Share on facebook
Share on telegram
Share on whatsapp

வாழ்வின் முன்னெடுப்பு – 2

4) எதற்கான தீர்வு, sanction , initiative -ஐ பார்க்கிறோமோ, அந்த நிகழ்வின் ஆரம்பப்புள்ளி எது என்று past consecration போல சென்று பார்த்தால், அந்த சூழலின் தாக்கம் புரியும். நாம் செய்யும் தவறு, past consecration போது நம் தவறை மட்டுமே நினைத்து கவனிப்பது, நாம் நல்லவன் என்று நமக்கு நாமே அல்லது நம் அடக்கத்தை அன்னையிடம் காட்ட செய்வதாக மாறிவிடுகிறது.  ஆனால் அந்த ஆரம்பப்புள்ளி, சூழல், முதல் சில வார்த்தைகள் அல்லது முதல் பத்து நிமிடங்கள் கவனித்தால், நமக்கான initiative எது என்று நமக்குப் புரியும். உதாரணமாக அன்னையிடம் வந்து பல ஆண்டுகளுக்கு பிறகு அபரிமிதமாக சம்பாதித்த ஒருவரை   அப்படி செய்ய சொல்லி பார்த்த போது இந்த Business idea 30வருடத்திற்குமுன் அவருக்கு வந்த போது அவர் இருந்தது 500 அல்லது 1000 கோடி சம்பாத்தித்த ஒருவர் முன். வேறு ஒரு அரசியல்வாதிக்கு துணையாகத் தான்  அவர் சென்றிருந்தார்.. 30 வருடங்களுக்கு பிறகு இவரும் 500 கோடி சம்பாதித்து அரசியல் செல்வாக்குடன் திகழ்கிறார்.    Try to relate your idea of sanction or initiative to acts, persons, events, objects, – where you are – in supermarket, amuzement parks, highway, victory events. You can get a clue on what is there for you.

5) ஏற்கனவே இது போன்ற சூழலில் என்ன நடந்தது – நம்முடையது பிறருடையதோ – அதன் வெற்றியோ, தோல்வியோ – அதை ஒட்டிய ஒரு அனுபவம் பெற – அதன் மூலம் முன்னேற இப்போது வந்த வாய்ப்பில்  அதன் வித்து இருக்கிறதா என்று பார்க்கலாம்.

6) நேரடியாகவே 24 மணி நேரம், 48 மணி நேரம் சூழலைப் பார்க்கிறேன் அதன் மூலம் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள் Mother என்று சொல்லி விட்டு காத்திருக்கலாம். அந்த நேரத்தில் TV , books காதில் விழும் பேச்சுகள் போன்றவற்றை கவனித்தால் அன்னை, அல்லது வாழ்வு சொல்ல வருவது புரியும். உதாரணமாக நான் என் சொந்த product  கொண்டு வந்த முறைப்பற்றி பல கூடல்களில் பேசி இருக்கிறேன். அதற்கான sample -கள் , trial -கள் , Test -கள் செய்ய ஏராளமாக செலவாகிக் கொண்டிருந்தது. தவறான முடிவு எடுத்து விட்டோமோ என்று தோன்றியது. சரியாக product develop ஆகாத அந்த நேரம் பார்த்து ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டார்கள். எனக்கு சூழல் சரியில்லாதது போல பட்டது. கர்மயோகிக்கு எழுதி கேட்டேன். அவர் இல்லை உனக்கு வர போகும் prosperity அவர்களுக்கு subconscious -இல் தெரிவதால் அப்படி கேட்கிறார்கள், தந்து விடு என்றார். என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்படி தெரிந்துக் கொள்வது என்று மீண்டும் எழுதி கேட்டேன். சூழலை கவனி என்றார்.  அதன் பின் இரண்டு நாட்களும் அந்த துறை வளர்ச்சி பற்றியே செய்தி வந்தது மட்டுமல்லாமல், labour -ரும் தொழிலாளிகளும் அப்படி பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது. அதன் பிறகு தைரியமாக செய்ய ஆரம்பித்தேன். இன்று என் product -க்கு அகில இந்திய அளவில் பெயர் இருக்கிறது.

7) நம் imperfections -ஐ  – திறமை குறைவை, அறிவுக் குறைவை, சுபாவத்தை, சௌகரியத்தை நிலை நிறுத்தும், அல்லது இறக்கும் எதுவும் வாழ்வு அல்லது அன்னை தரும் initiative அல்ல – உதாரணமாக பெரிய கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர் ஆனால் ஏராளமான technological அறிவு, அனுபவம் பெரும் வாய்ப்பு உள்ள ஒருவருக்கு அதே கம்பெனியின் dealer -ரிடம் சற்றே அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தால், அது அவரது subconscious desire . அன்னை தருவதில்லை. அன்னை தருவது பூனைக்கு தலையாக இருக்காது – புலிக்கு வாலாக இருந்து பின் புலி போல மாறுவதாகவே இருக்கும். அன்னையிடம் இருந்து வரும் அனைத்தும், உணர்வு, மனம், அறிவு ஆகியவற்றில் ஏதாவது ஒரு உயர்ந்ததை ஏற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருக்கும். அதாவது திருவுருமாற, நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய சந்தற்பங்களுடனேயே இருக்கும். catering -இல் இருந்து நான் chemical -க்கு வந்த உதாரணங்களை கூடல்களில் கேட்டவர்களுக்கு இது புரியும்.

8) இதன் பின் உள்ள தத்துவம் என்னவென்றால், இது போன்ற சிறு முன்னேற்றம் நம் மனதின் முன்னேற்றம். நம் ஆசையின் முன்னேற்றம் .அது நம் விருப்பம் சௌகரியத்தை ஒட்டியே வரும். 10% சம்பள உயர்வில் வரலாம். அடுத்த கட்ட promotion -இல் வரலாம். அதை உற்று கவனித்தால், அந்த இடத்திலேயே கட்டப்படுவோம், வாய்ப்பு அதிகம் இருப்பதை உணரலாம். அது போன்ற இடங்கள் அதை life initiative ஆக பார்க்காமல் அதை வேண்டாம் என்று சொன்னால் அன்னை தரும் அதிக பட்ச முன்னேற வாய்ப்புள்ள இடங்கள் நம் கண்ணுக்குத் தெரியும்.

9) Step back , non-initiative போன்றவை life initiative -ஐ காட்டும். அதன் பொருள் சும்மா இருப்பது அல்ல.  நம் initiative -க்கான தூண்டுதலை, ஆசையை, நோக்கத்தை ஆராய்ந்து, அதன் பின் உள்ள அகந்தையின் பரிமாணங்களை விலக்கிச் செய்வது. அகந்தையின் initiative இல்லாத எதுவும் non-initiative -ஏ . Non-initiative means detachment from vital, mental desires, expectations and motives that urges for action and reversing that to see only progress in consciousness.

10) ஒரு செயல், சூழல், மனம் ஒரு தோல்வியை காட்டும் போது, உணரும் போது, அல்லது குழப்பம் வரும் போது – அந்த உணர்வு, உணர்ச்சிகளில் இருந்து விலகி அதில் இருக்கும் positive strands for future work -ஐ பார்த்தால் Life தரப் போகும் initiative புரியும்.  உதாரணமாக, வெள்ளத்தினால் ஏற்பட்ட நஷ்டம் – அன்னை மேல் நம்பிக்கையை குறைத்தத., Insurance போன்ற விஷயங்ளில் சமுதாயத்தின் லஞ்ச லாவன்யம்  சோர்வடைய செய்தது.  ஆனால் அதில் உள்ள positive strand என்ன என்று பார்த்த போது – அந்த நிலையிலும் பலரும் எனக்கு ஒரு கோடி வரை credit தர தயாராக இருந்தார்கள். என் நேர்மையை , சொன்ன சொல் தவறாத பண்பை வளர்க்க வேண்டிய இடம் அது என்பது புரிந்தது. அடுத்த ஆறே மாதத்தில் அனைத்தும் மாறியது.

11) நாம் வேண்டாம் என்று விருப்பு, வெறுப்பு அடிப்படையில், avoid செய்யும் இடங்கள் எல்லாம் life எடுக்கும் higher consciousness -க்கான initiative .

12) Please read these links also:

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »