இது செப்டம்பர் 2022 இல் நான் எழுதியது . ஓராண்டுக்கு பிறகும் இன்றளவும் இதில் எந்த மாற்றமும் வரவில்லை. அன்னையுடன் இருந்தவர் என்பதாலேயோ , அன்னையின் உறவினர்கள், பிறந்தவர்கள் என்பதாலேயோ அவர்களையும் அன்னையாக நினைப்பது தவறு என்று பல புத்தகங்களில் எழுதியும் – அப்பா அப்பா என்று சொன்னவர்களே அதை மீறுவதும் – தவறு செய்பவர்களுக்கு துணை போவதும் – அதை பக்தியென்றும் , அப்பாவிற்கான சேவை என்றும் நினைக்கும் முட்டாள்தனத்தை , அன்பர்கள் காணிக்கை தர / சேவை செய்ய மட்டுமே இருக்கிறார்கள் என்று நடப்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கும் அறியாமையை பார்த்து என்னை திருத்துவதே சரி என்று புரிந்து கொண்டேன். ஆன்மீகம் ஒரு நல்ல வியாபாரம் என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்க பட்டு இருக்கிறது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் செய்வதில் தவறு இல்லை என்றும் புரிந்து கொண்டேன். இதையெல்லாம் பார்த்து – ஒரு பேனா ரீஃபிளை கூட ஊதி ஊதி கடைசிவரை எழுதி அன்னை சேவைக்காக சேர்த்தவை அனைத்தும் வேறு விஷயங்களுக்கு , ஒரு சிலரின் சொந்த , சுயநலமான விருப்பங்களுக்கு பயன்படுத்த படுவதை பார்க்கும்போது எதுவும் செய்ய முடியாத என் இயலாமை மேல் கோபம் வருகிறது. என் கண்ணில் இவையெல்லாம் படாமல் இருப்பதே நல்லது என்று தோன்றியதால் இன்று MSS இன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். வழக்கம் போல நான் negative person என்றோ , என்னுடன் யாரும் தொடர்பு கொள்ள கூடாது என்றோ சொல்லப்படலாம். அதையும் தாண்டி என்னை தொடர்பு கொள்வது அவரவர் விருப்பம்.
அன்னை ஒரு ஆற்றல் , முன்னேற்றத்திற்கான ஆற்றல் , பரிணாமத்திற்கான ஆற்றல் என்னும் அந்த உண்மையை விரும்பும் அதை பின் பற்ற விரும்பும் தொடர்ந்த ஆதரவு தரும் அந்த நூற்று சொச்சம் பேரு க்காக மீண்டும் எழுதுகிறேன். August 1, 2023 முதல் ஒரு மாற்றத்திற்கு காத்திருந்து அது இன்று நடந்ததால் நூறு நாட்கள் அமைதிக்கு பிறகு இதற்கு அப்பாவின் அனுமதியும் இருப்பதாக நினைத்து இன்று மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன். அப்பாவின் ஆசைகளை , ஆர்வங்களை , மக்களுக்கு எடுத்து செல்லும் என் பணியும் வேறு வகையில்தொடரும். வேலை பளு , பயணங்கள் அதிகம் இருக்கிறது என்றாலும் இனி தடைகள் இருக்காது என்றே நினைக்கிறேன். வழக்கம் போல என்னை rameshposts@gmail.com இல் அல்லது +91 80144 22222 இல் WhatsApp அல்லது Telegram மூலம் தொடர்பு கொள்ளலாம். தேவைப்படின் நானே அழைக்கிறேன் . விரும்பினால் , முடிந்தால் இதை மற்ற அன்பர்களுக்கும் forward செய்யலாம். மேலே இடது புறம் whatsApp , Telegram , facebook லோகோ உள்ளது அதன் மூலம் forward செய்ய முடியும்.