வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது-2
அதற்கு நாம் முதலில் அருளின் வகைகளை, அது செயல்படும் விதங்களைப் புரிந்துக் கொள்ளவேண்டும். அதற்கு ஒரு சிறிய ஆராய்ச்சி தேவை. வாழ்வில், நாம் இது போல பிரார்த்தனை செய்து பெற்றதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்து ஆராயுங்கள். அவற்றில் அன்னையால் நடந்தது என்று நாம் நினைப்பவை, நடந்தவை அனைத்தும் பெரும்பாலும் ஒரு பிரச்னையோடேயே வந்தவையாக இருக்கும். படிப்பு, வேலை, மனைவி, கணவன், குழந்தைகள், வாழ்வு என்று எதை எடுத்துப் பார்த்தாலும் இதற்கு பிரார்த்தனை செய்யாமலேயே இருந்திருக்கலாம் என்னும் அளவிற்கு, […]