நேர்மறையும் எதிர்மறையும் ஒரே உண்மையின் இரு பக்கங்கள் -1
சமரசம் – இணக்கம்- compromise – reconciliation என்பது லைஃப் டிவைன் ன் முக்கிய கருத்து. அதற்கு அடிப்படை எதையும் பிரித்து பார்க்கும் நம் மனம். அப்படி நாம் பார்ப்பதற்கு காரணம் மனிதனுடைய மனம் குறுகியதாகவும் எதையும் பிரித்தே பார்க்கக்கூடியதாகவும், உள்ள கருவியாக இருக்கிறது. அப்படிப் பார்த்தால் தான் அறிவால் புரிந்துக் கொள்ளமுடியும் என்றாலும் அறிவால் ஒரு முழுமையை புரிந்துக் கொள்ள முடிவதில்லை. முழு உண்மையைக்கூட அது எதிர்மறை ஜோடிகளாகத் தான் பார்க்கிறது. பிறப்பு-இறப்பு, இன்பம்-துன்பம், நன்மை-தீமை, […]