Share on facebook
Share on telegram
Share on whatsapp

நேர்மறையும் எதிர்மறையும் ஒரே உண்மையின் இரு பக்கங்கள் – 2

அடுத்தது குழப்பமும் ஞானமும் ஒரே விஷயத்தின் இரு பகுதிகள் என்பதைப் பார்ப்போம்.  குழப்பம் என்பதை கர்மயோகி அவர்கள் அழகாக விளக்குகிறார் .  நம் அபிப்ராயங்கள், நம் எதிர்பார்ப்புகள், முன் முடிவுகள் தன் அறியாமையை தன்  rigidity  வளையாத தன்மையை அல்லது விறைப்பை  விட்டுக் கொடுக்க தயாராகும் ஒரு நிலை அது என்கிறார்.  இந்த குழப்பம் பல முறை வரும் போது ஒரு ஞானம் அதிலிருந்து வரும் என்கிறார். 

உதாரணமாக  எரிச்சல் என்பதை எடுத்துக் கொள்வோம்.  அது ஒரு அறிவின் குழப்பம்.  நம் மனப்பான்மை, அபிப்ராயம், முன் முடிவுகளை வைத்து ஒரு விஷயத்தை, ஒரு சூழலை, ஒரு மனிதனை புரிந்துக் கொள்ள முடியாத போது அல்லது நம் எதிர்பார்ப்புகளுக்கு  மாறாக அவை இருக்கும் போது நம் அறிவு  அடையும் குழப்பமே எரிச்சல்.  இரண்டு முறை எரிச்சலுக்கு பிறகு அல்லது அது தந்த வாழ்வின் மறுமொழிக்கு பிறகு அல்லது ஒரு படிப்பினைக்கு பிறகு  நாம் ஒரு புது அறிவைப் பெறுகிறோம்.  புது ஞானத்தைப் பெறுகிறோம். அடுத்த முறை அதே விஷயத்திற்கு நமக்கு குழப்பம் வருவதில்லை.

அதே போல ஏமாற்றம், சோகம் என்பது உணர்வின் குழப்பம் – நம் உணர்ச்சியில் இருக்கும் rigidity உடைந்து வலியாக வரும் போது ஒரு அறிவைப் பெறுகிறோம். 

அதே போல ஒரு பொருளை ஒழுங்காக வைக்க முடியாதது, பொருட்களை பிடியில் இருந்து தவற விடுவது, கீழே போடுவது, ஒழுங்காக மூடி வைக்க முடியாதது, நடக்கும் போது  பொருட்கள் மேல், அல்லது ஆட்கள் மேல் இடித்துக் கொள்வது உடலின் குழப்பம்.  அறிவிலிருந்தும், உணர்விலிருந்தும் தனித்து விடப்பட்ட உடலின் குழப்பம் அது.  சில காயங்கள், சில தொலைப்புகள், சில உடைத்தல்களுக்கு  பிறகு உடல் அறிவைப் பெறுகிறது.  இன்னும் ஆழமாகப் போனால் cell -களின் குழப்பமே வியாதி, cell -களின் அறிவு ஆரோக்கியம் என்கிறார்.

அப்படியானால் நாம் குழப்பத்தின் பின்னால் உள்ள அறிவை ஞானத்தைப் பெற வேண்டுமென்றால் நாம் alert -ஆக conscious -ஆக இருக்க வேண்டும்.  மனக் குழப்பத்திற்கு பின்னால் இருப்பது ஒரு விஷயத்தைப் பற்றிய தெளிவின்மை.  தெளிவு முன்னேற்றத்தை தரும்.  உணர்வில் குழப்பத்திற்கு பின்னால் இருப்பது sorrow -சோகம், மனச்சோர்வு  (depression ), fear பயம்.  இந்த மூன்றுக்கும் பின்னால் இருப்பது இழப்பை பற்றிய பயம்.  அறிவு அதன் தெளிவை தரும். அது ஞானம் எனப்படும். .

உடலின் குழப்பத்திற்கு காரணம் மனமும் உணர்வும் தொடர்பில்லாத ஒரு ஜட நிலை.  அதைப் பற்றிய தெளிவு அதை மாற்றும்.  குழப்பம் பரிணாம முன்னேற்றத்திற்கு ஒரு அருமையான கருவி. ஏனென்றால் குழப்பம் வருவதற்கு காரணம் நம் அபிப்ராயங்கள், முன் முடிவுகள், விருப்பங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் மீதான பற்றும் அதன் நியாயப்படுத்துதலும் மனதில் அதன் கட்டமைப்பும் (justification and mental structures) உடைந்து நொறுங்கும் இடங்கள் . நம்மை நாம் உறுதிப் படுத்த முடியாத இடங்கள். பரிணாமத்தில் முன்னேற அதுவே முக்கிய தேவை என்பதால் பூரண யோகத்தின் நோக்கமும் அதுவே என்பதால் அது பிரம்மம் ஜனிக்கும் இடம்.  ஒரு தெளிவுக்கு அல்லது ஒரு முழுமையை அடைய வேண்டிய நிலைக்கு முந்தைய நிலை என்பதால் அது unformed intelligence உருவம் பெறாத ஞானம் என்கிறார் கர்மயோகி .  அது அகந்தை உடையும் இடம்.  நம் அறிவு, அனுபவம், திறன், திறமை ஆகியவை தோற்கும் இடம் என்பதால் நாம் அறிந்ததை விட வேறு ஒன்று உண்டா என்று நினைக்க வைக்கும் இடம் என்பதால் அது ஞானத்திற்கான இடம்.

Mental-லில் குழப்பம்  புது கருத்து , புது படைப்புத் திறன், new idea and creativity -க்கு வழி வகுக்கிறது.

Vital -லில் குழப்பம் சுமூகத்திற்கு , ஒத்துழைப்புக்கு, கூட்டுறவுக்கு வழி வகுக்கிறது.

Physical -லில் குழப்பம் சுத்தம், ஒழுங்குக்கு வழி வகுக்கிறது.

நம் சராசரி வாழ்க்கை – பழக்கங்கள், நம்பிக்கைகள், அபிப்ராயங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை குடும்பம், பண்பாடு, சமுதாயத்தை ஒட்டி அமைத்துக் கொண்டு நடக்கிறது.  அதே நிலையில் ஜடமாக செய்ததையே செய்துக் கொண்டு இருக்கும் போது ஜீவனற்று இருக்கும் போது நமக்கு எந்த குழப்பமும் வருவதில்லை .  அதிலிருந்து வெளியே வர நினைக்கும் போது வரும் பயம், அடுத்த நிலைக்கான தெளிவின்மை, குழப்பமாக வெளிப்படுகிறது.

அன்னைக்கு மனமாற்றமே முக்கியம் என்னும் போது மரபிலிருந்து அது மாறுவதால் குழப்பம் வருகிறது.  அது பற்றிய தெளிவு வளத்தை தருகிறது.  Business Management -யில் நமக்கு குழப்பம் வரும் இடங்களை – மனிதர்கள், பழக்கங்கள், மனப்பான்மை, நோக்கம், அபிப்ராயம், முன் முடிவுகள், சுக வசதிகள் (comfort zones )  எதிர்பார்ப்புகள் என்னும் எட்டு கண்ணோட்டத்தில் பார்த்தால் – அவற்றில் தெளிவு கிடைத்தால், அந்த தெளிவு ஞானமாக மாறினால் குறைந்த பட்சம் இரண்டு மடங்கு லாபம் நிச்சயம்.  பத்து மடங்கு நூறு மடங்கு கூட வரும் என்கிறார்.  அதை விட அவற்றை அன்னையின் பார்வையில் அன்னை விரும்பும் பண்புகளின் பார்வையில் பார்த்தால் , நாம் பெற வேண்டிய குணங்கள், திறமைகள், மனப்பான்மை நமக்குப் புரியும்.  அது ஒரு முழுமையான ஞானத்தைத் தரும்.

இவற்றில் உள்ள ஒற்றுமை என்னவென்றால் எப்போதெல்லாம் lower குழப்பத்தில் இருக்கிறதோ, அப்போது அது ஒரு higher knowledge -ஐ தேடுகிறது.  வேறு விதமாக சொல்வதானால் ஒரு புது ஞானம் நம்மை நோக்கி வரும் போது அது குழப்பமாக தெரிகிறது.  அதாவது குழப்பமும் ஞானமும் ஒரே நிகழ்வின் இரு பக்கங்கள்.

மூன்றாவதாக பிரச்சனையும் வாய்ப்பும் ஒரே நிகழ்வின் இரு பக்கங்கள் என்பதைப் பார்ப்போம்.

பிரச்சனை என்பதற்கு கர்மயோகி அவர்கள் தரும் விளக்கம் என்னவென்றால்  மனிதன் பெற வேண்டிய அறிவை, வாழ்வு அனுபவமாகத் தருவதை நாம் பிரச்சனை என்கிறோம்.  நம்முடைய விருப்பம் நிறைவேறாதது மட்டுமே நமக்கு பிரச்சனையாகத் தெரிகிறது.  வேறெதுவும் பிரச்சனையாகத் தெரிவதில்லை.  அதனால் அதன் பின் உள்ள முன்னேற்றத்திற்கான பாதை நம் கண்ணுக்கு தெரிவதில்லை.  உண்மையில் பெரும்பாலானோர் வாழ்வு பிரச்சனையில் தான் organize செய்யப்படுகிறது.  உதாரணமாக சொந்த தொழில் செய்ய ஆசை இருந்தாலும், இப்போதுள்ள வசதி நிலைக்க வேண்டும், loan , EMI  கட்ட வேண்டும் என்பதற்காக சம்பளம் தரும் வேலையிலேயே நீடிப்பவர், தாய் தந்தையரை கவனிக்க வேண்டும் என்பதற்காக transfer , promotions , புது வேலை மாற்றம் எதுவும் வேண்டாம் என்று இருப்பவர், பெண்ணுக்கு திருமணம் செய்யும் வரை, பையன் படிப்பு முடியும் வரை என்று இருப்பவர், 60 வயதுக்கு மேல் தான் ஆன்மீகம் என்று இருப்பவர் அனைவரது வாழ்வும் பிரச்சனையில்  தான் organize செய்து கொண்டு இருக்கிறது என்பது அவர்களுக்கு  புரிவதில்லை.  உண்மையில் மறைவாக அந்த பிரச்சனையை அவர்கள் ரசிக்கிறார்கள் என்று பொருள்.  அவர்கள் செய்வது எல்லாம் infinity -ஐ finite ஆக்குவது தான் என்பது அவர்களுக்கு புரிவதில்லை.  Business -இல் market பிரச்சனை, quality பிரச்சனை ,  labour பிரச்சனை அல்லது competitor -ஓ தான் நம்மை organize செய்கின்றனர் , தானாக மாறும் இடங்களில், முன்னேற்றத்தை நினைக்கும் இடங்களில் இவைதான் இருக்கின்றன என்பதை நன்றாக கவனித்துப் பார்த்தால் புரியும்.

பிரச்சனையில் நாம் organize ஆவது புரியாதது மட்டுமல்ல, நம்மை நாமே மதிப்பிட்டு கொள்வது என்பது மற்றவர்களின் பிரச்சனைகளை ஒப்பிட்டே.  மற்றவர்களை விட பிரச்சனைகள் குறைவாக இருந்தால் நாம் நன்றாக வாழ்வதாக பொருள் கொள்கிறோம்.  நம் முன்னேற்றத்தை, நமக்கு வரும் வாய்ப்புகளை வைத்து நம்மை மதிப்பிடுவதில்லை.  அதனால் வாய்ப்பு பிரச்சனைகள் ரூபத்தில் வந்திருப்பது புரிவதில்லை.

இங்கெல்லாம் முன்னேற்றம், வாய்ப்பு என்னும் அடுத்த பக்கத்தைப் பார்க்க வேண்டும் என்றால் aspiration for the ideal is the key – ஒரு நல்ல கொள்கை மேல் ஆர்வம் கொள்வதே வழி என்கிறார்.  சில மாதங்களுக்கு முன் ஒரு Business Consultant -ஐ பார்த்தேன்.  Business எப்படி போய் கொண்டிருக்கிறது என்று கேட்டார்.  பெரிய பிரச்சனைகள் இல்லாமல் சீராகப் போய் கொண்டிருக்கிறது என்றேன். சிரித்தார்.  அப்படி என்றால் நீ level off ஆகிறாய் என்று பொருள்.  அதே இடத்தில்  நீ நன்றாக இருப்பதாய் நினைத்தாலும் மற்றவர்கள் ஓடிக் கொண்டு இருப்பதால் சில காலங்களுக்குப் பின் நீ பின்தங்கி விட்டது தெரியும் என்றார்.  எனக்கு குழப்பம் வந்தது.  எப்படி என்று கேட்டேன். சமீபத்தில் உனக்கு பிரச்சனை என்று சொல்ல முடியாவிட்டாலும், எரிச்சல், பதட்டம் வந்த சம்பவம் இருந்தால் சொல் என்றார்.

Business -இல் அது தினமும் இருப்பது தான்.  Material சரியான நேரத்துக்கு வராது, எவ்வளவு திட்டம் போட்டு வேலை செய்தாலும் அது எப்போதும் இருக்கும்.  ஆனால் Business -இல் contractor -க்களுக்கு இது சகஜம் தான்.  தினமும் தயாரிப்பாளருக்கும் transporter-க்கும் phone போட்டு tension ஆவது சகஜம்.  அதனால் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை  என்றேன்.  இந்த மாதிரி ஒன்றை எடுத்துக் கொண்டு அதன் பின்னால் ஏதாவது முன்னேற வாய்ப்பு இருக்கிறதா என்று பார் என்றார்.

அப்போது நான் ஒரு மருத்துவமனைக்கு சுத்தத்திற்கான clean room coating contract ஒன்று செய்துக்  கொண்டிருந்தேன்.  அவர்கள் கேட்ட product -ஐ  தான் போட்டு செய்ய வேண்டும் என்று சொன்னதால் வேறு எதுவும் யோசிக்கவில்லை.  அது Goa வில் இருந்து வர வேண்டும் என்பதால் எப்போதும் பிரச்சனையாக இருக்கும்.  அதற்கு இணையான product -ஐ சென்னையிலேயே கிடைக்கும் என்று அந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் எடுத்துச் சொல்லி சம்மதம் வாங்க முயன்றேன்.  அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.  அதற்கு மேல் வாய்ப்பை எப்படி பார்ப்பது என்று தெரியாததால் விட்டு விட்டேன்.  ஒரு வாரம் கழித்து அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது.  மந்திரி மருத்துவமனை திறக்க ஒப்புக் கொண்டுள்ளார்.  உடனடியாக நீங்கள் சொன்ன அந்த material -லே போட்டு சீக்கிரம் முடித்துக் கொடுக்க முடியுமா என்று கேட்டனர்.  அப்படியே முடித்துக்  கொடுத்தேன்.  ஏற்கனவே போட்ட பொருளை விட இதில் லாபம் அதிகம் கிடைத்தது.

இப்படி வாழ்வில் சாதாரணம் என்று நினைக்கும் இடங்களுக்குப் பின்னாலும் வாய்ப்பும் முன்னேற்றமும் உள்ளது.  அதே போல நம் Business -ஐ market -உம் competitor -உம் தான் முடிவு செய்கிறார்கள். ஏன் நம் rate -ஐ கூட அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள்.  அதை பிரச்சனையாக நாம் பார்ப்பதில்லை.  Business என்றால் அப்படி தான் என்று நினைக்கிறோம்.  அதை பிரச்சனையாக எடுத்துக் கொண்டு competitor  நாம் முன்னேற உதவும் நண்பர், மார்க்கெட்டை நம்மை நோக்கி வர வைக்க, product -ன் பார்வையில், customer -ன் பார்வையில், தொழிலாளர்களின் பார்வையில் பார்த்தால் அது முடியும் என்று பல உதாரணங்களை consciousness approach to management , Development Theory போன்ற கட்டுரைகளில் கர்மயோகி அவர்கள் அதிகம் எழுதி இருக்கிறார்.

நாம் வளர்வதை, முன்னேற்றம் அடைவதை நிறுத்த விரும்பினால் தான் பிரச்சனைகள் வருகிறது.  அதை நாம் contented life  – உள்ளதை வைத்து திருப்தி பட்டுக் கொள்ளும் வாழ்க்கை தத்துவத்திற்குள் பொருத்தி, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வோம்.  அதனால் தான் ஒரு பிரச்சனை என்று வரும் போது , நடத்தை, பழக்கங்கள், மனப்பான்மை, நோக்கம், அபிப்ராயம், முன் முடிவுகள், சுக வசதிகள், எதிர்பார்ப்புகள் என்று எட்டு திக்கிலும் ஆராய்ந்தால் பிரச்சனையும் மறுப்பக்கமாகிய வாய்ப்பும் முன்னேற்றமும் தெரியும்.

கடந்த கால சமர்பணத்தைக்  கூட பொதுவாக நடந்ததை சொல்லாமல் இந்த சுபாவத்தின் முக்கியமான எட்டு  வெளிப்பாடுகளின் கண்ணோட்டத்தில் பார்த்து நம்மை, நம் personality -ஐ  புரிந்துக் கொண்டு அந்த personality -ஐ சமர்ப்பணம் செய்வது அதிக பலன் தரும்.  Live the emotion. It will achieve instantaneously என்கிறார்.  அன்றைய உணர்வை  இன்று கொண்டு வர முடிந்தால் அது தவறென்று அதே intensity -யோடு தீவிரத்துடன் சமர்ப்பணம் செய்ய முடிந்தால், வினாடியில் அது மாறும் என்கிறார்.  வாய்ப்பு உருவாகும் விதமும் அது தான்.

 அதற்கு முன் இறைசக்தியை  உணர வேண்டுமானால்  , பிரச்சனையான நேரங்களில் முதலில் செய்ய வேண்டிய விஷயங்களாக அவர் சொல்வது

-Falsehood-ஐ  விலக்கி சத்தியத்தை மட்டுமே செய்வது.

– உண்மையை மட்டுமே பேசுவது

– சிறிய குறுகிய கால ஆதாயத்தை விட்டு நீண்ட கால லட்சியத்தை ஏற்பது.

அது அன்பரிடம் எப்படி வெளிப்படவேண்டும் என்றால் அன்னை எப்போதும் உடன் இருக்கிறார் என்று உணர்வது, அவருக்காகவே வாழ்வது, அவர் விரும்புபவரையே விரும்புவது, அவர் விரும்பும் பண்புகளையே வெளிப்படுத்துவது, பொய்யையும், பொய்யின் வடிவங்களையும், பொய்யான செயல்களையும், நண்பர்கள், உறவுகள் உருவில், சமூகத் தேவை என்ற பெயரில் ஏற்றுக் கொள்ளாமல் விலக்குதல், அன்னையை தவிர, வேறு எதற்கும், யாருக்கும், எதுவும் செய்ய சக்தி இல்லாத நிலை என்று வெளிப்பட வேண்டும்.

அப்போது தான் ஒவ்வொரு பிரச்சனைக்கு பின்னும் ஒரு வாய்ப்பும் முன்னேற்றமும் உள்ளது என்பது புரியும் அல்லது பிரச்னையும் வாய்ப்பும் ஒரே நிகழ்வின் இரு பக்கங்கள் என்பது புரியும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »