மனப்பான்மைதான் வாழ்வில் அனைத்தையும் நிர்ணயிக்கிறது – வாழ்வின் மறுமொழிக்கு முக்கிய காரணம் அதுவே என்பதே கர்மயோகியின் பெரும்பாலான கட்டுரைகள் கூறுபவை.
மனப்பான்மையும் அதன் பின் உள்ள நோக்கமும் எல்லாம் வாழ்வின் விதிகள், வாழ்வின் மறுமொழிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. என்றாலும் அது முழுமையாக, சரியானதாக உள்ளதா என்பதில் சந்தேகம் உள்ளது.காரணம் attitude என்று நாம் சொல்வது எப்படி வருகிறது? நம் அனுபவங்களில் நாம் positive ஆக நினைப்பது நம் opinion ஆக மாறுகிறது. அதை நம் உணர்வு முற்றிலும் ஏற்கும் போது அது positive attitude ஆகிறது. negative ஆன விஷயங்கள் prejudice ஆகிறது. அதனுடன் உணர்வு சேரும்போது negative attitude ஆகிறது. positive ஐ உடனே செய்வோம் negative ஐ செய்ய தயங்குவோம்.
அதையும் பார்த்தால் நல்லது கேட்டது என்று சமூகத்தாலும் , குடும்பத்திலும் , படிப்பாலும், மனசாட்சி என்று கற்றுக்கொடுக்கப்பட்டவையாலும் இருப்பதை ஏற்று கொண்டு இருப்போம். திரு உரு மாற்றத்திற்கு எது நல்லது, பரிணாமத்தில் முன்னேற எது நல்லது என்று உயர் சித்தத்தின்படி பார்ப்பதில்லை. மேலும் பெரும்பாலும் நம் behavior ஐ நம் attitude ஆக நினைத்து கொண்டு இருப்போம். குறைந்த பட்சம் சற்று நிதானித்து (step back ) அன்னைக்கு எது சரி எது தவறு என்று கூட யோசிப்பதில்லை. இறைவனுக்கு உகந்ததை செய்வது மட்டுமே துன்பமே இல்லாத ஆனந்தமய வாழ்வைத் தரும். impulsive behavior தான் நம் வழக்கை முறை என்னும்போது attitude , intention போன்றவை வேலை செய்ய ஏது இடம்.
அதோடு, conviction முக்கியம். ஊழல் மேல் நம்பிக்கை உள்ள ஒருவனுக்கும் அதற்க்கு எதிரான அன்னை மேல் உள்ள நம் நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தாலே இது புரியும். Conviction, faith, clarity, truth, atmosphere, strength of personality , time என்று பல விஷயங்கள் life respose கு தேவை படுகிறது. அறிவு ஒரு குணத்தை ஏற்றுக்கொண்டு ஆமோதித்தால், அதன் விளைவாக ஏற்படுவது மனப்பான்மை. அறிவின் துணையோடு வெளிப்படும் குணநலம் மனப்பான்மை எனப்படும். அறிவை மாற்றி, அதனுதவியால் மனப்பான்மையை ஓரளவு மாற்ற முடியும்; முழுவதும் மாற்றுவது எளிதன்று.
ஒருவனது வாழ்க்கையை நடத்துவது குணம். விளக்கமளிப்பது அறிவு. வழிவகுத்துக்கொடுப்பது மனப்பான்மை. பிறர் காண்பது நடத்தை. அவனது வாழ்வின் வெற்றி, தோல்விகளின் அளவை நிர்ணயிப்பது அவனது சுபாவம். சுபாவம் ஆசைப்படும். ஆனால் நோக்கம் அதை ஒட்டியதாக இருப்பதில்லை. சுபாவம் என்பது பொதுவாக பிறப்பில் பெற்றோரிடமிருந்தும், வளர்ப்பில் சூழலாலும் , ஆழ்மனதில் முன்ஜன்மப் பலனாகவும் ஒருவர் பெறுவது. அதனால அது பழக்கம் என்னும் அளவிற்கு மாறுமே தவிர , மனப்பான்மையை உருவாக்கும் நோக்கமாக இருப்பதில்லை. பொதுவாக, குணம் சுபாவத்தை ஒட்டியே அமையும். அறிவு சுபாவத்தை மென்மைப்படுத்தலாம். அடிப்படையில் மாற்ற முடியாது. சுபாவத்தை அடிப்படையில் மாற்றும் திறன் ஆன்மாவுக்கே உண்டு. அதனால் நம் சுபாவத்தை பற்றிய தெளிவு நமக்கு இருந்தால் – முன்னேற்றத்திற்கு எதிரான விஷயங்கள் அதில் இருந்தால் – உதாரணமாக சோம்பேறித்தனம் , எதையும் தள்ளி போடுவது – இருந்தால் அதில் இருந்து வெளியே வருவதை நோக்கமாக எடுத்து கொண்டு பயிற்சி செய்யலாம். அது ஒருவகையில் வாழ்வு தரும் மறுமொழியை மாற்றலாம். என்றாலும் அங்கு மனப்பான்மை என்பது சுயநலமே. சுறுசுறுப்பு அன்னை விரும்பும் பரிணாமம் – என்று நினைத்து அதை செய்ய முடிந்தால் – அது தரும் மறுமொழி வேறு விதமாக இருக்கும்.
பரிணாமம் என்பது அன்னையின் திருவுள்ளம். எந்த தேவையையும் நோக்கத்தையும் – பரிணாமம் , உயர்ச்சித்தம், என்னும் பார்வையில் பார்க்க ஆரம்பித்தால் அன்னையின் திருவுள்ளம் நிறைவேறுகிறது என்று பொருள். அப்படி என்றால், அதற்குத் தடையான அகந்தை கரைய வேண்டும். அதன் அத்தனை செயல்களும் நோக்கங்களும் கரைய வேண்டும்.
உதரணமாக செலவாளி கடன் வாங்கிக் கொடுக்கமுடியாத நேரத்தில் எதிர்பாராமல் பெருந்தொகை வரும்பொழுது, முதலில் கடனைத் தரவேண்டும் என நினைக்கும்பொழுது, மனம் தனக்கு ஆர்வமான செலவை நாடும். அதை முக்கியம் என்று நினைக்கும். மனம் கடன் கொடுப்பதே முக்கியம் என்று சொன்னால் கூட முடிவாக தன் ஆர்வத்தைப் பூர்த்தி செய்து கொள்வானே தவிர, கடனைத் திருப்பித் தரமாட்டான். இது வாழ்வில் நடைமுறை என்று நினைக்கிறோம். இது அகந்தையின் , நோக்கம் அல்லது மனப்பான்மை என்று நமக்கு நினைவுக்கு வருவதில்லை. என்ன செய்தாலும், எவ்வளவு உழைத்தாலும் கடன் தீருவதில்லை. அதற்கு காரணம் அந்த முடிவு , நோக்கம், மனப்பான்மை என்று புரியாமல் கர்மத்தின் மீது , அன்னைமீது குறை கூறுவோம். பணம் வரும்பொழுது, கடனை மறப்பது ஒரு நிலை. கடனைக் கொடுக்கக் கூடாது என்பது வேறொரு நினைப்பு.கடனைக் கொடுக்க வேண்டும் என்ற நினைவும் – ஆனால் வேறு செலவு செய்யும் நிலையும் ஒன்று. சிக்கல் தீர்ந்து வாழ்வு ஆனந்தமாக இருக்க வேண்டும் என்றால் கடனைக் கொடுக்க வேண்டும் மனப்பான்மை தான் என்ற தீவிர உறுதி தரும். அதுவே வாழ்வில் அபரிமிதமாக வருமானமாக வரும் – உண்மையான மனநிலையாகும்.
கடனுக்கு என்று இது போன்ற நிலைகள் இருப்பது போல -நம் முன் உள்ள ஒவ்வொரு பிரச்சினையிலும் இது போன்று நான்கு அல்லது ஐந்து நிலைகள்- முன் முடிவுகள் அபிப்ராயம், விருப்பம், சுயநலம் , அறியாமை ஆகியவற்றை ஒட்டிய அகந்தையின் நிலைகள் – அது வெளிப்படும் விதங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தால்
நாம் எந்த அளவிற்கு – ஆனந்தத்தை தடுத்து கொண்டு இருக்கிறோம் என்பது புரியும்.
ஆன்மிக பண்புகளை பற்றிய அறியாமை விழித்து அறிவாக மாறும்பொழுது அது செயலிலும், உணர்ச்சியிலும், எண்ணத்திலும் பிரதிபலிப்பது, ஜடத்தில் செயல் வடிவம் பெறுவது – வாழ்வின் மறுமொழியை நாமே உருவாக்குவதாகும். அறியாமை அறிவாகி நம்முள்ளுணர்வு வாழ்வை ஆனந்த மயமாக்குவது ஆன்ம விழிப்பாகும்.
எந்த வேலையே செய்தாலும் – எதிர்ப்பார்ப்பு நோக்கம் , இல்லாமல் – அன்னை விரும்பும் பண்பை, அதற்கான என் அதிக பட்ச அறிவை , திறமையை தருவேன் என்று செய்தால் – அதுவே நம் மனப்பான்மை ஆகிறது. அது தரும் மறுமொழி நாம் எதிர்ப்பாராத உயர்ந்த நிலையில் இருக்கும். miracle என்று சொல்லும் அளவிற்கு இருக்கும்.
வாழ்வு பாடம் கற்று கொடுக்கும் இடங்கள் , பரிணாமத்தில் முன்னேறும் இடங்கள். அதிக நாமே விரும்பி செய்யும்போது – அணைத்து அறியாமையில் இருந்து வெளியே வருகிறோம். அது Self within – choosing its own hour and way to manifest to the mental instrument. It is flowering of inner being to self-realization and higher knowledge என்கிறார். அதுதான் வாழ்வு முழுதும் நடந்து கொண்டு இருக்கிறது. நாம் கவனிப்பதில்லை.