Share on facebook
Share on telegram
Share on whatsapp

உதவி பெறுதல்

மேலை நாடு குறிப்பாக அமெரிக்கர்களின் எந்த உதவியும் கேட்காத சுய உழைப்பு, தன் மானம், தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கர்மயோகி அவர்கள்  நிறைய கட்டுரைகளில் எழுதியிருக்கிறார்.  மீனை கேட்பது பிச்சை.  மீன்  பிடிக்கக்  கற்றுக்  கொள்வதைக்  கேட்பது தன்மானம்.  தன்மானம், திறன், திறமை, அறிவு என்று personality வளருவது consciousness வளருவது என்று வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு தேவையானவற்றை கேட்கலாம்.  வேறெதுவும் கேட்கக் கூடாது, பெறக் கூடாது.  சுருக்கமாக thumb rule -ஆக  சொல்ல வேண்டுமென்றால் அதையே நாம் வேறு ஒருவருக்கு கொடுத்தால் அது குறையக் கூடாது.  அது போன்ற விஷயங்களுக்கு தான் உதவி பெறலாம். 

காரணம், மனம், உடல், falsehood ஆல் நிரம்பியது.  அதனால் inertia , தாமசம், சோம்பேறித்தனம் அதிகம் உள்ளது.  அது உணர்வில் எப்படி வெளிப்படும் என்றால், உதவி செய்பவர்களே எல்லாவற்றையும் செய்து பலனையும் கொடுக்க வேண்டும் என்று நினைக்க வைக்கும். என்னிடம் ஒருவர் அறிவுரைக் கேட்டால்   – தொடர்ந்து அதைபற்றிக் கேட்டு நீங்களே செய்து கொடுங்கள் என்னும் அளவிற்கு அது வந்து விடும். ஒருவரிடம் தொழில் சம்பந்தமான அறிவுரை கேட்டாலும் சரி, முதலீடு கேட்டாலும் சரி, அவரே அதை செய்து கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.  அல்லது முதலீட்டுக்கான தொகையைக் கொடுத்து விட்டு   எதுவும் கேட்காமல் இருக்க வேண்டும் என்று நினைப்போம்.  உதவி பெரும் போது நாம் மனம் சுணங்கினால் , அது தொடர்ந்து வரவில்லை அல்லது எதிர்பார்த்ததை விடக் குறைவாக கிடைத்தால், அதனால் மனது சுருங்கினால் , அது எதிராளியை பாதிக்கும். 

அதே போல உதவி தருபவர், ஒரு உறவுக்காக, சமூகத்துக்காக, ஏதோ ஒரு அவசியத்தை கருதி கொடுத்தால், மனதில் சுருங்கி கொடுத்தால், அது பெறுபவரை பாதிக்கும்.  குறைந்த வருமானம் இருந்த சிலருக்கு உறவினர் உதவி செய்வார்கள்.  அவசியம் கருதி ஏதோ ஒரு சமயம் அந்த உதவியை பெறுவது தவறில்லை. அதையே வழக்கமாக எடுத்துக் கொண்டால், தருபவர் சுணங்கினாள், பெறுபவரின் எதிர்காலம் பாதிக்கப் படும்.

அதனால் ஒரு விஷயத்தை சுயமுயற்சியோடும், தன்மானத்தோடும் பெற முடியுமானால்  யாருடைய உதவியும் பெறாமல் அதைச் செய்வது நல்லது.  நல்லது.  காரணம் அப்படி உதவி பெறுவது பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டால், வளர்ச்சி பற்றி, சொந்த முயற்சி பற்றி மறந்து போய் யாரிடம் எந்த உதவி கேட்கலாம், யார் உதவி செய்வார்கள், என்று மனம் ஒரு வேலையை சுலபமாக செய்ய  நினைக்குமே  தவிர எதை செய்யலாம், எப்படி செய்யலாம், நாமே செய்யலாம் எனபது எல்லாம்  மறந்து விடும்.  இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மாமனார், வீட்டு உதவி பெரும் மருமகனுடைய  வாழ்க்கை, சிந்தனை முறைகளை கவனித்து பார்த்தால் புரியும்.

ஒரு தொழிலை செய்ய வேண்டிய முறைப்படி field worker , hands on experience என்று சொல்வார்கள் இல்லையா, அந்த அடிப்படை கூட இல்லாமல்  Manager , Sales Executive , ஏதோ ஒரு குறிப்பிட்ட assistant -ஐ மட்டுமே நம்புவது கூட உதவி பெறுவது தான்.  அல்லது Business-யில்   தேவையான எதையும் செய்யாமல் அந்தரத்திலிருந்து பணம் கொட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். எனக்கு யாரும் உதவி செய்ய மாட்டேன் என்கிறார்கள் , என்னை புரிந்து கொள்பவர் யாரும் இல்லை என்று சொல்வார்கள்.

இப்படிப்பட்ட நபருக்கு உதவி பெறத் தேவையில்லாத நிலை வர வேண்டுமென்றால் அவர் செய்ய வேண்டியது, இது வரை பிறர் உதவியை பெற்று வருபவராக இருந்தால், அந்த உதவியை இனி பெறுவதில்லை என்று தீர்மானித்து அதை மனப் பூர்வமாக ஏற்றுக்கொள்வது. அந்த வேலைக்குத் தேவையான திறமை இல்லையென்றால் அல்லது குறைவாக இருந்தால் கடுமையாக முயன்று அந்த திறமையின் எல்லையை எட்ட வேண்டும்.  நாம் உதவி கேட்பவரின் அந்த திறமை, அந்தஸ்து, நிலை எப்படி வந்தது என்று யோசித்து பார்த்தால் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்பது புரியும். 25000 சம்பளத்தில் வேலை கிடைக்க எனக்கு யாராவது உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் சொந்த முயற்சியில் 2500 சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் நாம் அதை ஏற்க வேண்டும்.

இந்த இரண்டையும் செய்த பிறகு அடுத்த கட்டம் பிரார்த்தனை – யாரிடமும் கேட்பதை விட அன்னையிடம் கேட்பது – அன்னையின் அருள் அதை கொண்டு வந்து சேர்க்கும்.  அன்னையின் சக்தி வளர்ச்சிக்கான சக்தி எனபதால், உழைப்பு இருந்தால் அதிகமாகச் செயல்படும்.  உழைப்போடு, திறமையும் அறிவும் இருந்தால் இன்னும் அதிகமாக செயல்படும்.  நம்மை பிறருக்கு உதவும் அளவிற்கு மாற்றும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »