இதை என் வாழ்வில் நடந்த ஒரு உதாரணம் மூலம் புரிய வைக்க முயல்கிறேன். நான் ஒரு மொபைல் போன் தயாரிப்பாளரின் ஒப்பந்தக்காரராக இருந்தேன். அப்போது அதுவரை UK வில் இருந்து பெற்று வந்த ஒரு பொருளை இங்கேயே தயாரிக்க விரும்பினர்.அதன் தொழில் நுட்பம் புதிது என்பதால் அவர்களையே தொழில் நுட்பத்தைத் தரச் சொல்லி மேற்பார்வைக்கும் அழைத்தனர். அதை apply செய்ய என்னை அழைத்தனர். நானும் இதை அடுத்த கட்ட முன்னேற்றம் என்று நினைத்து எனக்குத் தெரிந்த வகையில் அன்னையை அவர்களுக்கு அனுப்பினேன். அந்த UK கம்பெனியோ ஆசிய கண்டம் முழுதும், இந்தியா உட்பட இந்த வேலையை செய்ய , தயாரிக்க ஒரு சிங்கப்பூர் கம்பெனிக்கு லைசென்ஸ் கொடுத்து இருந்தது. அதனால் அந்த UK கம்பெனி எங்களை சிங்கப்பூர் கம்பெனியிடம் கேட்கச் சொல்லி விட்டது. அந்த சிங்கப்பூர் கம்பெனியோ நாங்கள் முழு product ஐ த் தருகிறோம் நீங்கள் apply செய்து கொள்ளுங்கள் என்றனர். அதாவது நான் அவர்களுக்கு labour contractor போல இருக்க வேண்டும். எனக்கு அப்படி செய்ய விருப்பம் இல்லை. காரணம், Turn Key Contract எடுக்கும் நான் வெறும் labour supply செய்வது பல படிகள் இறங்குவது, அன்னை தருவது அப்படி இருக்காது என்று நினைத்தேன். உண்மையில் அந்த சந்திப்பு மிகப் பெரிய joint venture -க்கு வர வேண்டும் என்றே அன்னையை அனுப்பி இருந்தேன். சிங்கப்பூர் கம்பெனி இறங்கி வரவில்லை. வழக்கம் போல காரணங்களைச் சொல்லாமல் அந்த சந்திப்பின் முதல் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களை ஆராய்ந்தேன். எல்லாம் சாதாரண வியாபார பேச்சாகவே இருந்தது. எந்த குறையும் என்னிடம் இருப்பதாகத் தெரியவில்லை. மிக ஆழமாக சிந்தித்த போது , சிங்கப்பூர் கம்பெனியில் இருந்து வந்தவர் சொன்ன ஒரு வார்த்தை மனதில் தைத்தது. அவர் சொன்னது “நான் இந்தியர்களை நம்புவதில்லை. Technology தெரிந்தவுடன் அவர்களே செய்ய ஆரம்பித்து, விலை குறைவாக கொடுத்து, தரக் குறைவாக கொடுத்து, மார்க்கெட்டை கெடுத்து விடுவார்கள்” என்றார். அதில் ஏதாவது correspondence இருக்குமோ என்று பார்த்தேன். வெட்கப்படும் வகையில், அதே போன்ற ஒரு எண்ணம், மனப்பான்மை என்னிடம் இருப்பது தெரிய வந்தது.
ஒரு குறிப்பிட்ட மாநில மக்களை எனக்கு பிடிக்காது. நம்ப வைத்து கழுத்தறுப்பவர்கள் என்பதே என் எண்ணம். அதனால் அந்த மாநிலத்திலிருந்து வரும் எவருடனும் நான் வியாபார தொடர்பு கொள்வதில்லை. அது நினைவுக்கு வந்த பிறகு மறுநாள் என்னிடம் இருந்த வேலைக்கான விண்ணப்பத்தில் இருந்த அந்த மாநிலத்து நபரை அழைத்து மேற்பார்வையாளர் வேலை கொடுத்தேன். மீண்டும் அன்னை ஒளியை அந்த UK கம்பெனிக்கு அனுப்பினேன்.
ஆச்சரியப்படும் அளவிற்கு விஷயங்கள் நடந்தது. அந்த UK கம்பெனி இந்தியாவில் உள்ள கைபேசி தயாரிப்பாளரை அழைத்து இந்தியா போன்ற பெரிய மார்க்கெட்டும், உங்களை போன்ற தயாரிப்பாளர்களின் reference -உம் எங்களுக்கு தேவை. சிங்கப்பூர் கம்பெனியை நாங்கள் நல்ல முறையில் கவனித்து கொள்கிறோம். நீங்கள் நேரடியாகவே எங்கள் raw material -ஐ பெற்றுச் செய்யுங்கள் என்றனர். சிங்கப்பூர் கம்பெனி அந்த வேலையிலிருந்து வெளியேறியது. எனக்கு அந்த project -இல் நல்ல தொழில்நுட்ப அறிவும் லாபமும் கிடைத்தது.
இந்த உதாரணம் நான் சொல்லப்படும் personality centre -ஐ மாற்றி அனுப்பும் முறையை புரிய வைக்கும் என்று நினைக்கிறேன்
கணவருக்கு வேலை இல்லாததால் பல பிரச்னைகளை சந்திக்கும் , எப்போதும் சண்டை, சச்சரவு என்று இருக்கும் ஒரு அன்பர் , அதை தீர்க்க , எப்போதும் அன்னையிடம் பிரார்த்தனை செய்வார். கணவர் நேர்காணலுக்கு செல்லும் போதெல்லாம் அன்னையை அனுப்புவார். ஆனால் வேலை கிடைக்காது. சண்டை தொடரும். ஒரு முறை கணவரின் நிலையில் உள்ள நியாயத்தை உணர்ந்து, வீட்டில் சற்றே சுமுகத்தை கொண்டு வந்து, சூழலை உயர்த்தி, பின் அன்னையை அங்கிருந்து அனுப்புங்கள் என்றேன். அடுத்த முறை அவருக்கு வேலை கிடைத்தது. ஒன்றிரண்டு ஆண்டுகளில் சொந்த தொழில் ஆரம்பித்து, நன்றாக வளர்ந்து கொண்டு இருக்கிறார்.
அன்னை ஒளியை , அன்னையை அனுப்புவதற்கு முன், கீழ் கண்டவற்றை கவனிக்க சொல்கிறார் கர்மயோகி அவர்கள்.
- அன்னையை அனுப்பு முன் நம் தேவை, மனப்பான்மை, சுயநலத்தை ஆராய்ந்து அதன் மனப்பான்மை, நோக்கத்தை, உயர்த்த முடியுமா என்று பார்ப்பது.
- அது சம்பந்தமாக, வணிகம், பொருள்கள், கருத்துகள், தடைகள், நேரம், சமூகம், மனிதர்கள், சூழல், பேச்சு, பரிமாற்றங்கள், உறவுகள் என்று அனைத்தையும் ஆராய்வது.
- எதிர்மறை விஷயங்கள், falsehood இருந்தால், அன்னை ஒளி அதையும் அதிகப்படுத்தும் என்பதை நினைவில் கொள்வது.
- அப்படி இருந்தால் அதை கரைக்க அன்னையை அனுப்புவது நல்லது. அதை மனமார செய்ய முடிந்தால் ,அன்னை முழுமையை செய்து அதில் கரைகிறார் என்று பொருள். அது அத்தனையையும் சத்தியமாக மாற்றும்.
- அன்னையை நாம் கடவுளாக, சக்தியாக, ஆற்றலாக, பரிணாமத்தில் முன்னேற உதவுகிறவராக எப்படி பார்க்கிறோமோ அந்த நிலையில் அவர் நமக்கு உதவுவார்.
- முடிவுகள் தனிப்பட்ட பலனுக்காக இல்லாமல், நம் மனப்பான்மை, பெறுகிறவரின் மனப்பான்மை, சுபிட்சம், சமுதாய முன்னேற்றம், உலக முன்னேற்றம், சுமுகம் என்று அன்னை விரும்பும் பண்புகளை ஒட்டி இருந்தால் அது பல மடங்கு பலிக்கும்.
- அதாவது பலனை விட பண்புகளும், உயர் சித்தமும் பலிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் அன்னையை அனுப்பினால், அதிக பலன் கிடைக்கும்.
- அனுப்பிய பிறகு நடக்கும் negative விஷயங்களை கவனித்தால், நாம் மாற வேண்டிய, முன்னேற வேண்டிய இடங்கள், நம் தவறான அபிப்ராயங்கள், முன்முடிவுகள், நம் அர்த்தமற்ற விருப்பத் தேர்வுகள் நமக்குப் புரியும்.