Share on facebook
Share on telegram
Share on whatsapp

விதி (fate) ஊழ் (Destiny) – இதன் சாரம் , சட்டம் பற்றி ஒரு பார்வை-4

அன்னை symbol -லில் உள்ள 12 பண்புகளை 10 நிலை அல்லது 100 நிலை என்று இழை இழையாக பிரிக்க முடியும். உதாரணமாக impulsiveness – எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்பவரானால், அதில் ஆரம்பித்து சமநிலை – equality -வரை நம் personality -க்கு ஏற்றாற்போல் 10 முதல் 100 நிலைகளை நாம் அமைக்கலாம். நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ எந்த நிலைக்கு மாறுகிறோமோ அந்த நிலைக்கான பலன் கிடைக்கும். அதற்கு ஒரு check list ஆக கர்மயோகி அவர்கள் பார்க்க சொல்வது. Parts of Being – ஜீவனின் பகுதிகளில் நாம் பார்க்க வேண்டும் என்று அவர் சொல்வது :
Physical -லில் – ஒழுங்குக்கான திருவுருமாற்றம் முக்கியம் என்றால் நம் நிலை என்ன?
Vital -லில் – non -reaction , non -initiative திருவுருமாற்றம் என்றால் நம் நிலை என்ன?
Mental -லில் – எப்போதும் நம் அபிப்பிராயமும், அனுபவங்களுமே முடிவெடுக்கின்றன என்னும் போது , எதிர்காலத்தில் எதை வைத்து முடிவெடுக்க போகிறோம்? அன்னை பண்புகளே திருவுருமாற்றம் என்றால் இன்று நம் நிலை என்ன?
Spiritual -லில் – அன்னையை செயல்படவிடுவது திருவுருமாற்றம் என்றால் நம் அறிவு அதை செயல்பட விடுகிறதா?.
Insight Intuition – எந்த அளவிற்கு உட்பார்வை, உள்ளுணர்வுக்கு இடம் கொடுக்கிறோம்
Overmind – அத்தனை சக்தி பெற்று இருந்தும், நாம் அறியாமையிலேயே மூழ்கி இருக்கிறோம் என்னும் தெளிவு வருமா?
Super Mind – எந்த அளவிற்கு நம்மால் ஒருமையை பார்க்க முடிகிறது?

Higher consciousness உயர் சித்தம் தான் நமக்குத் திருவுருமாற்றம் என்றால், எந்த அளவிற்கு நம் பண்புகளைப் பற்றிய அறிவு, ஒருமை பற்றிய அறிவு, பிரம்மத்தைப் பற்றிய அறிவு, பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவு நம் உறுதியின் மேல் (our knowledge over our will) செயல்படுகிறது, ஞானம் உறுதியின் மேல் செயல்படுவது தான் இறைவனுக்கு பேரானந்தம் என்பதை நாம் எந்த அளவிற்கு புரிந்து கொள்கிறோம்.

இந்த எட்டு நிலைகளிலும் நாம் நம்மை பொருத்தி யோசித்தால், நாம் முறை மாற வேண்டிய, நிலை மாற வேண்டிய, திருவுருமாற வேண்டிய இடங்கள் புரியும். அதற்கு ஏற்பவே நமக்கு அருள், அன்னை அருள், பேரருள் வேலை செய்யும்.

அப்படியானால் இப்போது நடப்பதெல்லாம் அருள் இல்லையா என்றால் இல்லை என்கிறார் கர்மயோகி. மனிதன் அருளை பற்றிய உண்மையை உணர்ந்தால் உடனே மாறி விடுவான் என்கிறார். நமக்கு நடப்பதெல்லாம் அதிர்ஷ்டம் என்னும் நிலையே. Luck என்னும் நிலையே. அன்னை மேல் உள்ள பக்திக்கு, பிரார்த்தனைக்கு – அந்த க்ஷண நேரம் நம் மனம், உணர்வு, அறிவு, செயல்படாததற்கு – வாழ்வு அளிக்கும் பரிசுகள் அவை. இன்னும் விளக்க வேண்டுமென்றால் ஜாதகத்தில் சொல்லப்பட்ட நல்லவை அதிகமாகவும் கெட்டவை குறைவாகவும் நடக்கும் நிலை. அதன் தீவிரத்திற்கு ஏற்ப அன்னையிடம் வந்த புதிதில் செய்வதறியாது திகைத்த நேரத்தில், சரணடைந்த நேரத்தில் ஓரிரு முறை அருள் செயல்பட்டு இருக்கலாம். ஆனால் அதை ஒரு சட்டமாக நாம் செய்வதில்லை.

முதல் கட்ட அனுபவம் நம்பிக்கைத் தரலாம். ஆனால் நமக்கு தேவை நம் நம்பிக்கை நமக்கு அனுபவங்களைத் தர வேண்டும். ஒவ்வொரு அனுபவமும் அதன் முந்தய கட்டத்தை உறுதி படுத்த வேண்டும். அதாவது நாம் செய்தது சரி என்பதை வாழ்வு காட்ட வேண்டும். அதுவே வளர்ச்சி. அதுவே முன்னேற்றம்.

அதனால் நம் அவதார நோக்கம் நமக்கு புரிந்தால் வருவது அருள்.
அன்னையின் அவதார நோக்கம் நமக்கு புரிந்தால் வருவது அன்னை அருள்.
இது இரண்டும் புரிந்த பிறகு நம் அவதார நோக்கத்தை வெளிப்படுத்தி அன்னை நம்மை ஏற்க வைப்பது அவரது அவதார நோக்கத்தை பூர்த்தி செய்ய அனுமதிப்பது – பேரருள்.

ஒரு tourist இந்தியாவிற்கு வந்தால் நம் நாட்டு சட்டம் ஓரளவு தெரிந்தால் போதும். வந்தது சுற்றிப் பார்க்க என்றால் அது போதும்.

இன்னும் அதிகமாகப் பெற வேண்டுமென்றால் நம் பண்பாடு, கலாச்சாரம், உணவு, பழக்கம்,நடத்தை அவருக்குப் புரிய வேண்டும்.

அவர் வந்ததற்கு ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருந்தால், கதை எழுத, ஆராய்ச்சி என்று வந்தால், வரலாறு, பாரம்பரியம், சமுதாய சூழல், மக்களின் கட்டமைப்பு முதலியவை புரிய வேண்டும். அப்போது தான் நினைத்த வேலையை முடிக்க முடியும்.

அது போல நம் வாழ்வில், நம் நோக்கம், குறிக்கோள் என்ன, அதை முடிக்க நமக்கு தெரிய வேண்டியவை எவை, அடைய வேண்டியவை எவை, மாற்ற வேண்டியவை எவை, என்று புரிந்தால் நம் நோக்கம் நிறைவேறும். அதற்கு ஏற்றாற்போல அருளோ, அன்னை அருளோ, பேரருளோ செயல்படும்.

அப்படி மாற விடாமல், முன்னேற விடாமல் தடுப்பது நம் சுபாவம். சிறு வயதிலிருந்தே கடின உழைப்பு என்பது அல்லது sincerity என்பது என் பலமாக இருந்திருக்கிறது என்று பின்னால் புரிந்தது. ஆனால் 40 வயது வரை அதன் பலன் வராமல் போனதற்கு காரணம் அப்போது முதலே நண்பர்களுக்கு உதவ போய் சிக்கலில் மாட்டி சீரழிவது என் சுபாவம். அதிலிருந்து மாறியவுடன் என் வாழ்வே மாறி விட்டது. இழந்து விட்டேன் என்ற நினைத்த அத்தனையும் படிப்பு முதற்கொண்டு 40 வயதுக்கு பிறகு கிடைத்தது . தருமர், பீஷ்மர், கர்ணன், துரியோதனன், நள தமயந்தி, ஹரிச்சந்திரன் என்று புராணங்களிலும், இதிகாசங்களிலும் வரும் ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களை கவனித்தால் இது புரியும். அதிலிருந்து வெளியே வருமளவு நமக்கு அருள் பலிக்கும். கர்ணன் கடைசி வரை உயிரோடு இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். பீஷ்மர் சரியான முடிவு எடுத்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்தால் இது புரியும். எது உயர்ந்த சுபாவம், எது உயர்ந்த கடமை, எது உயர்ந்த மனப்பான்மை என்று புரிந்தால் அதற்கு ஏற்றார் போல அருள் செயல்படும்.

நம் வாழ்வில் நாம் எதிர்பார்த்து நடக்காத விஷயங்களில் வந்த கஷ்டங்களை கவனித்துப் பார்த்தால் எதாவது ஒரு அடிப்படை சுபாவம் தடையாக இருந்து இருக்கும். நான் இப்படித் தான் , என்னால், என் திறமைக்கு இவ்வளவு தான் முடியும், நான் செய்வதே நான் இருக்கும் நிலைக்குச் சரி, வசதிகளை விட மாட்டேன், இது பிடிக்கும், இது பிடிக்காது. இப்படித்தான் வர வேண்டும், இப்படி வந்தால் வேண்டாம் என்று ஆயிரக்கணக்கான முட்டுக்கட்டைகளோடேயே நாம் ஒவ்வொரு விஷயத்திலும் செயல்படுகிறோம்.

இறைவனே நினைத்தாலும் மனிதனின் சுபாவத்தை மீறி அவனுக்குத் தர முடியாது என்கிறார் கர்மயோகி அவர்கள் . அதிர்ஷ்டத்தை, அருளை தர வேண்டும் என்று இறைவன் முடிவெடுத்து விட்டால் அது வாழ்வில், அழுத்தம், தடை, துன்பம் என்று வந்து அவன் கவனத்தை ஈர்த்து, தன்னை நோக்கி திரும்ப வைத்து அதற்கு எதிரான சுபாவத்தை உடைத்த பிறகு தான் கொடுக்க முடியும். பல பழமொழிகளுக்கும் கர்மயோகி அவர்கள் வித்தியாசமான விளக்கங்களை தந்திருப்பார். அதில் ஒன்று – ஓடி போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில குரு என்பதை – எல்லாவற்றையும் விட்டு வெளியே வருபவனுக்கு சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்று எழுதியிருப்பார். நம் சுபாவத்தை விடுமளவிற்கு நமக்கு அருள் பலிக்கும். Life Divine நன்றாக புரிந்த Software Engineer இருந்தால் இது செய்தால் இது நடக்கும் என்னும் அளவிற்கு ஒரு Software programme எழுத முடியும் என்கிறார். அருளை பெறுவது என்பது election -இல் ஜெயிப்பது, பரிட்சையில் pass ஆவது போல ஒரு systematic process தான் என்கிறார்.

“கர்மத்தில் இருந்து விடுபட தன் சுபாவத்தை மாற்ற தயாராக இருப்பவர்களுக்கு என்றும் உதவ என் சக்தி காத்திருக்கிறது” என்கிறார் அன்னை. “பரிணாமத்தில் முன்னேறுவதற்கான சக்தி நான். அந்த சக்தி மனிதனை முன்னேற்றத்திற்கான சக்தியை உள்ளடக்கியது” என்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் அருள், அன்னை அருள், பேரருள் என்று எத்தனை வகையாக பேசினாலும் அதன் பின்னால் இருப்பது ஒரு பிரபஞ்ச சக்தி. Universal Force . நமக்கு Mother .

அருள், அன்னை அருள், பேரருள் அதையும் தாண்டி ஆன்மீக அருள் – Spiritual Grace – அதிமன அருள் – Supermental Grace என்று பல இருக்கிறது என்கிறார் கர்மயோகி அவர்கள்.

அன்னையிடமும் அவர் விரும்பும் பண்புகளிடமும் நமக்கு இருக்கும் alignment , அதன் தீவிரம், அதன் ஆழம், இந்த மூன்றுக்குமான நம் ஆர்வம் ஆகியவற்றைப் பொறுத்து அவை செயல்படும்.

இதை, முதல் நிலையில் எவருடைய குரலுக்கும் செவி சாய்க்கும் அன்னை அடுத்தடுத்த நிலைகளில் நாம் செய்ய வேண்டியதில் ஒரு இழை பாக்கி இருந்தால் கூட திரும்பி பார்ப்பதில்லை என்கிறார் கர்மயோகி அவர்கள்.

“எனக்குத் தேவை, பரிணாமத்தில் முன்னேற்றம், அதற்கான சுபாவ மாற்றம், திருவுருமாற்றம். அதை செய்பவர்கள் என் அருளை பற்றி கவலைப் படத் தேவையில்லை. அது என்றும் உன்னை பின் தொடரும். வழிபடுவது மட்டுமே போதும் என்று நினைப்பவர் வீணே ஏமாற நேரிடும்” என்கிறார் அன்னை.

அதன் முதல் நிலையில் விதி, கர்மா, ஊழ், என்பதில் இருந்து வெளியே வருவது என்பது அந்த நம்பிக்கைகளில் இருந்து வெளியே வருவது. அதை வெளிப்படுத்தும் நம் சுபாவத்தின் மேல் , நம் அபிப்ராயத்தின் மேல் நமக்குள்ள நம்பிக்கையிலிருந்து வெளியே வருவது. அது தருவது அருள். அதற்கு எதிரான அன்னையின் பண்புகளுக்கு நாம் மாறுவது அன்னை அருளைத் தரும். அன்னை விரும்பிய நோக்கத்தை பூர்த்தி செய்வதே நம் சுபாவமாக மாறுவது பேரருளைத் தரும்.

X – என்பவர் தன் சுபாவத்தை விட்டு பிடிக்காத வேலையை , விருப்பத்தோடு செய்கிறார். கடினமாக உழைக்கிறார்
Y – என்பவர் கொஞ்சம் அதிகமாக சுமுகம் , விட்டுக் கொடுத்தல் , தட்டிக் கொடுத்தல், இனிமை என்று team player -ஆக பண்புகளோடு உழைக்கிறார்.

Z – என்பவர் இதனால் இந்த company மேலும் வளர வேண்டும், இந்த product எல்லோருக்கும் நல்ல பலன் தர வேண்டும் என்ற மனப்பாண்மை நோக்கத்தோடு உழைக்கிறார்.

சில வருடங்கள் கழித்துப் பார்த்தால்
X – முதலாளி ஆகிறார்;
Y – தலைவர் ஆகிறார்;
Z – தொழில் வளர், நாடு முழுதும் பரவ கருவியாகிறார்;

எல்லாவற்றிலும் ஒரு consciousness Dimension – சித்தத்தின் பரிமாணம் இருக்கிறது. மனப்பான்மை, நோக்கம், அந்த நிலைக்கான அருளை முடிவு செய்கிறது. சற்றே பரந்த மனப்பான்மை அருளைத் தரும் என்றால், ஒருமை, பேரருளைத் தரும்.

இருபது வயது வரை மாடு மேய்க்கக் கூட லாயக்கில்லை என்று பெயரெடுத்தவன் நான். அடுத்த 18 வருடத்தில், நல்ல வேலைக்காரன் ஆனால் கோபக்காரன், முட்டாள் என்று பெயரெடுத்தேன். 38 வயதில் அன்னை பற்றி தெரிந்த பிறகு, சிறு மாற்றமாக முறைமாற்றமாக , யார் எப்படி போனால் என்ன, நாம் நம் வேலையைப் பாப்போம் என்று மாறிய பிறகு அது வரை என் திறமை, அறிவு, உழைப்பு ஆகியவை பலன் தர தடையாக இருந்தவையெல்லாம் மாறி பலன் கிடைக்க ஆரம்பித்தது. BA , MA , MBA என்று மூன்று degree உட்பட .

லஞ்சம் கொடுத்தே வேலை செய்யும் company -யில் வேலை செய்த நான் 2007-இல் token act -ஆக ஒரு perfection -ஐ கொண்டு வர, approval பெற, லஞ்சம் கொடுக்காமல் token act ஆக செய்த ஒரு செயல் இன்று வரை எனக்கு வருமானம் தந்து கொண்டு இருக்கிறது.

இப்படி நல்ல திறமை இருக்கும்,. பலன் இருக்காது நல்ல படிப்பு இருக்கும், வேலை கிடைக்காது. தரமான பொருள் தயாரிப்போம், market இருக்காது. நல்ல சம்பளம் கொடுப்போம் ஆனால் நல்ல ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்பது போன்ற எல்லாருக்கும் இருக்கும் பிரச்சனையில் ஒரு சின்ன அகந்தையின் பிடிவாதம் சுபாவத்தில் தடையாக இருக்கும். அதை எடுக்கும் போது அதிலிருந்து மாறும் போது அருள் செயல்படும்.

அதை விரிவுப் படுத்தினால் அதற்கு அடுத்த நிலைக்கான, முன்னேற்றத்திற்கான சந்தர்ப்பத்தையும், சூழலையும் கொண்டு வரும். அது அன்னை அருள். திருவுருமாற்றம் அவை வளர்ந்து உங்களை சுற்றி பலருக்கும், சமுதாயத்திற்கும், உபயோகமான சேவையாக மாறும் அது பேரருள்.

இதை சுருக்கமாக – தேவைகள் பூர்த்தியாவது அருள் . திறமைகள் பூர்த்தியாவது அன்னை அருள். திறமை உற்பத்தியாகி சேவையாவது பேரருள் என்று கர்மயோகி அவர்கள் கூறுகிறார்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »