கர்மயோகி அவர்கள் ஒரு “Daily Message “-இல் Seek life for expressing the Spirit. Do not seek Spirit to enrich our life. என்று கூறி இருப்பார். அதுவேய நம் வாழ்வின் சாரம் என்பார்.
நம் வாழ்க்கையில் சில விஷயங்கள் திரும்பத் திரும்ப வந்திருக்கும். ஒரே மாதிரியான பிரச்சினைகள் வந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட character கொண்ட மனிதர்களால் பெரும்பலும் பிரிச்சினைகள் வந்திருக்கும் . ஆனால் அதை எல்லாம் பிறர் குறையாக பார்க்காமல் அதன் பின்னால் உள்ள நம் எந்த குணத்தால் இதை எல்லாம் வரவழைத்து கொண்டோம் என்று பார்த்தால் நம் பெரும்பாலான வாழ்க்கையை நம் எந்த சுபாவம் நடத்துகிறது என்று புரியும்.
நம் வாழ்வில் இரண்டு மூன்று சுபாவங்கள் மட்டுமே dominant ஆக இருப்பது தெரியும். அது நம் வாழ்வின் சாராம்சத்தை அறிவது . “act repeats”, “life repeats ” என்னும் நோக்கில் கர்மயோகி அவர்கள் நிறைய எழுதி இருக்கிறார்கள்.
பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் அளிப்பதன் மூலம் நமது low consciousness பற்றிய நிலையான விழிப்புணர்வைக் கொடுக்க வாழ்க்கை முயற்சிக்கிறது, இதன் மூலம் higher consciousnessக்கு விவேகம் மற்றும் பாகுபாடு தந்து நிரந்தரமாக உயர்த்துகிறது.
நாம் ஒரு பிறவியில் சில அனுபவங்களின் சாரத்தை பெறவே ஆன்மா விரும்புகிறது என்பதை அடிப்படியாக கொண்டது இது. வாழ்க்கையில் நிகழ்பவை ஒரு குறிப்பிட்டச் சட்டத்தை ஒட்டி அதன் எனர்ஜி இருக்கும்வரை நடக்கிறது – கர்மா என்று கூட சொல்லலாம். ஒன்று அதை அனுபவித்து அதன் சாரம் (essence) புரிந்தால் அது வராது அல்லது அது திருவுருமாறினால் வராது. இதைத்தான் கர்மம் சுபாவத்தின் மூலமே பலிக்க முடியும் என்கிறார்.
அந்த சாரம் புரியாமல் வாழ்க்கையுடன் போராடுவது தோல்வியில் முடியும் அல்லது வழக்கை என்றால் இப்படித்தான் இருக்கும் என்னும் விரக்தியில் முடியும். ஒரு செயலை செய்யாமல் avoid செய்தாலும், அது வாழ்க்கையில் வளரும். ஒரு செயலை விதியே என்று செய்தலும், அனுபவித்து தீர்த்து விடுவோம் என்று செய்தாலும் தற்காலிகமாக ஜெயித்த உணர்வு வரலாம். ஆனால் புது சாதனை, வளர்ச்சி எதுவும் இருக்காது. .
ஆனால் அது வந்ததற்க்கான காரணத்தை புரிந்து செய்தால் அடுத்த நிலைக்கான அறிவு, திறமை, விவேகம் வரும். வழக்கை அடுத்த நிலைக்கான வெகுமதியைத் தரும்.
ஆன்மாவின் பண்புகளை பலன் தரும் விஷயங்களாக நினைக்காமல் – வாழ்வின் நோக்கம் , தேவை அதுதான் எனபது புரிந்தால் – அது வெளிப்பட வாழவைக்க கருவி ஆக்கினால் அது அனைத்து வளத்தையும் ஒரு முழுமையான வளத்தைத் தரும்.