அது போல நாம் அன்னையை அறியும் பண்புகளின் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக் கொண்டால் நாமும் அன்னையாகலாம். பிரபஞ்ச அன்னையாக முடியவில்லை என்றால் கூட நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு அன்னையாகலாம். எந்த நிலைக்குரிய பண்பை ஏற்கிறோமோ அந்த நிலை நமக்கு சித்திக்கும். எதை அடைய வேண்டுமானாலும் அதற்குரிய பண்பை அடைய வேண்டும். மேல்மனதில் பண்புகள் இருந்தாலும், ஆழ்மனதில் தாழ்ந்த பண்புகள், எண்ணங்கள் இருந்தால் அது பலிக்காது. ஜனநாயகம் வந்த பின்னும் போருக்கு மரியாதை இருப்பதும், சந்நியாசம் மேற்கொண்ட பிறகும் பணத்தின் மேல் ஆசை இருப்பதும் சில உதாரணங்கள்.
– உணர்ச்சியை கட்டுப்படுத்தினால் நல்ல பழக்கங்கள் வருகிறது
– ஆசையை கட்டுப்படுத்தினால் பண்பாடு வருகிறது
– அது போல மனதைக் கட்டுப்படுத்தினால் ஆன்மா வெளி வரும்.
– மனம் மாற தெளிவு தேவை.
– உணர்வு மாற தெளிவு போதாது. நோக்கம் மாற வேண்டும். பிரம்ம நோக்கமாக மாற வேண்டும்.
இறைவன் மேலே சொன்ன எல்லா திருவுருமாற்றத்திற்கும் சரியான சூழல்களோடு நம்மை அணுகுவதை நாம் புரிந்துக் கொள்வதில்லை. அதில் நமக்கான விழிப்புணர்வும், நாமும் மற்றவர்களும் ஒன்றே என்னும் நிலையும் சேர்ந்தே வருவதை நாம் கவனிப்பதில்லை. உதாரணமாக மேல் மனதில் நான் சமூகத்தைச் சேர்ந்தவன் என்னால் பிறர் தொடர்பு இல்லாமல் இருக்க முடியாது என்றெல்லாம் நினைப்போம். அது உண்மையில் ஆழ்மனதின் ஒருமைக்கான ஆசையே. அது போன்று ஒவ்வொன்றையும் கவனித்தால் மேல் மனதின் கருத்துகள் அனைத்திற்கும் ஆழ்மனதின் சாத்தியத்திற்கான தேடல் ஒன்று இருப்பதை காண முடியும்.
அதனால் மனதில் எந்த அளவு நம்மால் விரிவடைய முடிகிறதோ அந்த அளவு நம் முன்னேற்றமும் ஆனந்தமும் இருக்கும்.
ஒரு முதலாளி company ஆரம்பித்து தொழில், தொழிலாளர், உற்பத்தி என்னும் பார்வையில் பார்த்து கம்பெனியை நடத்தும் போது company வளர்கிறது. இங்கு company individual . மற்றவை அதன் பாகம். இதற்கு அடுத்த நிலையில் company individual சமூகம் பிரம்மம் என்று பார்த்தால் தான் அது சமூகம் விரும்புவதை செய்வதில் தான் முதலாளி தான் நினைத்த அதிக பட்ச ஆனந்தத்தை அடைய முடியும். Sears , Microsoft , Apple -ஐ உதாரணமாக எடுத்துக் கொண்டால் சமூகத்தில் ஆர்வத்திற்கும் , தன் தேவைக்கும் நடுவில் சரியாக நின்றதால் அவர்கள் ஜெயித்தார்கள். இதையெல்லாம் சுருக்கமாக சொல்வதானால் Individual, Universal , Transcendent எல்லாம் சந்திப்பது ஆன்மாவின் பண்புகளில் என்று சொல்லி விடலாம்.
அதற்கு முதல் வழி மனம் பெரிதாவது, நோக்கம் பெரிதாவது, லட்சியம் பெரிதாவது. அந்த மூன்றையும் நாம் செய்யும் போது பிரம்ம சக்தி, அன்னை சக்தி நமக்கு உதவ காத்திருக்கிறது. I am not representing a teaching, a cult or an idea. I am a creative force in action to expedite evolution என்கிறார் Mother . பரிணாமத்தில் முன்னேற்றதிற்கான சக்தி நான். அந்த சக்தி மனிதனின் முன்னேற்றதிற்கான சக்தியை உள்ளடக்கியது என்கிறார். அப்படி நாம் உடல், உணர்வு, மனம் ஆகியவற்றில் விரிவடைந்து ஆன்மாவின் பண்புகளுக்கு மாறும் போது என்ன நடக்கும் என்பதோடு அது வாழ்வில் எப்படி வெளிப்படும் என்பதற்கு சில உதாரணங்கள்:
- திறமைகள் பூர்த்தியாவது முதல் நிலை
- தேவைகள் பூர்த்தியாவது அடுத்த நிலை
- இரண்டும் பூர்த்தியாகி சேவையாவது உயர்ந்த நிலை
- மனிதன் தன்னை பூர்த்தி செய்துக்கொள்வது முதல் நிலை
- வாழ்க்கை தன்னை பூர்த்தி செய்துக்கொள்வது அடுத்த நிலை
- இரண்டும் பூர்த்தியாகி அதில் சமுதாயம் தன்னை பூர்த்தி செய்துக்கொள்வது உயர்ந்த நிலை
- மனிதனின் முயற்சிக்கு வாழ்வு உதவுவது முதல் நிலை
- மனிதனின் முயற்சிக்கு வாய்ப்பையும், சூழலையும், தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்துக்கொள்வது அடுத்த நிலை
- மனிதனின் முயற்சியில் பிரம்மம் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்துக்கொள்வது உயர்ந்த நிலை
- மனிதன் கஷ்டத்திலிருந்து விடுபடுவது முதல் நிலை
- இனி இது போன்ற கஷ்டமே வராதது அடுத்த நிலை
- இது போன்ற கஷ்டம் இனி யாருக்கும் வராது என்பது உயர்ந்த நிலை
- பலனுள்ள வேலை செய்வது முதல் நிலை
- வேலை முன்னேற்றத்திற்கான கருவி என்று செய்வது அடுத்த நிலை
- இந்த வேலையின் பலன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது உயர்ந்த நிலை
- உழைப்புக்கு அன்னையின் பண்புகளை பின்பற்றுவது முதல் நிலை
- குணத்திற்கு, உணர்வுக்கு அன்னையின் பண்புகளை பின்பற்றுவது அடுத்த நிலை
- மனநிலைக்கு, நோக்கத்திற்கு அன்னையின் பண்புகளை பின்பற்றுவது உயர்ந்த நிலை
- பிரார்த்தனை முதல் நிலை
- சமர்பணம் அடுத்த நிலை
- சரணாகதி உயர்ந்த நிலை
ஒரு உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால்
X – என்பவர் Sincerity, Hardwork மூலம் ஒரு company -க்காக உழைக்கிறார்
Y – என்பவர் சுமூகம், பழக்கம், தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது, அனைவரையும் ஊக்கப்படுத்துதல் என்று team player ஆக உழைக்கிறார்
Z – என்பவர் என் Company வளர வேண்டும், இந்த Product எல்லோருக்கும் பலனளிக்க வேண்டும் என்று நினைத்து உழைக்கிறார் .
சில வருடங்கள் கழித்துப் பார்த்தால்
X – முதலாளி ஆகிறார்;
Y – தலைவர் ஆகிறார்
Z – அந்த Industry -க்கு , நாட்டுக்கு கருவியாகிறார்
இன்னுமொரு உதாரணம்
A – படிப்பு என்பது நல்ல வேலைக்கு அடிப்படை என்று நினைத்து படிப்பவர்
B – என்பவர் படிப்பு – அறிவுக்கு வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படை என்று நினைத்துப் படிப்பவர்
C – படிப்பு என்பது பண்பு வளர, ஆளுமை, தனித்தன்மை, personality & individuality வளர என்று நினைத்துப் படிப்பவர்
D – படிப்பு என்பது உலகை, நம்மை, அதன் முழுமையை புரிந்துக் கொள்ள என்று நினைத்துப படிப்பவர்
சில வருடங்கள் கழித்துப் பார்த்தால்
A – நல்ல வேலைக்கும்;
B – விஞ்ஞானியாகவும்;
C – தொழிலதிபராகவும்;
D – ஆன்மீகவாதியாகவும்
மாறி இருப்பார்கள் அன்றாட வாழ்வில் உயர்ந்த உண்மையை, ஒரு செயலின் சாரத்தை, ஆன்மாவை ஒரு மனிதன் நாடும் போது நாம் தோற்றத்தை விட்டு ஜீவனை நாடுகிறோம். இதில் ஈடுபாட்டுடன் முழுமையைத் தேடும் போது அக வாழ்விலும் புற வாழ்விலும் ஆனந்தம் மட்டுமே இருக்கும் என்கிறார். அதுவே இறைவனின் ரியல் ஐடியா என்னும்போது , அதுவே “தை வில்” என்னும் பொது மனிதனின் தலைவிதி அதுவே என்று எடுத்து கொள்ளலாம்.