Share on facebook
Share on telegram
Share on whatsapp

உணவிற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு உண்டா?

முட்டை சாப்பிடலாமா, சிக்கன், மீட் சாப்பிடலாமா என்று பல கேள்விகள் அன்னையிடம் கேட்கப்படுவது உண்டு.  பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் சொல்லிய பதில்களின்  சாராம்சம் என்னவென்றால்  உன் health-க்கு தேவையானதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையாக இருந்தால், சத்துக்காக சாப்பிடலாம். ருசிக்காக, விருப்பத்திற்காக என்றால் கூடாது என்று தான் சொல்வேன் என்கிறார்.

ஒரு சாதகர் தான் இரவு கண்ட ஒரு பயங்கர கனவை விவரித்த போது – நீ நேற்று சாப்பிட்ட மீடின் ஆட்டின் consciousness -ஐ சற்றே எடுத்துக் கொண்டு விட்டாய் போல இருக்கிறது. இறக்கும் போது அதன் துடிப்பு, பயம்  அதில் மிச்சமிருந்திருக்கிறது. அதுவே கனவாக வந்திருக்கிறது என்றார். அன்னை கடலூருக்கு செல்லும்போது – பேரணாம்பட்டு காளி  கோயில்களில் செய்யப்படும் ஆடு, கோழி பலிகளைப்பற்றி பேசும்போது – அவை இறக்கும் தருவாயில் அதன் சித்தத்தின் துடிப்பு நிச்சயம்  உயர் சித்ததிற்கு எதிரானவையாக மாறும் என்றே  கூறுகிறார்.  நான்வெஜ் சாப்பிடுபவர்கள் மீட்டின் consciouness -ஐ சற்றே எடுத்துக் கொள்வது நடக்கும். அது சாதகர்களுக்கு ஏற்படுத்தும் தடைகள். வெஜிடேரியன்களுக்கு ஏற்படும் தடையை விட குறைவாகவே இருக்கிறது என்கிறார்.

நாம் சாப்பிடும் பொருள் நம் ஆன்மீகத்தை நிர்ணயிக்குமானால், அது ஆன்மீகமே இல்லை. ‘சாப்பாட்டிற்கும், ஜீவனின் ஆன்மீக நிலைக்கும் சம்பந்தமில்லை’ என்கிறார் அன்னை. ஆனால் It depends on how close you are, close to your beast in you or spirit in you  (23-June-1954 – Q&A). உன் மிருகத்தனமான எண்ணங்கள் , உணர்வுகள், இச்சைகள்  ஆகியவற்றிக்கு அருகில் இருக்கிறாயா  அல்லது பற்றற்ற தன்மையுடன் ஆன்மாவிற்கு அருகில் இருக்கிறாயா என்பதை  பொறுத்தது அது என்கிறார் அன்னை.

என்னை பொறுத்தவரை உணவுக்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். 

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும்

Read More »

TOKEN ACT TO THY WILL – 3

கர்மயோகி அவர்கள்  ஒரு  “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவே நம்

Read More »

More Articles

TOKEN ACT TO THY WILL – 5

இப்போது முதல் TOKEN ACT ஐ  எடுத்துக் கொள்ள அடிப்படையான மனப்பான்மைகளை விளக்க நினைக்கிறேன். இது SPIRITUAL OPULENCE இல் உள்ள PREPARATION TO TOKEN ACT மற்றும் அது தொடர்பான கட்டுரைகள், மற்றும்

Read More »

TOKEN ACT TO THY WILL – 3

கர்மயோகி அவர்கள்  ஒரு  “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவே நம்

Read More »