இந்த சமர்ப்பணம் தொடரில் சமர்பணத்தை மேலும் விளக்க சில உதாரணங்களை விளக்கமாக எழுத வேண்டி இருக்கிறது. டோக்கன் ஆக்ட் ஆக கர்மயோகியின் வழிகாட்டலில் நடந்தவை என்ன, பெற்ற வெற்றிகள் என்ன, என் குறுக்கீட்டால் , என் அபிப்ராயங்களால் பெற்ற தோல்விகள் என்ன என்று விளக்க நினைத்தேன். ஆனால் தொழில் தொடர்பான பயணங்களால் நேரமின்மை காரணமாக அதை எழுத முடியவில்லை.
அதனால் பிறகு எழுதநினைத்த ஒன்றை இப்போது இடை சொருகலாக தருகிறேன். பெரிய காரியம் புத்தகத்தை படிக்கும்போது வந்த சிந்தனைகள் இது.
சமர்ப்பணம் தான் பெரிய காரியம் – என்பதைத்தான் சூட்சுமமாக பெரிய காரியம் புத்தகத்தில் முதல் ஐம்பது பக்கதில் கூறுகிறார் கர்மயோகி. குறிப்பாக “Being of the Becoming – அதாவது எதுவாக ஆக நினைக்கிறோமோ அது போல இன்றே இருப்பது பெரிய காரியம். சமர்ப்பணமே அதற்கு வழி. குறிப்பாக சமர்ப்பணம் யோகத்திற்கு உரிய வழியை காட்டுவது பெரிய காரியம். அதற்கு மூலம் தெளிவாக இருக்க வேண்டும். என்கிறார். மூலம் என்று நான் புரிந்து கொண்டது “சத்தியத்தை உலகுக்கு கொண்டு வர முயல்கிறேன்” என்று பகவான் கூறியது. அதுவே வேலை. அதுவே முதலில் ஆரம்பிக்கக் கூடிய பெரிய காரியம். “கைக் குழந்தையை மறக்கும் தாய் உண்டோ” என்னும் வரி அதை புரிய வைக்கும்.
எந்த அளவு நம்மால் சத்தியத்தின் வெளிப்பாடுகளை – (manifesting aspects ) நம்மால் கொண்டு வர முடியும் என்பதே முக்கியம். அதுவே பெரிய காரியம். எனக்கு non -reaction என்பதே பெரிய காரியம் என்பதால் அங்கே இருந்து ஆரம்பிக்க நினைத்தேன் . காலையில் office வந்தவுடன் cleanliness , system , organization , என்று எதுவும் சரியாக இருக்காது. நான் deal செய்யும் பொருட்கள், chemical powders , சிறு சிறு consummables என்று மாதம் ஒரு முறை சுத்தம் மற்றும் organize செய்வதே ப்ரஹ்ம ப்ரயத்தனம். தினமும் காலையில் அதுவே ஒரு தொழிலாளர்களுடன் confrontation or disharmony ஆக மாறும். எல்லாவற்றிக்கும் மேலாக டிராபிக் தரும் டென்ஷன். ஆனால் அது போன்ற வெளி விஷயங்கள் office வீடு என்று எதையும் சரி செய்ய நினைக்காமல் traffic பற்றி கவலைப் படாமல் என்னுள் எந்த அளவு அமைதி கொண்டுவர முடியும் என்று அதில் இருந்து விலகி நிற்க conscious ஆகா முயன்ற போது அந்த நிதானம் அன்னை நினைவை அதிகப்படுத்தியது. அதுவே சற்றே சத்தியத்தை அதிகப்படுத்துவதாக நினைக்கிறேன். காரணம் நான் சொல்லாமலேயே இப்போது ஓரளவு சுத்தமாகவும் organized ஆகவும் இருக்கிறது.
அதுபோல இன்னும் சத்தியத்தை கொண்டு வரமுடியுமா, unconcious ஆக நாம் செய்வதில் எவ்வளவு பொய் இருக்கிறது என்று பார்த்தேன். ஆதாயத்திற்காக பொய் சொல்வதில்லை . ஆனால் உண்மையை மறைப்பதுண்டு. சில இடங்களில் innocuous பொய்களை (வராது என்று தெரிந்தும் நாளை நிச்சயம் சரக்கு வரும் என்று கூறுவது, சிறு விஷயங்களில் கூட நான் ஊரில் இல்லை என்று சொல் என்பது போல பல பொய் சொல்கிறோம் என்றே தெரியாமல் சொல்பவை .) exaggeration, பிறர் என்னிடம் கூறியதை cross verify செய்யாமல் அப்படியே பிறரிடம் கூறுவது பிறர் நம்மை உயர்வாக நினைக்கிறார்கள் என்றவுடன் நமக்கு தகுதி இல்லையென்றாலும் அதை சொல்லாமல் இருப்பது, அதன் மூலம் அவர் எண்ணத்தை உறுதி படுத்துவது. (உதாரணமாக ஒரு engineer ரிடம் flight landing wheel rubber ஆல் வரும் problem பற்றியும் அதை போக்குவது எப்படி என்பதைப் பற்றியும் பேசிய போது அவர் ஆச்சரியப்பட்டு உங்களை Bombay Airport Authority யிடம் introduce செய்து வைக்கிறேன் என்றார். இவ்வளவு அனுபவம் இருப்பவர் இங்கு இருப்பது தெரியாது என்றார். எனக்கு எந்த அனுபவமும் இல்லை என்பதையோ, நான் இது போன்ற வேலைகளை செய்ததில்லை என்பதையோ கிட்டத்தட்ட 60 Lakhs invest செய்து அந்த machine ஐ வாங்கும் capacity இல்லை என்பதையோ நான் கடைசி வரைக் கூறவேயில்லை.). இது போன்று சற்றே ஒல்லியாகத் தெரிய stripped shirt, சற்றே உயரமாகத் தெரிய heeled shoe, மற்றவர்களுடன் சாப்பிடும் போது வாயை மூடி நளினமாக சாப்பிடும் நான், வீட்டில் எப்படி சாப்பிடுகிறேன், சற்றே தலைவலி என்றால் கூட மருந்தின் மேல் நம்பிக்கை, society இன் opinions மேல் நம்பிக்கை, என்பது போன்று ஆயிரம் பொய்கள் ஒரு நாளில் என்பதை mind ஏற்றுக்கொண்டு இதை எல்லாம் ஒரு யோகப் பயிற்சியாக மாற்ற முயல்வது பெரிய காரியம். அதை அன்னைக்காக செய்வதால் அதுவே சமர்ப்பணம். அது என் ஜீவன் பெறும் சத்தியம்.
இதையே சமீபத்திய நிகழ்வுகளில் பொருத்திப் பார்க்கிறேன். நான் அடிக்கடி சொல்லும் flextronix உதாரணத்தில் real idea என்பது manufacturer’s manual . தரை காய 72 hours வேண்டும் என்பது உண்மை . அது நன்றாகத் தெரிந்தும் பிறரைத் திருப்திப்படுத்த, over confidence or ஏதோ ஒரு பொய் / அகந்தையின் அடிப்படையில் ஒரு முடிவு எடுக்கிறேன். ஆனால் மூலத்தின் முடிவுக்கு எதிரானதை செய்ய முடியாது என்னும் உண்மையை மனம் அறியாமையின் கருவி என்பதால் உணர முடியவில்லை. பிரச்சனைகள் மூலம் வாழ்வு அதைக் காட்ட நினைக்கிறது. மனம் உணர்வு mind எல்லாம் அதே நிலையில் நின்று பார்க்க முடியாது என்பதால் அவை சொல்லும் செய்தி சத்தியமாக இருக்க முடியாது. அதை சத்தியம் நிறைந்த ஜீவனாலேயே அறிய முடியும். அதன் மூலம் அனைத்து பரிமாணங்களையும் பார்க்கும் போது மூலத்தின் ஞானம் என்பது புரியவில்லை என்றாலும் அது வெளிப்படும் பண்புகள் புரிகிறது. Other’s point of view , taking responsibility, goodwill to client என்று சிலவற்றை ஏற்கும் போது அடுத்த plane க்கு நகர்கிறோம். அங்கு இதுவரை நமக்காக காத்திருந்தது – இதுவரை subtle லில் இருந்தது தெரிகிறது / வருகிறது (my own branded product ஆக வந்தது ). அது மட்டுமல்லாமல் இது ஒரு quality system ஆகவே implement செய்யப்பட்டு நேர்மையான quality contractor கள் மட்டுமே செய்யக்கூடிய நிலை . அதாவது உண்மையை அங்கு கடைபிடிக்கும் அனைவருக்கும் அதன் பலன் கிடைக்கும் என்ற நிலை வருகிறது. அதற்கு நான் instrument ஆகிறேன்.
இதில் பெரிய காரியம் என்பது surface level லிலிருந்து subtle level க்கு செல்வது. Surface மிகவும் strong ஆக தெரிகிறது. காரணம் அது physical ஆக கண்ணுக்குத் தெரிவதாக இருக்கிறது – அகந்தை மூலம் பார்ப்பதால் . subtle ஐ பார்க்க ஆன்மா தேவை. அதாவது அவற்றின் பண்புகள் தேவை. அகந்தைக்காகவும் ஆதாயத்திற்காகவும் பார்க்காமல் higher conscious ஆக பார்ப்பது பெரிய காரியம்.
மூலத்தின் தேவையை பார்ப்பது பெரிய காரியம். இங்கு தர்மம், நியாயம், பாவம், புண்ணியம் என்பது இல்லை. Flex opening date க்காக பாவம் பார்க்காமல் manufacturer இன் எண்ணத்தையே நான் செயல் படுத்தியிருக்கவேண்டும்.
Mother principles ஐ மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நடப்பது தூய்மை. இதற்கான process இல் பிறரிடம் நான் காணும் குறையெல்லாம் என் குறையே என்பது புரிவதும், அதைக் களைய நான் எடுக்கும் முயற்சிகளும் பெரிய காரியம். அதற்கு எதிரான நிலை எடுப்பது Transformation – பெரிய காரியம்.
பொய்யால் சமர்ப்பணம் செய்ய முடியாது. அல்லது சமர்ப்பணம் இருக்கும் இடத்தில் பொய் இருக்காது. Mother ருக்கான என் நன்றியறிதலுக்குப் பின்னும் ஒரு selfishness இருக்கிறது. அதனால் சமர்ப்பணம் மூலம் நான் செய்வது அனைத்தும் அகந்தையின் முயற்சி . வேகமான வளர்ச்சி aspiration ஆல் வரும் போது அந்த இடத்தை அகந்தை எடுக்கும் போது அந்த நிலையை நானே நிலைநாட்டுவேன் என்னும் போது level of consciousness இறங்குகிறது. அந்த நேரத்தில் அதை கவனிப்பது பெரிய காரியம். அந்த aspiration ஐ maintain செய்வது பெரிய காரியம். அந்நிலையில் பொறுமை பெரிய காரியம். ஒரு பெரிய காரியம் அன்பர் வாழ்வில் வர விரும்பும் பொழுது அவர் விலகுவது, அதன் பிறகு வருவது ஆபத்து அழிவு (floods) என்று நினைத்து விலக நினைத்தாலும் முடியாமல் திணறி முடிவாக பலன் வரும் இதன் மூலம் concentric circle of higher consciousness திறந்து அடுத்த உயர்ந்த நிலைக்குப் போவது பெரிய காரியம். அதன் பிறகு ஆன்மா நம் வேலைகளை எடுத்துச் செய்வது பெரிய காரியம். அதன் மூலம் இறைவன் திருவுள்ளம் நிறைவேறுவது பெரிய காரியம்.