Share on facebook
Share on telegram
Share on whatsapp

ஆன்மீக அனுபவங்கள் பெறுவது எப்படி?

ஆன்மீக அனுபவம் பற்றிய என் பதில் சற்றே வேகமாக இருந்ததால், புரிந்துக் கொள்ள முடியவில்லை, பதிவிட முடியுமா என்று சிலர் கேட்டிருந்தார்கள், அதற்கான link:

அது தொடர்பாக அன்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கான பதிலையும் அதில் சேர்த்துள்ளேன்.

ஆன்மீக அனுபவங்கள் பெறுவது எப்படி?

நாம் ஆன்மாவின் செயலை பார்க்கும் நேரங்கள்  நம் ஆன்மீக அனுபவங்கள்.  காலத்தை சுருக்கிய, சட்டத்தை மாற்றிய நேரங்கள், அதிசயம் என்று நாம் நினைத்தவை அத்தனையும் நாம் ஆன்மாவை பார்த்த நேரங்கள். அந்த அனுபவங்களே ஆன்மீக அனுபவம். அதை விழிப்பாக, இன்னும் நீடித்த நிலையில் பெற முடியுமா என்று பார்ப்பதே ஆன்மீக அனுபவம்.

தெய்வ நம்பிக்கையோடு நிற்பவர் வாழ்வில் ஆன்மீக அனுபவங்கள் ஏற்படுவதில்லை. பிரார்த்தனை செய்தால் பலிப்பது எல்லாம் ஆன்மீக அனுபவங்கள் அல்ல. இறைவனுடன்  ஒன்றவோ அல்லது அவர் நோக்கத்துடன் ஒன்றாவோ முயன்றால் ஏதாவது ஒரு அனுபவம் கிடைக்கலாம். நாம் இருப்பதாக நினைத்துக் கொள்வது எல்லாம் நாம் படித்தது, கேட்டது. அனுபவிப்பது வேறு, பெற்றோம் என்று அறிவது வேறு. பெற்றதாக நினைப்பது வேறு.

புதிய ஆன்மீக அனுபவங்கள் நம்மை நாடி வரும் போது, நம் மனதின், உணர்வின், உடலின் பலவீனங்கள் தவறாது தலை தூக்கும்.  உதாரணமாக, மௌனத்தை, அமைதியை, கர்மயோகி எனக்கு அளிக்க முயன்ற போது, சில நொடிகள் கூட என்னால், அதை பெற முடியவில்லை.  Lightness அதாவது புவியீர்ப்பு விசை இல்லாத ஒரு நிலையைப் போல, மிதப்பது போல உணர்ந்ததால், எனக்கு முன் பக்கம் சாய்ந்து கீழே விழுவது போல் ஒரு பயம் இருந்ததால், எனக்கு அது பிடிக்கவில்லை.  இது போன்று சிந்தனையற்ற நிலை வரும் போது அதை பற்றிய பயம், வயதாகி விட்டதே , அதனால் வரும் ஞாபக மறதியா , Dementia-வா என்பது போன்ற சந்தேகங்கள் தான் உடனடியாக வருகிறதே தவிர, சிந்தனையற்ற நிலையை ஆனந்தமாக அனுபவிக்க தோன்றுவதில்லை.

அன்னைக்கு சேவை செய்ய வேண்டும் என்று அன்னை அன்பர்கள் பலர் நினைப்பதுண்டு.  இடையறாத நினவு வேண்டும் என்று நினைப்பவர் உண்டு. அவர்களுக்குள் உள்ள அத்தனை சக்திகளும் இவற்றுக்கான திட்டம் தீட்டுவதில் செலவாகிறது.  ஆன்மீக அனுபவங்களைப் பெற நம்மிடம் உள்ள அனைத்து சக்திகளும் தேவை.  திட்டங்களைப் பற்றி நினைவிருந்தால், அது பற்றிய சிந்தனை இருந்தால், அது உள்ளவரை, ஆன்மீக அனுபவங்கள் வராது.

இந்த உண்மையை சட்டமாக சொல்ல வேண்டுமென்றால், நாமுள்ள நிலையை விட்டு, அடுத்த நிலைக்கு போக வேண்டுமென்றால், நாமுள்ள நிலையில் எந்த சக்தியும் செலவாகக் கூடாது. அதாவது, silence மௌனம் என்னும் ஆன்மீக அனுபவம் வேண்டுமென்றால், அதற்கு முந்திய நிலையான சிந்தனை என்பதே நம்மிடம் இருக்கக் கூடாது.  ஒரு நிலையில் சிந்தனை நிற்பது, அடுத்த நிலையில் மெளனமாக, ஆன்மீக அனுபவமாக வரும்.

ஆன்மீக அனுபவங்களுக்கு இந்த யோகத்தில் சரணாகதி ஒன்றே வழி.

அப்படி பார்க்கும் போது, அன்பர்களுக்கு ஆன்மீக அனுபவமாக அவர் கூறுவது இரண்டு.

ஒன்று – thought seeking its absolute – எண்ணம் பிரம்மத்தை, இடையறாது நாடும் நிலை அது. அது, உள்ளொளி வெளிப்படாமல் நடக்காது என்பதால், அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆன்மீக அனுபவம் என்கிறார் அதாவது ஒவ்வொரு நொடியும் அன்னை நினைவு, அவருக்கேற்ற செயல்கள், உணர்வுகள், மனப்பான்மை என்று இருப்பது சரணாகதி தரும் ஆன்மீக அனுபவங்களைத் தரும். 

.

இரண்டாவது – intellect seeking the oneness . முந்திய நிலை வந்த பிறகு, அதனுடன் ஒன்றுவது – எல்லாவற்றிலும் நான் – அல்லது நான் எல்லாவற்றிலும் என்னும் நிலை அல்லது நானே பிரம்மம் என்னும் நிலை- புத்தியின் சாரமாக மாறுவது ஆன்மீக அனுபவம் என்கிறார்.  காரணம் , சரணாகதி என்பதில் தாழ்ந்தது ஒன்று உயர்ந்ததற்கு தன்னை பணிவது அல்லது தன்னை தருவது என்னும் சிறு பிரிவினை – எவ்வளவு உயர்ந்த ஆன்மீக பண்பு என்றாலும்-, ஒரு சிறு பிரிவினை அதில் உள்ளது. பிரம்மத்தை நாடுவதிலும், ஒன்றுவதிலும் நடப்பது ஆன்மாவும், ஆன்மாவும் சந்திப்பது. படைத்தவனும் அதன் படைப்பும் ஒன்று சேரும் இடம் அது. அது வாழ்வில் ஒருமையாக வரும் போது, அணைத்து ஆன்மாவும் ஒரே சித்தம், அல்லது ஒரே தளத்தில், same place or same consciousness சந்திக்கிறது. அந்த நிலை equality அல்லது equanimity  சமநிலை . அதுவே அன்பர்கள் பெற வேண்டிய ஆன்மீக அனுபவம் என்கிறார்.

Answer to a devotee’s Question – is it phsycial or mental problem – :

Karmayogi says all spiritual experience belong to subtle plane and so our higher consciousness only can experience it. But – as the mind sees or vital experiences everything on the surface – it is subject to likes and dislikes akin to – for example- what we experience something when we eat. For me, it is like how I feel when I eat bitter guard. Because our nature basically won’t like anything that is different from habits, our prejudices, opinions. Spiritual headache is also the same where we cannot withstand the richness of atmosphere in the centre (that’s why it is said that children less than three years should not be allowed) or light passing through us or our consciousness expanding more than we can withstand – (as many say that they get a headache when they read Life Divine). I once felt chillness to the point of shivering – as I could not withstand the peace Karmayogi gave. That is limitations of human nature to experince the spiritual levels.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »