படிப்புத் தேவையில்லை என்று அறிவு முடங்கி முன்னேற்றத்தை எதிர்த்தப் போது என் அப்பாவின் அடிக்கு பயந்து ஒளிந்தேன் . அவரிடம் வாங்கி இருந்தால் ஒருவரோடு போயிருக்கும். அடுத்த 20 ஆண்டுகளில் குறைந்தது 20 பேரிடமாவது அடி வாங்கி இருப்பேன். ஆனால் படிப்பு வேண்டாம் என்று எதிர்த்த அதே தீவிரத்தோடு படிப்பு வேண்டும் என்று வேறு ஒரு அப்பா சொன்னதைக் கேட்க ஆரம்பித்த போது வீறு கொண்டு எழுந்து ஞானத்தைத் தேடுகிறது என் அறிவு.
வாழ்வையும் ஆன்மாவையும் பிரிக்கும் அறியாமையை விலக்குவதே நாம் நம் பொருள்வாதியின் பார்வையிலிருந்து வெளியே வருவது.
இணக்கத்தீர்வு higher consciousness னால் தான் வருமா என்று ஒரு சாதகர் அன்னையிடம் கேட்டப்போது அவர் கூறியது – ஆம். ஆனால் அதற்கு முதலில் நீ conscious ஆக இருக்கவேண்டும். பின் higher consciousness க்கு வரலாம்.அதன் பின் அந்த சாதகரிடம் அவர் ‘Try this little exercise ‘ என்கிறார். இன்று நான் பேச வேண்டியதை முழுதும் நினைத்துப் பார்த்து கவனமாக அதை மட்டுமே பேசுவேன் என்று முடிவு செய். பின் பேசியதை கவனித்துப் பார். பெரும்பாலும் தேவையில்லாததை, பொருத்தமற்றதை பேசிக் கூடாததை பேசியிருப்போம். அல்லது இன்று பொய்யே சொல்ல மாட்டேன், நடந்ததை நடந்தப்படியே சொல்லுவேன் என்று முடிவு செய். பின் கவனித்துப் பார். பேசியது அனைத்தும் பொய்யும் கற்பனையும் மிகைப்படுத்துதலுமே கலந்து இருப்பது தெரியும். காரணம் – நாம் ஒவ்வொரு நிமிடமும் கூட்டத்தில் நிற்பவன், பின்னாலிருந்து தள்ளப்படும் வேகத்திற்கு ஏற்றார் போல, முன்னே செல்வது போல வாழ்க்கையில் சென்றுக் கொண்டிருக்கிறோம். மற்றவர்களின் பலம், சக்தி, ஆற்றல், எண்ணம், இயக்கம், அதிர்வுகள், சூழல் ஆகியவை தான் நம்மை இயக்குகிறதே தவிர நாம் ஒரு வினாடிக் கூட நம்மைப் பற்றிய consciouss வோடு இருப்பதில்லை. நம் ஆர்வம், நம் உறுதி, நம் மனப்பான்மை நம்மை நடத்துவதில்லை. அதனால் தான் இறைவன் விரும்பினாலும் நமக்குத் தர முடிவதில்லை. தருவதையும் நம்மால் பெற்றுக் கொள்ளமுடியவில்லை. சூழலில் உள்ளதையே நம்மால் புரிந்துக் கொள்ளமுடியாதபோது சூக்ஷமத்தில் உள்ளதை நம்மால் எப்படி புரிந்துக் கொள்ளமுடியும்.
ஜடமும் ஆன்மாவும் வேறு வேறாக இருக்குமானால் அதை reconcile செய்வது பற்றி பகவான் பேசி இருக்க மாட்டார். இரண்டும் ஒன்றே வேறு வேறு நிலையில் இருக்கிறது. இரண்டும் ஒரே நோக்கத்தை ஒரே vibration ஐ வேறு வேறு ஆற்றலாக ஆக வெளிப்படுத்துகிறது. அதை நாம் தான் எதிர் எதிரானதாக நினைக்கிறோம். ஒன்றை வாழ்வுக்கானக் கேள்வியாகவும், அடுத்ததை அதற்கான பதிலாகவும் புரிந்துக் கொண்டால் நாம் பரிணாமத்தில் முன்னேறுகிறோம்.அதற்கான ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது பொருள்வாதி ஆன்மீகவாதிகளின் பகுதியான பார்வையில் இருந்து வெளியே வருவது. ஒரு integral முழுமையான பார்வையில் புரிந்துக் கொள்வது.