Share on facebook
Share on telegram
Share on whatsapp

பொதுப்புத்தி – பொறுப்பேற்றல்

இந்த பிரபஞ்சத்தை தன் ஆனந்தத்திற்காக இறைவன் படைத்தான் அந்த ஆனந்தத்தின் வெளிப்பாடு தான் நாமும், நம் வாழ்வும். நம் இருப்பு, இயல்பு, existence and nature , அதை ஒட்டிய மனப்பான்மை அதற்கான அபிப்ராயங்கள், அதன் பின்னால் அந்த அபிப்ராயம் வந்ததற்கான அனுபவங்கள், அதை ஒட்டிய நம் செயல்கள், அதில் வெளிப்பட்ட பாடங்கள், அதன் பலன்கள் , என்று பார்த்தால் எல்லாம் நம் வாழ்வு மற்றும் மன வளர்ச்சிகளே என்பது புரியும். அதையே பரிணாமம், உயர்சித்ததை அடைவதற்கான பயணம் என்கிறோம். இதன் மூலம் நம் பிரச்சினை, துன்பம், வலி போன்றவற்றுக்கான காரணங்களை முழுதுமாக புரிந்துக் கொள்ளவில்லை என்றால் கூட, பிரச்சினை ஏன் வருகிறது, நாம் அதற்கு எப்படி காரணமாவோம். அதற்கு தீர்வு என்ன என்று சிந்திக்கும் அளவிற்காவது வந்திருப்போம். அதை செயல்படுத்தும் நிலைக்கு செல்வது  நம்மை பொதுப்புத்தி என்னும் நிலைக்கு எடுத்துச் செல்லும். குறைந்த பட்சம் ஒரு முழுமை தெரிந்த அறிவின் முதிர்ச்சி – maturity-ஆகவாவது மாறும்.  அப்படிப்பட்ட maturity, foresight எதிர்காலத்தை பற்றிய பார்வை என்னும் நிலைக்காவது  கொண்டு  செல்ல உதவும் நிலைகளை அதற்கான பொதுபுத்திகளையும் அவருடைய கட்டுரைகளிலிருந்து தொகுத்து இருக்கிறேன்.

இதை ஒன்றன் பின் ஒன்றாக பதிவிட நினைக்கிறேன். இத்தகைய நடைமுறை அனுபவங்கள் பிடித்திருந்தால் வாழ்க்கையின் சட்டங்களை இந்த வகையில் பொருத்திப்பார்ப்பது பிடித்து இருந்தால் rameshposts@gmail.com  கு அல்லது இதே வலைதளத்தில் உள்ள Share Your Feedback இல் எழுதுங்கள். 

இங்கு முதல் விதியாக அவர் சொல்வது evolution is responsibility  பொறுப்பை ஏற்றுக் கொள்வதே நம் பரிணாம வளர்ச்சிக்கு முதல் படி.

நான் காரணமாக இல்லாமல் இந்த சூழ்நிலை, பிரச்சினை, துன்பம் வந்து இருக்காது என்று ஏற்றுக் கொள்ளும் மன நிலை மிக முக்கியமானது.. காரணம் வாழ்வில் அனைத்தும் நம் தவறை மனக்குறைவு, குணக்குறைவு, அறிவுக் குறைவு, திறமை குறைவு என்று எதோ ஒன்றை சுட்டிக்காட்டவே வருகிறது. அதிலிருந்து வெளியே வந்து பிரச்சினைகளை எதிர்கொள்ள எதிர்காலத்தில் அது போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க தேவையான முதிர்ச்சி பக்குவம் தரவே வருகிறது. நமக்கு வாழ்வில் மீண்டும் மீண்டும் வரும் பிரச்சினைகளை பார்த்தால் இது புரியும். இதை முதலிலேயே புரிந்துக் கொண்டால், துன்பங்களை தவிர்க்கலாம். அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு செல்லலாம்.

நான் சென்னை வெள்ளத்திற்கு பிறகு முதலீட்டை கடனாக  திரட்டி சுமார் 75 லட்சம் மதிப்புள்ள ஒரு ப்ரொஜெக்ட்டை எடுத்தேன். என் தொழில் எலெக்ட்ரோனிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கான ஒரு technical ஆன தரை போடும் வேலை. மிகுந்த கவனமும், தரமும் தேவைப்படும் தொழில் . முழு வேலை  முடிந்து தரத்தை check செய்த பிறகே பணம் தருவார்கள். அதனால் அதிக ப்ரொடெக்ட் செய்யப்பட்ட இடமாக அது இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் திறப்பு விழாவன்று – ஒரு மத்திய அமைச்சர் முன்னிலையில் நடந்தது- ஏராளமான அரசியல்வாதிகள் மற்றும் தொண்டர்கள் அது பற்றி தெரியாமல் சேறு காலுடன் மற்றும் கொடிகள் நட chair  இழுக்க என்று அந்த இடத்தை சேத  படுத்தி விட்டார்கள். மறுநாள் customer சரியாக பாதுகாக்காதது , barricade வைக்காதது என்  தவறுதான் என்று கூறி அத்தனையும் சரி செய்து தர சொன்னார்கள். சட்டப்படி இடத்தை ஒப்படைத்த பிறகு அது என் பொறுப்பு அல்ல. தவறு என்னுடையது இல்லை என்பதற்கு என்னிடம் ஏராளமான ஆதாரங்கள் இருந்தது. அவர்கள் கேட்பதை  செய்து கொடுத்தால்   எனக்கு சுமார் 8 லட்சம் நஷ்டமாகும். கர்மயோகியிடம் என்ன செய்வது  என்று மெயில் போட்டு கேட்டேன்.

நான் பொதுவாக எதுவும் அவரிடம் கேட்பதில்லை. ஆனால் கேட்டால்   அவர் என்ன சொன்னாலும் அதை தட்டாமல் மாறாமல் செய்வேன்.  அதனால் பிடிக்கவில்லை என்றால் கூட சரி செய்து தருவதாக ஏற்றுக்கொண்டேன். செய்தும் கொடுத்தேன்.

முதல் நிலையில் அதன் ப்ராஜெக்ட் மேனேஜர் நெகிழ்ந்து போய் – உங்கள் தவறு இல்லை என்று தெரியும் என்ன செய்வது கம்பெனி சொல்வதை கேட்க வேண்டியதாக போய்விட்டது என்று சொல்லி இந்த நஷ்டத்தை நான் வேறு விதத்தில் ஈடு செய்கிறேன் என்று கூறி வேறு சிறு வேலைகளை அதிக லாபத்தில் கொடுத்தார். அதோடு அவரின் வேறு வேறு இலாகா சூப்பர்வைசேர் களிடமும் சொல்லி எங்கு உதவ சொன்னார். எல்லோரும் எனக்குதான் வேலை  தரவேண்டும் என்று சொல்லுவதால்  சந்தேகப்பட்ட அதன் இந்தியா தலைவர் – ஒரு korean என்னை பார்க்க வேண்டும் என்றார். அவரை சென்று பார்த்து பேசி கொண்டு இருந்த போது என் technical அறிவு பற்றி ஆச்சிர்யப்பட்டார். இவ்வளவு அறிவு இருக்குபோது நீங்கள் ஏன் உங்கள் சொந்த தயரிப்பு செய்யவில்லை என்று கேட்டார். ஏன் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு பொருளை உபயோக படுத்துகிறீர்கள் என்று கேட்டார். நான் உங்கள் கம்பெனி தான் சர்வதேச பொருள் வேண்டும், எங்கே செய்திருக்கிறார்கள்  என்று விவரம் வேண்டும் அவர்கள் சான்றிதல் வேண்டும் என்றெல்லாம் கேட்கிறார்கள் இல்லயென்றால் இதை விட சிறந்த பொருள் இதை விட குறைந்த  விலையில் செய்ய முடியும் என்றேன். உடனடியாக அணைத்து technical persons ஐயும் கூப்பிட்டு – chemcoats -என் கம்பெனி எந்த பொருள் போட்டாலும் கேட்க வேண்டாம் காரண்டி  மட்டும் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறி உடனடியாக ஆர்டர் போட்டார்.  

அது என் பத்தாண்டு கனவான – என் சொந்த brand தயாரிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவெற்றியது.  இன்று அது ஒரு leading brand ஆகா வளர்ந்து சிங்கப்பூரில் ஒரு ஆபீஸ் போடும் வரை சென்றது. இது போன்று நாம் தயங்கும், தவிர்க்கும் இடங்கள், துன்பப்படும் இடங்களுக்கு பின்னால் தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது. முன்னேற்றம் இருக்கிறது . அடுத்த கட்டத்திற்கு செல்லும் வளர்ச்சி, நம் ஒரு கனவு நிறைவேறுவதற்கான வளர்ச்சி இருக்கிறது.  அதற்கான விழிப்புணர்வு தருவது பொறுப்பேற்றுக் கொள்ளும் பொது புத்தி.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »