Share on facebook
Share on telegram
Share on whatsapp

எதிர்காலம் பூரணம் பெற நிகழ்காலம் குறையாக இருக்க வேண்டும்.

Future possibility is open by the present failure becoming persistent. எதிர்காலம் பூரணம் பெற நிகழ்காலம் குறையாக இருக்க வேண்டும்- இதை மேலும் விளக்குமாறு கேட்ட அன்பர்களுக்காக:

இதற்கான விளக்கத்தை, பகவானிடமிருந்தே ஆரம்பிக்கலாம்.

அதிமன சக்தியை பூமிக்கு கொண்டு வர, நூறு பேர் வேண்டும், பன்னிரெண்டு பேர் வேண்டும், என்றெல்லாம் கூறியவர், அது தாமதமாவதை உணர்ந்து, தானே அந்த யோகத்தை (one man ‘s perfection) செய்து வரவழைக்க நினைத்த போது, தொடர்ந்த தடை அல்லது தாமதம் அவரது physical -லால் கூட இருக்கலாம் என்று நினைத்ததால், அதையும் விட்டு சென்று, யோகத்தை தொடர்ந்து, அதிமன சக்தியை இறக்கினார்.  நாம் இருக்கும் plane -னிலேயே நம்மை அடக்கும் விஷயங்களிலிருந்து, அது எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அதை விட்டு வெளியே வருவது future possibilities -ஐ தெரிய வைக்கும்.

என் வாழ்வை எடுத்துக் கொண்டால், 1982-லிருந்து 2003 வரை , Catering related விஷயங்கள் தான் என் வேலையாக இருந்தது. 2003-ல் என்னுடைய track record காரணமாக எனக்கு வேறு எங்கும் வேலை கிடைக்கவில்லை.  பட்ட கஷ்டம் காரணமாக மதுபானம் புழங்கும் இடத்தில், வேலை செய்வதில்லை என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.  சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலேயே எனக்கு வேலை கிடைக்கவில்லை.  அன்னையிடம் மூன்று நாள் பிரார்த்தனை செய்த பிறகு, ஒரு சிறு colour powder chemical தயாரிக்கும் கம்பெனியில் ஒரு சிறு வேலை கிடைத்தது. அது இன்று colour chemical paint தயாரிக்கும் கம்பெனிக்கு உரிமையாளராக மாற்றியிருக்கிறது.  அது நான் தொழிலில் பெற்ற பூரணம்.  எனக்கு ஆங்கிலம் வராது என்னும் உணர்வில் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வந்து, கற்ற பிறகு, என்னால் சரளமாக எழுதவும் பேசவும் முடிவது ஆங்கிலத்திற்கான அடுத்த கட்ட பூரணம்.

Doctor கை விட்டபின், மருந்து, பூஜை, பரிகாரம் என்று எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை போன பிறகு, சாவை எதிர்கொள்ள தயாரான போது, எங்கிருந்தோ வந்த ஒரு அறிவுரை மாற்றம், சூழல், வந்து குணமானதை, கர்மயோகி பல கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். எனக்கு தெரிந்த ஒருவர் வாழ்விலும் அதை பார்த்திருக்கிறேன்.  அது உடலுக்கான அடுத்த கட்ட பூரணம்.

இவையெல்லாம் ஒரு தளத்தில் ஏற்படும் persistent பிரச்சினைகள் அடுத்த கட்ட பூரணத்திற்கான அடிப்படை என்பதை புரியவைக்கும் உதாரணங்கள். அதற்காக நான் படிக்க மாட்டேன், படித்தவர்களெல்லாம் சாதித்தார்களா? பெரும்பாலான businessmen படிக்காதவர்களே என்றெல்லாம் சொல்வது ஒரு தளத்தை விட்டு வெளியே வருவது அல்ல.  அந்த plane -க்கான அனைத்தையும் செய்த பிறகே, அவற்றை செய்த பிறகும், முன்னேற்றம் வரவில்லை என்ற பிறகே, அதை கவனித்தால், அடுத்த கட்ட முன்னேற்றம் பிறக்கும் .  சமூகத்தின் சட்டங்கள் மேல் நம்பிக்கையில்லை. இந்த படிப்பு முறை மேல் நம்பிக்கையில்லை. அதனால், கல்லூரிக்கு போக மாட்டேன் என்று கூறுவது plane -ஐ தாண்டுவது இல்லை. அது ஏமாற்று வேலை. படிப்பதற்கான அனைத்தையும் செய்து விட்டு, அதற்கான வேலை கிடைக்கவில்லை என்றால், அதை கவனித்தால், காரணம் புரியும். அது, அடுத்த கட்ட உலகத்தை காட்டும்.

கர்மயோகிக்கு தெரிந்த ஒருவர், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அரசு வேலைக்கு தான் செல்வேன் என்று group தேர்வுகள் எழுதினர்.  இரண்டு முறை fail ஆனார். மூன்றாவது முறை pass ஆனார்.  அதனால் அவர் தகுதிக்கு குறைவான வேலை, சம்பளமே கிடைத்தது. அதனால், அவருக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை . வேலையை விட்டு விவசாயத்தில் கவனம் செலுத்து, என்று குடும்பத்தின் அறிவுரை படி செய்ய ஆரம்பித்தார், சில வருடங்களிலேயே அந்த ஊரில் பெரும் பணக்காரர் ஆனார்.

அதன் பொருள் என்னவென்றால், நாம் இருக்கும் plane -இல் நான் இப்படி தான், இது இப்படி தான், இது எனக்கு வராது, இது எனக்கு முடியாது, இது தான் வேண்டும், இப்படி தான் வேண்டும் என்பது போன்ற  prejudice -லிருந்து, opinions வரை இருக்க வைக்கும் அனைத்தும், நம் persistent failure க்கான அடித்தளம். அது தொடர்ந்துக் கொண்டே இருக்கும் போது, அதிலிருந்து, வெளியே வரும் முறைகளை அடுத்த உயர்ந்த நிலையில் ஆராய்ந்தால், உதாரணமாக, ஆன்மாவின் பார்வையில், பண்புகளால் ஆராய்ந்தால், ஒரு புதிய உலகம் பிறக்கும் . ஒரு plane -னில் உள்ள ஒரு உணர்வு, அனுபவம், அறிவு அதை ஒட்டிய எதிர்பார்ப்பு ஆகியவற்றின் மேல் உள்ள நம் நம்பிக்கை சரியே என்னும் பிடிவாதம் தான், அதையே பொது புத்தி என்று நினைப்பது தான், நம்மை அதே தளத்தில், அதே பிரச்சனைகளுடன் இருக்க வைக்கிறது. அடுத்த கட்டத்தில் உள்ள புதியதை காண மறுக்கிறது.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »