அறிவின் தீட்சண்யம் ஆண்டவனின் திருவுள்ளமாவது பரிணாமம் – என்று ஒரு தினசரி செய்தி சமீபத்தில் குழுமத்தில் வந்தது. அது எப்படி என்று சிந்தித்த போது தோன்றியது.
தீட்சண்யம் என்பதை கர்மயோகி அவர்கள் அறிவை விட்டு உணர்வும் உடலும் பிரியாத நிலை என்கிறார். அதாவது நம் அறிவு அறிந்த அத்தனை உயர் சித்தங்களையும் முரண்பாடு இல்லாமல் உணர்வு ஏற்று, செயலாக வெளிப்படும் நிலை. அறிவு வளரும்போது பெரும்பாலும் உணர்விலிருந்து பிரிந்து விடுகிறது. என்ன அறிவு இருந்தாலும் உணர்வு தனியாகக் பிரிந்து செயல்படுவதை அது அறிவதில்லை. அறிவின் சாரம் மனமாக மாறினாலும் – பெரும்பாலானவற்றை நாம் மனமார செய்வதில்லை. ஜடமாக செய்கிறோம். அதற்கு முரண்பட்ட அபிப்ராயங்களுக்கு , முன் முடிவுகளுக்கு ஏற்பச் செயல் படுகிறோம். இறைவன் திருவுளம் புரிய மனம் வளர்ந்து சத்திய ஜீவியமாக உயர் சித்தமாக வேண்டும். உயர் சித்தம் நிலைக்க மனம் உணர்ச்சி, உடலில் இருந்து பிரியக்கூடாது என்பது அடிப்படை தத்துவம்.
உதாரணமாக வெட்டி பேச்சு பேசுவதற்கு என்றே ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.. அவரிடமிருந்து தப்பிக்க நான் இல்லையென்று சொல் என்றோ அல்லது எனக்கு வேலையிருக்கிறது என்றோ சொல்கிறோம். அது பொய். faslehood ஆனால் அது விடுதலை தருகிறது. அது அறிவின் சாரமாக மாறி தப்பிக்க வேண்டுமானால் பொய் சொல்ல வேண்டும் என்னும் தீட்சண்யமாக மாறுகிறது. ஆனால் சத்தியம் தீட்சண்யத்தை தர வேண்டும் என்றால் எப்படி உண்மை மட்டும் சொல்லி தப்பிப்பது.
நீங்கள் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை என்றோ வெட்டி பேச்சு பேசுபவர் நீங்கள் என்றோ எப்படிக் கூறுவது? அந்த நினைவு வந்து சமர்ப்பணம் செய்யலாம். அதனை மூலம் அவர் வருவது தடை படலாம். அது பக்தியை வளர்க்கலாம். ஆனால் தீட்சண்யத்தைத் தராது. .அப்படி இல்லாமல் அன்னைக்குப் பொய் பிடிக்காது, அதனால் என்னால் பொய் சொல்ல முடியாது’ என்று முடிவு செய்தால் அது சத்யச் சித்தத்தைத் தொடுவதாகும் . சூழலில் சத்தியம் வரும். அது அந்த இடத்தை உண்மையால் கனக்கச் செய்யும். வருபவரால் பொய், வதந்தி , வெட்டி பேச்சு பேச முடியாது. அவரை யாரோ தேடி வருவர். அழைப்பர் . அல்லது தானே போய்விடுவார். நமக்குப் பொய் சொல்லும் சந்தர்ப்பம் போய்விடும். சத்தியத்தை நாடும் தீட்சண்யம் வரும். நமது அன்றாட நிகழ்ச்சிகளில் இதைப் பொருத்தி பல இடங்களில் செய்துபார்த்தால் இது புரியும்.
falsehood முறைகள் நினைவுக்கு வந்து இது கூடாது என்று சமர்ப்பணம் செய்வதற்குப் பதிலாக – அதற்கு எதிரான truth எது என்று சிந்தித்து எடுத்து கொள்வது – தீட்சண்யத்தை வளர்க்கும்.
நமக்கு இவையெல்லாம் புரியவில்லை என்றால் அன்னை விரும்பும் பண்புகள் தீட்சண்யம் என்று எடுத்து கொள்ளலாம்.
உதாரணமாக அன்னை விரும்புவது எந்த சூழ்நிலையிலும் நிதானம். நிதானம் – அன்னை விரும்புவது எந்த சூழ்நிலையிலும் நிதானம். தரும்.
எளிய வழியாக கர்மயோகி அவர்கள் தருவது ஏற்கனவே தந்து இருந்தாலும் மீண்டும் இங்கேத் தருகிறேன்.
இந்த நிமிடம் முதல் நமக்கு எது உயர்ந்ததாக தெரிகிறதோ அந்த அளவு உயர்வான முறையில் செயல்படல்.
பொய்யையும் , பொய்யின் வடிவங்களையும், பொய்யான செயல்களையும் – நண்பர்கள் ,உறவுகள், சமுதாயம் – என்ற காரணங்களுக்காக ஏற்று கொள்ளாமல் இருத்தல்.
குறைந்த பட்ச தேவை நல்ல ஒழுக்கம், நல்லெண்ணம், ஒழுங்கு, சுயநலமும் கீழான எண்ணங்களும் அழிந்த நிலை என்று புரிதல் .
அன்னையின் கருத்துகளையும், அன்னைக்கு ஏற்ற உணர்வுகளையும், அன்னை ஏற்று கொள்ளும் பழக்கங்களையும், அவர் சட்டங்கள், மரபுகள், ஆகியவற்றை தெளிந்து பின்பற்றி மேலும் மேலும் ஏற்று கொள்வது.