அடுத்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய பொதுப்புத்தி. Values gives commitment – We are identified with our values . நாம் பெரும்பாலும் நம் பண்புகளால் தான் அறியப்படுகிறோம். நம் திறமை எதுவானாலும் உதாரணமாக நாம் ஆசிரியர் என்றால் -நல்ல ஆசிரியர், புரியும்படி சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர், அறிவுள்ள ஆசிரியர், மோசமான ஆசிரியர், நல்லெண்ணம் உள்ள ஆசிரியர் , அக்கறையுள்ள ஆசிரியர் என்றும் நாம் வேலைக்காரன் என்றால் – நல்ல வேலைக்காரன், திறமையான வேலைக்காரன், சுறுசுறுப்பான வேலைக்காரன், விசுவாசமான வேலைக்காரன், தாய் என்றால் -நல்ல அம்மா, பண்பான அம்மா, கண்டிப்பான அம்மா – என்று எதை ஆராய்ந்து பார்த்தாலும் நம் திறமை ஒரு பண்போடு சம்மந்தப்படும் போது தான் அது முழுமை பெறுகிறது – நம்மை அறியமுடிகிறது. நல்லது, புண்ணியம் என்று நம்மில் விதைக்கப்பட்டது அனைத்தையும் ஆராய்ந்துப் பார்த்தால் அது ஒரு நல்ல பண்பு அல்லது குணத்தோடு சம்மந்தப்பட்டு இருப்பது தெரியும். அதை உயர்த்திக்கொண்டு செல்வது பரிணாம வளர்ச்சி. அதற்கென்ன முயற்சி ஒன்றை நாம் எடுக்க வேண்டும். முயற்சி முதலில் கட்டுப்பாடாக மாற வேண்டும். கட்டுப்பாடு பக்குவமாகி பண்பாகி சுபாவமாக மாற வேண்டும்.
நம் பண்புகள் தான் நமக்கு ஒரு commitment -ஐ அதை தொடர்ந்து செய்ய, தக்க வைக்க தேவையான motivation -ஐ energy -ஐ தரும். நாம் ஒரு விஷயத்தில் நல்ல பெயர் எடுத்த பிறகு அதை காப்பாற்றுவதற்குள் நாம் படும் பாட்டை பார்த்தால் இது புரியும். கூடல்களில் D சொற்பொழிவை கேட்பது என்பது எல்லாம் ஒரு பண்பின், முன்னேற்றத்திற்கான வழியை தேடும் ஒரு பண்பினால் வந்தது. ஒரு மணி நேரமாக நான் பேசுவது போரடித்தாலும் அணைத்து விட்டு செல்லாமல் இருப்பது இங்கிதம் என்னும் பண்பு தரும் commitment. அதனால் எந்த ஒரு செயலுக்கும் ஒரு உயர் பண்பை இணைத்து விட்டால், அதில் ஒரு commitment தானாகவே வந்து விடும்.
உதாரணமாக இளைக்க வேண்டும் என்பவர்கள், என்ன செய்தாலும் பெரும்பாலும் இளைப்பதில்லை . Diet -ஐ , commitment -ஐ ஏதோ ஒரு விதத்தில் விட்டு விடுவார்கள். ஆனால், இளைத்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்றோ அல்லது இளைத்தால் எவ்வளவு அழகாக இருப்போம், small , medium போன்றவைகளில் இருக்கும் ஏராளமான design-களை போட்டு பார்க்கலாமே என்று நினைத்தால், அதனால் வரும் ஆனந்தத்தை கற்பனை செய்தால், அதில் ஒரு commitment வரும், determination வரும். நீங்கள் யார் என்ன செய்கிறீர்கள், எதற்காக செய்கிறீர்கள், ஏன் செய்கிறீர்கள், எப்படி செய்கிறீர்கள் என்ற தெளிவு இருப்பது பொதுப்புத்தி. அது நாம் நினைத்ததை சாதித்து நாம் பெற வேண்டிய ஆனந்தத்தை நமக்குத் பெற்று தரும். அப்படி இல்லையென்றால் நம் வாழ்வு பிறரின் விருப்பத்திற்கு ஏற்பவே நடந்து கொண்டு இருக்கும்.
பண்புகளுக்கு மாறுவது என்பது சத்தியத்திற்கு மாறுவது. சத்தியத்தின் உருவம் அனைத்தும் அன்னையின் படைப்புத்திறனுக்கான, பரிணாம முன்னேற்றத்திற்கான கருவிகள். பண்புகளில் முன்னேற்றம் என்பது பரிணாமத்தில் முன்னேற்றம். பரிணாமத்தில் முன்னேற்றம் என்பது நம் வாழ்வில் சுபிட்சமாக எதிரொளிக்கும்.