அதுவும் நாம் தவறு செய்யும் போது பிறர் அதை சுட்டிக்காட்டினால் எது சரி என்பதைச் சொன்னால் நாம் செய்யும் தவறை நாம் நியாயப்படுத்தும் விதங்களைப் பார்த்தால், நம் எனர்ஜி, நம் மனப்பான்மை எங்கே இருக்கிறது நாம் யாருக்கு சேவை செய்து கொண்டு இருக்கிறோம், falsehood க்கா , சத்தியத்திற்கா என்பது புரியும்.
இன்னும் நன்றாக யோசித்தால் உப்பு எவ்வளவு போட வேண்டும் , சக்கரை எவ்வளவு போட வேண்டும் என்பது முதல் அத்தனை விஷயங்களிலும் ஒரு தவறுக்கு பிறகே கற்றுக்கொள்கிறோம்.
Microsoft ன் வெற்றிக்கு பின்னால் இத்தகைய ஒன்று இருப்பதாகச் சொல்வார்கள். Microsoft ஒரு perfect product க்காக காத்திராமல் தவறுகள் உள்ள ஒரு product -ஐ market -ல் விடும். அதன் பிறகு வரும் feedback -ல் இருந்து அதை update களில் சரி செய்கிறது. மற்றவர்கள் அந்த perfection ஐ முதலிலேயே கொண்டு வர நினைக்கும் போது காலம் அதிகமாவது மட்டுமல்ல அது microsoft -ன் copy -ஆக மாறிவிடுகிறது. நம் product- ன் தவறுகளை, நம் தவறுகளை நம் customer க்கு ஏற்றார் போல மாற்றுவது முன்னேற்றம். அதுபோல வாழ்க்கையிலும் நாம் நம்மிடம் உள்ள ஏராளமான தவறுகளை , குணக்கேடுகளை நாம் வளரும் நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு வந்தால் ஒரு கட்டத்தில் நல்ல மனிதன் என்னுமளவிற்கு மாறமுடியும்.
இன்று Behavioural Science , Artificial Intelligence என்று அதிவேகமாக பரவி வரும் technology விஷயங்களின் அடிப்படை, மனிதன் எந்த மாதிரி தவறுகளை செய்வான் எப்போது எந்த மாதிரி முடிவுகளை எடுப்பான் என்பதை அடிப்படியாகக் கொண்டதே.
அறிவியல் வளர்ந்த விதத்தை கவனித்தால் தவறுகள் எப்படி innovation creativity -ஐ தந்தது என்பதற்கு பல உதாரணங்களைத் தருகிறது. தவறு எது சரியானது எது என்பதை சுட்டிக்காட்டுகிறது. தவறை ஏற்றுக்கொள்வது ஒரு புது வழியைக் காட்டுகிறது. ஒரு முடிவை எடுக்கும் முறை எது, அது எத்தனை விஷயங்கலோடு தொடர்பு கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.
நாம் தவறு என்று நினைக்கும் இடங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தவறு அதனால் வந்த ஞானம், தண்டனை ஆகியவற்றை ஆராய வேண்டும். அதனில் பின்னல் உள்ள முழுமையை ஆராயவேண்டும். அதன் மூலம் , life , mind , supermind என்ன சொல்கிறது என்று யோசிக்கவேண்டும். எதையும் நாம் சிந்திப்பதில்லை. கவனிப்பதில்லை. Objective analysis of life – வெளியே செய்ய வேண்டியது அனைத்தையும் செய்ய வேண்டிய முறைப்படி செய்தோமா – subjective analysis of life – உள்ளே அதற்கான, எண்ணம், மனப்பான்மை, நோக்கம் சரியாக இருந்ததா என்று பார்ப்பது ஒரு தவறிலிருந்து பல ஞானத்தைப் பெறுவது நாம் எதையும் அனுபவித்தே புரிந்து கொள்ளும் – யார் சொல்லையும் கேட்காத சாதரண மனிதர்கள். அதனால் அனுபவித்ததை ஆராய்ந்து பார்த்தால் தவிர நாம் – evolve ஆக முடியாது , பரிணாமத்தில் முன்னேற முடியாது.