நமக்கு தேவை அதற்கான சின்சியாரிட்டி மட்டுமே. அந்த சின்சியாரிட்டி நாம் அறிந்த உயர்ந்த அன்னை முறையை உணர்வு ஏற்று அதை ஞானமாக, மனதுக்கும் உடலுக்கும் தந்து, செயல்படுத்த சொல்வது ஞானம் உறுதியின் மேல் செயல்படுவது. அந்த அளவில் இறைவன் பெற்ற ஞானம், படைப்பாற்றலை நாமும் பெறுகிறோம். நாம் படைக்கும் அனைத்திலும் நமக்கு தேவையான ஆனந்தம் இருக்கும். காரணம், இது நம் எதிர்பார்ப்பை ஆசையை அதன் முடிவை, அது தரும் ஆனந்தத்தை என்று அனைத்தையும் உள்ளடக்கியது. காரணம், இப்போது நாம், இறைவன் ஆனந்தத்தை அனுபவிக்கும் கருவியாக மாறி இருப்போம். அனைத்திலும் ஆனந்தம். அனுபவிப்பவன் அவன் என்பதால், அது நம் வாழ்வில் நமக்கான ஆனந்தமாக எதிரொலிக்கிறது.
சுருக்கமாக சொல்வதானால் நம் ஆசைகளை ஆன்மாவின் நோக்கங்களை ஒட்டியதாக மாற்றிக் கொண்டால் நம் சந்தோஷம் ஆனந்தம், பேரானந்தம் என்று மாறும் அதற்கு சுருக்கமான வழிகளாக கர்மயோகி கூறுவது
• Let thy will be done , not my will -என்பது நம் ஆசைகளை சொன்னாலும், நினைத்தாலும் இந்த மந்திரம் அதை இறைவனின் விருப்பமாக மாற்றும்
• என் ஆசைகள் அன்னையின் நோக்கத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்னும் மனப்பான்மை. அது ஆசைகளைக் கட்டுப்படுத்தி நல்ல நடத்தைக்குள் வைக்கிறது. அது ஆசைகளை புரிய வைத்து, பண்பாட்டை, பக்குவத்தை தருகிறது. மனப்பான்மையை உயர்த்தி ஞானத்தை தருகிறது. இவை அனைத்தும் பரிணாமம் என்பதால் சுபாவத்தில் திருவுருமாற்றம் ஆகிறது.
• எதிர்பார்த்ததைவி,ட எதிர்பார்க்காத சந்தோஷம் தரும் ஆனந்தம் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படிப்பட்ட செயல்கள் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் செய்யப்படுவதால் சிறு மாற்றமும் முன்னேற்றமும் பெரிய ஆனந்தத்தை தரும்.
• எதிர்பார்ப்பும் பெற்றே ஆக வேண்டும் என்னும் நோக்கமும் அகந்தையின் வெளிப்பாடுகள். அதிலேயே கவனம் இருப்பதால், அந்த கவனமே முடிவை அனுபவிக்கும் மனப்பான்மையை குறைத்துவிடுகிறது. அந்த நோக்கத்தை விட்டுக் கொடுப்பது அகந்தையிலிருந்து வெளியே வருவது என்பதால் அது ஆனந்தத்தை அதிகமாக்குகிறது.
• சாவித்திரி கண்முன் தெரிந்த இறப்பை கூட எதிர்பார்க்க மறுத்ததால், அவள் பெற்ற ஆனந்தம் இந்த பிரபஞ்சம் பெற்ற ஆனந்தம். அதே ஆனந்தத்தை ஆசைகள், எதிர்பார்ப்புகள் இல்லாத செயல்கள் பெற்றுத் தரும்.
• When ego refuses to possess a desire, the Psychic transforms it into the delight of the being.
நம் ஆசைகள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமானவை, சின்னத்தனமானவை. குறுகிய மனப்பான்மை கொண்டவை. பல ஆசைகள் ஏன் இதற்கு ஆசைப்படுகிறோம் என்று தெரியாமல் வருபவை. அல்லது எதற்கு ஆசைப்பட வேண்டும் என்று தெரியாமல் வருபவை. பிறரைப் பார்த்து, சமுதாயத்தை பார்த்து, அல்லது நம் மேல் பிறரால் திணிக்கப்பட்ட தேவைகளால் வருபவை. இவற்றை கடந்தாலே, நமக்கு உண்மையான ஆனந்தம் தரும் ஆசை எது என்பதை நம்மால் அடையாளம் காண முடியும். அதை ஆன்மாவின் ஆசைக்கு உட்படுத்தினால், அது விரும்பும் பேரானந்தத்தை பெற முடியும்.