Share on facebook
Share on telegram
Share on whatsapp

தன்னுணர்வும் உள்ளுணர்வும்

தன்னுணர்வு என்பது உள்ளுணர்வு என்னும் நிலைக்கு சற்று முந்தைய நிலை என்பது நான் படித்த கர்மயோகி கட்டுரைகளில் இருந்து நான் புரிந்து கொண்டது. உள்ளுணர்வு என்பதை உள்ளே கேட்கும் இறைவனின் குரல் என்று எடுத்துக்கொண்டால், தன்னுணர்வு என்பது அதைப்பற்றிய ஞானம்.

காரணம் நம் அகந்தையின் தேவைகளை, நம் இச்சைகளின் பரிமாணங்களை – உள்ளுணர்வாக எடுத்துக்கொள்ளும் அறியாமை நம்மிடம் இருக்கிறது அல்லது ஒரு கயமை இருக்கிறது என்றுகூட எடுத்துக் கொள்ளலாம். நாம் அன்னையிடம் வந்த புதிதில், ஏராளமான பிரச்சனைகளுடன் வந்த புதிதில் முதல் நாளே  தோன்றிய உணர்வு இனிமேல் எல்லாம் தீர்ந்துவிடும் என்று தோன்றுவது தான். அந்த உணர்வு எப்படி வந்தது என்று தெரியாது அதை உள்ளுணர்வு என்று எடுத்துக் கொண்டால் அதனால் வந்த நிம்மதி அதை என் மனம் ஏற்றுக்கொண்டதால் வந்தது. ஏராளமான அவநம்பிக்கைக்கு நடுவில் வந்த ஒரு நம்பிக்கை. அதை தன் உணர்வுக்கு உதாரணமாகக் கூறலாம் அதாவது உணர்வுபூர்வமாக அதற்கான தர்க்கம் பகுத்தறிவு ஆகியவற்றுடன் ஏற்றுக்கொண்ட நிலை அது. அத்தகைய உணர் வுகள் அன்னை மேல்வரும் அதீத நம்பிக்கையில் வருவது. அந்த தருணங்களை கவனித்து பார்த்தல் அது பற்றி சிந்தித்தால் அது புரியும்.

இது போன்ற இடங்களில்  அன்னை பலிக்கும் விதம் miracles என்று செல்லும்படியும், க்ஷணத்திலும்  இருக்கும்.  என் வாழ்வில் மிகவும் இக்கட்டான தருணங்களில் இது இருமுறை நடந்து  இருக்கிறது. அது ஏற்படுத்த கூடிய மாற்றம் எல்லாம் எப்போது வரும் என்றால் – செய்வது அறியாது , இதற்குமேல் எதுவும் செய்ய முடியாத,  இதற்குமேல் எதுவும் சிந்திக்க திராணி இல்லாத, சில நேரங்களில் இறப்பைத்  தவிர வேறு வழி இல்லை என்னும் நிலை – அறிவு, உணர்வு, உடல் எல்லாம் தோற்ற ஒரு சரணாகதி நிலை.  அந்த நிலையில் இத்தகைய miracles – உங்களுடைய அத்தனை பிரச்சினைகளும் வினாடிகளில் , ஓரிரு நாட்களில் தீருவது நடக்கும்  என்று கர்மயோகி சொல்கிறார். தோற்றேன் என்றபோதே வென்றாய் என்னும் நிலை அது. அன்னையிடம் வந்த முதல் முறை அவரவர்களின் சரணாகதி மனநிலைக்கு ஏற்றவாறு இது நிச்சயம் நடந்துள்ளது. நம் மேல் மனதிற்கு புரியவில்லை  என்றாலும் நம் ஆழ்மனம் அந்த  குரலைக் கேட்டு நம்பிக்கை பெற்ற தருணம் அது. அது நடக்க வேண்டியதை தானே நடத்தி கொண்டது.

இந்த process ஐ- தன்னுணர்வோடு  செய்ய முடியுமா என்றால் – அகந்தையின் வழி பற்றி – அறிவு, உடல், உணர்வு  ஆகியவற்றில் – அது பற்றி தெரியாத நிலை இருக்க வேண்டும்.  . சுமுகமும் , ஒருமையும்  அதற்கான முயற்சியை எடுக்கும்போது – ஒப்புமை & வாழ்வின் மறுமொழி  ( correspondence & life response) பற்றிய ஒரு உண்மையைக் காட்டும்.  கடந்த கால சமர்பணமும் அதைக் காட்டும். அன்னையிடம் தியானத்தில் அமரும்போது நாம் தேடும் ஒரு விஷயத்திற்கான பதில் தோன்றுவது போன்றவை எல்லாம் சத்யத்திற்கான ஒரு முயற்சிக்கு வரும் பதில் – உள்ளுணர்வு. ஆனால் Even in surrender we are colluding with our consciousness with Divine Consciousness என்கிறார் அன்னை.

உதாரணமாக அனைத்து இடங்களிலும் oneness  அல்லது சுமூகத்தைக்  கொண்டு வரலாம் என்றால் , நாம்  பிரிவு, சுமூகக் குறைவு ஆகியவற்றை  நம் கருத்து, அனுபவம் ஆகியவற்றை வைத்தே முடிவு செய்கிறோம். எது oneness , எது harmony என்று முடிவு செய்கிறோம். சுமூகக் குறைவு என்று ஒன்று இருப்பதே நமக்கு தெரிய கூடாது.  பிரிவினை என்று ஒன்று இருப்பதே நமக்கு தெரிய கூடாது. அன்னையிடம் தியானத்தில் இருப்பது போல அந்த நொடியில் இருக்க வேண்டும். கடந்த காலத்திலோ, எதிர்காலத்திலோ அதாவது அபிப்ராயங்களிலோ  அல்லது எதிர்பார்ப்பிலோ இருக்க கூடாது. Ever-present ஆக  இருக்க வேண்டும்.   கிட்டத்தட்ட ஒரு குழந்தையின் மனநிலை எனலாம்.

காரணம் Super Mind acts on utter Truth. Truth என்பதை ” That – which is without conflict ” என்கிறார் கர்மயோகி . அந்த நிலைக்கு  என்னால் வரமுடியுமா? என்பது என் நெடு நாளைய ஆசை.

எதையும் முயற்சியின் மூலம் பழக்கத்தின் மூலம் – நமக்கில்லாத புலன் உணர்வுகளையும் – மனிதன் ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஒரு மளிகை கடைக்காரர் பழக்கத்தின் காரணமாக எடுத்து எடை போடும் பொருள் ஏறத்தாழ சரியாக இருப்பது  பழக்கத்தினால் பெற்ற  தன்னுணர்வினால். கையில் எடுத்த பொருளின் எடையை உடலே அறியும் அளவிற்கு தன்னுணர்வு பெற்று இருக்கிறார். இதுபோன்ற புலன் உணர்வுகளை கவனமாக தன்னுணர்வாக வளர்ப்பதெப்படி என்பதை விட்டுவிட்டு உள்ளுறை  ஞானத்திற்குரியவற்றை மட்டும் சிந்திக்கலாம்.

இந்த ஞானத்தை மனிதன் பெற முடியுமென்றால், அதற்குரிய அறிவுத்திறன் நம்மிடம் இருக்க வேண்டும். உதாரணமாக நாம் உயிரோடு இருக்கின்றோம் என்று எப்படி நாம் அறிகிறோம். புலன்கள் காட்சிகளையும், சப்தத்தையும், அறிவதைப்போல், உடல் தனக்கு உயிர் இருப்பதை அறிகிறது. அதேபோல் ஆன்மாவின் தன்னுணர்வு தானிருப்பதை உணர்த்துகிறது. அது நேரடியான உணர்வு, தன்னைத்தான் அறியும் திறன், ஞானம் என்றே நாம் குறிக்கலாம். அபிப்ராயம் அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட புலன்களால் கட்டுப்பட்ட மனம் புலன்கள் அளிக்கும் செய்திகளை மட்டுமே உணரமுடியும், புலன்களை விட்டு அகன்ற மனமே தன்னையறிய முடியும். புலன்களின் ஆதிக்கத்தில் இருந்து அதன் எதிர்ப்பார்ப்புகளில் இருந்து விடுபட்ட அறிவுக்கு ஞானத்தின் உயர்வுண்டு. அதனால் மனத்தை தன்னையே அறியும்படிச் செய்ய முடியும். தன்னை அறிந்ததுபோல் மற்றவர்களையும் மனம் அறிய முடிகிறது. சூழலை அறிய முடிகிறது. அது சொல்லும் சூட்சும விஷயங்களை கவனிக்க முடிகிறது.

நம்மை சுற்றி உள்ள உலகத்தின் உண்மையை அறிய மனத்திற்குத் தன்னையறியும் திறனை தேவைப்படுகிறது. . மனம்  முதலில் அனுபவம், அபிப்ராயங்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு தன்னை உணர்ந்த பின், அதன் மூலம் உலகத்தை உணர்கிறது. உலகம் பிரம்மம் என்ற உண்மை மனத்திற்குத் தெளிவாகிறது. பிரம்மத்தின் சட்டங்களே அங்கு செயல் படுவது புரிகிறது.

அந்த நிலையில் மனம் உண்மையை முழுமையாக உணரும் திறனை பெறும். மேல்மனதில் – நம் விருப்பு வெறுப்பு, அபிப்பிராயம், முன் முடிவுகள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டு இருப்பதால்- அவற்றின் நோக்கிலேயே எதையும் பார்ப்பதால் மனம் அறிவது, புரிந்துகொள்வதை நாம் முடிவாக ஏற்றுக்கொள்ள முடியாது.  அதற்கு முடிவானதாகவும் முழுமையாகவும் தன்னையறிந்த ஒன்றை நாம் நாட வேண்டும். அதற்கு நம் பகுத்தறிவையும், புலன்களையும் மனத்தையும் கடந்து செல்ல வேண்டியது அவசியம். மரம் செடி, கோடி, விலங்குகள் – தங்கள் பிறவியின் நோக்கத்தை பற்றி தெளிவாக இருக்கின்றன. வேர் நீர் இருக்கும் இடத்தை தேடி எவ்வளவு தூரமும் செல்கிறது. விலங்குகள் நோக்கத்தை மீறிய செயல்களை செய்வதில்லை. ஆனால் மனிதன் தவறாமல் தன்  நோக்கத்திற்கு எதிராக- பரிணாம வளர்ச்சிக்கு எதிராக – அனைத்தையும் செய்கிறான். அதனால் மனிதன் முழுமை பெறுவதில்லை என்பதால் அவனுக்குக் குறையேற்படுகிறது. தவறு நேருகிறது. துன்பம், பிரச்சினை வருகிறது. அதன் மூலம் ப்ரம்மம் மனிதனை தன்னை  நோக்கி திருப்புகிறது. மனிதன் தன்னுள்ளே அதே நிலையிலேயே தீர்வைத் தேடுகிறான். 

ஆனால் அதை தாண்டி பிறவியின் நோக்கத்தில் – மேல் மனதையும் ஆழ்மனதையும் இணைக்கும் நோக்கத்தில் பார்த்தால் உண்மையும், அதற்கான ஞானமும் அதை  நடைமுறைப்   படுத்த தேவையான அறிவும் நம் அகக்கண் முன் தோன்றும். அதுவே தன்னுணர்வு. அது நமக்கு பழக்கம் ஆகும்போது – எப்போதும் மனம் அதை நோக்கியே இருக்கும் போது – அது பற்றிய ஒரு உணர்வு இடையறாது இருந்து கொண்டே இருக்கும். அது சொல்வது உள்ளுணர்வு. அதை கேட்டு செயல்படும் பாதை யோக பாதை.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »