நம் வாழ்வில் வந்த பிரச்சினைகள் பெரும்பாலும் இரண்டு மூன்று விதமாகவே இருக்கும். அல்லது ஒரு சில character கொண்ட மனிதர்களாலேயே இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் வெளியே குறையாக பார்க்காமல் அதன் பின்னால் அதை வரவழைத்த நம் குணங்கள், முன்முடிவுகள், அப்பிராயங்கள், கருத்துகள், என்று பார்த்தால் நம் பெரும்பாலான வாழ்க்கையை நம் அந்த சில சுபாவங்கள் தான் நடத்துகிறது என்று புரியும். நாம் தான் constant ஆக அந்த மாதிரி ஆட்கள், சூழலை energize செய்து வரவழைப்பது தெரியும்.
இதை “life repeats ” என்னும் நோக்கில் கர்மயோகி அவர்கள் நிறைய எழுதி இருக்கிறார்கள் -அதன் மூலம் நம்முடைய , நம் வாழ்வுடைய சாராம்சத்தை அறியலாம். அந்த சுபாவத்திற்கான energy-ஐ குறைப்பது நம் negative life response -ஐ குறைப்பது என்பது என் கருத்து. சமர்பணத்தில் என்னை பொறுத்தவரை ஒரு “தப்பித்தல்” இருப்பதாக நினைக்கிறேன். நான் எதுவும் செய்யாமல் அன்னையே எல்லாம் செய்ய வேண்டும் என்பது சற்றே கயமையாகப் படுகிறது.
பிரச்சினைகள் நம், falsehood , evil nature, low consciousness ஆகியவற்றைப் பற்றிய ஒரு விழிப்புணர்வைக் கொடுக்க முயற்சிக்கிறது, இதன் மூலம் விவேகம் பாகுபாடு தந்து ஒரு உயர் மனப்பான்மைக்கு அல்லது அன்னை விரும்பும் திருவுருமாற்றத்திற்கு உயர்த்துகிறது.
வாழ்க்கையில் நிகழ்பவை ஒரு குறிப்பிட்ட சட்டத்தை ஒட்டி அதன் energy இருக்கும் வரை நடக்கிறது – கர்மா என்று கூட சொல்லலாம். ஒன்று அதை அனுபவித்து அதன் சாரம் (essence) புரிந்தால் அது ஒரு விவேகம் என்பதால் அது மீண்டும் வராது. வெறுமே அனுபவித்தால் சுபாவத்தை ரசிக்கிறோம் என்பதால், energy -க்கு அழிவில்லை என்பதால் அது negative energy-யாக வளரும் – (depression etc)., அல்லது அதற்கு எதிரான உயர் சுபாவமாக மாறினால் அதே பிரச்சினை வராது. இதைத் தான் கர்மம் சுபாவத்தின் மூலமே பலிக்க முடியும் என்கிறார். அந்த சாரம் புரியாமல் வாழ்க்கையுடன் விடா முயற்சி என்ற பெயரில் அதே குணம், அதே சுபாவத்துடன் போராடுவது தோல்வியில் முடியும் அல்லது வாழ்க்கை என்றால் இப்படித் தான் இருக்கும் என்னும் விரக்தியில் முடியும். ஒரு செயலை செய்யாமல் தவிர்த்தாலும் energy தேங்கும் , பிரச்சினை வாழ்க்கையில் அதை காட்டும் வகையில் வெவ்வேறு வகையாக வரும்..
பொதுவாக நாம் பண்புகளைப் பின்பற்றும் அத்தனை இடங்களையும் கவனித்துப் பார்த்தால் ஒரு நிலைக்கு மேல் அதை பின்பற்ற முடிவதில்லை. காரணம் பண்புகள் பின் தங்கி, காரியம் முக்கியம் என்று சென்று விடுவதால், உண்மையில் பண்புகளுக்கான நல்ல energy குறையும் போது , அது எதிரான energy -யாக மாறுகிறது. வேலை எளிதாக முடிந்தால் போதும் என்று ஆகிறது. பண்புகள் எல்லாம் தேவையில்லை. காரியம் நடந்தால் போதும் என்று தவறு செய்யத் தூண்டும் நிலை அது. அது தான் evil , falsehood உருவாகும் இடம் என்கிறார் கர்மயோகி அவர்கள்.
இதற்கு உதாரணமாககர்மயோகி அவர்கள் சொல்வது, எல்லாம் சுமூகமாக ஒழுங்காக செல்லும் போது அது சப்பென்று இருக்கிறது. அதில் பிரச்சினை வரும் போது தான் நாம் energetic ஆக இருப்போம். சினிமா, டிவி சீரியலில் சோகக் காட்சியில் ஒன்றி அழுவது எளிதாக வருகிறது. ஆனால் சந்தோஷமான விஷயங்களில் அந்த அளவிற்கு ஒன்ற முடிவதில்லை.
அதுவும் நாம் தவறு செய்யும் போது, பிறர் அதை சுட்டிக்காட்டினால், எது சரி என்பதைச் சொன்னால், நாம் செய்யும் தவறை நாம் நியாயப்படுத்தும் விதங்களைப் பார்த்தால், நம் energy , நம் மனப்பான்மை எங்கே இருக்கிறது, நாம் யாருக்கு சேவை செய்து கொண்டு இருக்கிறோம், falsehood க்கா , சத்தியத்திற்கா என்பது புரியும்.
அதனால் வாழ்வு என்பதே ஒரு உயர் மனநிலையை ஒரு உயர் பண்பை அடைவதற்குத் தான் – நடப்பவை அனைத்தும் அதற்குத் தான் என்று புரிந்து செய்தால் முரண்பாடுகள் உடன்பாடுகள் ஆகும் . அடுத்த நிலைக்கான அறிவு, திறமை, விவேகம் வரும்.
சிந்தனைக்கு energy -ஐ கொடுத்து, அகந்தைக்கு energy இல்லாமல் செய்வது -அருளை பெறும் ஒரு வழி . அதற்கு பல உதாரணம் சொல்லலாம் என்றாலும், நாம் செய்யும் சமர்பணத்திலும் அது வருகிறது என்பதால் அந்த உதாரணத்தை எடுத்துக் கொள்கிறேன்.
அன்னைக்கு பரிணாமத்தில் வளர்வது முக்கியம். மனப்பான்மையை உயர்த்துவது என்பது அதன் குறைந்த பட்சம். ஆனால் நாம் ஒரு பிரச்னையில், சமர்ப்பணம் செய்கிறேன் என்று அந்த பிரச்சனை நினைவுக்கு வரும்போதெல்லாம் அன்னையை நினைக்கிறோம். நம் பக்தியால் சில நேரம் அது நடக்கலாம். நடக்காத போது நம் இயலாமையை ஏதோ ஒரு விதத்தில் ஏற்று கொள்கிறோம். இரண்டிலும் அந்த பிரச்சினை வந்த காரணம் அதற்கான energy தேக்கமாக (dormant) நின்று விடுகிறது. கர்மயோகி அவர்கள் சமர்ப்பணமான பிரச்சினை திரும்ப வரக் கூடாது என்கிறார். ஆனால் பல முறை திரும்ப வருகிறது. மீண்டும் அன்னையிடம் ஓடுகிறோம். நம் முயற்சி எதுவும் இல்லாமல் பிரச்சினை தீர்வது நமக்கு சௌகரியமாக இருக்கிறது. ஆனால்
அதன் மூலம் ஒரு உண்மையை அறிவதில் இருந்து விலகுகிறோம்.
அன்னையின் வேலை நாம் கேட்பதை எல்லாம் தருவதல்ல. அவருக்கு தேவை திருவுருமாற்றம்.
ஒரு பிரச்சினையை அன்னையிடம் சொன்னபிறகும், சமர்ப்பணம் ஆனதாக சொன்னாலும், ஒரு சிறு இடைவெளியில் சமர்ப்பணம் தவறும் போது கவனித்தால், அந்த தருணத்தில் நம் வலி, துன்பம், கவலை, பதட்டம், எதிர்பார்ப்பு மீண்டும் வருவதைக் காணலாம். அல்லது பொறாமை, பச்சாதாபம், கர்வம் , ஆணவம் என்று எதுவாக வேண்டுமானாலும் வரும். காரணம் அவற்றுக்கான energy அங்கேயே இருக்கிறது. அதை நாம் அன்னை என்ற பெயரில் பெட் ஷீட் போட்டு மூடுவது போல மூடுகிறோம்.
அதற்கு பதிலாக சமர்ப்பணம் செய்தாலும் இந்த பிரச்சினை ஏதோ ஒரு வகையில் நான் காரணமாக இல்லாமல் வந்து இருக்காது என்று சிந்திக்க ஆரம்பித்து, அதில் நம் energy -ஐ செலவு செய்து முடிந்த வரை அதை கண்டு பிடித்து (அது தவறாக கூட இருக்கலாம் பரவாயில்லை) அதற்கு எதிரான அன்னைக்கு பிடித்த ஒன்றை அறிவில், உணர்வில் -மனநிலை , திறமை, செம்மை – என்று ஏற்றுக்கொண்டால் நம் low consciousness-ஆல் தேங்கிய , மூடி வைக்கப் பட்ட energy , higher consciousness-க்கு செலவாகும் . அப்போது நம் அகந்தையின் வடிவங்களுக்கு அதைப் பற்றிய சிந்தனைகளுக்கு energy இருக்காது. அந்த பிரச்சினை மீண்டும் வாழ்வில் வராது.
கடந்த கால சமர்ப்பணம் என்பதும் இதை ஒட்டியதே. நாம் எந்த அளவிற்கு தீவிரத்தோடு அகந்தையின் வடிவங்களைக் கொண்டு தவறு செய்தோமோ, அதே தீவிரத்தோடு ஆன்மாவின் பண்புகளைக் கொண்டு வெளியே வர வேண்டும். அல்லது அதே உணர்வுக்கு இணையாக அதிலிருந்து வெளியே வந்து நம் பிரார்த்தனை இருக்க வேண்டும். (relive the sensitivity and intensity of the blunder made).
அப்போது தான் அருளைப் பெறும் energy / receptivity அதிகமாக இருக்கும். கர்மம் பலிக்கும் சுபாவம் இருக்காது.