நாம் அன்னையின் உயர்வை, அவர் விருப்பங்களை தெரிந்து கொண்ட பிறகு – வாழ்வில் சில யோக பண்புகளை கொண்டு வரவேண்டும் என்று நினைத்து சில கட்டுப்பாடுகளை ஏற்கும்போது, அதை நடைமுறை படுத்தும்போது தான் நம் சிரமம் , நம் இயலாமை நமக்குத் தெரிய வரும். நாம் நமது உறவுகள், சமூகம், மனசாட்சி மற்றும் தார்மீகம் ஆகிவற்றை அடிப்படியாக கொண்ட மனப்பான்மை personality, நம் திறமை திறன், ஆர்வம் ஈடுபாடு அகஇவற்றின் personality என்று அனைத்தையும் முன்னிறுத்தி – அதற்குள் அன்னை விரும்பும் பண்புகளை கொண்டு வரமுடியுமா என்று பார்க்கிறோம். நம்மை அறியாமலேயே அதைச் செய்கிறோம். அதனால் புறப்பட இடத்திலேயே நிற்கிறோம் என்பது கூட தெரியாமல் ஏதோ செய்வதாக நினைத்து கொண்டிருப்போம். இங்கு நமக்கு தேவை தெளிவான , விழிப்பான – நம் உறுதி, ஆர்வம் ஆகிய வற்றை நிலை நாட்ட கூடிய ஒரு முடிவு.
அதற்கு ஒரு வழியாக கர்மயோகி அவர்கள் கூறுவது. ஆர்வம்-ஒருமித்த கவனம்-சமர்ப்பணம். Aspiration – Concentration – Consecration.
ஆர்வம்:
அன்னைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிறிய அல்லது அடிப்படை ஆசை நம் அனைவருக்கும் உள்ளது. அதை அணைய விடாமல் இருப்பதே முதல் வழி. அதற்கு ஏற்றாற்போல நடக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்கு எதிரான எதையும் செய்யாமல் இருப்பது முக்கியம். உதாரணமாக அறிவில் ஒரு காரியம் நிறைவேற பொய்மையின் வழிகள் பல நமக்கு தெரியும். பதவி, அந்தஸ்து , அதிகாரம், ஜாதி, என்று நமக்கோ அல்லது நமக்கு தெரிந்தவருக்கோ இருப்பதை, லஞ்சத்தை நம்புவதாக இருக்கலாம் உணர்வில் பேச்சு துணை, வெட்டிப்பேச்சு, வதந்திகள், டிவி சீரியல் , கிளர்ச்சியூட்டும் , அல்லது வெறும் பொழுதைபோக்கும் நாவல்கள் என்று அன்னை சூழலை வர விடாமல் தடுக்கும் விஷயங்கள், உடலில், சோம்பேறித்தனம் கொண்டுவரும் கால தாமதம், செம்மை இல்லாமை போன்ற அன்னை பலிப்பதை தடுக்கும் விஷயங்களை செய்யாமல் இருக்கும் முடிவு, உறுதி, சித்தம் முதல் தேவை.
ஒருமித்த கவனம்:
என் விருப்பம் / தேர்வு என்ன, அன்னையின் விருப்பம் / தேர்வு என்ன என்ற கேள்வியுடன் உணர்வுபூர்வமாக அனைத்தையும் அணுகுவது அதிலேயே ஒரு முழு கவனத்துடன் இருப்பது ஒருமுக கவனம். ஒவொரு கணமும் இப்படி இருப்பது என்பது இடையறாத அன்னை நினைவு வந்தால் மட்டுமே முடியும். அது ஆன்மாவால் மட்டுமே முடியும் என்பதால் அது அறிவுக்கு தன் பரிந்துரைகளை வழங்கும். ஒரு குழந்தை தன்னை விட்டு தூர மாக விளையாடிக்கொண்டு இருந்தாலும் தாயின் கவனம் கண்ணும், கருத்தும், உணர்வுமாக எப்படி இருக்குமோ , குழந்தை சிறு பாதிப்பும் அடைந்து து விடக்கூடாது என்ற உணர்வு எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட உணர்வு அன்னையை நோக்கி நமக்கு இருக்கவேண்டும். அதுவே ஒருமுக கவனம்.
சமர்ப்பணம்:
அப்படி இருக்க முடியவில்லை – அன்னையை எங்காவது பிரதிஷ்டை செய்து அதையே நினைத்து செய்வது அல்லது அதனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு செய்வது என்பது சமர்ப்பணமான செயலாகிறது. உதாரணமாக இதயத்திற்கு பின்னல் இருப்பதாக பலரும் நினைப்போம். அது இல்லை என்றால் பாக்கெட்டில் இருக்கும் பிளெஸிங் பாக்கெட், செயினில் இருக்கும் சிம்பல் டாலர், என்று எதை வேண்டுமானாலும் அத்தகைய கவனம் தரும் இடமாக அன்னை இருக்கும் இடமாக நாம் கற்பனை செய்து கொள்ளலாம். எந்த ஒரு செயலையும் அதனிடம் சொல்லி விட்டே செய்வோம் என்று இருந்தால் நிச்சயம் அது பொய்மையின் வழியாக இருக்காது – அன்னை விரும்பும் பண்புகளாகவே இருக்கும்.
இதை செய்ய தொடங்கினாலே தானாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மாவின் பிடியில் வாழ்வை தருவோம். அது செறிவு பெற்று பின் நம்மை வழி நடத்தும்.