இந்த தலைப்பை எடுத்துக்கொண்டு என் வாழ்வை ஆராயும் பொது Destiny of the Individual என்னும் அத்தியாயம் அதிகமாக பொருந்தி வருவதை காண்கிறேன். அதன் அடிப்படையில் இந்த சத்தியத்தில் பகவான் கூறுவதை தனி மனிதனின் விதி அல்லது தனி மனிதனின் வாழ்வு செல்லும் பாதை என்று நேரடியாக மொழி பெயர்க்க முடிந்தாலும் மனிதனுக்கு (ஜீவாத்மாவிற்கு) இறைவன் வகுத்த வழி என்று மொழி பெயர்க்கிறார் கர்மயோகி.
அப்படி என்ன தான் இறைவன் வகுத்திருக்கிறார் என்று பார்க்கும் போது எல்லா ஆராய்ச்சிகளும் எங்கும் இருப்பது பரம்பொருளே, அவனன்றி, அவன் விருப்பம் இன்றி எதுவும் நடப்பதில்லை என்பதை உணர்வதைத் தவிர மனிதனுக்கு வேறு வழி இல்லை என்னும் ஞானத்தில் வந்து முடிகிறது. அதை உணர்வது தவிர , அந்த ஞானத்தை பெறுவது தவிர வேறு வேலை மனிதனுக்கு இல்லை என்பதில் வந்து முடிகிறது. அதற்கு நம் மேலோட்டமான மேல்மன வாழ்வில் surface life -இல் இருந்து சற்றே ஆழத்திற்குச் சென்று பல நிலைகளையும் தொட்டு ஆன்மாவிற்கு வந்து ஆன்மீக அனுபவங்களை பெற்று ஒரு ஒன்றுபட்ட உயர்ந்த சித்தத்திற்கு வந்து – unitarion consciousness, பிரம்மத்தின் முழு பரிணாமத்தை உணர்வதே அந்த வழி. அந்த வேலை என்று அதன் விளக்கத்தை பெற முடிகிறது.
அதாவது மனிதன் எதோ ஒரு இறைவனின் நோக்கத்திற்காக இறையானந்தத்திற்காக செயல்படுகிறான். அதுவே அவனது பிறப்பின் குறிக்கோள் – அதுவே அவன் செயல்பாடுகளின் விதி, அது பிரபஞ்சத்தில், வாழ்வில் பண்புகளாக வெளிப்படுகிறது. மனிதனுக்கு சட்டங்களாக விதிக்கப்படுகிறது. அதன் மூலம் மனிதன் சித்தத்தில் முன்னேறுகிறான். தத்துவமாக அதை விளக்க பிரம்மம் , பிரபஞ்சம், தனி மனிதன் என்னும் மூன்றையும் எடுத்துக்கொண்டு பிரம்மம் தன் ஆனந்தத்திற்கு பிரபஞ்சத்தை களமாகவும் தனி மனிதனை கருவியாகவும் பயன்படுத்துகிறது என்று எடுத்து கொள்ளலாம். .இதைப் பற்றி மேலும் புரிந்துக்கொள்ள இந்த அத்தியாயத்தின் முக்கியமான கருத்தான “வாழ்வின் பண்புகளில் பிரம்மம் தன்னை வெளிப்படுத்துகிறது” என்பதை எடுத்து கொள்ளலாம். நடைமுறைக்கு வாழ்வில் இறைவனைப் பூர்த்தி செய்வது ஒன்றே மனிதனின் செயல் என்று எடுத்து கொள்ளலாம்.
அதை எப்படி செய்வது. ஒரு formula -வாகச் சொல்ல வேண்டுமென்றால் அதாவது integral vision -பிரம்மத்தின் பார்வையை நாம் எப்படி கொண்டு வர முடியும் என்றால் மனிதனின் அடிப்படை ஆர்வங்கள்ள, சாகா வரம், முன்னேற்றம், ஆனந்தம், போன்ற ஆர்வங்களை எப்படி அடைய முடியும் என்றால் இழை இழையாக உள்ளே சென்று ஆன்மாவைத் தொட்டு அதனுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அதன் பார்வையில் பார்க்க வேண்டும். அதாவது பிரித்துப் பிரித்தே எதையும் அறிந்துக்கொள்ளும் அகந்தையின் பார்வையில் இருந்து , அறியாமையின் பார்வையிலிருந்து அதன் மூலமாக ஒப்பீடு, அனுபவம், முன் முடிவு, அபிப்ராயங்கள் மூலம் மட்டுமே செயல்படும் மனதிலிருந்து வெளியே வந்து அதிமனப்பார்வையில் supramental view -வில் பார்த்து அந்த ஒருமையை ஆன்மா மூலம் அதன் பண்புகள் மூலம் வாழ்வில் கொண்டு வருவது என்பதே அந்த fomula . அது one and many, many in one , one in many , நானும் மற்றவர்களும் என்று இருப்பதிலிருந்து, எல்லோரும் என்னுள் என்று ஆகி, நான் எல்லோருள்ளும் இருக்கிறேன் என்று மாறி அப்படியென்றால் எல்லாமும் ஒன்றே என்னும் ஞானத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
தத்துவத்தை புரிந்து கொள்ள மீண்டும் சொல்கிறேன். Transcendent பிரம்மம் ஒரு ஆனந்தத்தை அனுபவிக்க தானே பிரபஞ்சமாகிறது. அது புரியவில்லை. பொருத்திப் பார்க்க முடியவில்லை என்றால் அது பிரபஞ்சத்தை படைத்ததாக எடுத்துக்கொள்வோம். இன்னும் புரியவேண்டுமென்றால் நமக்கு நம் வாழ்வே நம் உலகம். அதனால் நம் வாழ்வை படைத்தது என்று எடுத்துக்கொள்வோம். அந்த வாழ்வே பிரம்மம் தன்னை வெளிப்படுத்தி கொள்ள உள்ள களம். அது எப்படி வேண்டுமானாலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். அவற்றுள் எல்லாம் இருக்கும் ஒரு ஒற்றுமையை இறைத்தன்மையை பார்க்க செயல்படும் கருவியாக இருக்க படைக்கப்பட்டவன் மனிதன். அப்படி பார்க்கும் கண்ணாகப் படைக்கப்பட்டது ஆன்மா. அந்தப் பார்வை ஞானத்திற்காக இருக்கும் போது அது ஆன்மாவின் பார்வையாகவும், அஞ்ஞானத்துள்ளே இருக்கும் போது அகந்தையின் பார்வையாகவும் இருக்கிறது. அதாவது உயர் சித்தத்தின் பார்வையில் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது , இணக்கம், ஒருமை என்று படுவது அகந்தையின் பார்வையில் பிரிவினை, வேறுபாடு என்று தெரிகிறது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் தனி மனிதனே இந்த பிரபஞ்சத்தின் மையமாக இருந்து பிரம்மத்தில் ஆனந்தத்தை பூர்த்தி செய்கிறான்.
ஆனந்தம் ஆனந்தம் என்று சொல்லும் போது அதை எப்படி புரிந்துக் கொள்வது. நாம் negative விஷயங்கள், துன்பம், சோகம், வலி என்று நினைப்பை கூட உண்மையில் ஆனந்தமே என்றாலும் அந்த அளவிற்கு போகாமல், மேலோட்டமாக பார்த்தால், Mother Symbol -லில் இருக்கும் 12 அம்சங்கள் அதன் படைப்பிற்கான கருவிகள் என்றால் அதை வெளிப்படுத்தும் பண்புகள் பிரம்மத்திற்கு ஆனந்தம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
அப்படிப்பட்ட ஒரு நோக்கத்தை intention -ஐ Real Idea என்று எடுத்துக்கொள்ளலாம். Sat -Chit -Ananda -மாக existence , conscious force, Delight என்னும் மூலமாக இருக்கும் அது, தனக்குத் தெரிந்த பல ஆனந்தத்தை சத்தாகவும், அதிலிருந்து ஒன்றை எடுத்துக் கொள்வதை அதன் சித்தமாகவும், அதன் மூலம் அது ஆனந்தத்தை அனுபவிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுத்துக் கொள்ளும் போது அதற்கு Symbol -லில் உள்ளது போல பல manifesting aspect – படைப்பாற்றல் இருந்தாலும் ஏதோ ஒன்றை எடுத்துக்கொள்கிறது – உதாரணத்திற்கு சித்தத்தில் unity என்பதை எடுத்துக் கொள்வதாகக் கொள்வோம். அதுவே அதன் real idea -வாக இருந்தால் அதன் வெளிப்பாடு – harmony – சுமுகம்.
இந்த கட்டுரையின் அடுத்த தொடர்ச்சியில் சில உதாரணங்களை பார்க்கலாம்.