இது போல நாம் நம் பக்தி , திறமை, அறிவு , மனப்பான்மை, நோக்கம், நடத்தை என்று இதில் எந்த பண்பு அன்னைக்கு channel ஆக அமைந்தது என்று கவனித்து அதை அதிகப் படுத்தினால், அது Receptivity -ஐ ஏற்புத்திறனை அதிகரிக்கும்.
இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், சாதாரண நாள், சுபிட்ச தினம், தரிசன தினம், என்று அந்தந்த நாட்களுக்கு ஏற்றாற்போல மையம் எப்படி இருக்கும். Secretary வருவதானால் எப்படி இருக்கும், கர்மயோகி அவர்களே வந்தால் எப்படி இருக்கும், எப்படி இருப்போம்? சூழலுக்கு ஏற்றாற்போல நம் தரம், பக்தி, சிரத்தை தானாகவே உயரும். அதுபோல அலுவலகம் ஆனால் சாதாரண நாட்களில் எப்படி இருப்போம், appraisal சமயத்தில் எப்படி இருப்போம், inspection நேரத்தில் எப்படி இருப்போம் என்று பார்த்தாலும் இந்த வித்தியாசம் புரியும். இந்த என் கட்டுரை உங்கள் வீட்டு சூழலை, ஆர்வத்தை உயர்த்தினால், இதை செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றும். இல்லையென்றால் மூடிவிட்டு செல்லத் தோன்றும். இது எதைக் காட்டுகிறது என்றால், ஒரு உயந்தது இருக்கும் போது ஒரு higher presence இருக்கும் போது , எல்லா செயல்களும், மனப்பான்மையும், நடத்தையும், தானே உயர்ந்து விடும்.
- அது போல நம் உயர்ந்தபட்ச மனப்பான்மை உயர்ந்தபட்ச அருளைக் கொண்டு வரும்.
- அருள் பலனை காரியும் பூர்த்தி அடையும் போது கொடுக்கிறது.
- அன்னை அருள் பலனை முன்பே கொடுக்கிறது.
- பேரருள் பலனை எல்லோருக்கும் கொடுக்கிறது.
இந்த உதாரணத்தை முன்பே சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். சென்னையில் ஒரு international tournament ஒன்று நடந்தது. அதற்கான coating repair அவசரமாக செய்ய வேண்டி இருந்தது. சொன்ன நாட்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பயிற்சியாளர்களும், player -ம் வந்து விட்டதால், சில வேலைகளை செம்மையாக செய்ய முடியாமல் போய் விட்டது. இது நடந்தது ஒரு January -யில் . சாதாரணமாக government contract -இல் February , March மாதங்கள் year end என்ற பெயரில் payment வராது. அதனால் அதற்கு முன்பே வாங்க நினைத்தேன், முடியவில்லை. February போய் March -உம் வந்தது. இதை சாதாரண government procedure என்று எடுத்துக் கொள்ளாமல், கடந்த கால சமர்ப்பணம் செய்து பார்த்த போது , என் தவறுகளை சரி செய்ய வேண்டும் என்று தோன்றியது. EE -ஐ பார்த்து இதெல்லாம் அவசரத்தில் செய்துள்ளேன். இப்போது சரி செய்து தருகிறேன் என்றேன். எந்த பெரிய எதிர்பார்போடும் இதை சொல்லவில்லை. இது நடந்தது மாலை 4 அல்லது 5 மணி இருக்கும். மறு நாள் காலையில் 9 மணிக்கு call வந்தது. உங்கள் cheque ready வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று. ஒன்றும் புரியாமல் போய் கேட்டேன். இரவோடு இரவாக வேலை செய்து தருமளவிற்கு என்ன நடந்தது என்று கேட்டேன். நேற்று நீங்கள் சென்ற பிறகு call வந்தது. இன்று சட்டசபையில் cut motion -வெட்டுத் தீர்மானம் விளையாட்டுத் துறைக்கு வருகிறது. கடந்த வருட fund காலியாகவில்லை என்றால் இந்த வருடம் அதே அளவு பெற முடியாது என்பதால் இரவோடு இரவாக வேலை செய்து அணைத்து pending payment -ஐயும் தரச் சொல்லிவிட்டார்கள் என்றார். எனக்கு மட்டுமல்ல. 3 மாதம் 6 மாதம் pending இருந்த அனைவருக்கும் payment கிடைத்தது.
அதே போல பல முறை சொன்ன துபாய் அன்பர் உதாரணத்தில் ( வேலைக்காக துபாய் சென்றவர் . அவரது முதலாளிக்கு ஒரு பிரச்சினை என்ற போது மற்றவர்கள் போல விட்டு விட்டு வராமல், சம்பளம் வரவில்லையென்றால்லும் என் வேலையை முடிக்காமல் வர மாட்டேன் என்று இருந்தவர் கதை) அவருக்கு வீடு கிடைத்தது. தங்கைக்கு திருமணமாயிற்று என்பது ஒன்று. அவர் பண்பை பார்த்து ராஜினாமா செய்யாமல் அவருடன் சேர்ந்து வேலை பார்த்த அனைவருக்கும் 6 மாத சம்பளம் (12 லட்சத்திலிருந்து 20 லட்சம் வரை) போனஸாக கிடைத்தது. இது நம் பண்பின் உயர்வைப் பொறுத்து, அருள் பேரருளாக நமக்கு மட்டுமல்ல நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் வரும் என்பதைக் காட்டுகிறது. அவர் சொந்த வீடும் காட்டினேன். இரண்டும் ஒன்றரை வருடத்தில் நடக்க வேண்டியது ஆறு மாதத்தில் நடந்தது. அதாவது காலம் சுருங்கியது. அதன் பொருள் ஒரு பண்பில் பிரம்மன் வெளிப்பட்டு இருக்கிறான் , காலத்தை சுருக்கும் அவன் பண்பு மூலம் அது வெளிப்பட்டு இருப்பதை காண முடியும். இதை எல்லாம் நாம் கவனிப்பதில்லை.
ஆனால் ஒரு பண்பை எடுத்துக் கொண்டு அன்னைக்காக, நாம் பரிணாமத்தில் முன்னேற என்று செய்ய வேண்டும். பலன் மேல் நினைவை வைத்துக் கொண்டு செய்யக்கூடாது. பொறுமை, விடாமுயற்சி தேவை. Patience and Perseverance. அதற்கு கர்மயோகி அவர்கள் தரும் உதாரணம் ஒரு Doctor 10 நாட்களுக்கு மருந்து கொடுத்தால், நான்கு நாட்களில் அது சரியானது போல நமக்குத் தோன்றினால், அதை சாப்பிடுவதை விட்டு விடுவோம். அல்லது 6 அல்லது 7 நாட்களில் சரியாகவில்லை என்றால் வேறு Doctor -ஐ த் தேடிப்போவோம். ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் அவர் 10 நாட்களுக்கு மருந்து கொடுத்திருக்கிறார் என்று தோன்றுவதில்லை. அப்படி நாம் இருக்கும்போது அன்னை சில நாட்கள், சில மாதங்கள், கூடுதலாக எடுத்துக் கொண்டால் நம்மால் பொறுமையாக இருக்க முடிவதில்லை. நம் முறைகளுக்கு மாறி விடுகிறோம். நம் சுபாவத்திற்கு மாறி விடுகிறோம். நமக்கு தெரிந்த வழிகளில் செல்ல நினைக்கிறோம். இதற்கும் முன்பே சொன்ன உதாரணமாக இருந்தாலும் வேறு தெரியாததால் மீண்டும் சொல்கிறேன். மதுரை கிளை திறந்து என் மாதாந்திர தேவைகள், commitments அதிகமான பிறகு, எப்போதும் ஒரு financial pressure இருக்க ஆரம்பித்தது. சொன்ன நேரத்தில் ஒரு நிமிடம் தவறாமல் payment செய்வேன் என்று பெயரெடுத்திருந்ததால் அந்த pressure அதிகமாக இருந்தது .
ஒரு முறை ஒரு கம்பெனியிலிருந்து பெரிய தொகை வர வேண்டி இருந்தது. அது ஒரு மாதம் தள்ளிப் போனதால், என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்ய கடினமாக இருந்தது என்றாலும் சமாளித்துவிட்டேன். அடுத்த மாதமும் அது வரவில்லை. இக்கட்டான சூழ்நிலைக்கு சென்று கொண்டிருந்தேன். என் Manager – Sir அந்த Purchase Manager எதையோ எதிர்பார்க்கிறார். மற்றவர்கள் எல்லாம் கொடுத்து வாங்கி கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் பிடிவாதம் பிடிக்காதீர்கள். அந்த கம்பெனி வேறு சரியாக போகவில்லை என்று சொல்கிறார்கள் என்று பயமுறுத்தினார். கிட்டத்தட்ட ஐந்து வருடம் ஒரு பைசா எங்கும் லஞ்சம் கொடுக்காமல் கம்பெனி நடத்தி வரும் எனக்கு அது சரியாகப் படவில்லை. கொள்கை முக்கியம் என்றேன். எல்லாம் அந்த மாத இறுதி வரை தான். அது வரை வரவில்லை . அடுத்த மாதம் முதல் வாரத்தில் அந்தத் தொகை வந்தால் தான் என்னால் அனைவருக்கும் payment தரமுடியும் என்ற நிலை. அன்னை கை விடமாட்டார் என்று எவ்வளவு பேசினாலும், எனக்கென்று வரும் போது தடுமாறினேன். சொன்ன சொல் தவறாதவன் என்னும் கவுரவம் எனக்கு முக்கியமாகப் பட்டது. நமக்குத் தான் ஏகப்பட்ட principle -சட்டம் இருக்கிறதே, நம் வசதிக்கு அன்னையின் சட்டங்களை வளைத்து கொள்வோமே அதுபோல-நமக்குள் இல்லாமல் வராது என்னும் சட்டத்தை எடுத்துக் கொண்டு, சரி கேட்டதை கொடுத்து விட்டு வாங்கி வா என்று Manager-ரிடம் கூறிவிட்டேன். அவரும் வாங்கி வந்தார். எல்லாம் சுமுகமாக முடிந்தது.
இது நடந்தது November -இல் அன்றிலிருந்து எனக்கு உறுத்தல் ஆரம்பித்தது. இவ்வளவு நாள் காப்பாற்றிய கொள்கையை விட்டுவிட்டோமே, ஒரு சராசரி மனிதனாகி விட்டோமே என்ற சோகம் கவ்வியது. அன்னையிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு இனி இது போல நடக்க மாட்டேன் என்று உறுதி எடுத்தேன். ஆனால் அன்னை, நமக்கு வர வேண்டிய பரிணாம வளர்ச்சியை தராமல் இருக்க மாட்டார்கள். அப்படி வேண்டிய பிறகு, மீண்டும் மீதி payment தடையாக ஆரம்பித்தது. January ஆயிற்று, February ஆயிற்று, March மாதம் நிச்சயம் எந்த கம்பனியும் payment தராது. தேவையில்லாமல் promise செய்து மாட்டிக் கொண்டோமோ என்று தோன்றியது. வழக்கம் போல Manager வந்து , சென்ற முறை போலவே செய்யலாமா சார் என்றார். அன்னை கை விடமாட்டார் என்று நினைத்து, வேண்டாம் என்ன நடக்கிறது என்று பார்த்து விடலாம் என்றேன். February கடைசியும் வந்து விட்டது. ஒன்றும் நடக்கவில்லை. March முதல் வாரத்தில் ஏகப்பட்ட cheque -கள் clearance -க்கு வரும். அதற்கான பணம் இல்லை. முடிந்த வரை சமாளித்தேன். அப்படியும் ஒரு cheque bounce ஆகிவிட்டது. பெருத்த அவமானம் என்பது போல உணர்ந்தேன். பார்ப்போரெல்லாம் இது பற்றியே பேசுவதாக நினைத்து வெம்பினேன். அன்னை கை விட்டு விட்டார்கள் என்றேன்.
இந்த cheque bounce ஆனது அந்த கம்பனிக்கு குறைந்தது 10 நாட்களுக்கு பிறகு தான் தெரியும். அதற்குள் அவர்கள் இந்த மாதத்திற்கான சரக்கை அனுப்பி விடுவார்கள். அது தவறு என்று நினைத்து அந்த கம்பனியின் Finance -க்கு நானே தொலைபேசி மூலம் சொன்னேன். அதற்கு அவர் – என்ன இப்படி செய்து விட்டீர்கள், நாங்கள் 100% payment இல்லாமல் யாருக்கும் தருவதில்லை. உங்களைப் போல சிலருக்குத் தான் credit தருகிறோம். நீங்கள் உடனே GM -ஐ வந்து பாருங்கள் என்றார். Bangalore சென்று அந்த கம்பனியின் GM -ஐ பார்த்து – இது எதிர்பாராமல் நடந்து விட்டது, மன்னியுங்கள். இனி 100% payment கொடுத்தே எடுத்துக் கொள்கிறேன் என்றேன். பேச்சு திரும்பி Technology பக்கம் சென்றது. நான் பேசியதைப் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டு, நாங்கள் ஒரு புது product -ஐ இறக்குமதி செய்கிறோம். அதற்கு ஏற்ற contractor -ஐ தேடிக்கொண்டு இருக்கிறோம். நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்று கூறி, Technical Team -க்கு அறிமுகப்படுத்தினார். எனக்கு market செய்யும் வேலையில்லாமல் அவர்களே மார்க்கெட்டும் செய்து எனக்கு வேலையைக் கொடுத்தார்கள். 2012-2013-இல் மின்வெட்டு பிரச்சனை, இந்திய பொருளாதார சரிவு, இரண்டையும் மீறி என் வியாபாரம் குறையாமல் நடந்ததற்கு காரணம் அந்த product -ஏ. குறிப்பாக தனியார் துறை நிதிப்பற்றாக்குறையால் திண்டாடும்போது Hokenakal கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற World Bank Project -ன் order எடுத்து கொடுத்ததால், எனக்கு பணப்பிரச்சனை இல்லாமல் அந்த இரண்டு வருடம் ஓடியது.
இப்படி பொறுமை, நிதானம், விடாமுயற்சி, சூழல், எந்த பண்புகள் எப்போது எந்த நிலையில் தேவை என்று பலவகையிலும் சிந்தித்து அருள் வேலை செய்யும் விதத்தை, குறைந்தபட்சம் நம் வாழ்வில் நடந்ததை வைத்துப் புரிந்துக்கொண்டால், வாழ்வில் மற்ற இடங்களிலும் அதையே செய்து வாழ்வை உயர்த்திக் கொள்ள முடியும். பிரம்மம் நாம் வெளிப்படுத்தும் பண்புகள் மூலம் தான் ஆனந்தம் அடைகிறது என்பது புரியும். அன்னை இந்த மனப்பான்மை உயர்வுகளுக்கான அருளை தவறாமல் தருகிறார் என்பதும் புரியும்.
நாம் இது போல பல விஷயங்களை unconscious -ஆக செய்துக் கொண்டு தான் இருக்கிறோம். எங்கே அடித்தால் எங்கே வலிக்கும். என்ன சொன்னால் மயங்குவாள், என்ன செய்தால் காரியத்தை சாதிக்கலாம், எப்படி நடந்தால் படிவான் என்னும் கயமைத்தனம் எல்லாம் நம்மிடையே நிறைய உண்டு. நாம் செய்ய வேண்டியது எல்லாம் அந்த அறிவின் திசையை மாற்றி உண்மை பக்கம், சத்தியத்தின் பக்கம் திருப்பி,அன்னைக்காக என்ன செய்யலாம் என்று பண்புகளின் பார்வையில் பார்க்கும் போது , அதை conscious ஆக பார்க்கும் போது நமக்கு தேவையான அருளை நாமே உருவாக்கலாம். இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் படிக்கலாம்.