அடுத்தது நமக்கு முன்னேற்றம் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு இருக்க வேண்டும். பிறக்கிறோம் இறக்கிறோம், இடையில் படிப்பு, வேலை திருமணம் என்று இருக்கிறோம். அதிலும் படிப்பு என்றால் rank , வேலை என்றால் promotion , திருமணம் என்றால் அடுத்தது குழந்தை பிறப்பு என்று அதையே அடுத்த கட்ட முன்னேற்றம் என்று எடுத்துக் கொள்கிறோம். அதெல்லாம் எல்லோரும் செய்வது தான். தானாகவே அவையெல்லாம் சமுதாய, குடும்ப நிர்பந்தத்தால் நடக்கத் தான் போகிறது. அல்லது நடந்து விட்டது. அது நாம் விரும்பிய முன்னேற்றம் அல்ல. சமுதாயமும் குடும்பமும் நம் மேல் திணித்தது. அதனால் தான் நம்மால், படிப்பு, வேலை, குடும்பம், உறவுகள் என்று எதிலும் ஆனந்தம் பெற முடியவில்லை. காரணம் நம் முன்னேற்றம் எங்கே இருக்கிறது . அதன் மூலம் நாம் அனுபவிக்க கூடிய ஆனந்தம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற தெளிவு இல்லை. இப்போது யாரையாவது நான் உங்கள் life -இல் மூன்று அல்லது நான்கு priority முன்னுரிமை எதற்கு கொடுப்பீர்கள் என்றால் யாருக்காவது சொல்லத் தெரியுமா? அந்த தெளிவு இருக்கிறதா? மீண்டும் குடும்பம், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு கடமையை, அதை ஒட்டிய நம் ஆசைகளை த்தான் நம் முன்னேற்றம் என்று நினைத்திருப்போம். சரி அது தான் உங்கள் முன்னுரிமை, priority என்று எடுத்துக் கொண்டால், அதன் மூலம் நீங்கள் பெற நினைத்த ஆனந்தத்தை பெறுகிறீர்களா என்றால் பெரும்பாலும் பதில் இல்லை என்றே இருக்கும். இங்கு தான் நமக்கு நம் முன்னேற்றம் நம்மை வித்தியாசப்படுத்துவதில் இருக்கிறது என்னும் பொதுப்புத்தி வர வேண்டும். எல்லோரும் செய்யும் ஒரே விஷயத்தை, அதே போல செய்தால் நமக்கு அதிலிருந்து ஆனந்தம் பெற முடியாது. நமக்கே கூட முன்பு செய்ததையே அதே முறையில் , அதே செயல்பாடோடு, அதே மனப்பான்மையோடு செய்தால் result மட்டும் எப்படி வேறு மாதிரி இருக்கும். அடுத்த உயர்ந்த நிலையில் எப்படி வரும் என்ற கேள்வி நமக்கு எழ வேண்டும். For happiness, you have to make a difference. வித்தியாசமாக சிந்திப்பவர்களே , வித்தியாசமாக செய்தவர்களே முன்னேறி இருக்கிறார்கள், புகழ் பெற்று இருக்கிறார்கள். அதிகாரத்திற்கு வந்து இருக்கிறார்கள் இங்கு அறிவு, அனுபவம் என்பதெல்லாம் முக்கியமல்ல. என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, எப்படி செய்கிறீர்கள் என்பதே முக்கியம். அதற்கு நமக்கான progress , goal , ambition என்ன என்பது பற்றிய ஒரு தெளிவு இருக்க வேண்டும். அதை நோக்கிய பார்வை, பயணம், அதில் பெரும் வெற்றி தான் ஆனந்தத்தை தரும்.
முன்பு எட்டு முக்கியமான பொதுப்புத்தியில் – லிங்க் கீழே :
சொன்னது போல, முன்னேற்றம் என்பது நாம் ஒரு பண்பின் மேல் வைக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை மேல் மற்றவர்களுக்கும் நம்பிக்கை வரும் போது தான், நாம் அடுத்த கட்ட முன்னேற்றத்தை பெறுகிறோம். விஞ்ஞான கண்டுபிடுப்புகள், technology entrepreneruship என்று அடுத்த கட்டம் சென்றவர்களை கவனித்து பார்த்தால் இந்த process அவர்கள் வாழ்வில் நிச்சயம் நடந்து இருக்கும். நம் வீட்டருகில் காய்கறி விற்பவர், டைலர், பழய பேப்பர் பாத்திரம், புடவை எடுப்பவர் , பூக்காரி என்று பார்த்தாலும் தன்னை சுற்றி உள்ளவர்களின் நம்பிக்கையை [பெற்றவர்களே வளர்ந்து இருக்கிறார்கள்.
என் கம்பெனி 2008-இல் ஆரம்பித்து கர்மயோகியின் Blessing-குக்காக மைலில் எழுதி கேட்ட போது -சொன்ன சொல் தவறமாட்டேன், project hanover செய்வது முதல், பணப் பட்டுவாடா வரை என்பதை கொள்கையாக எடுத்துக் கொள் என்றார். அப்போது அதை ஏன் சொன்னார் என்பது புரியவில்லை. அதனால் பண விஷயத்தில் ரொம்பவும் பயப்படுவேன். risk எடுக்க மாட்டேன். கடன் எனபது கிடையாது. Credit card கூட வாங்கவில்லை. காரைக் கூட பணம் சேமித்து தான் வாங்கினேன். loan கிடையாது. அப்படி இருந்த எனக்கு 2015-க்கு பிறகு credit / loan போன்றவை இருந்தால் தான் business செய்ய முடியும் என்ற நிலை வந்தது. எப்படி கேட்பது என்று தெரியாத நிலையில், அதுவும் கையில் project -ஐ வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் ஒரு கம்பெனி தானாகவே முன் வந்து யாருக்கும் 1 லட்சம் credit கொடுக்க யோசிக்கும் ஒரு கம்பெனி அதற்கான Blank cheque பல வாங்கும் கம்பெனி எந்த வித condition-னும் இல்லாமல் 75 லட்ஷம் வரை credit கொடுக்க முன் வந்தது. அது நான் அது வரை நம்பிக்கை வைத்த ஒரு பண்பின் மேல் சமுதாயம் வைத்த நம்பிக்கை. இவற்றையெல்லாம் நாம் கவனிப்பதில்லை. கவனிப்பது பொதுப்புத்தி.
இதை நம்முள் , நம் மனநிலையில் எப்படி கொண்டு வருவது என்பதற்கான process -ஐயும் சொல்கிறார். நம் மனம் இரு பகுதிகளில் ஆனது. ஒன்று அறிவு, knowledge , இன்னொன்று will – உறுதி. இன்று இப்போது கேட்பதை , அறிவு ஏற்றுக் கொண்டால், உணர்வு அதை உண்மை என்று நம்பினால், மனம் அதை செய்ய உறுதி எடுக்கும். மனது மட்டுமோ, அறிவு மட்டுமோ ஏற்றுக் கொண்டால் அது opnion . அபிப்ராயமாக மாறி விடும். இதை செய்ய வேண்டும் என்று உணர்வில் தோன்றினால், அதை மனம் முழுதுமாக ஏற்கும். அது முடிவு. decision. இது மேல் மனதை கட்டுப்படுத்துவது. இதை ஆழமாக ஏற்பது, முன்னேற்றத்தை, ஆனந்தத்தை மட்டுமே நினைத்து focused ஆக ஏற்பது ஆழ் மனதிற்கு செல்வது. அப்போது அந்த முடிவின் பெயர் determination தீர்மானம். அதையும் விவேகம் பாகுபாடோடு செய்ய வேண்டும்.
விவேகம், பாகுபாடு என்று ஏன் சொல்கிறேன் என்றால் நாம் ஒன்றை ஆராய்ந்து பார்க்கும் போது அதை பகுத்தறிவு என்கிறோம். அது பெரும்பாலும் நம் அபிப்ராயம், கருத்து, முன்முடிவுகள் போன்றவைகளை ஒட்டி அல்லது பழைய அனுபவம் அதனால் வந்த பலன் என்றே இருக்கும். அது உண்மை என்றாலும் அந்த கால கட்டம், சூழல், மனிதர்கள், அன்றைய நம் அறிவு நிலை, செயல் ஆகியவை வேறு. அதனால் அந்த அனுபவம் வேறு. அது போலத் தான் இப்போதும் நடக்க வேண்டும் என்பதிலை என்னும் விவேகம், பாகுபாடு நமக்குத் தேவை. அது அறியாமை அல்ல. அறிவை முழுதும் பயன்படுத்தாத ஒரு நிலை. விடாமுயற்சி என்னும் பெயரில் நாம் செய்யும் தவறுகளை, செயல்களை இப்போது யோசித்து பார்த்தால், இது புரியும். பெரும்பாலும் செய்ததையே செய்வோம். அல்லது அது சம்பந்தமாக பிறர் சொன்ன அறிவுரை, அல்லது அது சம்பந்தமாக படித்தது, கேட்டது என்று செய்வோம். ஆனால் விவேகம் என்பது என்னவென்றால் ஏற்கனவே செய்ததில் என்ன தவறு, அது பலன் தராததற்கு காரணம் என்ன, அதன் பின்னால் உள்ள சட்டம் என்ன, அதை சரி செய்ய என்ன தேவை என்று கண்டுபிடித்து அதை சரி செய்து முன்னேறுவதே விவேகம். இப்போது அதன் பெயர் விடாமுயற்சி அல்ல. அர்ப்பணிப்பு, அது ஆன்மாவின் பண்பு. விடாமுயற்சியிலிருந்து அர்ப்பணிப்பு என்று மனதில் இருந்து ஆன்மாவிற்கு என்னும் பரிணாம வளர்ச்சி என்பதால் அது வரை இழந்ததையும் சேர்த்தே கொண்டு வரும்.