நாம் மனமாற்றம் என்றவுடன் நாம் தவறு செய்துவிட்டோம் என்ற முறையிலேயே அணுகுகிறோம். அது பகுதியான உண்மையே. நாம் அறியாமையில் செய்யும் நல்லதும் நம் முன்னேற்றத்தைத் தடுக்கும். கர்மயோகி அன்னையிடம் வந்த புதிதில் இத்தகைய correspondence பார்த்து அன்னை விலக்கிய ஒரு நண்பருக்கு பல ஆண்டுகள் கழித்து ஒரு தொகையை பாக்கி இருப்பதாக நினைத்து அனுப்பினார். பல வருடமாக நல்ல மகசூல் தந்த நிலம் சூன்யமானது என்று எழுதியிருப்பார். நாம் நினைக்கும் நல்லது எல்லாம் ஜடத்தின் அறியாமை, உணர்வின் அறியாமை. நல்லது என்று நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட செயல்களை நாம் செய்வதால் நமக்கு நாமே நல்லவர் என்று நிரூபித்து கொள்ள நாம் எடுத்துக்கொள்ளும் முறை அது.
அறியாமை என்பதை Lack of Light என்கிறார். ( shadow is not absence of light – it is lack of light) என்பது போல. சத்தியத்தின் முழு பரிமாணத்தை அறியா நிலை . அதனால் மாற வேண்டிய இடங்கள் கெட்டது என்று நாம் நினைக்கும் இடங்கள் மட்டும் அல்ல. அகந்தையின் அத்தனை வடிவங்களும். (All attributes of ego). அதனால் தான் சமர்பணத்தைப் பற்றி அவர் அதிகம் பேசினார், எழுதினார். ஒவ்வொரு செயலையும் (மூச்சு விடுவது, இதயத் துடிப்பு முதற்கொண்டு) அன்னையை நினைத்து நடந்தால் அது பண்புகளின் அடிப்படையில் என்பதால் அதற்கு Consciousness Force -ன் Responses மட்டுமே உண்டு. Life Response கிடையாது என்று கூறுகிறார். அதாவது அருள் மட்டுமே அதற்கு உண்டு என்பது அதன் பொருள்.
அத்தகைய மனப்பான்மைக்கு மாறுவதை மனமாற்றம் என்று கூறலாம் வேறொரு கோணத்தையும் கர்மயோகி தந்து இருக்கிறார். வழக்கமாக நமக்கு இருக்கும் அபிப்ராயம், முன் முடிவுகள், விருப்பு வெறுப்புகள் அனைத்திலிருந்தும் நாம் வெளியே வந்து, செய்யும் வேலையின் சாரம் புரிந்து, அதன் பின் உள்ள தத்துவதை ஏற்றுக் கொள்வது மனமாற்றம் என்கிறார். ஆங்கிலத்தில் அவர் இதை shift என்கிறார்
உதாரணமாக கல்வி என்பது அறிவு வளர, தொழில் என்பது வாழ்வு வளர. ஆனால் நாம் கல்வி என்பது வாழ்வில் வளர என்றோ, இன்னும் சொல்லப் போனால் வாழ்வு வளம் பெற என்று சிந்தித்து பணம் சம்பாதிக்கத்தான் கல்வி என்னும் நிலைக்கு வந்து விடுகிறோம். அதனால் கல்வி தரும் அறிவின் சாரத்தை, விவேகத்தை நாம் பெறுவதில்லை. கல்வி என்பது மதிப்பெண்களுக்காக மட்டுமே என்று மாறி விடுகிறது. படிப்பதே சம்பாதிக்கத் தான் என்று ஆகி விடுகிறது ஆனால் பெரும் சாதனை புரிந்தவர்களை கவனித்தால் அவர் சமுதாயத்தின் இந்த பெரும்பான்மையான பார்வையை எடுத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். Doctorate , IAS , ஆராய்ச்சி , புதிய கண்டு பிடிப்புகள் அல்லது வேறு தேடல்கள் இருக்கும்.
அதேபோல தொழிலில் ஜெயித்தவர்கள், பெரும் சாதனை புரிந்தவர்களை கவனித்தால் வெறும் பணத்திற்காக இல்லாமல் creativity, perfection, innovation, benefit to customer, உபயோகிப்பவரின் உழைப்பை, நேரத்தை, கடினத்தை, i குறைக்கும் வகைகள் என்று ஏதாவது ஒரு உயர் பண்பை எடுத்து இருப்பார்கள். பொதுவாக நாம் பெரும்பான்மையான அல்லது சமுதாய வழக்கத்தை ஒட்டிய எந்த மனநிலையையும் ஜடமாக ஏற்று, உணர்வை வெளிப்படுத்தி, வாழ்வை நடத்துகிறோம் அதாவது நம் செயல்களில் உடல் அல்லது உணர்வு மட்டுமே இருக்கிறது. அதுவும் நம்முடையது அல்ல. யாரோ சொல்லிக் கொடுத்தது. உயர் நிலைகளில்தான் அதிக பலன் கிடைக்கும், மனம் மூலம் செயல்படும்போது சில மடங்கும், ஆன்மா மூலம் செய்யும்போது பல மடங்கும் பலன் வரும் என்று படித்தால் கூட நாம் அதை எடுத்து கொள்வதில்லை.
நடைமுறையில் பார்த்தால் கூட, உடலால் வேலை செய்பவர்களை விட அறிவால் வேலை செய்யும் ஆடிட்டர் டாக்டர் போன்றவர்கள் அதிகம் சம்பாதிப்பதை காணலாம். அதனால் முதல் நிலையில் ஜடம், உணர்வு ஆகியவற்றை நம் மனமாக நினைத்து ஏற்பதை விட்டு, அறிவு மூலம் ஆராய்ந்து, நாம் செய்யும் செயலுக்கான சாரத்தை ஆராய்ந்து, அதை செய்தால் – அது ஓரளவு முழுமையை நோக்கிய நம் சித்தம் என்பதால், நம் சித்தம் உயர்வது மட்டுமல்ல பலனும் அதிகமாக இருக்கும்
அதாவது முறைகளை விட்டு சாரத்திற்கு வருவதை மனமாற்றம் என்று கூறலாம்.
உதாரணமாக நாம் prosperity, courage, health போன்ற மலர்களை அன்னைக்கு வைத்து பிரார்த்தனை செய்யும்போது அந்த முறைக்கான பலனே கிடைக்கிறது. அது ஜடம். அதுவே உணர்வு பூர்வமான பக்தியாக இருந்தால் சற்று அதிகமான பலன் கிடைக்கிறது. ஆனால் அதையே இத்தகைய பூக்களை வைத்து வழிபடும் நிலை நமக்கு ஏன் வந்தது, எது குறையாக இருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தால் அது அறிவின் செயல் ஆகிறது. அதன் சாரம் புரிவதும், அதை செய்வதும் அதிக பலன் தரும். அதையே அன்னை விரும்பும் பண்புகளின் பார்வையில் பார்த்து, ஒரு செயலில் அன்னை முறைகளை ஜடத்தில் உணர்வில் அறிவில் அதிகபட்சம் பின்பற்ற முடிந்தால், அது ஆன்மாவின் செயலாகிறது.
நாம் இருக்கும் சுக நிலையில் இருந்து( comfort zone) லிருந்து வெளியே வந்து செய்யும் எதுவும் மன மாற்றமே.
நம் பிரார்த்தனை பலித்தால் நம்பிக்கை ஏற்படுகிறது. பலிக்க வில்லை என்றால் நம்பிக்கை இழக்கிறோம். அல்லது நமக்கு அம்சம் இல்லை என்று சமாதானப் படுத்திக் கொள்கிறோம். அது ஜடமான நிலை. அப்படி இல்லாமல் எனக்கு ஏன் நடக்கவில்லை என்று உயர் சித்தத்தின் பார்வையில் பார்த்தால் , ஏன் நடக்கவில்லை என்பதற்கான காரணம் தெரியும். அதை எடுத்துக்கொள்வது மனமாற்றம். சமூகத்தின் பார்வையில் இருந்து உயர் சித்தம் நோக்கிய மனமாற்றம் அது. ஒரு பொருளை தயாரிப்பவர் quality – ல் packaging ல் marketing -ல் உயர்ந்த முறையில் செயல்பட்டு இருக்கலாம். அது சிறந்ததே என்றாலும், அவை அனைத்தும் சமூகம் கற்றுக்கொடுத்த ஜடமான நிலை. அல்லது தொழிலின் பழக்கம். அதுவே சிறந்த சரியான வழி என்று உணர்வு ஏற்றுக்கொண்ட நிலை.
ஆனால் அவற்றுடன் உபயோகிப்பவரின் பார்வையில் பார்த்து, அதற்கானவற்றை சேர்ப்பது உயர் சித்தம். அது சாதாரண மனதில் இருந்து அதிமனதிற்கு (supermind) கு மாறுவது. Blackberry, Nokia, Erricson mobile – கள் இருந்த கால கட்டத்தில் அவை அனைத்தும் சிறந்ததையே தர முயன்றன. ஆனால் அவை அடைய முடியாத உயரத்தை ஐபோன் வெளிவரும் முன்பே பெற்றது. காரணம் ஸ்டீவ் ஜாப்ஸின் உயர் சித்தம் அதில் இருந்தது. கல்லூரி இல்லாத ஊருக்கு கல்லூரி வந்தால் பலரும் சேர்ந்து பயன் பெறுகிறார்கள். அது கல்வி அல்லது அறிவு நம்மை தேடி வருகிறது என்பது புரியாமல் – நான் அதில் சேர்ந்து, படித்து பட்டம் பெற்றால் தான் நம்புவேன் என்பது எவ்வளவு அறியாமையோ அந்த அளவிற்கு நம்மிடம் மன மாற்றத்தை பற்றி உள்ளது. அன்னை நம்மை தேடி வந்தது உயர் சித்தத்திற்கு நம்மை துரித படுத்தவே. அதற்கான எந்த மனமாற்றமும் அன்னையை நம்மிடம் வரவழைக்கும் என்பதே அதன் சாரம்.
நாம் உள்ள நிலையிலேயே அனைத்தையும் செய்யாமல், அடுத்தடுத்த நிலைகளை பற்றி சிந்தித்து செய்வது மனமாற்றம்.
நாம் வழக்கமாக பழக்கத்தின் அடிப்படையில் செய்கிறோம். அது habit என்னும் நிலையில் இருக்கிறது. அது unconscious. அதை conscious செய்யும்போது அது skill ஆகி- capacity, abiity, cabability , talent என்று மாறுவது, ஒரு செயலுக்கான நம் மன மாற்றத்தின் அறிகுறி. ஜடமான நிலையிலிருந்து அறிவுக்கு வரும் மனமாற்றம். எதையும் அடுத்த நிலைக்கு உயர்த்த முடியும். அதற்கான முறைகளை ஆராய்வது – mental attitudes – எனப்படும் அறிவின் மாற்றம். அது உயர் ஞானத்திற்கான மன மாற்றம். அது awareness, stradegy, master stroke, secret of success, essence of work – என்று பல நிலைகளுக்கு கொண்டு செல்லும். அவையெல்லாம் காலத்தை சுருக்கும் தன்மை கொண்டவை என்பதால் அவற்றை எல்லாம் ஆன்மா செயல்படுவதற்கான மனமாற்றம் எனலாம். ஒரு செயலில் வீரமும் அறிவும்செயல்திறனும் மட்டுமல்ல – விவேகம் வேண்டும், உயர் மனப்பான்மையும் வேண்டும், பாகுபாடும் தெரியவேண்டும்- என்ற தேடலுக்கான மனப்பான்மை அது.
- நிறைய வீரர்கள் இருந்தாலும் முதல் இழப்பாக அரவான் அல்லது இறவான் இருக்க வேண்டும், காளிக்கு பலியாக வேண்டும் என்று மகாபாரத போருக்கு முன் கிருஷ்ணர் ஏன் சொன்னார்?
- 13 நாளில் முடிய வேண்டிய வனவாசம் ஏன் 13 ஆண்டுகளுக்கு நீடித்தது சிறந்த பக்தர்களுக்கு maatum கிடைக்கும் விஸ்வரூப தரிசன கர்ணனுக்கும் பீஷ்மருக்கும் ஏன் கிடைத்தது?
- திரௌபதி நிர்வாண படுத்தப்படுவது கடைசியில் தடுத்தது எது ?
– என்பது போன்றவற்றை சிந்தித்தால் மனமாற்றம் விவேகம் பாகுபாடு உயர் சித்தம் ஆன்மாவின் மூலம் செயல்படுவது போன்றவை புரியும். அது தரும் வெற்றிகளும் புரியும்.
சற்றே நீண்ட கட்டுரை என்பதால் – 316 subscribers -ல் பெரும்பாலோர் – ஐந்து அல்லது ஏழு நிமிடங்களே படிப்பதால் இந்த கட்டுரையின் தொடச்சி அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை பதிவேற்றப்படும்.