம் கவனிக்க முடியாது.

-கவனிக்க முடியாததை  நாம் அளக்க முடியாது.

-அளக்க முடியாததை நாம் கட்டுப்படுத்த முடியாது.

-கட்டுப்படுத்த முடியாதை நாம் மற்ற முடியாது.

-மாற்ற முடியவில்லை  என்றால் முன்னேற்றம் கிடையாது.

உடல் ஆரோக்கியம் முதல், கற்று கொள்வது முதல், செயல் முதல், வீணடிக்கும் விஷயங்கள் முதல் எதை ஆராய்ந்து  பார்த்தாலும் இந்த process இருப்பதை பொருத்தி பார்க்க முடியும். 

வாழ்வு என்பது நாம் சாதாரணமாக நடந்து செல்வது போன்றது. அதே நடையை  மாரத்தான் ஜெயிக்க செய்யவேண்டும் என்றால் என்ன செய்வோம் – எதை கட்டுப் படுத்துவோம், எதை மாற்றுவோம், எதை தவிர்ப்போம் , எதை ஏற்றுக்கொள்வோம் , எதை செயல் படுத்துவோம் என்று நினைத்து பார்த்தால் இது புரியும். சாதாரண வாழ்வை அன்னை வாழ்வாக மாற்ற அத்தகைய முயற்சி தேவை. உண்மையில் அன்னை என்று சொல்லும்போது ஒரு பக்தி மார்க்கம் வந்து விடுகிறது. ஆனால் நன்றாக கவனித்து பார்த்தல் முன்னேறியவர்கள் சாதித்தவர்கள் அனைவரும் இந்த அடிப்படியில் தான் இயங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பது புரியும். பக்திக்கும் , முன்னேற்றத்திற்கும் சம்மந்தம் இல்லை  என்பது  புரியும்.

இதை எல்லாம் செய்ய , நல்ல முறையில் முன்னேற – சிறு ஆர்வம், சிறு முயற்சி இருந்தால் தான், அதுவும் ஏதாவது ஒரு பண்பின் அடிப்படையில் இருந்தால் தான் அருள் வர முடியும்.  அது வாழ்வு தரும் அதிருஷ்டம். அது அன்னை அருளுக்கு, பேரருளுக்கு வழி செய்து கொடுக்க ஏதுவாக இருக்கும். இல்லையென்றால் வறண்ட நிலத்தில் தண்ணீர் விடுவது போல இருக்கும்.  முதலில் வரும் அருள்  எல்லாம் – அந்த காய்ந்துப் போன ஆற்று படுகையை  ஈரப்படுத்தவே உதவும்.  நீர் அனைத்து பாகத்திலும் பரவிய பிறகே, அதன் வறட்சியை தீர்த்த பிறகே, அது படுகையின் மேல் ஓடும்.  அது போல பண்புகள் இல்லாத வரை அதன் மூலம் அருள் செயல்படுவது நமக்குத் தெரியாது. பல மாதம், பல ஆண்டுகள் கழித்து அதன் பலன் வெளியே தெரியும்.

ஒரு ஆற்றின் இரு கரைகள் பிரிந்து இருப்பது போல – அது இணையவே முடியாது என்பது  போல நமக்கு தோன்றும். ஆனால் சிந்தித்து பார்த்தால் அடியில் எதோ ஒரு ஆழத்தில் அது இணைந்து இருக்க வேண்டியதே இயற்கையின் அடிப்படை என்பது புரியும் அது போல நாமே ப்ரம்மம் என்னும் போது நம்முள் இருக்கும் பரிணாம சக்தி மூலம் அது வெளிப்படும் என்னும் போது நம்முள் எதோ ஒரு ஆழத்தில் அன்னையுடன்  இணைந்து இருக்கிறோம் எனபதே உண்மை. அதை புரிந்து கொண்டால் வாழ்வின் ஓட்டம் தடையில்லாமல் இருக்கும்.

அது புரியவில்லை என்றால் –  வாழ்வில், அருள் , பிரச்சனைகளை உண்டாக்கி அதன் மூலம் நம் அறியாமை, இயலாமைகளை அறிந்து திருவுருமாறச் செய்து பண்புகளின் பக்கம், சத்தியத்தின் பக்கம் நம்மை வரச் செய்து, பல நேரங்களில், ஏமாற்றம், அழுத்தம், அவமானம் என்று வந்து பின் அன்னை அருள், பேரருள் செயல்படும்.  அந்த வேலையை அன்னைக்கு தராமல், நாமே conscious -ஆக எடுத்துச் செய்தால் காலத்தை சுருக்குகிறோம். நேரடியாக அன்னை அருளோ, பேரருளோ செயல்பட கருவியாகிறோம். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்:

– அருள் என்பது வாழ்க்கை முறைகள், சட்டங்கள் , அர்த்தங்கள், நோக்கங்ள் ஆகியவற்றை புரிந்து நடப்பது

– அன்னை அருள் என்பது அன்னை அறிவு, அவர் முறைகள், அதன் பொருள் அதன் நோக்கம் ஆகியவற்றை புரிந்து நடப்பது

– பேரருள் என்பது – அன்னை நோக்கில் இந்த பிரபஞ்சம், மனிதன் இருக்க வேண்டிய நிலைக்கு ஏற்ப இருப்பது.  Supermind  நிலையில்  சிந்திப்பது, அதன்படி இருப்பது.

முதல் நிலையில் யாரோ சொல்லி அன்னையிடம் வருகிறோம். மையப்பொறுப்பாளர் அல்லது மூத்த அன்பர்கள் இந்த பூவை வை, சாவித்ரி படி, லைஃப் டிவைன் படி   என்று சொல்வதை செய்தவுடன் சில விஷயங்கள் வேகமாக நடக்கிறது.  அதன் பிறகு எல்லாம் மெதுவாக நகர்கிறது. அதற்கு  காரணம் நம் நம்பிக்கையின் நிலை. நாமாக எதையும் தெரிந்துக் கொள்வதில்லை.  நம் வாழ்விற்கு ஏற்றாற்போல சட்டங்களை புரிந்து கொள்வதில்லை. சொன்னவர்களின் அறிவின், அவர்களின் அனுபவ எல்லையே – நம் பக்தியின் எல்லையாக இருக்கிறது. நம் நம்பிக்கையின் எல்லையாக இருக்கிறது. சொல்பவர்கள் பின்பற்றாதவர்கள்  என்பதையும் நாம் கவனிப்பதில்லை. அன்னை மேல் பக்தி, அந்த தனிநபர்களுக்கான ஸ்துதியாக மாறிவிடுதையும் நாம் கவனிப்பதில்லை.

ஆனால் அன்னை நம்மிடம்  எதிர்பார்ப்பது பக்தி, நம்பிக்கை, அசைக்க முடியாத நம்பிக்கை என்னும் அடிப்படையில் நாமே மாறுவதை. சித்தத்தில் , அறிவில் அடுத்த கட்டம் செல்வதையே அவர் விரும்புகிறார்.   (Belief -Faith -Trust – தமிழில் இதற்கான வார்த்தை தெரியவில்லை).  அடுத்த கட்டம் என்பது முறைகளில் இருந்து அறிவுக்கு வருவது.  மலர்களில் grace / prosperity / courage  / health வைப்பது எல்லாம் ஆரம்பத்தில் உணர்வின் முறைகள்.  அது ஜீவனற்ற செயலாக மாறும் முன் அறிவுக்கு மாற வேண்டும்.  இதை ஏன் வைக்கிறோம். இது தான் நம்மிடம் குறையாக இருக்கிறது அதனால் வைக்கிறோம். கேட்கிறோம். ஏன் குறையாக இருக்கிறது, இதில் என் பங்கு என்ன, என் அறியாமை, என் தடை என்ன என்று பார்த்தால் அடுத்து செய்ய வேண்டிய, மாற வேண்டிய, பெற வேண்டிய விஷயங்கள் புரியும்.

உதாரணமாக ஒருவர் சுமுகம் வேண்டி மலர் வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.  அவர் அதை முதலில்  நடைமுறைப்படுத்த வேண்டும்.  வீட்டில் கொண்டு வர வேண்டும். பின், அலுவலகத்தில், பழகும் வட்டத்தில், சமூகத்தில் கொண்டு வர வேண்டும்.  பின் தனக்குள், தன்  அறிவு, உணர்வு , செயலில் பிணக்கு இல்லாமல் (conflict இல்லாமல் இருக்க ) பழக வேண்டும்.  அடுத்தாக inner outer correspondence வெளியே நடப்பதை உள்ளே இருப்பது முடிவு செய்ய வேண்டும் என்னும் அளவிற்கு பார்த்தால், அது அனைத்து பாகங்களும் all part of the being – equality, சமநிலையாக  மாறும்.  அந்தந்த நிலைக்கு ஏற்றார் போல Belief, Faith , Trust வரும். அதற்கு ஏற்றார் போல அருள், அன்னை அருள், பேரருள் செயல்படும்.

குறைந்த பட்சம் அன்னையிடம் முதலில் வந்த போது இருந்த அந்த சரணாகதி  மனப்பான்மையாவது இருக்கிறதா, அல்லது அந்த ஆர்வமாவது இருக்கிறதா என்று பார்த்தால் இல்லையென்றே சொல்லத்  தோன்றும்.  முதல் interview , முதன் முதலில் ஒரு VIP -ஐ மந்திரியை பார்க்கப் போகிறோம், company meeting அல்லது presentation , எல்லாம் முதல் முறை, இரண்டாம் முறை படபடப்பாக இருக்கும், conscious -ஆக இருப்போம்.  எல்லாவற்றையும், ஒரு முறைக்கு இரு முறை சரி பார்ப்போம், நாளடைவில் அதுவே பழக்கமாகி, ஒரு பழக்கத்திற்குள், ஒரு அலட்சியத்திற்குள் வந்து விடும். அது போலத்தான் அன்னையிடம் இருக்கிறோம், அதே செயல், அதே மனப்பான்மை, அதே நோக்கம், அதே திறமை என்று இருந்தால் முடிவு – result மட்டும் எப்படி வேறு மாதிரி இருக்க முடியும்.  வெவ்வேறு நிலைக்கான அருள், அன்னை அருள், பேரருள் எப்படிக் கிடைக்கும்.  Being Ever Fresh – எப்போதும் முன்னேற்றத்திற்கான ஒரு புத்தாக்கம் தான் அந்தந்த நிலைக்கான அருளைக் கொண்டு வரும்.

ஒரு இழையாவது மனநிலையில், அறிவில், ஆர்வத்தில் உயர்வு தேவை.  முதல் முறை பிரச்சனையுடன், மன அழுத்தத்துடன் அன்னையிடம் வந்து இருப்போம்.  அடுத்த முறை அது இல்லையென்றால் அன்னையிடம் வந்து இருக்க மாட்டோம் என்ற அளவில் problems are opportunities என்னும் சட்டத்தையாவது நினைக்க வேண்டும்.  அதற்கு ஏற்றவாறு உணர்வில், செயலில், அறிவில், மாற்றம் கொண்டு வர வேண்டும். இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்க்கலாம் . அதோடு இந்த தலைப்புக்கான விளக்கம் முடியும். 

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »