முரணானதை, நம் அனுபவம், அபிப்ராயம், அறிவு ஆகியவற்றைத் தாண்டிய முரணான விஷயங்களைக் கூட அறிய முடியும், உணர முடியும் என்பதைக் காட்டுகிறது. பொருட்களை மனிதர்களை ஊடுருவி அவற்றின் தன்மைகளை அறியவும், பிறர் எண்ணங்களை அறியவும், முகக்குறி, தோற்றம், உடல் மொழி, செயல்பாடுகள் ஆகியவற்றை ஆராயாமல் நேரடியாக ஓரளவு தெரிவிக்கும். தவறாகவும் இருக்கலாம் என்றால் நம்மிடையே ஒரு உஷார்த்தனம், விழிப்புணர்வை ஏற்படுத்த அது உதவும். அதையே நான் Insight உட்பார்வை என்கிறேன். சில நேரங்களில் அதை உள்ளுணர்வு என்றும் சொல்லலாம். உதாரணமாக குழந்தையிடம் பல் விஷயங்களை சொல்லாமலே புரிந்துக் கொள்கிறோம். முதலாளியின் போக்கு நமக்கு அத்துப்படி ஆகியிருக்கும். மனைவி கணவரின் குறிப்பறிந்து நடப்பது பல சமயம் உண்டு. . கடைக்குள் நுழையும் வாடிக்கையாளரின் தேவையை மார்க்கெட்டில், அல்லது சேல்ஸ் சிப்பந்தி குறிப்பாக உணர்ந்து அதற்கு ஏற்ப நடந்துக் கொள்கிறார். இதெல்லாம் எப்போது வரும் என்றால் வேலையில் ஆர்வம் allignment , முதலாளியுடனான சுமுகம் , allignment -கணவன் மனைவி என்றால் அன்னியோன்னியம், குழந்தை என்றால் பாசம் என்பது போன்ற ஏதோ ஒரு உணர்வே மனதிற்கு அந்த ஆற்றலைத் தருகிறது. அதற்கு பின்னால் எந்த இறைவன் விரும்பும் பண்பு அதை உருவாக்கியது என்று பார்த்தால் expansiveness , other man point of view, non reaction , silence போன்ற பண்புகள் வரும் போது முன் சொன்ன நேரடியாக உணரும் மனம் வளர்கிறது. அதாவது ஆன்மா பயன்படும் சக்தியாக மாறும் போது அது ஆற்றலைப் பெற்று செயல்படும் பண்பாக மாறுகிறது. அதனுடன் நம் மனம் ஒன்றும் போது அது செயல்படும் சக்தி பெற்று சுபாவம் ஆகிறது. குழந்தை முதலாளி, மனைவி, வாடிக்கையாளர் என்று நாம் ஆழ்ந்து ஒன்றியதைப் போல, நம் ஆழ்ந்த ஆர்வத்துடன் அல்லது அன்னையுடன் ஒன்ற முடிந்தால் நம் உட்பார்வை, உள்ளுணர்வு வளரும். இன்னும் அதிகமாக புரிய வேண்டும் என்றால் என் சிறிது வயதில் பெண்கள் பஸ் ஸ்டாப்பில் நிற்கும் போது, கூட்டமான இடத்தில நிற்கும் போது, யாராவது தூரத்திலிருந்து பார்த்தால் கூட புடவை தலைப்பை, தாவணியை சரி செய்துக் கொள்வார்கள். அந்த உள்ளுணர்வு வந்தது கற்பு என்னும் தத்துவத்தின் மேல் அவர்களை அறியாமல் அவர்கள் கொண்ட தொடர்பு. அது போல அன்னை என்னும் பரிணாமத்திற்கான, முன்னேற்றத்திற்கான ஆற்றல் அதே போன்ற உள்ளுணர்வை உட்பார்வையைத் தரும் என்பது அதை பயிற்சியின் மூலம் கொண்டு வர முடியுமென்பது என் அபிப்ராயம்.
மண் வாசனையை வைத்து மழை வரும் என்று சொல்வது, பசு, மிருகங்கள் அலைபாய்வதை, பாம்பு, திருடன் வந்து இருக்கிறான் என்று சொல்வது போன்றவை, சகுனங்களை பார்த்து சொல்வது என்று பல உதாரணங்களை இவற்றில் பொருத்தி பார்க்க முடியும். அவற்றை அவர்கள் எப்படி பெற்றார்கள் என்று நம் அறிவுக்கு ஏற்ற வகையில் சிந்தித்தால், அந்த அளவிற்கு அதை நாம் பெற முடியும். நான் கிராமத்தில் சில காலம் இருந்ததனால், என் தாத்தாவுடன் இருந்ததால் இவற்றில் சிலவற்றை என்னால் சொல்ல முடியும். உண்மையில் இது அவர் சொல்லிக் கொடுத்து வந்ததல்ல. அவருடனே இருந்ததால் ஏதோ ஒரு வகையில் அவர் சித்தம் consciousness எனதுள்ளம் வந்து இருக்கிறது. உள்ளுணர்வு, உட்பார்வை என்பதெல்லாம் என்னை பொறுத்தவரை ஒரு விழிப்புணர்வு. நம் சித்தம் பெரும் ஒரு அனுபவத்தின் சாரம்.
நம் கடந்த பத்து அல்லது இருபது ஆண்டு வாழ்க்கையில் – அப்பிராயங்கள், முன் முடிவுகள் இல்லாமல் ஒன்ற முடிந்தால் ஒவ்வொரு அனுபவத்தின் பின்னால் உள்ள வாழ்வின் சட்டம் மற்றும் அதன் சாரம் , அது ஏன் நடந்தது , அதற்கு நாம் எப்படி காரணமாவோம் என்பது புரியும். அந்த ஆராய்ச்சி விழிப்புணர்வாகி ஆழ்மனதில் சேரும்போது சரியான நேரத்தில் அது உட்பார்வையாக வெளியே வரும். அதை நம்மை சுற்றி உள்ள நாம் அதிகம் பழகிய நபர்கள் வாழ்வு நமக்கு தெரிந்தால் அதில் பொருத்தி பார்த்தால் அது உள்ளுணர்வாக மாறும். அதாவது நம் அனுபவம் உட்பார்வையாக மாறி அதற்கு ஒரு Character தரும்போது , அதாவது நம் அனுபவங்களின் சாரம் உட்பார்வையாக மாறும்போது அதை சிந்தனையால் நாம் அறிந்த நடத்தை, கேரக்டர் , மனப்பான்மை ஆகியவற்றுடன் இணைத்து பார்த்தால் உள்ளுணர்வில் அவர் செய்யப்போவது, நடக்க போவது தெரியும்.அதாவது வாழ்வை பற்றிய , அனுபவங்களை பற்றிய நம் ஞானம் அனைத்தும் எதோ ஒரு plane-இல் organise ஆகிறது. அது செயலில் உட்பார்வையாகவும் , உணர்வில் உள்ளுணர்வாகவும், அறிவில் முக்காலத்தையும் புரிந்து கொள்ளும் ஞானமாகவும் மாறும்.
நம் வேலை, ஆர்வம், hobby , இசை, உணர்ச்சிகள், காதல், அன்பு, உறவு, பாசம், passion , creativity என்று எதை எடுத்துக் கொண்டாலும் அவை எல்லாவற்றினுள்ளும் நமக்கு சந்தோஷத்தை கொடுப்பது ஒரு உள்ளுணர்வின் மூலம் தோன்றும் ஒரு செயலே. அந்த ஒரு செயல் மற்ற எல்லாவற்றையும் விட அதிக ஆனந்தம் அதிக சமுகம் தந்து இருக்கும். அது போல அன்னையுடன் அல்லது பிரம்மத்துடன் ஒன்றுவது நம் அபிப்ராயம், எதிர்பார்ப்பு எல்லாவற்றிலும் இருந்து அது தந்த அறிவில் இருந்து வெளியே வந்து வேறு ஒரு பார்வையில் intuitive பார்வையில் உணர்வது. அது அதிக பட்ச உள்ளுணர்வைத் தரும். When Intuition happens, we penetrate the unknowlable என்கிறார் கர்மயோகி. பல புது கண்டுபிடிப்புகளுக்கும், ஞானிகள் என்று நாம் நினைப்பவர்கள் பெற்ற ஞானத்திற்கும் அடிப்படை அதுவே. நம் சித்தம் ஒரு உயர் சித்தம், சத்திய சித்ததுடன் ஒன்ற வேண்டும் என்பதே அது. அப்போது அருளை உற்பத்தி செய்யும் வழி நமக்கு தோன்றும்.
இத்துடன் கீழ் கண்ட கட்டுரையையும் படித்தால் அதிகம் புரியலாம்.