Insecurity – பாதுகாப்பின்மை பற்றி சொல்ல முடியுமா?
Insecurity – பாதுகாப்பின்மைக்கு பின்னால் ஒரு பெரிய பலம்,வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார் கர்மயோகி. பொதுவாக பாதுகாப்பின்மைக்கு ஒரு இழப்பை பற்றிய பயமே காரணமாக இருக்கிறது. அது , உறவு, அந்தஸ்து, வயது, உடல்நலம், வளம், பதவி என்று ஏதோ ஒன்றே காரணமாக இருக்கிறது. எந்த ஒன்றை யோசித்தாலும் அவற்றை இதற்குள் பொறுத்த முடியும். அதன் வெளிப்பாடுகளான இயலாமை, சோகம், ஏமாற்றம், வெறுப்பு, விரக்தி, எரிச்சல், ஆராய்ந்தால் இது புரியும். மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்பதும், நம் இஷ்டப்படி , எதிர்பார்த்தபடி நடக்காதோ என்பதும் அதில் சேரும்.
பாதுகாப்பின்மைக்கு பின்னால் இருப்பது ஒரு கவலை. எந்த கவலைக்கும் காரணம் ஒரு பயம். எந்த பயத்திற்கும் காரணம் ஒரு சந்தேகம். சந்தேகத்தின் வித்து ஒரு அவநம்பிக்கை. அவநம்பிக்கை அதற்க்கு எதிரான நம்பிக்கையாக மாறுவது அதிலிருந்து வெளியே வருவது. அது அன்னை மேல் நம்பிக்கையாக இருந்தால் பாதுகாப்பின்மை – பாதுகாப்பாக மாறும். அது வாழ்வில் உற்சாகம், சந்தோஷம், திருப்தி, அன்பு, நிறைவு, சுமுகம், என்று வெளிப்படும். .
மனம் கவலைப்படும் போது, ஏன் இது குறையாக நின்றது என்று சிந்தித்தால் நம்பிக்கை, திறமை, வாழ்வு, சூழல், போன்றவை புரியாதது, அதன் தொடர்பான அறியாமை, பயமாக, பாதுகாப்பின்மைக்கு அடிப்படையாக மாறி இருப்பது தெரியும். அது சம்பந்தமாக அன்னை, கர்மயோகி சொல்லியவற்றை தெரிந்து கொண்டு நம்பிக்கை வளரும் வகையில் செயல் பட வேண்டும்.
குறிப்பாக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் – அது பற்றிய ஒரு தெளிவுக்கு வருவது. தெளிவு தன்னம்பிக்கையை தரும். ஒரு பேப்பரில் நம் பாதுகாப்பில்லாத உணர்வுக்கு என்ன காரணம் என்பதை பகுத்தறிவுக்கு உட்பட்டு ( facebook இல் லைக்ஸ் குறைந்தால் கூட, social site -களில் கமெண்ட்ஸ் visitors குறைந்தால் கூட insecured ஆக இருப்பவர்கள்) எழுதினால் உண்மை தெரியும். பெற வேண்டிய உணர்வு, திறன், அறிவு, திட்டம் ஆகியவற்றை பெற முடியும். பெரும்பாலும் அது கண்ட , கேட்ட அனுபவத்தின் அடிப்படையில் நமக்கும் நடந்து விடுமோ என்பதாகவே இருக்கும். செய்திகள், சமூகம், சூழல், உறவுகள், நண்பர்கள் நம்மை எப்படி பாதிக்கிறார்கள் என்பது அப்போது புரியும். சில மாதங்களுக்கு இதைப்பற்றி பேசும் , உங்கள் தன்னம்பிக்கையை குறைக்கும் சூழல் உறவுகள் இல் இருந்து விலகி இருங்கள். குறிப்பாக நீங்கள் வழக்கமாக எதிர்கொள்ள விரும்பாததை எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்களால் முடியும். அன்னை இருக்கும்போது எந்த நெகடிவ் உணர்வுகளுக்கும் இடமில்லை.
ஒரு நிலையில் – உறவுகள் கைவிட்டு- தனிமைப்படுத்தப்பட்டு – ஓரிரு நண்பர்கள் உதவியில் -சாப்பாட்டிற்கே வழி இல்லாத நிலையில் இருக்கும்போது – சாலையில் முதியவர் யாராவது தடுமாறி நடக்கும்போது, கடக்க முடியாமல் உதவி கேட்கும்போது – என் நிலை பற்றிய பயம் வரும். நானும் இப்படித்தான் ஒரு நாள் அவியனோ என்னும் பயம் வரும். வாழ்வே வீண் என்னும் பாதுகாப்பற்ற உணர்வு வரும். அதில் இருந்து மீள வேண்டுமானால் , சுய மரியாதையை வேண்டும், தன்னம்பிக்கை வேண்டும், நமக்கான முக்கியத்துவம் வேண்டும் – அதற்கு திறமை , உழைப்பு , படிப்பு வேண்டும் என்பது புரிந்தவுடன் அதற்கான முயற்சி எடுத்தவுடன் அனைத்தும் மாறியது.
அதனால் உங்கள் தன்னம்பிக்கையை , சுய மரியாதையை, சுயமதிப்பை வளர்க்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். உங்கள் முக்கியத்துவத்தை மற்றவர்கள் உணரும் அளவிற்கு எதையும் சிறப்பாக செய்யுங்கள். உங்களை சுற்றி ஒரு புது வட்டம் உருவாகும். பாதுகாப்பின்மை போய்விடும்.