Share on facebook
Share on telegram
Share on whatsapp

Life – law of Karma or law of Causality

நமக்கு கர்மா என்பது பிரச்சினையாக , துன்பமாக வருவதாகத் தெரிகிறது. அல்லது ஒரு சுபாவத்தின்  மூலம் , அல்லது அது வெளிப்பட்ட மனநிலை , நோக்கம், செயல் ஆகியவற்றின் மூலம் வருகிறது. காரணம் வாழ்வு அதை அப்படித்தான் நமக்கு அளிக்க முடியும். அதன் மூலம் ஒரு விவேகம், முன்னேற்றம் தர முயல்கிறது. அதாவது வாழ்வு,அதன் சக்தி கர்மத்தின் பாதையை எடுத்துக்கொண்டு நம் வாழ்வை நடத்துகிறது. அதற்குக்  காரணம் நாம் நம் வாழ்வைப் பார்க்கும் விதம்.

முதலில் நாம் எதையும் பிரிவினை மூலமே பார்க்கிறோம். நல்லது- கெட்டது, இன்பம்-துன்பம், சரி- தவறு, தேவை-தேவையில்லை, பிடிக்கும்-பிடிக்காது என்று இரண்டு எதிரான விஷயங்களை எடுத்துக் கொண்டே ஒரு விஷயத்தைப்  புரிந்து கொள்கிறோம்.அதற்கு  ஏற்ப செயல் படுகிறோம். அனைத்திற்கும் பின்னால் நம் அகந்தையின் தேவை ஒன்று இருக்கும். அதன் ஆற்றலே  நம்மை  இயக்கும். சாப்பாடு குறைவாக  இருந்தால் தனக்கு எடுத்து வைத்துக் கொண்டு மீதியை குடும்பத்திற்குப்  பரிமாறும் தாயை  பார்த்திருக்கிறேன். அதோடு தனக்கான  முட்டையை சாதத்திற்குள் ஒளித்து மகனுக்குத்  தந்து மகிழும் தாயையும்  பார்த்து இருக்கிறேன். இந்த கல்லூரி தான் வேண்டும்  என்று முடிவு செய்து எப்படியாவது என்ன செய்தாவது அதைப்  பெற்றவர்கள்,  கல்லூரிக்காக தம் விருப்பத்தை மாற்றிக்கொண்டவர்கள் தம்மை வரையறைக்குள் உட்படுத்திக்   கொள்வதை அறிவதில்லை. முன்னேறியவர்கள்  எல்லாம், குறிப்பாக  முதல் தலைமுறை  தொழில் முனைவர்கள்  தம் நோக்கத்தில் தெளிவாக இருந்தவர்களே. குறைவான வாடிக்கையாளர் இருந்தால் என்ன செய்தாவது அவர்களை, மார்க்கெட்டை, தக்க வைத்து கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் – உலக மார்க்கெட் தங்கள் முன் திறந்து இருப்பதை பார்ப்பதில்லை. ஒரு வரையறைக்கு  உட்படுவதை கவனிப்பதில்லை.

இவையெல்லாம் நாம் பிரிவினையை , அதன் பார்வை அதை ஒட்டிய அறிவை சக்தியாக பெற்று , சுபாவத்தை ஆற்றலாக மாற்றி  வாழ்விடம் கொடுத்து அதை கர்மம் வெளிப்படும் இடமாக மாற்றுகிறோம்.

இரண்டாவது இப்படி  பிரிவினை செய்து பார்க்கும் மனதைப்பற்றிய தெளிவு இல்லாத அறியாமை. நாம் மேல் மனதில் மட்டுமே வாழ்ந்து அது தரும் எண்ணங்கள் , அதன் பின்னால் உள்ள நம் அனுபவங்கள் , முன் முடிவுகள், அபிப்ராயங்கள் ஆகியவற்றை ஒட்டியே செயல்படுவதால் – ஒரு செயலில் , ஒரு நிகழ்வில் , ஒரு சூழலில்  உள்ள முழுமையை நாம் கவனிப்பதில்லை. நம் மற்ற பாகங்கள்-மனம், பிராணன் , உடல் ஆகியவற்றில் எழும் எதிர்ப்பு , முரண்பாடுகள் நம் சுபாவத்தின்  மேல் அவற்றின் தாக்கம் ஆகியவற்றைக் கவனிக்காமல், அதன் பின்னால் உள்ள நோக்கம் , மனப்பான்மை ஆகிவற்றை கவனிக்காமல்   – மனதில் தோன்றியவற்றை நிதானமில்லாமல், கவனமில்லாமல் செய்து கர்மம் பலிக்க இடம் கொடுக்கிறோம்.

மூன்றாவது , மேலே சொன்ன இரண்டும் சேர்ந்து நம்மை நம் சித்தம், உறுதியில் இருந்துப்  பிரித்து வாழ்வில் இயலாமையைச் செயல் பட வைக்கிறது. நம் விதி இவ்வளவு தான் , நம் அம்சம் இவ்வளவு தான் ,  என்னால் முடியாது, எனக்குப் புரியவில்லை என்று சொல்ல வைக்கும். அதன் மூலம் கர்மம் பலிக்க நாமே இடம் கொடுப்போம். இதற்குக்  காரணம் நம் பகுதியான அறிவு மட்டுமே, நம் பிரிவினை, அறியாமை, இயலாமை மட்டுமே   என்று புரியாமல் இருக்கும் போது வாழ்வு கர்மத்தின் சக்தியை எடுத்துக்கொண்டு செயல் படுகிறது.

அறியாமை தவறாக வெளிப்படுகிறது.   பிரிவினை முரண்பாடாக வெளிப்படுகிறது.  இயலாமை தமஸாக வெளிப்படுகிறது.  இவை மூன்றும் கர்மத்திற்கு தளமாக அமைந்து வாழ்வை நடத்துகிறது.  இதையே, வாழ்வு என்பது Being என்ற பார்வையில் அதாவது, நாம் இறைவனின் படைப்பு அல்லது அவனே நாமாக மாறியிருக்கிறோம் அவனுக்குள்ள அத்தனை சக்தியும், ஆற்றலும், நமக்கும் உண்டு என்று நினைத்தால், அந்த நினைவு conscious ஆக இருந்தால், வாழ்வை கர்மத்தின் பிடியில் தராமல், பரிணாம சக்தியில் தர முடியும்.  அந்த சக்தி ஆன்மாவாக இருக்கிறது.  அதற்கு ஞானம் உண்டே தவிர செயல்படும் ஆற்றல் கிடையாது (It has knowledge not power).

ஒவ்வொரு நொடியும் நமக்கு நம் தேர்வு எது, ஆன்மாவின் தேர்வு எது என்பது தெரியும்.  ஆன்மாவின் பண்புகளை எடுத்துக் கொண்டு, அதன் பிடியில் வாழ்வை கொடுப்பது, ஆன்மாவிற்கு ஆற்றலை கொடுப்பது.  அதனிடம் இறை ஞானம் இருப்பதால், அது ஆனந்தமான செயலாக முடிகிறது.  அந்த ஞானம் அறிவை, உடலை, உணர்வை, மனதை, ஆர்வத்தின் மூலம், உறுதியின் மூலம், முன்னேற்றும் ஒரு சக்தி என்பதால், நம் வாழ்வை நாமே நடத்த முடியும்.  நமக்கு தேவையான வாழ்வின் மறுமொழியை நாம் பெற முடியும்.  அதற்கு நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது, சத் – மனிதனாக, சித் – ஆர்வமாக, ஆனந்தம் – உணர்வாக (sensation ), super mind -ஞானமாக, மனம் – அறிவாக, வாழ்வு – ஒரு பரிணாம முன்னேற்றத்திற்கான இயக்கமாக, ஜடம் – செயல்படும் சக்தியாக, மாற வேண்டும் என்னும் இந்த சிருஷ்டி  – பரிணாமம் (involution – evolution ) என்னும் தத்துவம் புரிந்தால், நம் வாழ்வு  நம் கையில் இருக்கும்.  அதற்கு நாம் பயன்படுத்தும் ஆன்மாவின் பண்புகள் அந்த வாழ்வின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும்.

அப்படி மாறும்போது நம் அறிவு – causal mind ஆகவும் , நம் உணர்வு causal vital ஆகவும் நம் உடல் causal physical ஆகவும் மாறும். இவற்றிக்கு பின்னால் உள்ள ஞானம் இறைவனின்  முழுமையான ஞானம் என்பதால், வாழ்வு ஒரு பிரச்சினையைத் தந்து , ஒரு படிப்பினையைத் தந்து, ஒரு  துன்பத்தைத் தந்து தான் முன்னேற்ற வேண்டும் என்பது இல்லை. அதனால் கர்மத்தின் பிடியில் இருந்து விலகுகிறோம்.

இந்த புரிதல், அதனால் வரும் பண்புகளின் உறுதி-  ஆன்மாவின் இயக்கம்   ஆற்றலாக மாறும் வழி. அது நம் ஞானத்தின் அடிப்படையில் செயல் படுகிறது. அது ஆன்மாவின்  ஞானமாக அன்னை விரும்பும் ஞானமாக இருந்தால் அது – Supermind  இன்  எண்ணமாக மாறுகிறது. அது நம் சித்தத்தைத்  தொடுவதால் நம் பரிணாம வளர்ச்சியின் நோக்கம், மனப்பான்மை , வாழ்வில் முன்னேற வேண்டும் , இறைத் தன்மை பெற வேண்டும் என்னும்  நோக்கம் புரிவதால் அது Thy Will ஆகிறது. அது மனதிற்கு , உணர்வுக்கு , உடலுக்கு இறங்கும் போது – நாம் வாழ்வின் அத்தனை பிடிகளில்  இருந்தும் வெளி வருகிறோம். பிரார்த்தனையின் போது சிறிது நேரம் அப்படி விலகி , ஆன்மாவிற்கு, அன்னைக்கு இடம் கொடுப்பதால் அவை நிறைவேறுகிறது. ஆனந்தம் தருகிறது.

அதற்கு கர்மயோகி அவர்கள் தரும் உதாரணம் – திருமண வாழ்வில் சமுதாயத்தின் அறிவை, போக்கை எடுத்துக்கொண்டால் திருமணம் , கணவன் மனைவி என்று அதை ஒட்டிய கருத்துகளை எடுத்துக்கொண்டால் வாழ்வு ரணகளமாகிறது. ஆன்மாவின் பண்புகளை, அன்னையின் கருத்துகளை எடுத்துக் கொண்டால் வாழ்வு ஆனந்தத்தின் களமாக  மாறுகிறது.  அதுவே நம் வாழ்வை ஆனந்தத்தை முன்னேற்றத்தை முடிவு செய்யும். அதுவே – life is governed by law of causality.

இன்னும் சுருக்கமாக சொல்வது என்றால் life force என்பது முழுமையான இயலாமை . காரணம் அங்கு உறுதி , ஞானம், மனம், பிராணன் , உணர்வு, உணர்ச்சி, உடல், பிரிந்து செயல்படுகிறது. தனித்தனியாக தனக்கு உள்ள பகுதியான அறிவோடு செயல் படுகிறது. அறிவுக்குத் தெரிந்த  அனைத்தையும் உணர்வு ஏற்றுகொள்வதில்லை. உணர்வு சொல்வதை உடல் ஏற்று செய்வதில்லை. சாப்பிடும் சாப்பாடு முதல் , நம் நடத்தை , செய்யும் செயல்கள் , அவைகளின் உயர்நிலை, நேர்த்தி என்று அனைத்தையும் கவனித்துப் பார்த்தால் நாம் அறிந்த உயர்ந்ததைக்  கூட நாம் செய்வது இல்லை என்பது புரியும். ஒரு விஷயத்தை கூட அதன் உட்சபட்சத்தில் செய்து இருக்க மாட்டோம். ஆனால் ஆன்மாவிற்கு ஆற்றல் அளிப்பது என்பது முழுமையாக எப்போதும் அதே நினைவாக , அதன் பண்பு, நோக்கம் முக்கியம் என்னும் போது – உறுதி , ஞானம், மனம், பிராணன் , உணர்வு, உணர்ச்சி, உடல், ஒரு integral view , integral knowledge- ஓடு செயல்படுவதால் முரண்பாடுகள், படிப்பினைகள், துன்பங்கள் வருவதில்லை என்று கூறலாம். அது நம் வாழ்வை நம் பிடியில் வைத்துக்கொள்வது. கர்மத்தின் பிடியில் தராமல்  இருப்பது. 

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »