Share on facebook
Share on telegram
Share on whatsapp

புது வருடம்-புது யுகம்-புது வாழ்வு-2

உதாரணமாக, இந்த ஆண்டு 10 கிலோ குறைப்பேன் என்பது இலக்கானால் அதே வேலையாக செய்தால் அல்லது வேறு எந்த நோக்கத்துடனும் செய்தால் அது பெரிய பலனை அளிப்பதில்லை. ஆனால் 10 அல்லது 15 கிலோ இளைத்தால், நான் எப்படி இருப்பேன், எப்படி எல்லாம் என் ஆரோக்கியம், தோற்றம், நடத்தை, உடை, அணிகலன்கள் அணியும் விதம் இருக்கும் என்று யோசித்தால், நமக்கு வருவது நம் இலக் குக்கான emotional bonding . அதுவே நம்மை இலக்கை நோக்கி வேகமாக பயணிக்க வைக்கும். இது  உயர் சித்தத்திற்கான  பிரம்மம் பெற விரும்பும் ஆனந்தம்.  நம் இலக்கை நாம் அடைந்து  விட்டால் கிடைக்கப்  போகும் சந்தோஷம் எப்போதும் நம் நினைவில் இருக்க வேண்டும். அதைவிட வேறுதுவும் பெரிதில்லை என்று இருக்க வேண்டும். அதற்கான பண்புகளை கடைபிடிக்கும்போது கிடைக்கும் சிறு சிறு வெற்றிகளை கவனித்து அதை அதிகப்  படுத்த வேண்டும்.  நம்மால் முடிகிறது என்று அதை கொண்டாட வேண்டும். செய்ய முடியாத இடங்களை ஏன் செய்ய முடியவில்லை என்று பார்த்து திறமையை அதிகப்படுத்த வேண்டும். ஏற்கனவே நம் determination ஆல் நாம் பெற்ற  வெற்றியை நினைவுக்கு கொண்டு வந்து நம் ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும்.

நான் லஞ்சம் கொடுக்காமல் வியாபாரம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்ததில் வந்த இழப்புகள், பிரச்சினைகள் அதிகம். என்றாலும்  அதை விடாமுயற்சியாக செய்ய காரணம்,  கர்மயோகியுடன் எனக்கு ஏற்பட்ட emotional bonding . அந்த vibration அவரை அடையும் என்னும் நம்பிக்கை. அதுவே பின்னால் அவருடன் உண்டு, உறங்கும் வரை வந்தது என்று நினைக்கிறேன்.  அதுவே இன்று அவருடனே இருந்தவர்கள் அவருடன் இருந்தவர்கள் இன்று அவருக்கே துரோகம் செய்யும்போது அந்த நம்பிக்கை குறைகிறது. பண்புகளுக்கான என் ஆர்வமும் குறைகிறது. அதனால் ஆர்வமே நம் வாழ்வை நடத்துகிறது என்று புரிகிறது. இலக்கை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்துகிறது என்பது புரிகிறது.

இதை வாழ்வுடன் நாம் கொள்ளும் communication என்கிறார்கர்மயோகி . அதில் எந்த அளவு quality , தரம் இருக்கிறதோ, பண்பு இருக்கிறதோ அந்த அளவு முன்னேற்றம் இருக்கும். காரணம் அது நம் சித்தத்தின் communication . உதாரணமாக prayer என்பது அன்னைக்கான நம் சித்தத்தின் communication . சமர்ப்பணன் சொல்வது போன்ற சுயபரிந்துரை auto suggestion போல அது ஆழ் மனத்திற்குச் சென்று அதை சாதிக்கும் சக்தியாக மாற்ற வல்லது அது.

அதையும் கடந்த நிலையில் அனைத்து பொறுப்பையும் ஏற்க அன்னை காத்திருக்கிறார். அவர் மேல் வரும் ஆர்வம் நம் வாழ்வை வழி நடத்தினால், அதன் வளர்ச்சிக்கு எல்லையே இல்லை. அந்த ஆர்வம்:

அன்னையின் கருத்துகளையும் அன்னைக்கு ஏற்ற உணர்வுகளையும் அன்னை ஏற்று கொள்ளும் பழக்கங்களையும் , அவர் விரும்பும் பண்புகள், அவர் சட்டங்கள் ஆகியவற்றை புரிந்து தெளிந்து பின்பற்றி மேலும் மேலும் அன்னையை ஏற்று கொள்வது எப்படி என்று இடையறாது நினைக்கும் ஆர்வத்தை  தரவேண்டும்.

அன்னை விரும்பும் பண்புகளை நடைமுறை படுத்த முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்  பற்றிய விழிப்புணர்வை அந்த ஆர்வம் தரவேண்டும்.

அன்னை என் நம்மக்கு உதவுகிறார், பரிணாமத்தையும் வளத்தையும் ( Evolution & Prosperity) கொண்டுவரும் விஷயங்கள் எவை, அவை இரண்டுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றை அறிய ஆர்வம் வேண்டும்.

அதன் மூலம் நம் personality falsehood கு தரும் ஆதரவு, அதன் பின் உள்ள  இயலாமை – அதனால் நாம் மாற வேண்டிய இடங்கள் எது என்று புரிய வேண்டும்.

அன்னையை பின் பற்றும் நம் ஆர்வம் நாம் அன்னையை நோக்கிப் போவது அல்ல , அன்னையை  நம்மை நோக்கி வரவைப்பது என்னும் ஞானம் வரவேண்டும்.

பிரம்மத்தை ஜடத்தில் கண்ட மேல் நாட்டார் நம்மைப்போல் 100 மடங்கு வளமாக இருக்கும்பொழுது பிரம்மத்தை அன்னையாக ஆன்மாவில் காணும் நமக்கு சொர்க்கம் வாழ்வில் இருக்கிறது. இன்றைய  இளைஞன் படிப்பது தவிர மற்றனவெல்லாம் கல்லூரியில் செய்வதைப்போல் நாம் வாஸ்வில் செய்து கொண்டு இருக்கிறோம் என்பது புரிந்து   அதை தவிர்க்கும் reoslutuioons – ஐ இந்த புத்தாண்டில் ஏற்று கொள்வோம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »