இதுவரை முன்னேற்றத்திற்கான வேலையை i அகந்தை செய்தது. இனி ஆன்மாவே செய்ய வேண்டும்.
ஒரு சிறுவன் படிக்க வேண்டுமானால், அவன் எதையும் கற்றுக் கொள்ளலாம், எவரும் அவனுக்குப் பாடம் சொல்லித் தரலாம். நடைமுறையில் அவனும் படிப்பதில்லை, எவரும் சொல்லித் தருவதில்லை. அவனுக்குப் படிப்பு வருவதில்லை. படிப்பு வரவேண்டுமானால், முதலில் அவனைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும், விளையாடுவதிலிருந்து தடுக்க வேண்டும், பள்ளியில் ஒரே வகுப்பில் இருத்த வேண்டும், ஆசிரியர் சொல்வதைக் கண்டிப்பாகப் படித்து, எழுதிப் பயிலவேண்டும். வீட்டிலிருந்தும், விளையாட்டிலிருந்தும் பிரித்து, ஒரே வகுப்பில் உட்காரவைத்து , படிக்கச் சொன்னால்தான் படிப்பு வரும். இந்தத் தடைகளும், முறைகளும் சிறுவன் படிப்பைச் சாதிக்க அவசியம். அதுபோல் ஒரு ஆத்மா, தான் சாதிக்க அதற்கென ஓர் உடல் தேவை. பிறர் செயலிலிருந்து தன்னை அவ்வாத்மா பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்குச் சுயநலம் உதவும். அகந்தை எனும் கூட்டுக்குள் சுயநல வேலியால் ஒருவர் சாதனை பூர்த்தி பெறும். இவ்வேலையைக் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக அகந்தை செய்தது. அதன் காலம் முடிந்துவிட்டது. இனியும் அகந்தையின் எல்லைக்குள் சுயநலத்தால் மனிதன் செயல்பட முடியாது. இனி அவன் சாதனை உலகத்திற்கும், பிரபஞ்சத்திற்கும், இறைவனுக்கும் தேவை.
ஆனால் கருவி என்பதாலேயே தனிமனிதனின் அறிவும், சமுதாயமும் பகுதியாக தடையாக இருக்கிறது. பெரும் பலன் தரும் கருவிகள் மிஷின்கள் ஒரு கால கட்டத்தில் மாறுவது போல அதுவும் மாறும். அதற்கு உதாரணமாக “கம்பி இல்லா தொலை பேசி” வளர்ந்த முறையை சொல்லலாம். ஆரம்பத்தில் இரண்டு முனையிலும் ரேடியோ இருந்தது இடைஇடையே மின்னூக்கிகள் இருந்தது. ஆனால் இன்று தொடர் அலைக்கற்றையில் பேசுகிறோம். எதிர் காலத்தில் இந்த மாதிரியான ஜடசக்தியை – மின்காந்தம், மின்சாரம் போன்ற physical எனர்ஜி சாதனங்களே இல்லாமலே ஐக்கியத்தின் எனர்ஜி மூலமே புரிந்து கொள்ளும் நிலை வரும் என்கிறார். அது எப்போது வரும் என்று தெரியாது. ஆனால் எனர்ஜி லெவலை ஆராய்ந்து – ஏன் சிலர் காலையில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள், ஏன் சிலர் மாலையில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள், ஜீவனில்லாமல் வேலை செய்வதற்கான காரணம் என்ன என்று கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த வேலையை தர அல்லது வேலையின் தரத்தை உயர்த்த HBM human body model வேலைகள் HR department , குவாலிட்டி department இல் வர ஆரம்பித்து விட்டன. லைப் டிவைன் 1914 இல் ஆர்யாவில் கட்டுரைகளாக வந்தது என்றால் அதற்கு முன்பே இதை எழுதி இருப்பார். இப்பொது அவை உண்மை ஆகி கொண்டு இருக்கின்றன . கர்மயோகி சொல்வது போல லைப் டிவைன் உலகத்தின் ஜாதகம் என்பது கண் கூடாக தெரிகிறது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் அது ஒரு கருவியை எடுக்கிறது. இப்போது அது எடுத்திருப்பதாக கர்மயோகி சொல்வது Internet , Technology , Values. தனி மனித ஆர்வம், technology, சமுதாயத்தின் ஆர்வம் ஆகியவற்றுடன் நெருக்கமாக இருப்பவர்கள் அடைய முடியாத உயரமில்லை என்பதற்கு Apple , Microsoft , amazon , facebook , google போன்றவை உதாரணம். பண்புகள் சார்ந்த வியாபாரத்திற்கு Warren Buffett ஒரு உதாரணம். அதை executing the mighty possibility in the universe என்கிறார் பகவான். எதை உறுதியாக விரும்புகிறானோ அதை மனிதன் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இதை எடுத்துக் கொள்ளலாம் . டெக்னாலஜியை முழுதும் பயன் படுத்துபவர்கள் , பண்புகளை முழுதும் பயன் படுத்துபவர்கள் பெரும் வளர்ச்சியாயி பெற முடியும் என்பதை குறிகிய காலத்தில் பெரு வளர்ச்சி பெற்றவர்களை இந்த கண்ணோட்டத்துடன் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
முன்பு சொன்ன திருமணம், குழந்தை, தத்து எடுத்துக் கொண்டால் time and space , subjective and objective என்பது போன்ற சில விஷயங்களைப் புரிந்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் காலம் என்று ஒன்று இருக்கிறது என்று நினைக்கிறோம். திருமணமாகி குழந்தை பிறக்க 10 மாதம் குறைந்த பட்சம் என்றால் மன நிலையில் அன்பாக மாறி ஒரு 10 வயது குழந்தையை தத்து எடுத்தால், காலம் சுருங்குகிறது.அதனால் Time என்பது inner -subjective – அது வரையறை மேல் நம்பிக்கை வைக்கும் போது , என் குழந்தை, பாசம், பற்று, சமுதாயம் என்று இருக்கும் போது outer -ல் objective -ஆக அதற்குறிய காலம் தேவைப் படுகிறது. ஆனால் அதுவே அன்பாக மாறும் போது , 10 ஆண்டுகளை சுருக்குகிறது . அதே போல எல்லா குழந்தைகளும் என் குழந்தைகளே என்று நினைக்கும் போது , அதன் சுருக்கத்தை அளவிடமுடியாது. அதாவது consciousness எந்த அளவுக்கு விரிவடைகிறதோ காலம் நமக்கு அந்த அளவுக்கு சுருங்குகிறது. அதை unfettered power என்று கூறலாம். அதை படைக்கும் ஞானம் unbounded knowledge. இங்கும் கர்மயோகி 2000 குழந்தைகளுக்கு அப்பாவாக இருப்பதையும் அல்லது குறைந்தது 2000 அப்பாவாக நினைப்பதையும் சிந்தித்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
வேறு ஒரு உதாரணமாக என்னை எடுத்துக் கொள்கிறேன். இன்று chemical , electronics -ஐ படித்திருந்தால் அதன் குறைந்த பட்ச தேவை, ஒவ்வொன்றுக்கும் நான்கு ஆண்டுகள். அதுவும் இப்போதிருக்கும் அறிவின் சாரம் வர எவ்வளவு காலம் பிடித்திருக்குமோ என்பது தெரியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் customer -க்கு சிறந்ததை தர வேண்டும் என்று நினைத்த போது அந்த consciousness எல்லாவற்றின் சாரத்தையும் புரிய வைத்தது. அதாவது குறைந்தது எட்டு ஆண்டுகள் சுருங்கியது. அதாவது ஒரு higher value உயர் நோக்கம், காலத்தை சுருக்கி, வாழ்வை வளமாக்குகிறது. இப்படி மனதின் வரையறையிலிருந்து வெளியே வரும் போது , பரிணாமத்தில் முன்னேறுகிறோம். அது வெளியே objective -வில் வளமாக , ஆனந்தமாக மாறுகிறது. நாம் நினைப்பத்தை சாதிக்க முடிகிறது.
வருமானம் என்று எடுத்துக்கொண்டால், உடல் உழைப்பின் மூலம் மட்டுமே வரும் என்பது ஒரு வரையறை. அதிலிருந்து விலகி , உணர்வில் – நடத்தை, மனப்பான்மை – மாறினால் business relation -ஆக credit limit -ஆக வரும். social organization, trust அல்லது ethics, bank loan -ஆக வரும். அல்லது mental -லில் creative innovation ஆக இருந்தால் அது முதலீடாக வரும். இவைகளோடு நேர்மை, நல்லெண்ணம், பரந்த மனப்பான்மை போன்ற பண்புகள் சேரும் போது காலம் பல மடங்காக சுருங்கும். தானே சேமித்து தொழில் ஆரம்பிப்பதற்கும் , தேவையான முதலீடு தேடி வருவதற்குமான கால வித்தியாசம் அது. பேரம் பேசுவதை விட்டதால் வந்த லாபம், அதிக செலவு அதிக வருமானம், வியாபாரத்தில் பிடியை விடுவது என்பது பற்றியெல்லாம் அப்பா நிறைய எழுதியிருக்கிறார். உதாரணமாக ஆனான் பிடியை விட்ட இடத்தில் பெற்ற அபிரிமிதமான வளர்ச்சியை , போட்டியாளர்களிடையே ஏற்பட்ட சுமுகத்தை அதனால் கடந்த பாத்து ஆண்டுகளாக இருவருக்கும் நல்ல லாபம் கிடப்பதை பல முறை குறிப்பிட்டு இருகிறேன். அதே போல வெள்ளம் வந்து பெரிய நஷ்டம் ஏற்பட்டபோது , அடுத்த முதலீட்டுக்கு என்ன செய்வது என்று குழம்பிய ஒரு கம்பெனி சாதாரணமாக 20 லட்சம் கடன் தரும் கம்பெனி ஒரு கோடி வரி தர தயார் என்று கூறி தானே வந்தது. நான் சேமித்த நல்லெண்ணம் – வார்த்தை தவறாமையின் வலிமை புரிந்தது.
உள்ளே பண்புகள் இருந்தால் வெளியே சுபீட்சத்திற்கு அளவில்லை என்கிறார். இவையெல்லாம் வரையில்லா ஞானம் தடையில்லா ஆற்றல் ஆகியவற்றின் அடையாளமாகக் கொள்ளலாம். அதுவே லைஃப் டிவைன் கூறும் சாதிக்கும் சக்தி.