நாமெல்லாம் நமக்கு மிகுந்த அறிவு உள்ளதாக நினைக்கிறோம். அதன் அடிப்படியில் அனைத்தையும் செய்கிறோம். நம் அறிவின் லட்க்ஷணத்தை புரிந்துக் கொள்ள கர்மயோகி அவர்கள்- ஒரு முறையைச் செயல்படுத்திப் பார்க்கச் சொல்கிறார். மாலையில் ஒரு இடத்தில் அமர்ந்து அன்று செய்த வேலைகளை நினைத்துப் பார். எவ்வளவு இயந்திரத்தனமாக செய்தாய் என்று தெரியும். வெறும் பழக்கம் மட்டுமே அதில் இருப்பது தெரியும். அறிவோ உணர்வோ மிகக் குறைவாகவே செயல்பட்டிருக்கும். நாம் அறிந்த உயர்ந்த உயர்ந்த விஷயங்கள் எதுவும் – செயலிலோ, மன நிலையிலோ, உணர்விலோ இருந்து இருக்காது. அப்படி ஒன்று இருப்பதாக நினைத்தால் அந்த அறிவையும், உணர்வையும் நீ கற்ற அல்லது பெற்ற முறையை நினைவுக்குக் கொண்டு வந்துப் பார். அதுவும் இன்னொருவருடைய பழக்கமாகவே இருக்கும். அல்லது, பிறரின் திருப்திக்காக, கடமைக்காக, சமுதாய பார்வைக்காக செய்வதாக இருக்கும். இன்று முழுவதும் உன் personality, character, behaviour, mannerism , வார்த்தைப் பிரயோகங்கள், உடல் அசைவுகள், நடக்கும் பாணி, என்று எதைப்பார்த்தாலும் அத்தனையிலும் ஒரு unconscious habit மட்டுமே இருக்கும். அறிவு , எண்ணம் , உயர்ச்சித்தம், சமர்ப்பணம், என்று நாம் நினைக்கும் எதுவும் இருக்காது என்கிறார் .
நம்மைப் பற்றிய நினைவே நமக்கு இல்லாத போது, சூழலில், மேல்மனதில் கூட நம் கவனம் இல்லாத போது – சூட்சுமமாக அறிவு சொல்லும் விஷயத்தை – அனுபவத்தின் சாரத்தை நாம் நம்மை எப்படி அறிய முடியும். செய ல் படுத்த முடியும். முன்னேற முடியும். அதுவே நம் அறிவின் லட்சணம். நாம் பிறருக்கு கூறும் அறிவுரைகளை கூட நமக்கு நாமே பின்பற்றாத அறிவீனமே நம் அறிவின் லட்சணம்.
வெளியே இப்படி என்றால் உள்ளே இருப்பதன் ஞானம் நம் அறிவுக்கு சொல்லுபவற்றை எப்படி புரிந்து கொள்ள முடியும். உள்ளே வெளியே என்று இரண்டுக்குமான கவனம் நமக்கு வரும்போது தான் அறிவு முழுமை பெரும். வெளியே மட்டுமல்ல, உள்ளேயும் தேட வேண்டும் என்பது புரியும்போதுதான் அது வாழ்வில் செயல் படும் அறிவாக மாறுகிறது. அதாவது அகமும் புறமும் இணையும் போது முழு ஞானம் கிடைக்கிறது உள்ளேயும் வெளியேயும் – உணர்வதை, நடப்பதை, பார்ப்பதை தொடர்புபடுத்தி பார்ப்பது அதன் பொருள் புரிவது – அதன் மூலம் இரண்டிலும் அடுத்த நிலைக்கு முன்னேற முடியுமா என்று பார்ப்பது பரிணாமத்தில் முன்னேற்றம்.
அதை சிந்தனை எனலாம். ஆனால் அதை நாம் சிந்திக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு நம் எதிர்ப்பார்ப்புகளையும், நம் அனுபவங்களையும் பொருத்தி பார்த்து – எதோ ஒரு முடிவுக்கு வந்து அதை வாழ்க்கைக்கான விவேகம் என்று நினைத்துச் செயல்படுகிறோம். இப்படி பல விதமாக பல திசைகளில் நாம் சிந்திப்பதை விட்டு ஞானத்திற்கு என்று ஒன்றை எடுத்துக்கொண்டு ஒரு விஷயத்தை இரண்டு எதிரான விஷயங்களாக – அன்னைக்கு பிடித்தவை , அன்னைக்கு பிடிக்காதவை என்ற பார்வையில் நினைத்து பார்க்கலாம்.
அப்பொழுது என்னப் புரியும் என்றால் இது செய்தால் இது நடக்கும் என்பது கிடையாது. நம் அறிவைத் தாண்டிய விஷயங்களும், உணர்வுகளும், பண்புகளும் ஒரு செயல் நடக்கத் தேவை என்று புரியும். அது எது என்ற கேள்வி எழும். அந்த விதத்தில் நாம் conscious ஆகிறோம். நம் மேல் நம் கவனம் இருக்கிறது,. பழக்கத்தின் பிடியில் இருந்து வெளியே வர வழி தெரியும். இரண்டு பெரிய முரணான விஷயங்களிலிருந்து வெளியே வருவதால் – மனதிற்கு ஒரு உறுதி கிடைக்கிறது. அதை செயல் படுத்து திறன் கிடைக்கிறது. அப்போது கிடைக்கும் பலன் பின்னாளில் உயர் பண்புகள் மேல் நம்பிக்கையாகவோ , அன்னை மேல் நம்பிக்கையாகவோ மாறுகிறது.
உதாரணமாக நமக்கு ஒரு பிரச்சனை வருகிறது, ஒரு தடை வருகிறது. என்றால் அதை வெளியே பார்த்தால் நம் திறமை குறைவு, அறிவு குறைவு, உணர்வு குறைவு தெரியும். உள்ளே பார்த்தால் நம் சந்தேகம், நம் இயலாமை, நம் அறியாமை, நம் அப்பிராயங்கள் , நம் எதிர்பார்ப்புகள் நாம் கோட்டை விட்ட இடங்கள் என்று நம்மை limitations -இல் நிறுத்திய பல தெரியும். இந்த இரண்டையும் எதிரான நிலையில் வைத்து பார்த்தால் நாம் பெற வேண்டிய அறிவு, திறன், நேர்த்தி, ஒழுங்கு, முறை தெரிய வரும். அது பரிணாமத்திற்கான முன்னேற்றத்திற்கான ஐடியா . அதை எடுத்துக்கொண்டு நாம் மாறும் போது ஒரு முடித்துப் போன செயலை க் கூட, அதன் பலனைக்கூட மாற்ற முடியும் என்று நம்பத் தொடங்குகிறோம். அதுவே கடந்த கால சமர்ப்பணம் என்னும் ஆன்மீக முறையாக மாறுகிறது.
இத்தகைய மாற்றங்கள் என் வாழ்வில் மூன்று வகையாக வளருவதை பார்க்கிறேன். ஒன்று personal growth , நம் plus minus , நம்மால் என்ன சாதிக்க முடியும், நம் limitations என்ன, அதிலிருந்து எப்படி வெளியே வருவது, மனப்பான்மையின் பலம், பண்புகளின் பலம், சூட்சுமம் என்பவை புரிகிறது.
இரண்டாவது Life Growth – வாழ்க்கை அது இயங்கும் முறைகள், அதன் சட்டங்கள், அதன் மறு மொழி – Life Response – அதன் சூட்சுமமான சூழல்கள் , அது ஏற்படுத்தும் தடை, அல்லது அது எடுக்கும் initiative போன்றவை புரிகிறது.
மூன்றாவது Spiritual Growth – ஆன்மீக கண்ணோட்டத்தில் மேற்சொன்னவைகளைப் பார்த்து விவேகம், பாகுபாடு கொண்டு யாருக்கும் பயப்படாமல் செய்து பார்க்கும் துணிவு, அது ஒரு நாள் அன்னைக்கான சேவையாக மாறும் என்னும் நம்பிக்கை தந்து ஆன்மீக மனிதனாக முன்னேறும் ஞானத்தை தருகிறது.