Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-2

அதற்கு நாம் முதலில்  அருளின் வகைகளை, அது செயல்படும் விதங்களைப்  புரிந்துக் கொள்ளவேண்டும்.

அதற்கு ஒரு சிறிய ஆராய்ச்சி தேவை. வாழ்வில், நாம் இது போல பிரார்த்தனை செய்து பெற்றதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்து ஆராயுங்கள்.

அவற்றில் அன்னையால் நடந்தது என்று நாம் நினைப்பவை,  நடந்தவை அனைத்தும் பெரும்பாலும் ஒரு பிரச்னையோடேயே  வந்தவையாக இருக்கும். படிப்பு, வேலை, மனைவி, கணவன், குழந்தைகள், வாழ்வு என்று எதை எடுத்துப் பார்த்தாலும் இதற்கு பிரார்த்தனை செய்யாமலேயே இருந்திருக்கலாம் என்னும் அளவிற்கு, இன்னும் கொஞ்சம் மாற்றிக் கேட்டிருக்கலாமோ என்று தோன்றுமளவிற்கே இருக்கிறது. காரணம் நம் பிரார்த்தனை எல்லாம், நமக்கு எது நல்லது என்று நமக்கு மட்டுமே தெரியும் என்பது போல நம் எண்ணம், அனுபவம், சுபாவத்தை ஒட்டியே கேட்போம். பெரும்பாலும் அதை அன்னை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான வழிகளைக் கூடச் சொல்வோம்.  நம் இஷ்டத்திற்கு , நாம் சொல்லும் வழியில் அன்னை செய்து கொடுப்பது உண்டு. நம் பிரார்த்தனை பலித்து விட்டது என்று சந்தோஷப்படுவோம். என்றாலும் அது நம் சுபாவத்தை ஒட்டியே வந்ததால் நம் சுபாவம் திரு உரு மாற தேவையான பிரச்சினையுடனே அது வரும். அந்த பிரச்சினைகளில் இருந்து மீள தேவையான பண்புகளை நாம் வெளிப்படுத்த வேண்டி இருக்கும். உதாரணமாக நாம் பிரார்த்தனை செய்த படி வேலை கிடைத்து விட்டால் நமக்கான மேனேஜர் கடுவன் பூனையாக வருவார். அமைதி, கடின உழைப்பு, silent will , பொறுமை என்று எதாவது ஒன்றை கட்டாயத்தின் பேரில் நாம் கடை  பிடிக்க வேண்டியதாக இருக்கும். அதுவே அன்னை விருப்பத்திற்கு விட்டால் அருள் அதற்கு தேவையான பண்புகளோடு, சூழலோடு வரும். 

உதாரணமாக ஒரு அன்பர் தன்  மகளுக்கு visual communication வேண்டுமென்று பிரார்த்தனை செய்ய நினைத்தார்.  அப்போது loyola college அதற்கு புகழ் பெற்றதாக இருந்ததால், அதில் தான் வேண்டும் என்றும், principal -ஆக தெரிந்தவர் இருந்தால், அல்லது அங்குள்ள church -இல் உள்ள father தெரிந்திருந்தால் போதும் என்று தெரிந்து – loyala வேண்டும் principal க்கு  father க்கு தெரிந்தவர் வேண்டும், அவரிடம் உள்ள பணத்திற்குள் அது முடிய வேண்டும் என்னும் அளவிற்கு பிரார்த்தனை செய்ய நினைத்து மையம் வந்தார்.  பேசிக் கொண்டிருந்த போது, அப்படி பிரார்த்தனை செய்ய தேவையில்லை – visual communication வேண்டும் என்று கேளுங்கள், அதுவும் உங்கள் திருப்திக்காகவே.  அன்னை எந்த college எந்த degree தந்தாலும் சரியே என்று இருப்பதே சமர்ப்பணம் என்று சொல்லப்பட்டது. அவர் மகளுக்கு அவர் வீட்டிலிருந்து 30 km தள்ளி இருந்த college -லில் தான் சீட் கிடைத்தது.  அவருக்கு திருப்தி இல்லை.  அன்னை கை விட்டு விட்டார் என்றார்.  வேறு வழி இல்லாததால் படிக்க வைத்தார்.  அந்த college -க்கு அது முதல் batch என்பதால் இரண்டாவது ஆண்டு அவருக்கு scholarship கிடைத்தது. செலவில்லாமல் படித்தார்.  மூன்றாவது ஆண்டு முடிவதற்கு முன்பே company placement  -இல் college -க்கு  பெயர் வாங்க வேண்டும் என்பதாலேயே மிகப்பெரிய VFX company-இல்  அவரை தேர்வு செய்ய வைத்தனர்.  பத்து வருடத்திற்கு முன் அவர் பெற்ற சம்பளம் இரண்டு லட்சம்.  இப்பொது canada -வில் இருக்கிறார்.  அவரோடு loyalo சேந்தவர்கள் 20,000 பெறுவதற்கே சிரமப்பட்டனர்.

இந்த உதாரணங்களில்  இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் – ஒவ்வொரு நிலையிலும் நம் தேவை, வசதி, ஆசை, எதிர்பார்ப்பு என்று எந்த அளவிற்கு வெளியே வருகிறோமோ, அந்த அளவிற்கு அருள் செயல்படும்.  எந்த அளவிற்கு நாம் சாரத்தை புரிந்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு அருள் செயல்படும்.  Engineering college -இல் சேர்பவர்கள், , நல்ல படிப்பு, lab , project , வசதிகள், நல்ல professors , lecturers இருக்கிறார்களா என்று பார்க்காமல்,, building நன்றாக இருக்கிறது canteen நன்றாக இருக்கிறது, hostel  நன்றாக இருக்கிறது என்று சேர்ந்து அதனாலேயே வீணான மாணவர்கள்  நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். அதனால் ஒரு விஷயத்தில் , ஒரு செயலில், ஒரு பிரார்தினையில் அந்த காரியம் செய்வதற்கான சாரம் புரிவது மனம் வளர்வதற்கான பண்பு. அது ப்ரம்மம் விரும்பும் ஆனந்தம். அதாவது

  • உயர்ந்தது எது என்று புரிவது, அதனால் மனம் பெரிதாவது , அருளை பெற்றுத் தரும்.
  • நோக்கம், மனப்பான்மை, பெரிதாவது அன்னை அருளை பெற்றுத் தரும்.
  • லட்சியம் பெரிதாவது பேரருளைப் பெற்றுத் தரும்.
  • இந்த  அடிப்படையில் முன்னேற்றத்தை புரிந்து கொண்டால் வாழ்வில் பண்புகள் வெளிப்படுவதே பரிணாமம் அதுவே ப்ரம்மம், அன்னை வெளிப்படும் முறை என்பது புரியும்.

இதையே வேறு வகையில் நடைமுறைக்கு ஏற்றவாறு சொல்வதானால், அல்லது வாழ்வில் எப்படி வெளிப்படும் என்றால் :

  • மனிதனின் முயற்சிக்கு  வாழ்வை உதவ செய்வது அருள்.
  • மனிதனின் முயற்சிக்கு  சந்தர்ப்பமும், சூழலும், ஏற்படுத்தி தருவது அன்னை அருள்.
  • மனிதனின் முயற்சியில் அன்னை தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வது பேரருள் .

மேலே  சொன்ன உதாரணங்கள் மூலம் இவை புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.  இன்னும் புரியவில்லை, தத்துவமாகத்தான் புரிகிறது, மேலும் நடைமுறை விளக்கம் தேவை என்பவர்களுக்கு  என் வாழ்வில் நடந்த ஒரு உதாரணத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

நான் company ஆரம்பித்த போது என்னிடம் chennai dealership தருவதாக சொன்ன  ஒரு company -ஐ  நம்பியே வேலையை விட்டு வெளியே  வந்து சொந்த தொழிலை ஆரம்பித்தேன்.  ஆனால் நான் வேலை செய்த கம்பெனி முதலாளி சற்றே influence மிக்கவர் என்பதால் எனக்கு சென்னை dealership வருவதை தடுத்துவிட்டார்.  அந்த கம்பெனி coimbatore வேண்டுமானால் தருகிறோம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றனர்.  எனக்கு coimbatore-ரில் எதுவும் தெரியாது. குறிப்பாக சில நாட்களுக்குள் அதற்கான இடத்தை நான் வாடகைக்கு பிடிக்க வேண்டும்  என்பதால் ஒரு வாரம் தங்கி தேடினேன்.  முதல் முதலில் சொந்த தொழில் ஆரம்பிக்க போவதால் அலுவலுகம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்னும் அதீத கற்பனையில் தேடினேன்.  நாள் சென்றதே தவிர கிடைக்கவில்லை.  ஒரு நாள் அன்னையே நீங்கள் விடும் வழி.  நாளை broker காட்டும் இடத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றேன்.  அன்னை நல்ல இடத்தை தருவார், என் எதிர்பார்ப்பை , ஆசையை பூர்த்தி செய்வார் என்னும் நம்பிக்கையில் அப்படிச் சொன்னேன்.  ஆனால் மறுநாள் Broker காட்டியதோ – coimbatore bus stand அருகில் ஒரு சந்தில்.  அந்த சந்தின் ஆரம்பம் குப்பை போடும் இடமாக , சிறுநீர் கழிக்கும் இடமாக ,  அசிங்கமாக  இருக்கும்.  அதைத் தாண்டியே செல்ல வேண்டும்.  எதிர்பாராத அதிர்ச்சி.  ஏமாற்றம்.  என்றாலும் என்னிடம் ஒரு நல்ல பழக்கம்.  அன்னையிடம் promise செய்ய மாட்டேன். அந்த கயமை என்னிடம் நிறைய உண்டு.  அன்னை எப்படி செய்வார்கள் என்று எனக்குத் தெரியும்.  ஆனால் promise செய்துவிட்டால் அதை மீற மாட்டேன்.  அந்த வகையில் பிடிக்கவில்லை என்றாலும், வெறுப்பாக இருந்தாலும் அந்த இடத்தை ஏற்றுக் கொண்டேன்.

வியாபாரம் 2008-லிருந்து 2012 வரை நன்றாக வளர்ந்தது. 2012-இல் தொடர் மின்வெட்டு காரணமாக தொழிற்சாலைகளின் உற்பத்தி குறைந்தது.  அதனால் தேவைகள் குறைந்தது.  எங்கும் வியாபாரம் இல்லை , பண புழக்கம் இல்லை என்ற பேச்சு பரவி கொண்டு இருந்தது. என் வியாபாரமும் குறையும் என்றே நினைத்தேன்.  ஆனால் என்ன நடந்தது என்றால் சுற்று வட்டாரத்தில் திருப்பூர் வரை, நேரடியாக கம்பெனியிலிருந்து chemcial வாங்கிக்கொண்டிருந்தவர்கள் , அந்த MOQ  என்று சொல்லப்படும் minimum order quantity -ஐ வாங்க முடியாததால், coimbatore வந்து சில்லறை விற்பனையில் என்னிடம் வாங்கி செல்லத் தொடங்கினாரகள்.  Bus stand அருகில் இருப்பதால் வந்து வாங்கி அதே பஸ்ஸில் திரும்பி செல்வார்கள்.  அந்த வசதி தான் என் வியாபாரத்தை குறைக்காமல் , என் வருமானத்தை குறைக்காமல் காப்பாற்றியது.  அன்னை இந்த இடத்தை தந்ததன் பொருள் அப்போது தான் எனக்குப் புரிந்தது.  புரிந்தாலும் அதை தொடர்ந்து செய்யும் பண்பைப் பெறவில்லை. அதனால் அடுத்த நிலையில் ப்ரம்மம் – அன்னை என் வாழ்வில் வெளிப்பட முடியவில்லை. பாடம் கற்று கொண்டு அன்னை விரும்பும் பண்புகளை கடை பிடித்த பிறகே அன்னை என் வாழ்வில் வெளி பட முடிந்தது. அதாவது ,

கோவைக்கு பிறகு மதுரையில் கிளை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து இடம் பார்க்க ஆரம்பித்தேன்.  இம்முறை அழுத்தம் இல்லை.  அன்னையிடம் சொல்லவில்லை.  கம்பெனி வேறு வளர்ந்து விட்டதால், எனக்கு prosperity வந்து விட்டதாக பலரும் நினைக்க ஆரம்பித்ததால், அதை வெளிக்காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி, பெரிய இடமாக ஒரு லாரி உள்ளே வந்து chemical barrel -களை  இறக்கும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று நினைத்து, மதுரை By Pass road -இல் பெரிய இடத்தை வசதியாக எடுத்து நடத்தினேன்.  பல காரணங்களுக்காக நஷ்டப்பட்டு ஒன்றரை வருடத்தில் மூட வேண்டியதாயிற்று.  வியாபார நோக்கம் , வளர்ச்சி என்பது மட்டுமே இருந்த போது அபரிமிதமாக அருள் செயல்பட்டது.  வளர்ச்சிக்கு என்று நினைத்து என் அகந்தையை திருப்தி படுத்த முயன்ற போது அருள் செயல்படவில்லை. நஷ்டத்தை தந்தது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அன்று நான் எடுத்திருக்க வேண்டிய பண்புகளை பிற்காலத்தில் எடுத்த போது  மூன்று வருடங்களுக்கு பிறகு நான் இழந்தது அனைத்தும் அதே மதுரையிலிருந்தே வந்தது.

அன்னையை செயல்பட விட்டால் என்ன நடக்கும், நாம் செயல்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இது போன்ற ஏராளமான உதாரணங்களை என் வாழ்வில் பார்த்திருக்கிறேன். முதலில் தவறு செய்திருந்தாலும், அதன் பிறகு மனமாற்றத்தால் அதை மாற்றவும் முடிந்திருக்கிறது.  ப்ரம்மம் விரும்புவது – thywill – மனிதன் பரிணாமத்தில் முன்னேறுவது , நாம் விரிவடைவது , அதன் மூலம் படைப்பு திறன் கொண்ட பண்புகள் நம்மில் வெளிப்படுவது ( Manifesting Aspects – Mother Symbolஇல் உள்ளவை) அதன் மூலம் அந்த ப்ரம்மம் ஆனந்தம் அடைவது இதுதான் வாழ்வின் குறிக்கோள்.

இதைத் தான் நடைமுறையில் பண்புகளால் அருளை உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்.

இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் படிக்கலாம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »