ஒரு அன்பரின் கேள்வியும் – அதற்கு என் பதிலும்:
வியாபாரத்தில் எவரையாவது முன்மாதிரி ROLE MODEL ஆக வைத்துக் கொள்வது சரிவருமா? உதாரணமாக, பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களை முன்மாதிரி என்று சொல்வது என் எளிய நிலையில் வேடிக்கையாக இருக்கிறது.
முன் மாதிரி என்பதற்கு பொருள் என்ன? அவர் செய்ததையே செய்வதா?
இப்போது TVஇல் ஒருவர் அதே கருப்பு T -Shirt போட்டுக்கொண்டு , அதே போன்ற கண்ணாடி போட்டுக்கொண்டு நான் தான் அடுத்த Bill Gates , Steve Jobs என்று பேட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார், அது போலவா?
அல்லது Google, Apple, Microsoft, Amazon எல்லாம் ஒரு carrage -ல் ஆரம்பித்தது என்பதால், silicon valley -யில் , carrage -ல் ஆரம்பிப்பது நல்லது என்று ஒரு நம்பிக்கை இருப்பது போலவா? Bill Gates வுடன் Paul Allen இருந்தவரை தான் அவரது பயணம் வெற்றிப் பயணமாக இருந்தது. அதன் பிறகு அவரால் successful product என்று சொல்லும் அளவிற்கு எதையும் தரவில்லை. One Drive -வை கொண்டு வந்தால் கூட, அது Drop box அளவிற்கு கூட வரவில்லை. மற்றவையெல்லாம் failure என்னும் அளவிற்கே இருந்தது. அவர் செய்ததெல்லாம் monopoly -ஐ காப்பாற்றுவதே. அதிலும் அவர் முறைகளில் நிறைய controversy இருப்பது பற்றி கேள்விப் படுகிறோம்.
Steve Jobs கடைசியில் வேற்றி பெற்றார் என்றாலும், ஜெயித்த பிறகு அதற்கான காரணங்கள் சொல்லப்பட்டாலும், வாழ்வு முழுவதும் அவர் மூர்கமானவராக, பிடிவாதக் காரராக, rigidity-இன் உருவமாகத் தான் இருந்திருக்கிறார் என்கிறார் கர்மயோகி அவர்கள்.
Role Model என்று எந்த சாதனையாளரை எடுத்துக் கொண்டாலும், அவர் பின்னால் இது போன்று நிறைய இருக்கும். இதில் எதை எடுத்துக் கொள்ளப்போகிறோம் , என்ன காரணத்திற்காக எடுத்துக் கொள்ளப்போகிறோம் என்பதே கேள்வி. இதில், பெரும்பாலும் இரண்டு தவறுகளை செய்வோம். ஒன்று, பெரும்பாலான சமுதாயம் அல்லது மக்கள் – சாதனையாளர் என்று நம்புகிறவரை நாமும் நம்பி அதை சாதனை என்று ஏற்றுக்கொள்கிறோம். அதற்கு, பெரும்பாலும் பணம், புகழ், அது தரும் அந்தஸ்து, celebrity status மட்டுமே காரணமாக இருக்கும். கர்மயோகி , பகவான், அன்னையை சாதனையாளர்கள் என்று ஏற்றுக் கொள்வோமா? அவர்களை Role Model -களாக ஏற்றுக் கொண்டு, பின்பற்ற முடியுமா?
அதனால் முதல் தவறு, சாதனை பற்றி சமுதாயத்தின் கருத்தை, நம் கருத்தாக எடுத்துக் கொள்வது. இரண்டாவது, நாம் சாதனையாளர் என்று எடுத்துக் கொண்டால், பெரும்பாலும், நம் சுபாவம், தொழில், திறமையை ஒட்டிய விஷயங்களிலிருந்து எடுத்துக் கொள்வோம். அப்போது, நாம் நம்முடைய Better version ஆகத் தான் இருப்போமே தவிர, அவர்கள் அடைந்த முன்னேற்றத்தை அடைவது கடினமாக இருக்கும். காரணம், அங்கே நம் character -ஐ, nature -ஐ , தான் செயல்படுத்துவோம் . ஆனால் நமக்கு எதிரான, நம்மிடம் இல்லாத திறமை உள்ளவரை Role Model ஆக எடுத்துக் கொண்டால், நம்மிடம் வருவது ability, individuality , திறன், தனித்தன்மை, அதாவது – ஒரு அறிவை பலநோக்கில், பல இடங்களில், பல நிலைகளில், பயன்படுத்த முடிவது. உதாரணமாக, Anil Ambani யும், Mukesh Ambani -யும் தங்களுக்கு தந்தை தான் Role Model என்று கூறினாலும், அதை நடைமுறைப் படுத்துவதில், இருவருக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் அடைந்த உயரத்தில் capacity, ability, acumen , creativity என்று சொல்லப்படுபவைகளில் இருக்கும் வித்தியாசம் புரியும். அதே போல , Mukesh Ambani -யும் , Adani -யும் , Tata -வும் சாதனையாளர்களே என்று எடுத்துக் கொண்டால், பண்புகளின் அடிப்படையில் பார்த்தால் மிகப் பெரிய வித்தியாசம் புரியும்.
அப்படியென்றால், நாம் எதைக் கொண்டு Role Model -ஐ முடிவு செய்ய முடியும்? 2004-லில் அன்னையிடம் வந்து திருந்தி இருந்தால் கூட, 2006-இல் கர்மயோகி அவர்களை பற்றி அறியும் வரை, என் ஆசை , ஒரு Gang Leader ஆக வேண்டும் என்றே இருந்தது. அப்போது, வட்டாரம் என்று ஒரு படம் வந்தது. அதில் Arya character தான் எனக்கு Role Model . அதன் பிறகு, கர்மயோகி அவர்கள் சொன்னதை பற்றி சிந்தித்து பார்த்த போது , நமக்கு எவ்வளவு தெரிந்திருந்தாலும், எதை செய்தாலும், நம் சுபாவத்தை ஒட்டியே தேர்வு செய்வோம் என்று புரிந்தது.
மனித சுபாவத்தில் , நமக்கு நன்றாக தெரிந்த, நம்மை சுற்றியுள்ள, ஒருவரின் நடத்தை, ஆர்வம், குறிக்கோள், குறிப்பாக – அவரது சித்தம், consciousness நமக்கு புரியும் அளவிற்கு, ஒருவரை எடுத்துக் கொண்டு, அதை emulate முன்மாதிரியாக கொண்டு செய்தால், அவர் போல் நிச்சயம் வர முடியும் , அவரைத் தாண்டி செல்ல முடியும் என்று எழுதியிருப்பார். குறிப்பாக, அவர் சொல்லும் உதாரணத்தில், நமக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி, நம்மளவில் உயர்ந்தவர். அவரை, அவர் consciousness நோக்கில் பார்த்து, அவர் உயர, அதே பண்புகளை எடுத்துக் கொண்டு பாடுபட்டால், அந்த company -க்கு parter ஆகலாம். அந்த company -ஐ தாண்டிச் செல்லலாம் என்று எழுதியிருப்பார். அது, என் வாழ்விலும், என் நண்பர்கள் இருவர் வாழ்விலும் நடந்திருக்கிறது.அதை சாதித்த பிறகு இப்போது உனக்கு consciousness -ஐ தொடும் process தெரிந்து விட்டது. அதனால், நீ subcontractor ஆக இருக்கும் L &T யின் முதலாளியின் consciousness -ஐ தொட முடியுமா? தொட்டால் அந்த company -யின் Director ஆக முடியும், அல்லது அதை மீறிச் செல்ல முடியும் என்றார். ஆனால், அவர் யார், எப்படியிருப்பார் , அவர் நோக்கம், ஆர்வம், சுபாவம், சித்தம், புரியாததால், ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை.
அடுத்தது, குறிப்பாக, ஏதாவது ஒன்று Role Model-லின் சாதனைக்கு காரணம் என்று தெரிந்தால், அதை 100% பின்பற்றுவது. உதாரணமாக, Steve Jobs -ன் காரணமாக கர்மயோகி அவர்கள் சொல்வது அவரது அசாத்திய தன்னம்பிக்கை. ஒவ்வொரு முறை தோல்வி அடைந்த போதும், தான் உருவாக்கிய company -யிலிருந்தே தான் வெளியேற்றப்பட்ட போதும், கடைசியாக, அவருக்கு புற்று நோய் இன்னும் மூன்று மாதம், இருப்பதே அதிகம் என்று மருத்துவர்கள் சொன்ன போது , இல்லை, அது நீங்கள் சொல்வது, நான் இன்னும் அதிகமாக இருப்பேன் என்றார். அதன் பிறகு, அவர் 13 மாதங்கள் இருந்ததாக சொல்வார்கள். அது போல, அவருடைய perfection புகழ் பெற்றது. இப்படி, நாமறிந்த Role Model களின் பண்பை, எடுத்துக் கொள்வது Role Model -ஐ விட சிறந்தது.
அடுத்தது, பார்க்க வேண்டியது transition points – திருப்புமுனை இடங்கள். சாதனையாளர்களின் வாழ்வில், ஏற்றத் தாழ்வுகள் , வெற்றித் தோல்விகள், நிச்சயம் இருக்கும். தாழ்விலிருந்து எப்படி ஏற்றத்திற்கு வந்தார்கள், தோல்வியிலிருந்து எப்படி வெற்றிப் பெற்றார்கள் என்னும் அந்த junction -ஐ, transition points -ஐ , அவர் மாறிய இடங்கள், எடுத்த முடிவுகள், ஆகியவற்றை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் நம் ஞானத்தை வளர்த்துக் கொண்டால், அவர் அடைந்த தோல்விகளை நாம் அடையாமல், நேரடியாக வெற்றிப் பெற முடியும். உதாரணமாக, Steve Jobs வாழ்வில், அவரின் வளர்ப்பு காரணமாக, கோபக்காரராகவும், பிடிவாதக் காரராகவும், Ferocious and adamant -ஆக இருந்தார். ஆனால், அவர் இந்தியாவிற்கு வந்து நாடோடி போல, ஏழு மாதங்கள் சுற்றிய பிறகு, இமய மலையெல்லாம் சென்று திரும்பிய பிறகு, அவர் மாற்றம், Stay Hungry , Stay Foolish என்ற வார்த்தையில் வெளிப்பட்டது. அது, அவரின், transition point . Stary Hungry என்பது அவருக்கு perfection -ஐ தந்தது. Stay Foolish என்பது creativity -ஐ தந்தது. cloud storage -ஐ உபயோகப் படுத்தும், idea -வை தந்தது. திவாலான Next -லிருந்து , Apple -ஆக உயிர்ப்பிக்க முடிந்தது.
அடுத்தது, சாதனையாளர்களின் inspiration எது? அவர் முடிவெடுப்பதற்கான insight எது? intution எது? அதை அவர் எப்படி பெற்றார் என்பதை பார்ப்பது. Steve Jobs -யின் தொழில்நுட்ப அறிவும், அதை அவர் உபயோகப் படுத்திய விதமும், வெறுமே ஆர்வத்திலிருந்தும், அனுபவத்திலிருந்தும் வந்தது என்று சொல்லிவிட முடியாது. அதைத் தாண்டிய ஒரு உள்ளுணர்வு, உட்பார்வை, அதைக் கொடுத்தது. அவர் சொல்வதிலிருந்து புரிந்துக் கொள்வதானால், அப்போது அவர் தற்செயலாகப் பார்த்த whole earth என்னும் company catalogue -யில் கடைசி பக்கத்தில், எழுதப் பட்டிருந்த வார்த்தைலிருந்து தனக்கு தோன்றியது என்று கூறுகிறார். அந்த intuition, insight புரியும். concentration -ஐ நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். நாம் எடுக்கும் எந்த Role Model -க்கும் நமக்கும் இருக்கும் நிலையை, பத்து அல்லது நூறு நிலைகளாக பிரித்து, ஒவ்வொரு நிலையையும் தெளிவாக நம்மால், அறிய முடிந்தால், அந்த சாதனையாளரை Role Model -ஆக எடுத்துக் கொள்ளலாம்.