நம் அறியாமை ஞானமாக மாறுவது, இதுவரை புரியாதது புரிவது , பகுதியை மட்டுமே பார்த்த நாம் இனி முழுமையை பார்க்க முடிவது என்பது எல்லாம் – இறை பண்புகளின் மேல் நமக்கு இருக்கும் ஆர்வத்திலும் அளவிலும் தீவிரத்திலும் இருக்கிறது என்கிறார். காரணம் இறை சித்தம், Divine Will , இறை உணர்வு – Divine Consciousness . தனி மனிதனை கருவியாகவும் சமுதாயத்தை அதன் களமாகவும் பயன்படுத்துகிறது. அதற்கு எந்த அளவிற்கு ஒட்டி நம் உறுதி, நம் ஆர்வம், நம் விழிப்புணர்வு இருக்கிறதோ அந்த அளவிற்கு காலமும் இடமும் – time and space நமக்கு கட்டுப்படும்.
இறைசித்தம், இறை உணர்வு ஆகியவற்றை நாம் எடுத்துக்கொண்டால், அதோடு நெருங்குவதை புரியவில்லை என்போம். ஆனால் இறைவன் என்பதை அன்னையாக உருவகப்படுத்திக்கொண்டால் எப்படி எல்லாம் நினைப்போம் என்று சிந்தித்தால் சற்று புரியும். நாம் எப்படி இருந்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும், சிறிதளவே செய்தாலும், நிறைய தர வேண்டும், தவறு செய்தால் பொருட்படுத்தக்கூடாது, என் மனம், உணர்வு ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும், என்னை அடுத்த உயர்ந்த கட்டத்திற்கு உயர்த்த வேண்டும் என்று அன்னையைப் பற்றிய , ஒரு விளக்கம் வைத்திருக்கிறோம். அதை நம்மால் எந்த அளவிற்கு பிறரிடம் காட்ட முடியுமோ, அந்த அளவிற்கு அவர்கள் மனதில் நாம் இறப்பிற்கு பிறகும் வாழ்வோம். எனக்குத் தெரிந்த உதாரணம் கர்மயோகி குறைந்தது 2000 பேர் மனதில் இன்றும் வாழ்கிறார்.
அதே போல உணர்வில் அதிகபட்ச பரந்த மனப்பான்மை, நல்லெண்ணம் போன்றவன்றை கொண்டுவந்த போது ப்ரிம்ரோஸ் பள்ளி அளவில் நடக்கவேண்டியது உலகளவில் நடந்தது.
அடுத்தது நமக்கு தேவை எதனாலும் பாதிக்க படாத அறிவு. அதாவது நம் இறைஞானம் – மேல் மன எண்ணங்கள், அறிவு, அனுபவம் அதனால் வந்த முன்முடிவு, அப்பிராயங்கள் , ஆகியவற்றால் பாதிக்க படாமல் முடிவு எடுக்க முடிவது. எதையும் புரிந்து கொள்ளும் எதையும் மாற்ற முடிந்த அந்த அறிவு நம்மை எல்லா துன்பங்களில் இருந்தும், முரண்பாடுகளில் இருந்தும் கட்டுகளில் இருந்தும் வெளியே கொண்டு வரும்.
இணை இல்லாத சக்தி என்பது எதையும் படைக்க கூடிய சக்தி. இறைவனிடம் அப்படி ஒரு ஆற்றல் இருப்பதாக நம்பினால் நம்மிடமும் அப்படி ஒரு ஆற்றல் இருப்பதாக நம்புவது. அப்படி நம்ப முடியவில்லை என்றால் நம் உள்ளே அன்னை இருப்பதாக நம்புவது. அன்னை சக்தி, பிரபஞ்ச சக்தி . அது இணையில்லாதது. வரை யாரை இல்லாதது.
எவற்றாலும் பாதிக்கப்படாத ஞானம் என்பது நம் முன் முடிவுகள், அபிப்ராயங்கள் , மற்ற வரையறைகள் இல்லாமல் முழு ஞானத்தை, முழு ஆற்றலை அறிய விரும்பும் உறுதியாக இருந்தால் அது அனைத்து ஞானத்தையும் செயல்படக்கூடிய ஆற்றலாக மாற்றுகிறது. அது நம்மை அனைத்து வகையான கட்டுகளில் இருந்தும் விடுபடுவதற்கு எளிதாக்குகிறது. it lightens the fetters of causality. ஒரு விஷயம் நடக்க வேண்டிய அத்தனை சட்டங்களையும் காலம், இடம் ஆகியவற்றை மீறி நடக்கிறது.
விஞ்ஞானம் மரணத்தை அழிக்க முயல்கிறது. விஞ்ஞானியின் அறிவுத் தாகத்திற்கு அளவில்லை. காலத்தையும், தூரத்தையும் சுருக்குவதே விஞ்ஞானியின் வே லையாகிறது. இறப்பை தள்ளி போட , வாழ்வை வெல்ல மனிதன் கற்றுக்கொண்டு விட்டான். விஞ்ஞானம் மனிதனை, வாழ்வைவிடச் சக்தி வாய்ந்தவனாகச் செய்ய முயல்கிறது. எதையும் மனிதனால் செய்ய முடியும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. ஆன்மிகமும் இந்த சுதந்திரத்தை, மோட்சம் , வாழ்வை வெல்லும் , காலத்தையும் தூரத்தையும் வென்று ஆனந்தத்தை பெரும் இலக்கை நோக்கியே இருக்கிறது. எதை மனிதன் உறுதியாக நாடுகிறானோ அதை முடிவில் அவன் சாதிப்பதுபோல் தெரிகிறது.
முன்பு சொன்ன உதாரணத்தில், திருமணம் ஆக வேண்டும், குழந்தை வேண்டும் என்பது போன்ற சமூக தேவைகளை ஒட்டிய பற்று பாசம் போன்ற அகந்தையை ஒட்டிய தேவையாக இருந்தால் குறைந்த பட்சம் பத்து மாதம் தேவை. அதுவே ஆன்மாவின் பண்பாக அன்பு என்று மாறினால் அது அனைத்து குழந்தைக்குமாகும். அல்லது ஒரு குழந்தையை தத்து எடுக்க முடியும். அது காலத்தை சுருங்குவது மட்டுமல்ல சுருங்கிய காலத்திற்கான life response ம் குறைகிறது.
சாதாரணமாக செய்ய முடியாத பண்புகளை ஒரு சிறு அளவில் செய்துப் பார்ப்பது டோக்கன் ஆக்ட்.
அதில் ஒருமுறை நான் customer point of view பார்த்த பொது நான் விற்கும் ஒருபொருள் முழு பலனை அளிக்கவில்லை அதாவது 100% அளிக்கவில்லை என்று தெரிந்தது. சாதாரணமாக அதை யாரும் பொருட்படுத்துவதில்லை என்றாலும் ஏன் அந்த பொருள் 100% result ஐ தரவில்லை என்று யோசித்து கண்டுபிடித்த போது ஒரு புது chemical formula புரிந்தது . அதை சரி செய்ய முயன்ற போது, அதன் சூட்சுமம் புரிந்த போது நான் என் சொந்த பொருளை தயாரிப்பவனாக manufacturer ஆக மாறினேன். SAR value என்பது 2008-ல் பெரிய விஷயம் இல்லை. அது mobile phone -ல் பேசுபவர்க்கு தலைவலி வரக்கூடாது, மின்காந்த சக்தி பாதிக்கக் கூடாது என்பதை Nokia , HTC போன்ற கம்பெனிகளே அதை பார்க்கும். Chinese phoneகள் எனப்படும் குறைந்த விலை phone களில் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் அன்று ஒரு சிறு அளவில் token act ஆக அதை கடைப்பிடித்தேன். இன்று SAR value க்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்று mobile phone பற்றி தெரிந்தவர்க்கு தெரியும். இதில் நான் செய்தேன் என்பது விளக்கத்திற்காக என்றாலும் இது will of the collectivity – பலருடைய விருப்பம் என் மூலம் பலித்தது என்று சொல்லலாம். பலர் என்பது இந்த சமுதாயம். அதே போல 1970-களில் கர்மயோகி எழுதிய Management Principles , Human Resource Principles , Attention , Productivity , Wastage , Harmony போன்ற பல விஷயங்களும் இன்று ISO standards -ஆகவே வந்துவிட்டது. அது கர்மயோகியின் நல்லெண்ணம் என்று சொன்னாலும் அது பலரின் will – Will of the collectivity – இந்த சமுதாயத்தின் ஆர்வம் .
Swiggy , Zomato , என்று வாயில் ஊட்டி விடும் அளவுக்கு வரும் service -கள் , home doctor , urban company மாதிரி உடலுக்கு வேலையே தேவையில்லாமல் செய்யும் company -கள் எல்லாம் லாபகரமான வியாபார முறைகளாக தோன்றுகிறது. ஆனால் இதுவும் சமுதாயத்தின் ஆர்வம். ஒரு தனி மனிதனின் முயற்சியாக பலிக்கிறது என்று தெரிகிறது. அதையும் தாண்டிப் பார்த்தால் ஏதோ ஒரு சக்தி, பரிணாம வளர்ச்சிக்கான சக்தி , ஒட்டு மொத்த தனி மனிதன் மற்றும் சமுதாயத்திற்கான வளர்ச்சியில் ஆர்வம் உள்ள ஒரு சக்தி, அதன் will தான் இதை நடத்துகிறது என்பது புரியும்.
அதாவது மனிதனை முன்னேற்ற அல்லது அவனே பரிணாமத்தில் முன்னேற ஒரு பொது உறுதி, common will , சமுதாயத்தை இடமாகவும், தனி மனிதனை மையமாகவும் வைத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால் அதன் நோக்கம் ஐக்கியம் என்பதாக இல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும். இது தனி மனிதனுடைய திறனல்ல. சமுதாயத்தின் திறனாகும். மனித குலத்தின் எண்ணமே, தனி மனிதனில் செயல்படுகிறது. நாம் நம்மை அறியாதது போல இறைவனின் விருப்பத்தையும் அறியவில்லை. தன்னிச்சையாகச் செயல்படுவதாக நினைத்துச் செயல்படும்பொழுது, நம்மை அறியாமல் நாம் இறைவன் விருப்பத்தை பூர்த்தி செய்வதை நாம் அறியவில்லை. அதை விழிப்பாக செய்யும் போது நாம் அகந்தையை அதன் பிரித்தறியும் நிலையை மீறுகிறோம். அப்போது நமக்கு இறைவன் விரும்பும் ஐக்கியம் வருகிறது. நாம் ஒவ்வொருமுறையும் பிறர்நிலை பார்வை, நிதானம், எதிர்வினை இல்லாமல் இருப்பது, சுமூகம் என்று ஒரு பண்பைக் கொண்டு வரும்போது நம்மை அறியாமலேயே நாம் ஐக்கியத்தை நாடுகிறோம். அதனால் வாழ்வில் பலன் பல மடங்கு வருகிறது. முன்னேற்றம் படிப்படியாக இல்லாமல் சில நிலைகளை தாண்டி செல்கிறோம்.
ஐக்கியதை தடுப்பது அகந்தை. ஒருவர் அடிபட்டு விழுந்தால், நம்முடலில் வலிதெரிவதில்லை. ஏனெனில் அவனுடல், நம் உடலிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. பிரிப்பது அகந்தை. சம்பந்தமில்லாத ஒருவர் வெற்றி நமக்கு சந்தோஷம் தருவதில்லை. ஏனெனில் அவனுடைய சந்தோஷம் வேறு, நம் சந்தோஷம் வேறு. இவற்றைப் பிரிப்பது அகந்தை. எதிரேயுள்ளவருடைய எண்ணம் நமக்குப் புலப்படுவதில்லை. புலப்படாமல் தடுப்பது அகந்தை. அகந்தை அழிந்த நிலையில் பிறர் எண்ணம் நம் எண்ணமாகவும், மற்றவர் உணர்ச்சி நம் உணர்ச்சியாகவும், அடுத்தவர் வலி நம் உடலின் வலியாகவும் தெரியும். அது தெரியாதவரை அகந்தையுள்ளது எனப் பொருள்.
இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் பதிவிடுகிறேன்.