அந்த விழிப்புணர்வு மூன்று நிலைகளில் இருக்கிறது.
1. subconscious , conscious , super conscious , conscious என்பது நம் மேல் மனதின் விழிப்புணர்வு.
2. Subconsious என்பது அதற்கும் உள்ளே, கீழே இருப்பது அது இயற்கை, சுபாவம், ஆளுமை , native , character , personality எல்லாவற்றின் கலவையாக இருப்பதால் அதைப்பற்றிய விழிப்புணர்வு நமக்குத் தேவை.
3. Superconscience என்பது நம் எல்லா விழிப்புணர்வுகளை தாண்டிய பிரம்மத்தை பற்றிய ஒரு முழுமையான விழிப்புணர்வு.
இந்த மூன்றை பற்றிய ஒரு அடிப்படை விழிப்புணர்வு நமக்கு நிச்சயம் தேவை. அதன் முழு உண்மை புரி யவில்லை என்றால் கூட , ஒவ்வொரு வார்த்தை பற்றிய அடிப்படை புரிதல் ஒன்று இருக்கும். அது பற்றிய விழிப்புணர்வு தேவை.
உதாரணமாக consicous -இல் ஒருவர் செய்வதை தவறு என்று நினைப்பது complain – குறை கூறுவது அவரைப்பற்றிய surface level மேல்மனத்தின் விழிப்புணர்வு. ஆனால் subconsious awareness ஆகப் பார்த்தால் நம்மிடம் உள்ள ஒரு குறை தான் அவரிடம் குறையாக இருக்கிறது என்று தெரியும். இன்னும் ஆழமாக உள்ளே நம் குறையை நமக்கு காட்ட நம் குறையின் பிரதிபலிப்பாக இருப்பது அது வருவது தெரியும் .
இதை படிப்படியான விழிப்புணர்வாக பார்க்க வேண்டும் என்னும் போது – அதாவது படிப்படியாக superconscious -க்கு செல்வதானால் நம் விழிப்புணர்வு எப்படி இருக்க வேண்டும்.
- முதலில் நமக்குக் குறையாக தெரிவது உண்மையில் குறையாக இருக்காது.
- உண்மை என்ன என்பதை ஆராய்ந்தால் நாம் அதை குறையாக நினைப்பது தவறு என்பது தெரியும்.
- இன்னும் ஆராய்ந்தால் வேறு வகையில் நாம் காணும் குறைக்கு அவசியம் இருக்கும்.
- மற்றொரு கோணத்தில் நாம் குறையாக காண்பது உண்மையில் நிறைவாக இருக்கும்.
- அப்போது பிறர் குறை நம் முழுமையை பூர்த்தி செய்யும் நிறைவாக இருப்பது என்று தெரியும்.
இப்படி படிப்படியாக மனதை விரிவுப்படுத்தி அகந்தை மனதிலிருந்து, அதிமனதிற்க்கு mind to supermind செல்வது இந்த மூன்று நிலைகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். பரம்மம் – அதன் ரியல் ஐடியா போன்றவற்றை பற்றிய ஒரு தெளிவை , பரிணாமத்தில் எப்படி முன்னேறுகிறோம் என்பதை பற்றிய விழிப்புணர்வை தரும்.
ஆனால் நம் விழிப்புணர்வு என்று நினைக்கும் ஒன்று நாம் பெற்ற அறிவின் அடிப்படையில் விவேகம், பாகுபாடு, அடிப்படையில் கூட இருப்பதில்லை. எப்போதும் நம் பழைய அனுபவங்கள், முன் முடிவுகள், எதிர்பார்ப்புகள், அபிப்ராயங்கள் அடிப்படையிலேயே இருக்கிறது. அதிலிருந்து வெளி வந்து நம்மை பரிணாமத்தில், சித்தத்தில் முன்னேற உதவும் காரணிகள் எவை என்பதை பற்றிய விழிப்புணர்வு நமக்கு அவசியம் தேவை அப்படிப்பட்ட விழிப்புணர்வை குறைந்த பட்சம் கொண்டு வர வேண்டிய இடங்கள்.
- subconsious -லிருந்து conscious -க்கு falsehood -படி செயல் பட வைக்கும் காரணிகள் எது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு
- subconsious -க்கும் conscious -க்கும் வெளியே நடப்பவைக்கும் உள்ளே நடப்பவைக்கும் நடுவே உள்ள inner -outer correspondence பற்றிய விழிப்புணர்வு.
- நம் personality subconscious -superconscious -ஐ ஒட்டி எப்படி organise ஆகி இருக்கிறது என்னும் விழிப்புணர்வு.
- surface conscious -ஆல் செய்யப்பட்ட தவறுகளை, அதே நிலையில் இருந்து சரிப்படுத்த முடியாது உள்ளே செய்ய வேண்டும் என்னும் விழிப்புணர்வு
- நாம் பிரம்மத்தை நோக்கி முன்னேறுவது என்பதை விட பிரம்மம் நம்மை நோக்கி வர வேண்டும் அது நம்மில் வெளிப்பட வேண்டும் என்னும் விழிப்புணர்வு.
- மேலே சொன்னவற்றிலெல்லாம், நம் மனம், உணர்வு , உடல் ஒவ்வொரு கணமும் என்ன பதில் சொல்கிறது என்பதில் விழிப்புணர்வு.
- எல்லாவற்றுக்கும் மேலாக நம் ஆன்மாவே நம் மிகப் பெரிய பலம் என்னும் விழிப்புணர்வு .
சிலருக்கு அன்னையிடம் வந்து பிரார்த்தனை செய்துக் கொண்டிருந்தாலும் அவர்களுடைய பிரச்சனை தீராமல் நீண்டுக் கொண்டே போகிறது. ஏன் பலனில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு பின்னால் உள்ள subconscious உண்மைகளைப் பார்ப்பது அவசியம்.
ஒரு வியாதி குணமாக வேண்டும் என்று ஒரு அன்பர் பிரார்த்தனை செய்தார். தலைவலி, வயிற்று வலி எதுவானாலும் இருக்கலாம். அது சில நாட்கள் இருக்காதே தவிர மீண்டும் மீண்டும் வரும். காரணம் அதன் மேல் அவருக்குள்ள பிரியம், அப்போது அவரின் சுய பச்சாதாபமும், மற்றவர்கள் அவர் மேல் காட்டும் attention – குறிப்பாக கணவர் அந்த சமயங்களில் அருகிலேயே இருப்பதும் பணிவிடை செய்வதும் அவருக்கு ஆழ்மனதில் பிடித்திருந்தது. அதனால் வலி அவரை விட்டு நிரந்தரமாகப் போகவில்லை. சண்டை சச்சரவுடன் இருந்த குடும்பத்தில் அன்னையிடம் பிரார்த்தனை செய்த பிறகு அமைதி வந்தது. சில நாட்கள் கழித்து என்ன இது வீடு வீடாக இல்லையே யாருடைய வீடு மாதிரியோ இருக்கிறது. ஒரு சண்டை இருந்தால் தான் வீடு கலகலப்பாக இருக்கிறது என்றார். வந்த அமைதி போய் விட்டது. பேய் என்றாலும் அதோடு பழகிவிட்டால் அதை பிரிவதில் துன்பப்படுவது மனிதனின் சுபாவம் என்று கூறி ஏராளமான உதாரணங்களை கர்மயோகி அவர்கள் எழுதியிருக்கிறார்.
அதனால் ஒவ்வொரு கணமும் நம் மேல் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு பின்னால் உள்ள ஆழ்மன எண்ணங்கள் என்ன என்பதைப் பார்த்தால் நாம் பெற நினைத்த ஆனந்தத்தைப் பெற முடியும்.
இறைவன் தன்னைத் தானே மறைத்துக் கொண்டு பின் வெளியே வரும் ஆனந்தத்தை அனுபவிக்கிறான் என்றால் ஒரு உருவமாக அல்ல – அஞ்ஞானத்திலிருந்து ஞானத்திற்கு வருவதை தனி மனிதனில் இறைபண்பாக வெளிப்படுவது அவனுக்கு ஆனந்தமாகிறது.
இந்த தத்துவங்கள் எல்லாம் நமக்குப் புரியாத போது நடைமுறைக்காக நம் பிரம்மம் , நம் பிரபஞ்சம் எல்லாம் அன்னைத் தான் என்றுக் கொள்ளலாம்.நம் அஞ்ஞானம் எது என்று நமக்குத் தெரியாத போது இறை பண்புகள் என்பதை அன்னை விரும்பும் பண்புகள், அவர் Symbol -லில் இருக்கும் படைப்புக்கான பண்புகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அதை நம் வாழ்வில் வெளிப்படுத்தினால் நம்முள் உள்ள அன்னை வெளியே வருகிறார். ஆனந்தப்படுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். அது தான் நம் Destiny – உலகமே அந்த பண்புகளை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்பது புரியும். அது முதல் நிலையில் goodness – நம்மைப்போலவே வளமுடன் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பிக்கிறது. நம் பார்வையை சற்றே விரிவுப்படுத்தி பார்ப்பதே அதற்கு வழி. அது அகந்தையின் பிரித்துப் பார்க்கும் பார்வையில் இருந்து வெளியே வரும் வழி. It is seeing the multiplicity by seeing its oneness.நம்முடைய பிரபஞ்சம், நம் உலகம் என்பது முதல் நிலையில் நம் வாழ்வு தான் என்னும் போது அது உணர்வுகளால் கட்டமைக்கப்படுகிறது. அறிவு பூர்வமாக செயல்படுவதாக நினைத்தாலும் நன்றாக கவனித்துப் பார்த்தால் அதை வழி நடத்துவது உணர்வே என்பது புரியும். அந்த உணர்வுகளை நிர்ணயிப்பது நம் பண்புகள். பண்புகள் மூலம் மனிதன் தெய்வமாகலாம் என்னும் தத்துவம் இதில் பொதிந்துள்ளது. உடலுக்கு, பிராணனுக்கு உள்ள பண்புகள் வாழ்வில் ஆனந்தமடைய வைக்கும். மனதிற்கும், ஆன்மாவிற்கும் உள்ள பண்புகள் இறைவனாக்கும்.
உதாரணமாக சமூகம் நம்மை எப்படி தொடுகிறது என்பதைக் கவனிப்போம். பழக்கம், சட்டம், பண்பாடு, என்று நம்மைத் தொடுகிறது. அதை மீறினால் சுமுகக் குறைவு ஆகிறது அல்லது தண்டனை கிடைக்கிறது. பின்பற்றாவிட்டால் நம்மை கட்டாயப்படுத்தி பின்பற்றச் சொல்கிறது. நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் நம்மை ஒதுக்குகிறது. நாம் சமூகத்தை ஒட்டி இருக்கிறோம் என்பது சமூத்தின் பண்புகளால் நிர்ணயிக்கப்படுகிறது.
அதே போலத் தான் பிரம்மத்தின் பண்புகள் நம்மைத் தொடுகின்றன. நாமே பின்பற்றினால் எளிது. மீறினால் தண்டனை அல்லது வாழ்வின் சட்டமாக கட்டாயப்படுத்தி பின்பற்ற வைக்கிறது. அந்த சூழ்நிலையை கவனித்தால் அது தான் நம் Destiny என்பது புரியும்.
அது போல தனி மனித அடையாளத்தை கவனித்தாலும் அவன் பண்புகளினாலேயே அறியப்படுகிறான். ஒரு மனிதன் வெளியில் வேலைக்காரன் என்றால், அவனை புரிந்துக் கொள்வது – நல்ல வேலைக்காரன், திறமையான வேலைக்காரன், சுறுசுறுப்பான வேலைக்காரன், விசுவாசமான வேலைக்காரன், செம்மையாக செய்யும் வேலைக்காரன் என்று அவன் வெளிப்படுத்திய பண்புகளினாலேயே நாம் புரிந்துக் கொள்கிறோம் . நல்ல அம்மா, பண்பான அம்மா, கெட்டிக்கார அம்மா, கண்டிப்பான அம்மா- என்று எதை ஆராய்ந்து பார்த்தாலும் நம் திறமை ஒரு பண்போடு சம்மந்த படும்போதுதான் அது முழுமை பெறுகிறது-நம்மை அறியமுடிகிறது. நல்லது, புண்ணியம் என்று நம்மில் விதைக்கப்பட்டது அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அது ஒரு நல்ல பண்பு அல்லது குணத்தோடு சம்மந்தப்பட்டு இருப்பது தெரியும்.
இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பார்ப்போம்.
இது முடிந்த பிறகு 20 வழிகள் பற்றிய கட்டுரைகள் தொடரும்.