Share on facebook
Share on telegram
Share on whatsapp

நேர்மறையும் எதிர்மறையும் ஒரே உண்மையின் இரு பக்கங்கள் -1

சமரசம் – இணக்கம்- compromise – reconciliation என்பது லைஃப் டிவைன் ன் முக்கிய கருத்து. அதற்கு அடிப்படை எதையும் பிரித்து பார்க்கும் நம் மனம். அப்படி நாம் பார்ப்பதற்கு காரணம் மனிதனுடைய மனம் குறுகியதாகவும் எதையும் பிரித்தே பார்க்கக்கூடியதாகவும், உள்ள கருவியாக இருக்கிறது. அப்படிப் பார்த்தால் தான் அறிவால் புரிந்துக் கொள்ளமுடியும் என்றாலும் அறிவால் ஒரு முழுமையை புரிந்துக் கொள்ள முடிவதில்லை. முழு உண்மையைக்கூட அது எதிர்மறை ஜோடிகளாகத் தான் பார்க்கிறது. பிறப்பு-இறப்பு, இன்பம்-துன்பம், நன்மை-தீமை, உண்மை-பொய், என்று பிரித்துப் பார்த்து தனக்கு உயர்ந்தது என்று தோன்றுவதே சத்தியம், முழுமை என்று எடுத்துக் கொள்கிறது. இப்படி எதிர்மாறாக தெரியும் விஷயங்களை உயர்சித்ததின் மூலம் பார்த்தால் – இவையெல்லாம் ஒரே உண்மையின் இரு அம்சங்கள் என்பது புரியும்.

மனிதன் இறைவன் ஆக மாறவேண்டும் என்றால் ஆன்மாவையும், ஜடத்தையும் இணைத்து நாம் ஒரு spiritual individual என்னும் ஞானத்தை முதலில் பெற வேண்டும். ஜடம் – உருவம்-Form. ஆன்மா -அதன் சாரம் – essence, பிரச்சனை எங்கே வருகிறதென்றால் நாம் form -மோடு அடையாளப் படுத்திக்கொண்டு essence -ஐ சுத்தமாக மறந்து விட்டோம். அப்படி ஒன்று இருப்பது கூட நினைவில் இருப்பதில்லை. அப்படி பிரிந்த, பிரித்த மனதை நாம் ஒன்று படுத்த வேண்டும். ஒன்று இறைத் தன்மையின் சாரம். மற்றொன்று அதை வெளிப்படுத்த ஏற்பட்ட உருவம் என்று மனம் ஏற்று இரண்டையும் இணைக்க வேண்டும். அதன் மூலம், ஒன்றே பலவாக இருக்கிறது என்னும் சத்தியத்தை உணர வேண்டும். அப்படி உணராததால் அகத்திற்கும் புறத்திற்கும் – மேல் மனதிற்கும் ஆழ் மனதிற்கும் – உள்ள தொடர்புகளை அறிய முடியாமல் பிரித்து விட்டோம். Super Mind -லிருந்து Mind -க்கு இறங்கி விட்டோம். முழுமையை பார்க்கும் அதிமனப்பார்வையிலிருந்து எதையும் பிரித்தே அறியும் அகந்தையின் மனதிற்கு வந்து விட்டோம்.

நாமெல்லாம் வேறு வேறு என்று உணர்வது எளிதாக இருக்கிறது. நாமெல்லாம் ஒருவரே அல்லது ஒன்றே என்று உணர முடியுமா? அந்த மனநிலைக்கு உதாரணம் தர முடியுமா? இரண்டு புறமும் இருக்கும் சத்தியத்தை உணர்ந்த மன நிலை அது. அந்நிலையை உணர்வில் புரிந்துக் கொள்ள இரண்டு உதாரணங்களை கர்மயோகி அவர்கள் தருகிறார்கள். ஒன்று ரயிலில் பயணம் செய்யும் போது நாம் பயணம் செய்வதாக மனம் நினைத்தாலும், அறிவு புரிந்துக் கொண்டாலும் உணர்வு நாம் நிலையாக இருப்பதாகவும், வெளியே தெரியும் மரங்கள், கட்டடங்கள் ஓடுவதாகவும் இருக்கும். அதை கண் பார்த்து நம்பக்கூட செய்யும். ஆனால் அவை நிலையாகத்தான் தான் இருக்கின்றன நாம் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று உண்மையாக உணர முடியுமா? இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் நம்மால் உணர முடிந்தால் – நினைக்க முடிந்தால் அல்ல – உணர முடிந்தால், மேலே செல்ல முடியும்.

இன்னொரு உதாரணம் – chess விளையாட்டை நியாயமாக நாமே இருபுறமும் விளையாடுவதாக இருந்தால், நம் மனம் எப்படி இருக்கும், நம்மை பற்றியும் முழுவதுமாகத் தெரியும், எதிரிலிருப்பவர் சார்பாகவும் நாமே உணர முடியும். அதற்கு தேவையான மனநிலை நமக்குப் புரிந்தால், நாம் ஆன்மாவையும் ஜடத்தையும் இணைக்கத் தேவையானத் தகுதியைப் பெறத் தயாராகி விட்டோம் என்று பொருள். இந்த முயற்சி ஒரு யோக முயற்சி. அது நம்மை மூன்று விதமாக பிரமத்தினுள் கொண்டு செல்ல முடியும்.

இந்த யோக முயற்சியில் சைத்திய புருஷன் வெளியே வந்து அகந்தையின் பிடியில் உள்ள மனிதனை தன் பிடிக்குள் கொண்டு வந்து அவன் வாழ்வை இறைவனை நோக்கி திருப்புவது முதல் நிலை.

சைத்திய புருஷன் தலைமையில் வாழ்வில் இருளை ஒழித்து, அதாவது இருளின் உறைவிடமான செயல்களை, செயல்களின் மேல் உள்ள பற்றை, எதிர்பார்ப்பை, அவற்றின் உறைவிடமான அகந்தையை, சுபாவத்தை, அழித்து அதனடியில் உள்ள பரம்பொருள் வெளியே வந்து ஜடத்தில் ஆதிக்கம் செலுத்துவது இரண்டாம் நிலை.

சைத்திய புருஷனால் நேர்பட்டு இறை நெறியோடு வாழும் சாதகனின் கரணங்களை உடல், உணர்வு, மனதை ஆனந்தத்தால் நிரப்புவது மூன்றாம் நிலை.

நம்முடைய அறிவினுடைய கண்ணோட்டம் குறுகியது என்பதால் எதிரெதிரான விஷயங்கள் உடன்பட்டு செயல்படும் என்பதை நம் அறிவால் ஏற்க முடிவதில்லை. அதனால் பிரம்மமும், அதன் வெளிப்பாடான நாமும் ஒன்றே என்பது ஏற்க முடியாததாக இருக்கிறது. ஆனால் நம் அறிவின் கண்ணோட்டத்தை விட்டு, ஆன்மீக கண்ணோட்டத்தில் அல்லது உயர் சித்தத்தின் கண்ணோட்டத்தில் பார்த்தால் – சச்சிதானந்தமும் அதன் படைப்பும் ஒன்றே என்றும் ஒரே விஷயத்தின் இரு அம்சங்களே என்றும் விளங்கும்.

அதை விளக்க நாகவது அத்தியாயம் சொல்லும் “நேர்மறையும் எதிர்மறையும் ஒரே மெய்மையின் கொள்கைகள்”. The positive and negative are the principles of the same reality என்னும் முக்கிய கருத்தை எடுத்து கொள்கிறேன் .

மேலே சொன்ன இந்த இரட்டை நிலைக்கு காரணம் – படைப்பிற்கு positive -வாகவும் negative -வாகவும் உள்ள இரு energy தேவை. அப்போது தான் அது அஞ்ஞானத்தில் மூழ்கி பிறகு வெளியே வரும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியும். அஞ்ஞானத்தின் மூலம் வரும், அதாவது negative energy மூலம் வருபவை தீமையாக தெரிந்தாலும் உண்மையில் அவை positive energy -ஐ வலுப்படுத்த வந்தவை. அதற்கு உதாரணமாக positive energy யும், negative energy சேரும் போது சுத்த energy யாக மின்சாரமாக, செயல்படும் சக்தியாக வெளிப்படுகிறது. அதற்கு உதாரணம் இந்தியாவில் East India Company -யாக வந்து இந்தியாவை ஆக்கிரமித்த ஆங்கிலேயரைச் சொல்லலாம். அதை தீமை என்று நினைத்தால், உண்மையில் அதன் வெளிப்பாடு என்னவென்றால் அப்போது வெவ்வேறு ஆட்சியின் கீழ் சிதறிக் கிடந்த இந்தியா வேறு எந்த வகையிலும் ஒன்றுபட்டு இருக்காது. ஒன்று பட்ட இந்தியாவாக எதிர்காலத்தில் உலகத்தின் தலைவனாக ஆக முடியாது என்பது தான். ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பும், இந்திய சுதந்திரமும் ஒரே நிகழ்வின் இரு பக்கங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

வேறு ஒரு உதாரணம். வலியும் ஆனந்தமும் ஒரே நிகழ்வின் இரு பக்கங்கள். நமக்கு உடலிலோ உணர்விலோ வலி அவசியம் தேவை என்பதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. உடம்பை காயப்படுத்தும் வேலையை நாம் செய்யும் போது வலி என்னும் உணர்வு தான் நமக்கு எச்சரிக்கை தருகிறது. அதற்கு ஒரு இணக்கத்தீர்வு கண்டுபிடிக்கும் போது ஆரோக்கியம் வருகிறது. வலியே தெரியாவிட்டால் பிரச்சனை பெரிதாகும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு காலில் சுரணை குறையும் போது, காயப்பட்டால், அதை கவனிக்காமல் விட்டால் காலையே எடுக்க வேண்டிய நிலை உருவாகிறது. அதே போல நமக்கு உணர்வில் ஏற்படும் வலிகள் நம்மை பக்குவப்படுத்தி நிதானத்தை நிம்மதியை இன்பத்தை தருகிறது.

அதே போல கட்டுப்பாடும் சுதந்திரமும் எதிரெதிராக தோன்றினாலும், சிந்தித்துப் பார்த்தால் அவை இரண்டும் ஒரே கொள்கையின் இரு பக்கங்கள் என்பது புரியும். தேவையான இடங்களில், தேவையான கட்டுப்பாடுகள் இருந்தால் தான் வாழ்வில் சுதந்திரம் இருக்கும். பள்ளியில், கல்லூரியில் மாணவனின் கட்டுப்பாடு பிற்காலத்தில் வேலை, தொழில், எண்ணங்களில் சுதந்திரம் தரும். அப்படி இல்லாமல் இளம் வயதில் அர்த்தமில்லாத சுதந்திரம், பிற்காலத்தில் பலருக்கும் கட்டுப்பட வைக்கும். கட்டுப்பாடற்ற உணவு பிறகு சில உணவுகளை மட்டுமே சாப்பிடும் நிலைக்கு கொண்டு போகும். இப்படி எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்தால் , negative energy -யும் positive energy -யும் சேரும் போது, அது ஒரு இறை பண்பாக மாறுகிறது. Falsehood ஆன உலகம், சமுதாயம், அகந்தை, நடத்தையிலிருந்து உயர் சித்தத்திற்கு அது ஒரு இறை பண்பாக மாறுகிறது. அதாவது உதாரணமாக falsehood-ஆன இந்த சமுதாய பழக்கத்தில் இருந்து அன்னை முறைக்கு மாற வேண்டுமானால் ஒரு தைரியம் தேவை. அதாவது falsehood -லிருந்து truth -க்கு செல்ல முயலும் போது அது courage என்னும் இறை பண்பாக மாறுகிறது.

இப்படி ஏராளமான உதாரணங்கள் இருந்தாலும், எனக்கு பிடித்தவையாக, புரிந்தவையாக இருக்கும் silence – சும் action -னும் ஒன்றே, குழப்பமும் ஞானமும் ஒன்றே, பிரச்சனையும் வாய்ப்பும் ஒன்றே என்னும் மூன்றை எடுத்துக் கொள்கிறேன்.

மௌனமும் ஞானமும் ஒரே நிகழ்வின் இரு பக்கங்கள் என்று பகவான் சொல்வதை சற்றே மாற்றி மௌனமும் செயலும் ஒரே நிகழ்வின் இரு பக்கங்கள் என்கிறார் கர்மயோகி அவர்கள். எண்ணத்திலிருந்தும், உணர்விலிருந்தும் சுதந்திரம் பெறுவதை அவர் மௌனத்திற்கு விளக்கமாகத் தருகிறார் (Silence is freedom from thoughts and vital movement என்கிறார்).

நாம் வாழ்வில் செய்வதெல்லாம் நம் செயல்கள் actions -ஐ எல்லாம் நம் அறிவுக்கும் உணர்வுக்கும் ஏற்ற நிலையில் நாமறிந்த உயர்ந்த நிலையில் செய்வதாக நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அவை அனைத்தும் reactions -ஏ, எதிர்வினைகளே . நன்றாக யோசித்துப் பார்த்தால் இது புரியும். ஒரு கொள்கையோ திட்டமோ, உறுதியோ இல்லாமல் நம் முன் வரும் விஷயங்களுக்கு ஏற்றார் போல நாம் செயல் படுகிறோம். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர் வரும் மனிதர்களோ, உறவுகளோ, நண்பர்களோ, market -ட்டோ, சமுதாயமோ, சூழலோ தான் முடிவு செய்கிறது. அறிவில் செயல்படுவதாக நினைத்தாலும் சூழலுக்கேற்ற உணர்வாலேயே செயல்படுகிறோம் அல்லது நம் அபிப்ராயங்கள் அனுபவங்களை ஒட்டிய எண்ணங்களாலேயே செயல் படுகிறோம். மௌனத்தின் ஒரு அங்கமான step back, silent will ஆகியவற்றை நாம் முன்னெடுப்பதில்லை. அப்படி எடுக்கும் போது அது தந்த மாற்றத்தை அனுபவித்திருந்தாலும் அதை நாம் கடைபிடிப்பதில்லை. உதாரணமாக நாம் ஒரு பிரச்சனையில் பதட்டத்தில் இருக்கிறோம் என்றால் அன்னையை வேண்டி அமர்ந்தால் அல்லது தியான மையத்தில் அமர்ந்தால் , நம்மை அறியாமலேயே சற்று அமைதி அடைவோம். அந்த நேரத்தில் நமக்கு ஒரு தெளிவு, ஒரு முடிவு கிடைக்கிறது. அல்லது சில சமயம் அந்த பிரச்சனையே கூட தீர்ந்து விடுகிறது . அது எப்படி நடக்கிறது. நம்மை அறியாமலேயே செய்வது அறியாத நிலையில் மௌனத்தை கொண்டு வரும் போது, ஞானம் அல்லது செயல் அதன் மறுபக்கம் என்பதால் அது convey செய்து விடுகிறது. அதுவே செயல்படுத்த படுகிறது. நம் முயற்சி இல்லாமல் முடிந்த காரியங்களை நினைத்துப் பார்த்தால் இது புரியும். காரணம் , நம் அறிவு surface mind. நமக்குத் தெரிந்த surface idea க்களை மட்டுமே நினைக்கும். நினைவில் இருக்கும் அனுபவங்களை மட்டுமே ஆராயும். ஆனால் step back, silent will , silence போன்றவை அந்த முன்னேற்றத்திற்கு, அந்த பிரச்சனைக்கு தேவையான ஞானத்தைத் தரும். அது உள்ளுறை ஞானம். நாம் பேச நினைத்து, சொல்ல நினைத்து, கேட்க நினைத்து அடக்கியதை எதிரில் உள்ளவர் பேசியதையும், செய்ததையும் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட பல அனுபவங்கள் இருந்தாலும் நமக்கு அவை நினைவுக்கு வருவதில்லை. நம் முறைகள், நம் வழிகளே நம் நினைவுக்கு வருகிறது.

ஞானம் அமைதியில் இருக்கிறது . True knowledge can come only from inner silence. பேசுவதிலோ, பேசுவதை கேட்பதிலோ கூட நாம் செய்வது reaction -ஏ . நாம் கேட்பதை கவனித்துப் பார்த்தால், நாம் கேட்பதாக நினைத்தாலும், உண்மையில் நம் கவனம் முழுவதும் எப்போது குறுக்கிடலாம், என்ன பதில் தரலாம் என்பதிலேயே இருக்கும். அதுவும் நமக்கு தெரிந்த விஷயம் என்றால் எதிராளியை பேசவே விட மாட்டோம் – இதை We have only Superficial hearing for superficial expressions என்கிறார்.

அங்கு நம் விருப்பு, வெறுப்பு தான் வெளிப்படுமே தவிர, காரியத்தை சாதிக்க தேவையான சிந்தனை வராது. மனம் அமைதியாக அறிவு மட்டுமே அவர் சொல்வதை ஏற்கும் போது (inward listening) உண்மையான ஞானத்தை வெளிக் கொண்டு வந்து அதற்கு தேவையான energy -யோடு வெளிப்பட்டு செயல்படும் சக்தியாக மாறும். நாமே சிந்திக்கும் போது வெற்றிப் பெற்றதாக நினைக்கிறோம். ஆனால் சூழலை ஜெயிக்க வேண்டுமென்றால் அமைதி, மௌனம், தேவை. அது surface level-லிலிருந்து உள்ளே போய் உயர் சித்ததால் பார்ப்பது, கேட்பது. எண்ணமும் மனமும் அமைதியாகும் போது அது வெற்றிடம் ஆவதில்லை. அது ஞானத்தின் மறு பக்கம் என்பதால் realisation ஆக நிரம்புகிறது. இதை – சுபாவத்திலிருந்து வெளியே வருவதால் ஆன்மா அந்த இடத்தை நிரப்புகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார். ஆரம்பத்தில் முழு அமைதி என்பது முடியாது என்றாலும் அறிவும் மனமும் – தங்கள் அனுபவம், முன் முடிவு, அபிப்ராயம் சொல்வதை கேட்பதிலிருந்து ஆன்மா என்ன சொல்கிறது, உயர்சித்தம் என்ன சொல்கிறது என்று கேட்பதை பழக்கப் படுத்தினால் அமைதி, மௌனம், சிறிது சிறிதாக வளரும். காரணம் அமைதியும் மௌனமும் உயர் சித்தத்தின் பகுதிகள். குறைந்த பட்சம் புறச் சூழல் நம் அகச் சூழலை பாதிக்காத நிலைக்காவது வருவோம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »