விதி (fate) ஊழ் (Destiny) – இதன் சாரம் , சட்டம் பற்றி ஒரு பார்வை -2

பிறர் சந்தோஷம் என்று சொல்வதை நாமும் செய்து பார்க்கிறோம்.  யாரோ சொன்னார்கள், யாரோ செய்தார்கள் அதனால் செய்கிறோம். இப்படி செய்தால் சந்தோசம் வரும் என்று யாராவது சொன்னால் செய்கிறோம். மற்றவர்களுக்காக செய்கிறோம். நல்ல பெயர் எடுக்க செய்கிறோம்.   பிறரின் திருப்திக்காக, சமுதாயத்திற்காக, பிழைப்புக்காக செய்கிறோம்.  அதுவும் அவர்கள் செய்த வழியில் செய்ய மாட்டோம். நம் வழியில் செய்து, நாம் நினைக்கும் வழியில், நாம் நினைக்கும் விதத்தில் சந்தோஷம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். பிறரிடமும் அப்படியே நடப்போம். […]