Share on facebook
Share on telegram
Share on whatsapp

தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -4

தவறு முன்னேற்றத்திற்கான வழிகாட்டி -3 இந்த தொடர்ச்சி…

ஆனால் நாம் பெறுவது வேறு ஒருவருடைய சிந்தனைகளையே – Mother  தண்டிப்பதில்லை, க்ஷணத்தில் பலிக்கிறார்கள் என்று அன்னை அன்பர்கள் சிலர் சொல்கிறார்கள்.  ஆனால் பெரும்பாலோருக்கு அப்படியா இருக்கிறது.  ஏன், எதற்கு அப்படி இருக்கிறது  என்று யோசிக்காமல் இருக்கிறோம்.  செய்கிறோமோ இல்லையோ பதிலாவது தெரிய வேண்டும் அல்லவா?.  இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் செய்யலாமே?  ஆனால் ஒரு விஷயம் புரியவில்லை என்றவுடன் நாம் செய்வது இன்னொருவர் சிந்தனையை  கேட்பது.  அதை ஏற்க முயல்வது.

என்னிடம் சில அன்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு மிக sincere ஆக என் கருத்துக்களை கலக்காமல் கர்மயோகி  என்ன சொல்லியிருக்கிறார் என்பதைத் தான் கூறுவேன்.  என்றாலும் அது என் புரிதல், என் பார்வை, என் வாழ்க்கைக்காக என் சுபாவம், என் நோக்கம், என் மனப்பான்மையை ஒட்டி நான் சிந்தித்தது.  அது எந்த அளவிற்கு மற்றவர்களுக்கும் பொருந்தும் என்று தெரியாது. ஆனால் நாம் யார் சொன்னாலும் , அது தவறான  விளக்கமாக இருந்தாலும் சொல்பவரின் அந்தஸ்தை வைத்து ஏற்றுக் கொள்கிறோம்.

இங்கு நாம்  உயர் சக்திகள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு வாதிகளை விட மோசமாக இருக்கிறோம்.  அவனாவது தான் பார்த்த, உணர்ந்த விஷயங்களை மட்டுமே ஒப்புக்கொள்கிறான்.  ஆனால் நாம் பிறர் பார்த்த, உணர்ந்த, அனுபவித்த விஷயத்தை அதில் உண்மை இருக்கோமோ, நமக்குத் தகுமா என்று யோசிக்காமல் ஏற்றுக்கொள்ளும் தவறைச் செய்கிறோம்.  என்னிடம், என் நண்பர்களிடம்  வேலை செய்தவர்களில் யோசித்தவர்கள் சொந்த தொழில் செய்கிறார்கள்.  யோசிக்காதவர்கள்  பத்து வருடமாக ஒரே இடத்தில்  இருக்கிறார்கள்.

வெற்றிகரமான முதலாளி என்பவன் தொழிலாளியாக இருந்திருப்பான்.  வெற்றிகரமான தலைவன் என்பவன் தொண்டனாக இருந்திருப்பான்.  அது போல வெற்றிகரமான வாழ்க்கை, தவறை சரி செய்து முன்னேறுவதில் இருக்கிறது.  ஜடத்தில் தவறு ஆன்மாவின் பண்புகளால் மாறுகிறது.  அல்லது ஆன்மாவின் பண்புகள் ஜடத்தை தவறு செய்ய விடாமல் தடுக்கிறது. இந்த புரிதல் உள்ள இடங்கள் பரிணாமத்தில் முன்னேற்றத்திற்கான இடங்கள்.

அப்படி ஒரு புரிதலை  கொண்டு வர முடியாததற்கு காரணம் முன்னேற முடியாததற்கு காரணம் நம் மனம் கடந்த காலத்தில் மட்டும் இருப்பதால். அதை வைத்து எதிர்காலத்தை முடிவு செய்வதால்,.அதற்கு ஒரு தீர்வு தெரியும் போது அது நாம் அறிந்தவற்றிக்கு எதிராக இருக்கும் போது  நம் மனம் அந்த எதிரானவைகளை விலக்கி நாம் நினைத்ததை சரி என்று சாதிக்குமே  தவிர அடுத்த நிலைக்கு சென்று அதை சரி செய்ய நினைப்பதில்லை.  உணர்வுக்கு தெரியாதது அறிவுக்கு தெரியும் என்பது போல உடல், உணர்வு, அறிவு மூன்றுக்கும் தெரியாதது ஆன்மாவிற்கு தெரியும்.

அதுவும் தெரியாத பண்புகளை, உயர்ந்த மனப்பான்மையை உள்ளடக்கியதாக இருந்தால் அதை நாம் போற்றுவோமே  தவிர செய்வதில்லை.  செய்து அனுபவத்தில் பார்ப்பதில்லை.  When unknowable comes as values we exaggerate and adore it, glorify it to keep it beyond our capacity – என்கிறார் கர்மயோகி.

நாம் நமக்கு தெரியாதது, புரியாதது, அறியாதது, அறிய முடியாதது அனைத்தையும் ஒரு தூரத்தில் வைப்பதில் சந்தோஷமடைகிறோம்.  அப்படி தூரமாக இருப்பதாலேயே அதை போற்றுகிறோம். அதை செய்யாமல் இருப்பதிற்கான காரணங்கள் நமக்குத் திருப்தி அளிக்கிறது.  ஆனால் செய்து அதனால் வரும் ஆனந்தத்தை அடைய விரும்புவதில்லை.  அன்னையைக்கூட தூரத்தில் இருக்கும் தெய்வமாக  நினைக்கப்பிடிக்கிறது. மலர் வை, 1008 தடவை ஓம் நமோ பகவதே சொல், தினமும் ஒரு வரி சாவித்ரி எழுது, லைஃப் டிவைன் தீம்ஸ் எழுது   என்றால் பிடிக்கிறது.  அன்னை விரும்பும் பண்பை ஏற்றுக் கொள் என்றால் புரியவில்லை, முடியவில்லை என்கிறோம்.  அதை செய்யும் போது தான் அன்னை என்பது ஒரு – கோட்பாடு ஒரு யதார்த்தம் concept and reality என்பது புரியும்.  அது எண்ணத்தால் முடியாது.  அதை தாண்டிய சித்தத்தால் consciousness ஆல் முடியும்.

அதற்கு, தவறை, பிழையை முதலில் உணர வேண்டும். உணர்ந்ததும் அது confusion  / curiosity  / reason – குழப்பம், அறியும் ஆர்வம் , காரணத்தை ஆராயும் குணம் என்று  மாற வேண்டும்.   அப்படி செய்யும்போது தவறை  சரி செய்யும் வழி மட்டுமல்ல – இனி அந்த விஷயத்தில் தோல்வியே வராத ஒரு முழுமையான அறிவு consciousness  கு புலப்படும்.

நாம் நம் தவறை ஆராய்ந்து பார்ப்பதில்லை. வாழ்வின் சட்டங்கள் என்ன சொல்கிறது, சமுதாய சட்டங்கள் என்ன சொல்கிறது, பிரபஞ்ச சட்டம் என்ன சொல்கிறது என்று எதையும்  நாம் கவனிப்பதில்லை . அவை அனைத்தும் வாழ்வின் குறியீடுகள்.

ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் ஒரு symbol -குறியீடு உண்டு.  அதை பின் பற்றாதவர்கள் முன்னேறுவதில்லை.  சென்ற நூற்றாண்டு automation . இயந்திரங்களின் வளர்ச்சியை பயன்படுத்திக்கொள்ளாதவர்கள் சென்ற நூற்றாண்டில் முன்னேறவில்லை. பழம் பெருமை பேசிய கம்பெனிகள் அனைத்தும் மூடப்பட்டன அல்லது விற்கப்பட்டன.  இந்த நூற்றாண்டு transparency – வெளிப்படைத்தன்மை. Internet ஆல் வந்த அந்த வெளிப்படைத்தன்மை மனித உரிமை, மனித மேம்பாடு, பண்முக அறிவு , பல்வகைத்திறன் ஆகியவற்றிற்காக பண்புகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இந்த நூற்றாண்டில் முன்னேறப் போவதில்லை.

நான் முன் சொன்ன இந்த இரண்டு point களும் புரிய வேண்டுமென்றால் ஒரு exercise செய்து பார்க்கலாம்.  உங்கள் ஊரில் உள்ள ஒரு பெரிய மார்க்கெட், பஜாரில் இந்த ஆரம்பம் முதல் அந்த கடைசி வரை ஒரு நடை conscious  ஆக சென்று பாருங்கள்.  Window shopping என்னுமளவிற்கு கூட செய்யலாம்.  curiosity , confusion , reason என்று mind should be at its elements – குழப்பம், அறியும் ஆர்வம் , காரணத்தை ஆராயும் குணம் என்று புத்தி அதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்கிறார் கர்மயோகி .  நான் Pondy Bazar 3 km Road இல் நடந்தேன்.  பாலாஜி பவனில் அடுத்த வேளைக்கு சாப்பாடு கிடைக்காது என்னும் மனப்பான்மையோடு இருக்கிறார்களோ என்னும் அளவிற்கு கூட்டம், இரண்டு சீட்டு கேட்டு கெஞ்சும் reservation , பக்கத்தில் One Plus mobile showroom il  – 30,000 – 40,000 phone வாங்க நிற்கும் கூட்டம். ஒரு T -Shirt , ஒரு shoe  8,000,10,000 விற்கும் Signature கடைகள்.  100 ரூபாய் pant , 60 க்கு shirt விற்கும் கடைகள், ஒரே மாதிரி பொருட்களை விற்கும் கடைகள் அவர்களிடையே இருக்கும் போட்டி, தன்னம்பிக்கை , எந்த கடையில் கூட்டம் அதிகம் இருக்கிறது, ஏன் ,  சில கடைகளில் கூட்டமே இல்லை, சில display  வில் இருக்கும் creativeness, பத்து  வருடத்திற்கு முன் இருந்த அதே பொம்மைகளை வைத்து இருப்பவர்கள் ஒரு சில வண்ணங்களில் மட்டுமே வைத்தாலும் நல்ல வியாபாரம் செய்யும் Ramraj,  வெறும் வெள்ளை சட்டைகளை  மட்டுமே  விற்கும் கடைகள், ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில்  வாடகை தரவேண்டிய இடத்தில்  கலர் கோலமாவு விற்கும் கடை வாடிக்கையாளரைக் கவரும் முறைகள். Police station வாசலில் நடக்கும் பஞ்சாயத்துகள், lock up இல் விழும் அடிகள், தெரு ஒர கையேந்தி பவன்கள், நட்சத்திர ஓட்டல்கள் – எல்லாவற்றிலும் நோக்கம், மனப்பான்மை, திறமை, தன்னம்பிக்கை,   என்னும் கண்ணோட்டத்தில் பார்த்தால் நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம், எவ்வளவு தவறுகளை செய்து கொண்டு இருக்கிறோம், எவ்வளவு சந்தர்ப்பங்களை தொலைத்திருக்கிறோம் என்பது புரியும்.  இதைத்தான் bring entire mind in its elements என்கிறார் கர்மயோகி.

நம் தவறுகளை நாம் உணர்ந்த பிறகு அது confusion குழப்பமாகவும், பின் curiosity ஆராயும் ஆர்வமாகவும், பின் insight உட்பார்வையாகவும்  , பின் intuition உள்ளுணர்வாகவும் மாறவேண்டும் என்பது வழி.  காரணம் குழப்பம் என்பது உங்கள் தவறைத் தாண்டிய வேறு ஒரு விஷயம் உங்கள் அறிவுக்கு தென்படுகிறது என்பது பொருள்.  curiosity  என்பது directed intelligence to the unknown . தெரியாததை , புரியாததை ஆராய்வது.. ஏற்கனவே நடந்த விஷயங்களில் இருந்து இது எப்படி மாறுகிறது என்பதை சிந்திக்க ஆரம்பிப்பது. அதை பற்றி முழுதும் புரிவது comprehension  ஒரு விஷயத்தில் முழுதும் புரிந்தது அனைத்து விஷயங்களிலும் புரிய ஆரம்பித்தால் அது insight . நடக்கப் போவதை முன்பே அறிய முடிந்தால் அது intution . -ஒரு தவறிலிருந்து ஒன்றை தெரிந்து கொள்வது அதன் மூலம் higher consciousness க்கு செல்வதற்கு இதுவே process . யோகிகளுக்கான குணம் என்று சொல்லப்பட்ட இவைகளை உயர் பண்புகளின்  பார்வையில் ஒரு செயலை, ஒரு  நிகழ்வை ஆராயும் போது consciounesss க்கு புரியும்.

அப்படி நாம் செய்யும் போது  நம் mind லிருந்து வெளியே வருகிறோம்.  அது சொல்வது மட்டுமே உண்மை என்று நம்பாமல் அதைத் தாண்டிய விஷயங்களும் உண்டு என்ற நம்பிக்கை வரும்போது நாம் பொருள்வாதி என்னும் நிலையிலிருந்து evolve ஆகிறோம்.

இதனை தொடர்ச்சியை — 5 ஆம் பகுதியில் படிக்கலாம்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »