Share on facebook
Share on telegram
Share on whatsapp

உடல் பெறும் அறிவு-1

சில நாட்களுக்கு முன் Telegram Mother Devottee குழுவில் , தினசரி செய்திகளில், உடல் பெறும் அறிவு பற்றி சமர்ப்பணம் அவர்கள் எழுதியிருந்தார்கள்.  அது பற்றி சிந்தித்த போது தோன்றியது.

உடல் பெறும் அறிவை, திறமையின் அடிப்படையில் பார்க்கும் போது , நுட்பம் என்றும்  உணர்வின் அடிப்படையில் பார்த்தால் , அதை சொரணை என்றும் கூறலாம் என்று தோன்றுகிறது.  உதாரணமாக, டைப் அடிக்க கற்றுக் கொள்கிறோம்.  அது அறிவில் பெற்று, உணர்வில் கவனமாக இருந்து இவை இரண்டும் விரலுக்கு செய்தியை கொண்டு போகும் போது , நாம் டைப் செய்கிறோம். ஒரு நிலைக்குப் பிறகு, கண் பார்க்க, கை டைப் அடிக்கிறது, வேகமாகவும் பிழைகள் குறைவாகவும் இருக்கிறது.  காரணம் இடைப்பட்ட இரண்டு பகுதிகள் இல்லாதது, அதன் குறுக்கீடுகள் இல்லாதது.  இது உடல் நேரடியாக பெற்று விட்ட ஞானம்.  கார் ஓட்டுவதையும், இதே கண்ணோட்டத்துடன் பார்க்கலாம்.ஆரம்பத்தில், கை , கால், ரோடு, ஸ்டேரிங், ஹாரன் என்று கவனமாக இருக்கும் நாம், நாளடைவில் நம் ஞாபகம் இல்லாமல் இயக்குகிறோம்.  அது உடல் பெறும் அறிவு. எனக்கு தெரிந்த ஒருவர் கோயம்பேட்டில் முதலில் காய்கறி மூட்டை ஏற்றும் இறக்கும் ஆளாக இருந்தார்.  சில நாட்களுக்கு பிறகு ஒரு வியாபாரி அவரை காய்கறிகளை, குறிப்பாக உருளை கிழங்கு, தக்காளி, போன்றவற்றை அளவுவாரியாக , ஏற்றுமதிக்காக பிரிக்கும் வேலையைக் கொடுத்தார்.  ஆரம்பத்தில் இரு குச்சிகளை கட்டி அதன் இடையில் பொருந்துபவை, ஏற்றுமதிக்கு என்றும், அதில் நிற்காதவை உள்ளூர் மார்க்கட்டிற்கும் என்று பிரித்தார்.  ஒரு நிலையில் குச்சி தேவைப்படவில்லை. கண் பார்வையில் பிரிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு வாயை பேசிக் கொண்டு இருக்கும் , எங்கே எல்லாமோ  பார்த்துக் கண்டு இருப்பார். அவர் ஒரு கூடையில் கை விடுவதும் தெரியாது, அடுத்த கூடையில் போடுவதும்  தெரியாது என்னும் அளவிற்கு பார்க்காமலேயே  செய்ய ஆரம்பித்தார்.  அதாவது அந்த கலையை  அவரின் விரல்கள், உடல் பெற்று விட்டது. அதற்கு ஏற்றாற்போல தின கூலிக்கு இருந்த அவர், KILO  கணக்கில் -பிரிக்க ஆரம்பித்து, பின் லோடு கணக்கில் ஆகி இன்று அவரே ஒரு ஏற்றுமதியாளர் ஆகிவிட்டார். 

திறமை உடலுக்கு வருவது வேலையின் மேல் உள்ள சிரத்தையால் ,  ஆர்வத்தால். அதற்கு ஏற்ற சுபிட்சத்தை வாழ்வு தரத் தவறுவதில்லை.

நான் ஹோட்டல்களில் கேட்டரிங் வேலை செய்த போது எவ்வளவோ கெட்ட பெயர் இருந்தாலும், ஒரு நல்ல விஷயமாக  எல்லோரும் சொல்வது என்னவென்றால், வேலையில் குறை வைக்க மாட்டேன் என்று. அதற்கு காரணம் , பத்து பிரியாணி அண்டா இருந்தாலும், குழப்பு அண்டா  இருந்தாலும்,  எதில் மசாலா குறைகிறது, எதில் உப்பு குறைகிறது என்று சொல்லி விடுவேன்.  மூக்கின் அந்த sensitivity என் உடல் பெற்ற அறிவு.  அதுவே என்னை சிறு ஹோட்டல் waiter -ரிலிருந்து பெரிய amuzement park -இல் catering manager  என்னும் அளவிற்கு உயர்த்தியது. Engineer ஸ்கேல் இல்லாமல் வரைவார்.  பேச்சாளர் குறிப்புகள் இல்லாமல் பேசுவார், பார்க்காமலே நூறு ஆயிரம் பாடல்களை பாடுவார், என்பதெல்லாம், அவர்கள் அதன் நுட்பத்தை, சாரத்தை, புரிந்துக் கொண்டார்கள் என்று பொருள்.  அது உடலில், அழியாத உடலின் நினைவாக மாறிவிட்டது, புகழ் பெற்றவர், சாதனையாளர்கள் அனைவருக்கும் இது போன்ற திறமை இருக்கும். 

எண்ணமும், சிந்தனையும், விளக்கத்திற்கு உரிய கருவிகள்.  அவற்றால் புரிந்துக் கொள்ள முடியாது. புரிந்துக் கொள்வது மனம், மனத்திலுள்ள அறிவு கல்வி.  தன்னிச்சையாக உடல் அதை செய்யும் போது , அது நுட்பம்.  திறமை வளர்ந்து முதிர்ந்து பரவி, உடலின் அறிவாக மாறிவிட்டது என்று பொருள். அவருக்கு அது தண்ணீர் பட்ட பாடு என்று சொல்லுமளவிற்கு அந்த செயல் இருக்கும். வெற்றிபெற்றவர்கள் அனைவரின் பின்னாலும் இந்த உடலின் அறிவு – கூறிவந்த பட்சம் குறிக்கோள் , கொள்கை உடலின் அறிவிக்க மாறிவித்து இருக்கும். வீட்டிற் விட்டு ஓடியவர்கள், அவமானப்பட்டவர்கள் , மிகவும் தாந்த நிலையில் இருந்து வந்தவர்கள்  முன்னேறி இருந்தால் அவர்களை கவனித்தால் – அவர்களீடிங் இந்த சொரணை இருக்கும். அல்லது இந்த சோரனையான இடம் – சென்சிட்டிவிட்டி தொடப்பட்டு இருக்கும் அல்லது தூண்டப்பட்டு இருக்கும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »