பொருள்வாதியாகவும் ஆன்மீகவாதியாகவும் ஒரே வாழ்வில் நாம் இருக்க முடியாதா? – 3
சமர்ப்பணம் செய்தால் Mother தெரிவது, சமர்ப்பணம் செய்தால் வரும் joy போன்றவை எல்லாம் சூட்சுமத்தில் காரியம் நடந்து விட்டதை குறிப்பது. நம் சூட்சும உணர்வுகள் புரிந்துக்கொள்வது. நம் அகந்தை தடையாக இல்லாமல் இருந்தால் கன நேரத்தில் நம் வாழ்வில், அது பலிக்கும். இது நம் consciousness பற்றியது. அதே போல நம் வாழ்வை எடுத்துக்கொண்டாலும் , நாம் நினைப்பது பொல அது physical plane -இல் இல்லை. கர்மா, life response போன்றவற்றை கவனித்தால் அது தெரியும். இது செய்தால் இது நடக்கும் என்பதற்கான physical casualty உண்மை இல்லை என்பது புரியும். சகுனம் அது போன்ற சூட்சும குறியீடு- indication.
ஒரு விஷயத்தை பார்ப்பதற்கு, சூழலை பார்ப்பதற்கு வெறும் ஞானம் போதாது. சூட்சம ஞானம் வேண்டும், சூட்சம பார்வை வேண்டும். சூழல் எதைக் காட்டுகிறது என்பதற்கு சூட்சம பார்வை வேண்டும். என்ன சொல்கிறது என்பதை கேட்க சூட்சம செவி வேண்டும். அதை ஆராய சூட்சம உணர்வு வேண்டும். நாம் – நம் அனுபவம், அதனால் வந்த அறிவு, அதன் சாரம் இவையெல்லாம் சூட்சமமென்று நினைக்கிறோம். அதை பொது புத்தி, விவேகம் என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறோம். அதன் அடிப்படையில் முடிவு எடுக்கிறோம். ஆனால் பெரும்பாலும் தவறாகவே முடிகிறது. காரணம் வாழ்வில் முடிவெடுப்பது – determinants of life – physical அல்ல. சூட்சம சட்டங்கள், அதன் சூட்சம ஆற்றல், அதற்கு ஒரு உதாரணம் life response theory – எண்ணத்தை நோக்கத்தை மாற்றினால் வாழ்வு மாறும், கடந்த காலத்தை சமர்ப்பணம் செய்தால் வாழ்வை மற்ற முடியும், மனமாற்றம் வாழ்வை மாற்றும் என்றெல்லாம் சொல்கிறோம். அப்படி நடப்பதை பார்க்கிறோம். வீட்டைச் சுத்தம் செய்தால் பணம் வரும்; நல்லது நடக்கும் என்பது அன்பர்களுடைய அனுபவம். வீட்டைச் சுத்தம் செய்வதற்கும், பணம் வருவதற்கும் உள்ள தொடர்பு சூட்சுமமானது அதன் பொருள் நம் வாழ்வை மீறிய சட்டங்கள் , நம் வாழ்வை சூட்சுமமாக தன் பிடியில் வைத்துள்ளது என்பதே. வாழ்வில் நடந்தது எதையும் மாற்ற முடியாது என்னும் போது – past consecration கடந்த காலத்தை சமர்ப்பணம் செய்வது அதை மாற்றுகிறது. அதன் ஒரு சட்டம் – எந்த தீவிரத்தோடு intensity -யோடு ஒரு தவறை செய்தோமோ, அதே intensity -யோடு அந்த தவறுக்கு வருந்துவது அல்லது திருவுருமாற நினைப்பது – சூட்சும முடிவு. அது மாறுவது சூட்சும சக்தியால். அதனால் நம் உணர்வு மையம் என்பது , சூட்சும மையத்துடன் தொடர்பு கொள்ள ஒரு சிறந்த மய்யம் .
நான் முன்பு சொன்ன 37 வயதில் பெற்ற degree களும், 43 வயதில் கற்ற ஆங்கிலமும் அப்படிப்பட்ட சூட்சம உணர்வை தூண்டியதாலேயே. வாழ்வில் முன்னேற்றத்தை பற்றிய ஜட மெய்மைகளை என் சூட்சம அறிவு புரிந்துக் கொண்டதால், சுயம்பு ஞானம் – self existent knowledge வெளியே வருகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் 5 ஆண்டு காலம் படிப்பில் வரும் அறிவு ஆறு மாதத்தில் வர முடியாது.
சமர்ப்பணம் செய் என்று சொல்வது நம் ஞானம் செயல்படாமல் குறைந்த பட்சம் இந்த சுயம்பு ஞானம் செயல்படவே. அதையும் தாண்டி silence -மௌனம், நேரடியாக இந்த சூட்சம ஜட புலன்களை, ஜட மெய்மைகளைத் தொடும். அகந்தையின் புலன்களில் இருந்து வெளியே வரும் எதுவும் சூட்சும சக்தியை கொண்டிருக்கும் என்கிறார் கர்மயோகி . அதில் குறிப்பாக சொன்னால் – பிறர் நிலை பார்வை-other man point of view , பிடியை விடுதல் போன்ற சட்டங்கள் தரும் பலன்களை பார்த்து புரிந்துக் கொள்ளலாம். காரணம் அகந்தையே நம்மை இறைத்தன்மையிலிருந்து பிரிக்கும் இறுதிக் கருவி. அதை தாண்டி விட்டால் unity , ஐக்கியம், அது எல்லா பரிணாம நிலைகளையும் தாண்டி பிரம்ம ஜீவியத்தில் நிலைக்கச் செய்யும்.
உதாரணமாக சாதாரண வாழ்வில் settle ஆகிறது என்பதை எடுத்துக் கொள்வோம். உடனே தோன்றுவது திருமணம். காதலோ, இரு வீட்டார் முடிவு செய்யும் திருமணமோ, பெரும்பாலும் உணர்வின் தேவையாகவே, உணர்வின் தீர்வாகவே, அதை ஒட்டிய அறிவின் முடிவாகவே இருக்கிறது. முதல் சில நிமிடங்கள், அல்லது சில மணிகளே அதை முடிவு செய்திருக்கும் . நாம் அதை விவேகம் என்றே நினைப்போம். ஆனால் சுற்றி சுற்றிப் பார்த்தால் – அதுவே most unsettling thing in life என்பது புரியும். யாரும் எதிர்பார்த்த சந்தோஷத்தை அதில் அடையவில்லை என்று தெரியும். இதெல்லாம் முன்பே தெரிந்தாலும், college , office களில் நாம் இதை கிண்டலடித்தாலும் – நாமும் திருமணம் செய்துக் கொள்வோம் . ஏதோ நாம் மட்டும் அறிவாளி, யாரும் பெறாத ஆனந்தத்தை நாம் பெறப் போகிறோம் என்ற நப்பாசையில், அறியாமையில் பலி ஆடு சந்தோஷத்தோடு நடந்து செல்வதுப் போல செல்வோம். அதுவும் இன்று நடக்கும் pre marriage photo shoot களை கவனித்தால், நமக்கு புரியாததுக் கூட புரியும். இது நமக்குத் தான் என்று இல்லை, Germany , Canada , Denmark இல் இருந்து இங்கு வந்து வேலை செய்துக் கொண்டிருப்பவர்களுக்கு வரும் whats app joke குகளும் அதை ஒட்டியே இருப்பது உலகம் முழுவதிலுமே வாழ்க்கை இப்படித் தான் இருக்கிறது என்பதையே காட்டுகிறது. இப்போது வரும் serial -களில் “நல்ல நேரம் முடியப் போகிறது தாலி கட்டுங்கோ” dialogue -களை ஒரு வேலை சூட்சம செவிக் கொண்டு கேட்டால் இது புரியும் என்று நினைக்கிறேன். நான் ஆண் , பெண், இருபாலருக்கும் பொதுவாகத் தான் இதைச் சொல்கிறேன்.
இதனால் தான் பொருள்வாதிக்கு பெண் பிரச்சினையாகவும், சன்யாசிக்கு மோக்ஷத்தைக் கெடுக்க வந்த மாயையாகவும் தெரிகிறாள். ஆனால் திருமண வாழ்க்கையை நிர்ணயிப்பது harmony என்னும் சூட்சம விதி. அது வெளிப்படும் பண்புகளின் ஆற்றல் என்று புரிவது இருவருக்கும் உள்ள இணக்கத் தீர்வு. இந்த பண்புகள் வெளிப்படுவது – நோக்கத்தில், விருப்பு வெறுப்பில் , உணர்வில் (motives , desires and emotions ) என்பது physical என்று சொன்னால் அதன் சூட்சமம் attitude -மனப்பான்மை. அதே போல ஒவ்வொரு mental , physical , vital விஷயத்திற்கும் ஒரு corresponding சூட்சம விஷயத்தை காண முடியும். ஒவ்வொரு சூட்சமத்தை காணுவதற்கும் ஒரு சூட்சம முறை இருக்கிறது. Silence , Peace , Concentration , consecration போன்றவை சில முறைகள். இதையெல்லாம் செய்யும் போது வரும் சந்தோஷத்தை ஆராய்ந்துப் பார்த்தாலே நாம் இந்த உலகத்தில் இல்லாமல் வேறு உலகத்தில் இருப்பது போல இருக்கும். அதன் பொருள் நாம் வாழும் இந்த வாழ்க்கையைத் தாண்டிய உலகங்கள் இருக்கின்றது என்பதையே காட்டுகிறது. அண்ட ஜீவியமோ, பிரம்ம ஜீவியமோ அதை கடப்பது என்பது நம் சித்தத்தின் விரிவைப் பொறுத்தது. அது உள்நோக்கி இருக்கும் அளவிற்கு – அதன் வெளிப்பாடு தான் வெளியே நடப்பது என்று நாம் நம்பும் அளவிற்கு – inner enlargement understanding the external cosmic existence – நம் ஆனந்தம் இருக்கும். அது தரும் சூட்சம பார்வை, சூட்சம ஞானம், நம் வாழ்வை ஆனந்தமயமாக Divine Life ஆக மாற்றும்.
அன்னையைப் பற்றிய சூட்சம அறிவைத் தரும் பகுதி அது. அன்னை, பகவான், கர்மயோகி சொல்வதைப் புரிந்து வாழ்வில் செயல்படுத்த ஆர்வத்தையும் உறுதியையும் தருவது அது. அது பரிணாமத்தில் நம்மை, ஆனந்தமாக அதாவது முரண்பாடுகளை தந்து உயர்த்தாமல், ஆனந்தமயமாக உயர்த்தும்.
அதற்கு உதாரணமாக கர்மயோகி கூறுவது
பணிவு உடலின் ஆனந்த பரிணாமம்
வழிபாடு பிராணனின் ஆனந்த பரிணாமம்
நம்பிக்கை மனதின் ஆனந்த பரிணாமம்
ஞானம் ஆன்மாவின் ஆனந்த பரிணாமம்
என்று பல உதாரணங்களை தருகிறார்.
இதையெல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும், பகவான் சொல்லும் சூட்சம பார்வை, சூட்சம செவி, சூட்சம ஞானம் பெற முடியவில்லை என்றாலும் நாம் வேறு வகையில் அதைப் பெற முடியும் என்கிறார் கர்மயோகி .
அப்பா இந்த ஞானத்தை past consecration, laws of life , laws of consciousness , life response , correspondence போன்ற தலைப்புகளில் பல கட்டுரைகளை எழுதி அவற்றை உபயோகப்படுத்தி சூட்சம உலகின் சட்டங்களை எப்படி நம் வாழ்வை மாற்றும் வழிகளாக செயல்படுத்த முடியும் என்னும் நடைமுறை ஞானமாக தருகிறார்.
ஒரு நம்பரை நினைத்துக்கொள், அதை இரண்டால் பெருக்கு, இதைக் கூட்டு, அதால் வகு, கடைசி நம்பரைச் சொல் என்பார்கள் பிள்ளைகள். கடைசி நம்பரை சொன்னவுடன், நாம் நினைத்த நம்பரை சொல்வார்கள். அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். நமக்கு வியப்பைத் தரும். ஒரு சூத்திரத்தால் பையன் நம்பரை அறிந்துகொள்கிறான். சூத்திரம் தெரியாதவர்க்கு அது சூட்சுமமாகப்படுகிறது.
விஞ்ஞானம் இயற்கையை மனிதன் பிடியில் கொண்டுவருவதுபோல், வாழ்க்கை நியதிகளின் ஞானம் வாழ்க்கையை மனிதன் பிடியில் கொண்டுவர முடியும். மழை தானாகப் பெய்கிறது. பருவநிலைக்கேற்றவாறு பெய்கிறது. மழையின் சூட்சுமத்தை புரிந்து கொண்ட விஞ்ஞானி மேகம் திரண்ட நேரத்தில் ரசாயனத்தை தூவி அதை மழையாகப் பெய்விக்க முயன்று, சில சமயம் வெற்றியும் காண்கிறான். அதுபோல் வாழ்க்கையின் நியதிகளை அறிந்தால், அன்னை அன்பர் வாழ்வைத் தன் பிடியில் கொண்டுவரலாம். குறைந்தபட்சம் தன் வாழ்வைத் தன் சக்திக்குட்பட்டதாகக் கொண்டுவர முடியும் என்பது கர்மயோகியின் கருத்து.
அன்னைக்கேற்ற பண்புகளை நாம் ஏற்றால், அதற்கான இடையறாத நினைவை கொண்டு வரமுடிந்தால் இந்த சூட்சம plane களில் நாம் செயல்பட முடியும் என்கிறார். இது ஆன்மீகம் இல்லை. தெய்வ சக்தி இல்லை. அன்னை விரும்பும் மனோ சக்தியை நாமே உருவாக்குவது. இதை நாம் வாழ்வில் விழிப்பாக இருந்தால் தான் செய்ய முடியும் என்பதால் இதை Conscious consecration என்கிறார். அதாவது விழிப்பான சமர்ப்பணம். அன்னைக்கு எதிரான நம் குணங்கள் அன்னையின் அருளை தடை செய்யாமல் இருப்பது. நம் உள்ளுணர்வு அன்னை உணர்வாகவும், புறச்செயல்கள் அன்னை செயல்களாகவும், கரணங்கள், புலன்களை அன்னைக்கு உரியதாக மாற்றுவது இந்த மனோ சக்தியே. அது தரும் ஆற்றலே. இந்த Conscious consecration னுக்கான process -ஐயும் கர்மயோகி விளக்கியிருக்கிறார்.
அறிவு, அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் உண்டு. புத்தி அறிவை விட பெரியது. அறிவு விவரங்களைக் கொண்டது – Bundle of Information – புத்தி விவரங்களுக்குப் பின்னால் உள்ள விஷயத்தை அறிவது. இவை இரண்டையும் நம் சுயநலத்திற்கு, நாம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு நாம் எதிர்பார்ப்பது நடப்பதற்கு பயன்படுத்திகிறோம். அதை பொது புத்தி , விவேகம் என்று நினைக்கிறோம். ஆனால் இவை அனைத்தையும் செய்வது மனம் கிடையாது. மனதின் பகுதி. முழு மனமும் – holistic mind . அறிவு, புத்தி, பொது புத்தி , விவேகம் ஆகியவற்றை ஆராயும் போது, அது சிந்தனை என்று அழைக்கப்படுகிறது. அந்த சிந்தனை அன்னை விரும்பும் பண்புகளை ஒட்டி இருந்தால் அது பரிணாமத்தில் முன்னேறும் வழிகளை, அதற்கு உதவிடும் பிரபஞ்ச சக்தியை பெற்று தரும். ஆனந்தமயமான வாழ்க்கைக்கான சூட்சம பார்வையை பெற்றுத் தரும் என்பது கர்மயோகி தரும் விளக்கம்.
இது ஒரு வகையான யோக பயிற்சி. அது பலித்தால் பின்னர் நம் உள்ளுணர்வு அன்னையுணர்வாகவும், புறச் செயல் அன்னையின் செயலாகவும், கரணங்கள் அன்னைக்கே உரித்தானவையாகவும், ஜீவன் அன்னையாகவும் மாற உதவி செய்யும். அப்போது நம் சமர்ப்பணம், சரணாகதி இயல்பாக இருக்கும். அப்பா அறையில் ” there is no joy higher than consecrated living ” என்று எழுதப்பட்டு இருக்கும். அப்படி ஒரு ஆனந்தமயமான வாழ்வு வாழ இந்த யோக பயிற்சி உதவும்.